தீமைகளை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த ஒரு அவதாரம் தான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை என்கிற ஊரில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிம்மர் கோவில். இக்கோவில் ஒரு தொன்மையான குடைவரை கோவிலாகும். ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். குடைவரை கோவில்களை கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள்
இக்கோவிலை கட்டியதாகவும், பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலை நன்கு பராமரித்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மரும், இறைவியாக நரசிங்கவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். நரசிம்மர் கோவில்களிலேயே
மிகப்பெரும் நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தை கொண்ட கோவிலாக இந்த ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
🔥பெரிய குடைவறை கோயில் என்ற பெருமை உடையது. பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த சிறப்பு வாய்ந்த தளம்.
மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் மேற்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர்
இத்திருக்கோவில் கொடிமரம் இல்லாத கோயிலாக அமைந்துள்ளது🙏🙏
ரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டி, இக்கோவிலின் சக்கர தீர்த்த குளத்தில் நீராடி யாகம் செய்ததாக
தல புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அப்போது ரோமச முனிவர் நரசிம்ம மூர்த்தியை அவரின் அவதார ரூபத்தில் தரிசிக்க எண்ணினார். அவரின் ஆசைக்கிணங்க மகாவிஷ்ணு உக்கிரமான நரசிம்மர் ரூபத்திலேயே காட்சி தந்தார் நரசிம்ம மூர்த்தி.
நரசிம்மரின் உக்கிரத்தால் வெளிப்பட்ட வெப்பம்
அனைத்து லோகங்களையும் அழித்து விடுமோ என்று அஞ்சிய தேவர்கள், மகாலட்சுமியிடம் முறையிட, லட்சுமி தாயார் வந்து நரசிம்மரை அரவணைத்ததும் அவரின் உக்கிரம் தணிந்து, யோக நரசிம்மராக காட்சியளித்து ரோமச முனிவர் வேண்டிய வரத்தை அளித்து ஆசிர்வதித்தார்.
ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம தேவா சரணம் 🙏🙏@Pvd5888
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
-34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.
-நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இருவரும் பரங்கியர்களை எதிர்த்து ஆயுதப் போரட்டத்தில் ஈடுபட்ட தீவிர தேசியவாதி.
-நேதாஜி தனது அம்மாவிடம் "உங்களுடைய கடைசி மகன் இவன்" என்று தான் அறிமுகம் செய்து வைத்தார்.
-"அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் பிறக்க ஆசைப் படுகிறேன்" என்றார் நேதாஜி.
-தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.
-நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர்.
-அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்"
🔥 தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில்🔥
மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில்
கடலோரப் பகுதியாக
அமைந்துள்ள இராஜா அண்ணாமலை புரத்தில் அழகிய கோயிலில்
எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சுவாமி ஐயப்பன்.
இங்கு சபரிமலையைப் போன்றே கன்னி மூலை கணபதி, மாளிகைபுரத்து அம்மன்,
நாகராஜ சுவாமி சன்னதிகள் மற்றும் 18 படிகள் அமைந்திருப்பது சிறப்பு.
. சுவாமிக்கு தினப்படி பூஜைகளும் இதர வழிபாடுகளும், சபரிமலை தேவஸ்தானத்தில் நடப்பது போலவே நடைபெறுகின்றன. ஆனால், சபரிமலை கோயில், வருடத்தின் சில நாட்களில் மட்டுமே நடை திறந்திருக்கும்; இந்த ஆலயமோ,
வருடத்தின் 365 நாட்களும் நடை திறந்திருக்கிறது. கார்த்திகை மாதம் துவங்கி மண்டல பூஜை, பிரம்மோத்ஸவம் என விழாக்களுக்குக் குறைவே இல்லை. கார்த்திகை மாதம் துவங்கியதுமே, தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கின்ற கருநெல்லிமரங்கள் அடர்ந்து காணப்பட்டவனப்பகுதியில்,
அமைந்துள்ள பஞ்ச
பாண்டவர்களின் பெருமை பேசும் ஆலயம் பற்றி தெரியுமா?
திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் ஆலயம் உள்ளது.
இக்கோயிலில் சிவபெருமான் புண்ணியமூர்த்தியாகவும், இவருடன் மகாபாரத நாயகர்கள் தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலுக்கான பழங்கதை அற்புதமானது.
வனவாச காலத்தில் தென்னிந்திய பகுதிக்கு வந்த பஞ்சபாண்டவர்கள்,
முழுவதும் காடாக இருந்த நல்லமரம் பகுதியில் வசித்ததாக கூறப்படுகிறது.
இவ்வூர் காட்டுப்பகுதிக்குள் அக்காலத்தில் ‘சைந்தவர்’ எனும் முனிவர் வாழ்ந்துள்ளார்.
இவ்வனத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கிற நெல்லிக்கனியை அவர் உண்டு, தொடர் தவத்தில் இருந்திருக்கிறார்.
கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.
சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை.
தலவிருட்சம் : கடம்ப மரம்.
"தென்சேரி கிரி"’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது.
இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.
இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமான பூதத்தாழ்வார் அவதரித்த மகாபலிபுர ஸ்தல சயன பெருமாள் கோவில் வரலாறு:
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது.
கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும்
பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ தேவியும் பூதேவியும்
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள்.