🔥 தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில்🔥
மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில்
கடலோரப் பகுதியாக
அமைந்துள்ள இராஜா அண்ணாமலை புரத்தில் அழகிய கோயிலில்
எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சுவாமி ஐயப்பன்.
இங்கு சபரிமலையைப் போன்றே கன்னி மூலை கணபதி, மாளிகைபுரத்து அம்மன்,
நாகராஜ சுவாமி சன்னதிகள் மற்றும் 18 படிகள் அமைந்திருப்பது சிறப்பு.
. சுவாமிக்கு தினப்படி பூஜைகளும் இதர வழிபாடுகளும், சபரிமலை தேவஸ்தானத்தில் நடப்பது போலவே நடைபெறுகின்றன. ஆனால், சபரிமலை கோயில், வருடத்தின் சில நாட்களில் மட்டுமே நடை திறந்திருக்கும்; இந்த ஆலயமோ,
வருடத்தின் 365 நாட்களும் நடை திறந்திருக்கிறது. கார்த்திகை மாதம் துவங்கி மண்டல பூஜை, பிரம்மோத்ஸவம் என விழாக்களுக்குக் குறைவே இல்லை. கார்த்திகை மாதம் துவங்கியதுமே, தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகின்றனர்.
தல வரலாறு..
இந்த கோயில் செட்டிநாடு அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜா சர்.முத்தையா செட்டியாரின் மகன் தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபர்
எம். ஏ. எம். ராமசாமி என்பவரால் கட்டப்பட்டது..
இவர்
1973-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார்.
ஐயனின் அழகில், ஆலயத்தின் கட்டுமானத்தில் மனதைப் பறிகொடுத்தவர். சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில்,அதே போன்றதொரு ஆலயத்தை எழுப்பி, நெகிழ்ந்துபோனார்.
இந்த கோயில் 1981ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் 1982 ஆம் ஆண்டில் ராஜா சர் முத்தையா செட்டியார் கோயிலுக்கு நன்கொடையாக
அளித்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. பஞ்சலோகத்தால் (இயற்கையின் ஐந்து கூறுகளை குறிக்கும் ஐந்து விலைமதிப்பற்ற உலோகங்கள்) செய்யப்பட்ட அய்யப்ப சிலை, நாகர்கோயிலைச் சேர்ந்த சிற்பி ஸ்ரீ பட்டானாச்சாரியரால் செய்யப்பட்டது. இச்சிலை ஜனவரி 25, 1982 அன்று
ராஜா அண்ணாமலைபுரம் கோயிலில் நிறுவப்படுவதற்கு முன்பு நாகர்கோயிலிலுள்ள கிருஷ்ணன் கோயிலிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
முதல் கும்பபிஷேகம்
29 ஜனவரி 1982 இல் நிகழ்த்தப்பட்டது.
இரண்டாவதாக 27,மார்ச் 1994 அன்று நிகழ்த்தப்பட்டது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலின் சரியான பிரதியாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் அயப்பன் உச்சியில் இருப்பதைப் போல் இங்கேயும் ஒரு மலையின் உச்சியில் இருப்பதற்கான உணர்வைக் கொடுப்பதற்காக
இந்த கோயில் மூன்று தளங்களில் கட்டப்பட்டுள்ளது.. இந்த கட்டிடக்கலை கேரள பாணியையும் பாரம்பரியத்தையும் பிரதான சன்னதி மற்றும் கருவறைக்கு
18 படிகள் போன்ற முறைகளைப் பின்பற்றுகிறது. இந்த கோயில் வட சபரி அல்லது வடக்கு சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. வழிபாட்டு முறைகள் சபரிமலை கோயிலுக்கு
ஒத்தவையாக உள்ளன. இதன் மூலம் பக்தர்கள் அனைத்து விரதங்களையும் கடைப்பிடித்து, இருமுடியை (புனிதமான இரட்டை சாமான்களை) எடுத்துச் சென்று, சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்வதைப் போல சரண முழக்கங்கள் மற்றும் பக்திப்பாடல்களைப் பாடுகிறார்கள்.
இருமுடி இல்லாமல் கோயிலுக்கு வரும் மற்ற பக்தர்களுக்கு தனியான பாதை உள்ளது. கன்னிமூல மகா கணபதி, மாலிகாபுரத்து அம்மன், நாகராஜா மற்றும் பிற பரிவார தேவதைகள் ஆகியோரின் துணை ஆலயங்களுடன் சபரிமலையின் அனைத்து அம்சங்களும் இந்த கோவிலிலும் உள்ளன. கோயிலின் கொடிமரம் (கொடி இடுகை)
என்பது ஒற்றைத் துண்டு 40 அடி உயரம் கொண்டது. கோயிலுக்கு கீழே 125 அடி 100 அடி உயரமுள்ள ஒரு தியான மண்டபம், மண்டல பூஜை மற்றும் முக்கிய திருவிழாவின் போது பக்தகர்கள் தங்க வைக்கப்படுகிறது. இம்மண்டபம் ஜெய்ப்பூர் ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது.
இங்கு 1,500 பக்தர்களை தங்க வைக்கும் வசதி உள்ளது.. திருவிழா மற்றும் பிற முக்கிய நாட்களில் இசை நிகழ்ச்சிகள், மத சொற்பொழிவுகள் மற்றும் பிற நிகழ்வுகள் இம்மண்டபத்தில் நடைபெறும். திருவிழா நாட்களில் சுவாமியினை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தங்க மற்றும் வெள்ளி இரதங்களும் இந்த கோவிலில் உள்ளன.
திருவிழா: மகரஜோதி, கார்த்திகை வழிபாடு, தை மாதம் 1 -ஆம் தேதியான மகர ஜோதித் திருநாளில், உத்ஸவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக - அலங்காரங்கள் செய்து, 18 படிகளில் தீபமேற்றி பூஜைகள் நடைபெறும்.
நினைத்த காரியம் நிறைவேற, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெற,
நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க இங்குள்ள ஐயப்பனை வழிபடுகின்றனர்.
இங்குள்ள ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்தும், அபிஷேக ஆராதனைகள் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
-34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.
-நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இருவரும் பரங்கியர்களை எதிர்த்து ஆயுதப் போரட்டத்தில் ஈடுபட்ட தீவிர தேசியவாதி.
-நேதாஜி தனது அம்மாவிடம் "உங்களுடைய கடைசி மகன் இவன்" என்று தான் அறிமுகம் செய்து வைத்தார்.
-"அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் பிறக்க ஆசைப் படுகிறேன்" என்றார் நேதாஜி.
-தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.
-நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர்.
-அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்"
தீமைகளை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த ஒரு அவதாரம் தான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை என்கிற ஊரில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிம்மர் கோவில். இக்கோவில் ஒரு தொன்மையான குடைவரை கோவிலாகும். ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். குடைவரை கோவில்களை கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள்
இக்கோவிலை கட்டியதாகவும், பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலை நன்கு பராமரித்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மரும், இறைவியாக நரசிங்கவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். நரசிம்மர் கோவில்களிலேயே
12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கின்ற கருநெல்லிமரங்கள் அடர்ந்து காணப்பட்டவனப்பகுதியில்,
அமைந்துள்ள பஞ்ச
பாண்டவர்களின் பெருமை பேசும் ஆலயம் பற்றி தெரியுமா?
திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் ஆலயம் உள்ளது.
இக்கோயிலில் சிவபெருமான் புண்ணியமூர்த்தியாகவும், இவருடன் மகாபாரத நாயகர்கள் தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலுக்கான பழங்கதை அற்புதமானது.
வனவாச காலத்தில் தென்னிந்திய பகுதிக்கு வந்த பஞ்சபாண்டவர்கள்,
முழுவதும் காடாக இருந்த நல்லமரம் பகுதியில் வசித்ததாக கூறப்படுகிறது.
இவ்வூர் காட்டுப்பகுதிக்குள் அக்காலத்தில் ‘சைந்தவர்’ எனும் முனிவர் வாழ்ந்துள்ளார்.
இவ்வனத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கிற நெல்லிக்கனியை அவர் உண்டு, தொடர் தவத்தில் இருந்திருக்கிறார்.
கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.
சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை.
தலவிருட்சம் : கடம்ப மரம்.
"தென்சேரி கிரி"’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது.
இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.
இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமான பூதத்தாழ்வார் அவதரித்த மகாபலிபுர ஸ்தல சயன பெருமாள் கோவில் வரலாறு:
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது.
கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும்
பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ தேவியும் பூதேவியும்
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள்.