தேசியதலைவா் தேவா் ஐயா!

பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்.

அதிசய அரசியல்வாதி:

-34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

-நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இருவரும் பரங்கியர்களை எதிர்த்து ஆயுதப் போரட்டத்தில் ஈடுபட்ட தீவிர தேசியவாதி.
-நேதாஜி தனது அம்மாவிடம் "உங்களுடைய கடைசி மகன் இவன்" என்று தான் அறிமுகம் செய்து வைத்தார்.

-"அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் பிறக்க ஆசைப் படுகிறேன்" என்றார் நேதாஜி.

-தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.
-நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர்.

-அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்"
இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள்.

-நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர்.

-3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

-பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை.
கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.

எனக்கு, என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை;
நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுவார்.

-பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
-ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்வார்.

-அவர் போட்டியிட்ட அனைத்தும் தாழ்த்தப்பட்டோர் அதிகம் நிறைந்த தொகுதிகள்.

- இறுதிக்காலத்தில் உடல்நலக் குறைவால், வீட்டைவிட்டு வெளியேறாமல் படுத்த படுக்கையிலே இருந்தும், வென்றார்;
பதவியேற்காமலே மறைந்தார்.
-அரசு சலுகைகள் ஒன்றையும் ஏற்க மாட்டார்.

-இரயிலில் இலவசமாகப் போக மாட்டார்.

-சம்பளம் எதுவும் வாங்க மாட்டார்.

-அரசு கொடுக்கும் சொகுசு பங்களாவில் தங்க மாட்டார்.

-இவர் சிறையிலிருக்கும் காலத்தில் மாரடைப்பு வந்து இறந்தவர்கள், உணவுண்ணாமல் இறந்தவர்கள், தாடி வளர்த்தவர்கள்,
இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள், மொட்டை இட்டவர்கள் ஏராளம்.

-ருசிக்கு அன்றி பசிக்கு உணவுண்பார். தவறாக ஊற்றப்பட்ட வேப்பெண்ணை சோற்றை முகம் சுழிக்காமல் உண்ட கதைகளும் உண்டு.

-சொத்துக்கள் பெரும் பகுதியை தாழ்த்தப்பட்டோருக்கு எழுதிக் கொடுத்தவர்.
-"சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்" என்றார்.

-"தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவன், என் நெஞ்சைப் பிழந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான்" என்றார்.

-ஆங்கிலத்தை நாவிலே ஆண்டவர். டெல்லி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரையை கேட்டு சில நேரம் ஸ்தம்பித்துப்போனது மன்றம்;
திகைத்துப் போயினர் உறுப்பினர்கள்; தூக்கி வைத்துக் கொண்டாடின பத்திரிகைகள்.

- ஜோதிடம், சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் என அனைத்து வகைக் கலைகளையும் அறிந்தவர்.

நேதாஜி இறந்துவிட்டார் என காங்கிரசும் ஆங்கிலேயர்களும் கட்டிய கதையைத் தகர்த்தெறிந்தவர். இறுதி வரை
நேதாஜி தேவருடன் மட்டுமே ரகசிய தொடர்பில் இருந்தார்.

ஆன்மிகத்தின் அடையாளம்:

-தன் வாழ்நாள் முழுதும் பெண் வாடையே படாதவர்.

-"உங்கள் அழகு மீசை பிடித்துள்ளது" ஒரு பெண் கூறியதால் , ஆண்மையின் அடையாளமான தன் மீசையை நீக்கி விட்டு இறுதி வரை வாழ்ந்தவர்.
-தான் படுத்த படுக்கையாக இருக்கும் போதும் தனக்கு மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட்ட பெண் செவிலியரை ஒரு பெண் தன் உடலைத் தொடக் கூடாது என்று மறுத்தவர்.

-இறுதிக் காலத்தில் "ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தாங்கள் இன்னும் பல ஆண்டு காலம் வாழலாம்" என்று மருத்துவர்கள் கூற,
"இறைவன் கொடுத்த உடலை குறையின்றி மீண்டும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறி, அறுவை சிகிச்சையை மறுத்து, உயிரை மாய்த்துக் கொண்டவர்.

-பிறந்த நாளிலேயே இறந்த அதிசயப் பிறவி. தான் இறக்கப் போகும் நாளை முன்னரே கணித்துக் கூறியவர்.
-இந்து மதத்தின் தத்துவங்களை இவரளவுக்கு யாரும் அறிந்திருக்க முடியாது.

-அவர் இறந்ததும் அவர் வளர்த்த மயில்கள் தன் உயிரை மாய்த்தது மன்னவன் வரலாறு மண்ணில் எழுதின மயில்கள்.

சித்த வித்தையில் உயர்ந்தும் நைஷ்டீக பிரம்மச்சரியத்தின் உச்சத்தைத் தொட்டும்
ஈடிணையற்ற ஆன்மீகவாதியாக விளங்கினார் தேவர். அதனாலே சித்த வித்தையில் உள்ளவர்களுக்கும் நைஷ்டீக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்களுக்கும் அவரது சீடர்களால் நடத்தப்படும் “குருபூஜை” என்ற சிறப்பு பூஜையானது.
தேவருக்கு வருடந்தோறும் சிறப்பாக நடத்தப் படுகிறது. பால்குடம் எடுத்தல்,
முளைப்பாரி வளர்த்தல், முடிக் காணிக்கை செலுத்துதல் முதலிய செயல்களின் மூலம் மக்கள் தேவரை தெய்வமாக வணங்குகின்றனர்.

நேருவை தவிர்த்த தேவர்:

நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆன போது உலக முக்கியஸ்தர்கள் பலர் ஆசிய ஜோதி என போற்றி அவரை சந்திக்க நினைத்தனர். ஆனால் நேருவோ,
"நான் ஃபார்வர்டு ப்ளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை சந்திக்க விரும்புகிறேன்" எனக் கூறி சந்தித்து கைகுலுக்க கை நீட்டினார். "என் தலைவனை (நேதாஜி) காட்டிக் கொடுத்த கையை நான் தொட மாட்டேன்" எனக் கூறி நிராகரித்து விட்டார்.
ராஜாஜி போற்றிய தேவர்:

பிரம்மச்சரியத்தை கடை பிடித்ததில் இவரைப் போன்ற ஒருவரை நான் கண்டதே இல்லை.

கண்ணதாசன் வியந்த தேவர்:

- புகை, மது, மாது, மாமிசம் என சகல கெட்ட சுவாசம் கொண்ட நான் சொல்கிறேன். இந்த உலகில் உண்மையான, ஒழுக்கமான, பிரமச்சாரி
உண்டென்றால் அது
உத்தம சீலர் பசும் பொன் தேவர் அவர்கள்
மட்டுமே" என்றார்.
காவிய கவிஞர் திருமிகு.கண்ணதாசன் "இந்து மதத்தின் பொக்கிஷம்" எனப்படும் தனது "அர்த்தமுள்ள இந்துமதம்" நூலில்.

வரலாற்று ஆய்வாளர் திரு.மருதுபாண்டியன் "நான் ஆராய்ச்சி செய்யாத தலைவர்களே இல்லை; நான் ஆராய்ந்தவர்களிலேயே மிகப்பெரும்,
மிகச் சிறந்த தலைவர் தேவர்தான் என்கிறார் ( You tube Jayatv Maruthupandian speech)

இப்பேர்ப் பட்ட மாபெரும் உன்னத மகானின் பெருமைகளைத் திட்டமிட்டு மறைத்து அவருக்கு சாதீய அடையாளத்தை குத்தியது நேருவின் காங்கிரஸ்.

தேசியத்தலைவராக குன்றிலிட்ட விளக்காக அறிப்படவேண்டியவரை,
குடத்திலிட்ட விளக்காக ஆக்கினா் காங்கிரஸ்காரா்கள் காரணம் நேதாஜியுடன் அணிவகுத்து நின்றதால்.

வீரத்தியாகிக்கு வந்தனங்கள் பல!🙏🙏🙏 @Pvd5888

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

29 Oct
🔥 தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில்🔥
மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில்
கடலோரப் பகுதியாக
அமைந்துள்ள இராஜா அண்ணாமலை புரத்தில் அழகிய கோயிலில்
எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சுவாமி ஐயப்பன்.
இங்கு சபரிமலையைப் போன்றே கன்னி மூலை கணபதி, மாளிகைபுரத்து அம்மன்,
நாகராஜ சுவாமி சன்னதிகள் மற்றும் 18 படிகள் அமைந்திருப்பது சிறப்பு.
. சுவாமிக்கு தினப்படி பூஜைகளும் இதர வழிபாடுகளும், சபரிமலை தேவஸ்தானத்தில் நடப்பது போலவே நடைபெறுகின்றன. ஆனால், சபரிமலை கோயில், வருடத்தின் சில நாட்களில் மட்டுமே நடை திறந்திருக்கும்; இந்த ஆலயமோ,
வருடத்தின் 365 நாட்களும் நடை திறந்திருக்கிறது. கார்த்திகை மாதம் துவங்கி மண்டல பூஜை, பிரம்மோத்ஸவம் என விழாக்களுக்குக் குறைவே இல்லை. கார்த்திகை மாதம் துவங்கியதுமே, தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகின்றனர்.
Read 15 tweets
28 Oct
#தீமைகளை_அழிக்கும்_ஒத்தக்கடை
#அருள்மிகு_யோக_நரசிம்மர்

தீமைகளை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த ஒரு அவதாரம் தான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம். Image
#அமைப்பு

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை என்கிற ஊரில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிம்மர் கோவில். இக்கோவில் ஒரு தொன்மையான குடைவரை கோவிலாகும். ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். குடைவரை கோவில்களை கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள்
இக்கோவிலை கட்டியதாகவும், பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலை நன்கு பராமரித்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மரும், இறைவியாக நரசிங்கவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். நரசிம்மர் கோவில்களிலேயே
Read 7 tweets
27 Oct
இந்தியா சமீபத்தில் ருத்ரம் 1 என்ற ஆன்டி ரேடியேஷன் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது..!இந்த ஏவுகணை நம் சுகாய் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்டது..

விமானத்தில் இந்த ஏவுகணையை எடுத்து சென்று தோராயமாக ரேடியேஷன் உள்ள ஒரு இடத்தில் விட்டு விட்டால் போதும்..
இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து எதிரியின் ரேடார் கதிர் வீச்சு வருகிறதோ அந்த இடத்தை தானாக சென்று அழித்து விடும்..

இந்த ஏவுகணை மூலம் எதிரியின் தரையில் ரேடார்கள், கட்டுபாட்டு அறைகள் போன்றவற்றை மிக துள்ளியமாக அழிக்க முடியும்..
நவீன போர் முனையின் கண் எனப்படுவது ரேடார்கள் தான்..
அந்த ரேடார்களையே அழித்து விட்டால், பின் எதிரியை குருடாக்கி விட்டு அவனை உதைப்பதை போன்றது..

சீனாவிடமும் இதே போல் Y 91 என்னும் ஆன்டி ரேடியேஷன் ஏவுகணை உள்ளது ஆனால் அதன் தாக்கும் தூரம் 100 கிலோமீட்டருக்குள் தான்..
Read 7 tweets
27 Oct
12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கின்ற கருநெல்லிமரங்கள் அடர்ந்து காணப்பட்டவனப்பகுதியில்,
அமைந்துள்ள பஞ்ச
பாண்டவர்களின் பெருமை பேசும் ஆலயம் பற்றி தெரியுமா?

திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் ஆலயம் உள்ளது.
இக்கோயிலில் சிவபெருமான் புண்ணியமூர்த்தியாகவும், இவருடன் மகாபாரத நாயகர்கள் தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலுக்கான பழங்கதை அற்புதமானது.

வனவாச காலத்தில் தென்னிந்திய பகுதிக்கு வந்த பஞ்சபாண்டவர்கள்,
முழுவதும் காடாக இருந்த நல்லமரம் பகுதியில் வசித்ததாக கூறப்படுகிறது.

இவ்வூர் காட்டுப்பகுதிக்குள் அக்காலத்தில் ‘சைந்தவர்’ எனும் முனிவர் வாழ்ந்துள்ளார்.

இவ்வனத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கிற நெல்லிக்கனியை அவர் உண்டு, தொடர் தவத்தில் இருந்திருக்கிறார்.
Read 14 tweets
26 Oct
#செஞ்சேரிமலை_என்கிற #தென்சேரிமலை_மந்திரகிரி
#வேலாயுதசுவாமி_திருக்கோயில்

கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.

சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை.
தலவிருட்சம் : கடம்ப மரம்.

"தென்சேரி கிரி"’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது.
இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Read 26 tweets
25 Oct
இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமான பூதத்தாழ்வார் அவதரித்த மகாபலிபுர ஸ்தல சயன பெருமாள் கோவில் வரலாறு:

108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது. Image
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது.

பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது.

கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும் Image
பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ தேவியும் பூதேவியும்

நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். Image
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(