சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள "நடுகல்"லினை கொண்டு ஏற்படுத்தப்பட்ட புரட்டுகள்..
தொல்காப்பியர் காட்டும் நடுகல் என்பது "சீர்த்தகு மரபு"
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்த்தகு மரபில பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)
(1/n)
இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய லிங்கம் போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள் ஆனால், அன்றைய தமிழில் "ல" என்று வார்த்தை துவங்காது
எடுத்துக்காட்டாக,
லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்.
(2/n)
லிங்கம் என்பது வடமொழி அதை தமிழில் எழுதும் போது இலிங்கம்.
அப்புறம் எப்படி நடுகல் லிங்கம் ஆகும்?
தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்றும் மதம் எனும் பேயும் வந்து ஊடாடினால் இது தான் கதி.
(3/n)
இன்று கூட சென்னைக்கு அருகே திருப்போரூர் எனும் இடத்தில் இது போன்ற பழமையான முருகன் கோட்டங்களில், இன்றைக்கும் நடுகல்லைப் பார்க்கலாம், உருவமோ முகமோ இருக்காது ஆனால் முகம் போல் எழுதி, அலங்காரத்தில் மறைத்திருப்பார்கள்.
(4/n)
இப்படியான தொடர் திருபுகளால், இயற்கை வழிபாடை கொண்ட தமிழ் சமூகம் இறை வழிபாடு கொண்டது என நம்ப வைக்கப் பட்டுள்ளது.
(5/n)
மேலும் சைவம்/ வைணவம் என்ற பெயரே சங்கத் தமிழில் கிடையாது மத அமைப்பு இல்லவேயில்லை, இன்னும் சொல்லப் போனால் சங்கத் தமிழில், இறை என்பது இயற்கை வழிபாடே! மேலும் இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை, முதல் மற்றும் இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை.
(6/n)
திருபுகள் வலுப்பெற்றது எப்படி?
அவர்களின் கூற்றுக்கள் தமிழ் சமூகத்தில் மேலோங்க மற்றொரு காரணம், அரசர்களின் அதிகாரம் மூலமா தமிழ் மண்ணில் நுழைந்து கொண்டது தான் .மதம் என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருந்ததால், அதை எதிர்த்து பேச அன்று யாரும் எண்ணவில்லை.
(7/n)
எடுத்துக் காட்டாக , "உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு"
என்று உணர்ச்சிவயப்படுவது போல் சொன்னால்,அது உண்மை என்று அவர்கள் சொல்வதை செய்வீர்கள் தானே?
(8/n)
பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி அதாவது பாவம், பாவத்தை ஈடு கட்ட புண்ணியம் , ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் போன்ற இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது. இவை அனைத்தும் நடந்தது கடைச்சங்க காலத்தில் தான், ஆம்,மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, மதம் ஜாதி இவை பிடித்தது.
(9/n)
அதன் தொடர்ச்சியாக ஆரியர்கள் தங்கள் வேதக் கடவுள்களான.. சோமன், அக்னி, இந்திரன், அஸ்வின், மித்ரன்..இவர்களையெல்லாம் சற்றே தள்ளிவைத்து, தமிழ் மரபு சார்ந்த வாழ்வியலை அடிப்படையாக கொண்டு புதிய புராணக் கடவுள்களையும், அது சார்ந்த கதைகளையும் உருவாக்கம் செய்தனர்.
(10/n)
இந்த திரிபு தொல்காப்பியத்தில் மட்டுமல்ல மற்று பல சங்க இலக்கியங்களிலும் அவர்கள் செய்திருகின்றனர்.
பரிபாடலில் மாயோன் என்பதை திருமாலுக்குப் பெயராக புழங்கியிருக்கின்றார்கள் என்று கூறுகின்றனர். மேலும் பரிபாடலில் மதுரையைப் பற்றிச் சொல்லும் போது,
(11/n)
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர், பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
இதன் பொருள் மதுரைநகரம் திருமாலின் உந்தியின்மலர்ந்த தாமரை மலரை ஒக்கும்; அந் நகரத்துள்ள தெருக்கள் அம் மலரின் இதழ்களை ஒக்கும்; பாண்டியன் அரண்மனை அம்மலரகத்துள்ள பொகுட்டை ஒக்கும்; அந் நகரில்வாழும் தமிழராகிய குடிமக்கள் அம் மலரின் தாதுக்களை ஒப்பர்;
(14/n)
அந் நகர்க்கு வரும் இரவலர் தாதுண்ண வரும் வண்டுகளை
ஒப்பர். மதுரையிலுள்ள மாந்தர் வேதமுழக்கத்தாலே நாள்தோறும்
துயிலெழுவரேயன்றி வஞ்சி நகரத்தாரும் உறையூராரும் போலக் கோழி
கூவுதலாலே துயிலெழுதலில்லை..
என்று கூறுகின்றனர்.
(15/n)
இந்த பரிபாடலின் பொருளில் நம்மால் கவனிக்க முடிகிறது மாயோனாகிய திருமாலின் உந்தியிலமைந்த தாமரை மலரையொத்து அமைந்திருந்ததாம் மதுரை என குறிப்பிடுகின்றனர். வயிற்றுடன் உள்ள தாமரையை புத்தருடனும் இணைத்தும் எழுதலாம், அப்படியானால் தாமரை என வந்தால் திருமால் என எண்ணுவது எப்படிச் சரி?
(16/n)
இது தான் மாயோன் என்பவன் கண்ணன்/ திருமால் என்பவனே என்று திரித்து கூறப்படும் இன்னொரு திரிபு.
சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள தமிழர் வாழ்வியலை திரித்து தங்களுக்கு ஏற்றார் போல் கடவுள் புராணங்களை இயற்றி, தமிழர்க்கு மதம் பிடிக்க வைத்தது தவிர இவர்கள் செய்த நன்மை என்ன?
காலம் நான்கு கால் பாய்ச்சலில் குதித்து செல்லும்போது, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மானுட வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களை செய்யும்போது மொழி மட்டும் எந்த மாற்றமும் பெறாமல் இருந்துவிட முடியுமா? @The_69_Percent@esemarr3 @Greatgo1
சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஒன்றிய அரசின் அமைச்சகம், 1980- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியாவின் வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்த முன்மொழிவுகள் உள்ள ஆவணத்தை அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
(1/n)
காடு எனும் வரையறைக்குள் வரும் பகுதிகளில், காடு சாராத திட்டமான நெடுஞ்சாலை, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளில், தேவைக்கு அதிகமாகவோ, தேவையில்லாமலோ காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க உருவாக்கப்பட்டது தான் வனப்பாதுக்காப்பு சட்டம்.
(2/n)
இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய ஒன்றிய அரசு முயற்சிக்கிறது, அதில் 14 திருத்தங்களை/ சட்ட விலக்குகள் குறித்த முழுமையல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு, அதன்மீது கருத்துக்களை கோரியுள்ளது.
நாம் இந்த தளத்தில் பல நாட்கள் வெறும் பொழுது போக்கிற்காக பதிவுகளை இட்டு கடந்து செல்கிறோம், ஆனால் இன்று இது பேச வேண்டிய விஷயம் என தோன்றுகிறது. இது விளையாட்டல்ல நமக்கு பெறும் வினையாற்றும் ஒரு செய்தி.
(1/n)
டெல்லியில் விவசாயிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர், அதற்கு காரணம் புதிய வேளாண் சட்டம், என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட வேண்டிய தேவை என்ன என்பது பலருக்கும் புரியாமல் இது தேவையில்லாத போராட்டம் என்று கூறுகின்றனர்.
(2/n)
இந்த வேளாண் சட்டத்தில் இருக்கும் எனக்கு தெரிந்த பிரச்சனைகளை கூறுகிறேன், நீங்கள் சொல்லுங்கள் இதை எதிர்க்க வேண்டுமா? இல்லையா என்று....
சங்க இலக்கியங்களில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளது, அது ஆரியர்கள் சொன்னது அல்ல. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் கூட கடவுளைப் பற்றிய குறிப்பு உள்ளது என்று வாதிடுவார்கள் பலர்,அதற்க்கு எடுத்துக் காட்டு என்று இந்த பாடலையும் கூறுவார்கள்.
ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்து, காலையில் சூரியன் எந்த நேரத்தில் உதித்தது ( உதிக்கும் நேரத்தை ஓரை என்பனர்) என்பதை அட்ச ரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது,
(1/n)
இந்த கணிப்பு தமிழ்நாட்டில் ஒரு நேரமும், கேரளாவில் ஒரு நேரமும் ஆந்திராவில் ஒரு நேரமும் இப்படியாக இடத்திற்கு இடம் மாறுபடும். இப்படி இந்த நேரத்தை வைத்து கணிப்பது தான் ஜாதகம். மொத்தம் 27 நட்சத்திரம்.
(2/n)
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதம் அவை அஸ்வினி, பரணி, கார்த்திகை மற்றும் ரோகினி எனப்படும். 27×4=108 நட்சத்திர பாதங்கள் . ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என , 108 நட்சத்திரக் கால்கள் -