கந்த ஸஷ்டி விரதம் பற்றிய பதிவு: தேவர்களுக்குப் பெருந்துன்பத்தை விளைத்த சூரபத்மனையும், அவனது அசுரர் கூட்டத்தையும் அழிக்கச் சிவபெருமான் முருகப் பெருமானைத் தோற்றுவித்து அவருக்கு உருத்திரர்களின் அம்சமான பதினோரு படைக் கலங்களையும் அளித்தார். பின்னர் பராசக்தி தனது சக்தி அம்சத்திலிருந்து
வேலாயுதத்தைத் தோற்றுவித்து முருகப்பெருமானுக்கு அளித்தார். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். சூரசம்ஹார விழாவின் அங்கமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சக்தியிடம் வேல் வாங்கும் விழா என்று பெயர். பெரிய சிவாலயங்களில்
சிறப்புமிக்க முருகன் ஆலயங்களில் சில அம்மன் கோயில்களிலும் கந்தர் சஷ்டியினை ஒட்டி நடத்தப்படும் பெருவிழா சூரசம்ஹார பெருவிழாவாகும். இது தீபாவளிக்கு மறுநாளான பிரதமையில் தொடங்கி சஷ்டியில் நிறைவு பெறும். இதவே கந்தர் சஷ்டி விரதம். பிரதமையில் தொடங்கி முருகனுக்கு இந்த ஆறு நாட்களிலும் காலை,
மாலை ஆகிய இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். சில ஆலயங்களில் முருகனுக்கு எதிரேயுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி, காலையும் மாலையும் முருகன் வீதி உலா நடத்தப்படுகிறது. இவ்விழாவின்போது முருகன் சூரபத்மனையும் அவனது அசுரக் கூட்டங்களையும் அழிக்கும் ஐதீக நாடகம் நடத்தப்படும்.
இந்த நாடகத்தில் முருகன் நவவீரர், நாரதர் ஆகியோரின் வேடம் தரித்து ஒரு கூட்டமும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி, பானுகோபன், அவனது சேனாதிபதிகள் மற்றோர் கூட்டமும் இரண்டு பிரிவினராக இருந்து நாடகத்தை நடத்துகின்றனர்.
முதலில் நாரதர் வேடம் தரித்தவர் காசிப முனிவனுக்கு மாயையிடம்
சூரபத்மனும் தம்பி தங்கையரும் அசுரக் கூட்டங்களும் பிறப்பது; அவர்கள் தவம்; 1008 அண்டங்களை 108 யுகங்கள் ஆண்டது; அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் இழைத்தது; தேவர்கள் துன்பம் தாள மாட்டாமல் சிவபெருமானைச் சரண் அடைந்தது; சிவபெருமான் முருகனைப் படைத்து அளித்தது; முருகன் பல்வேறு
திருவிளையாடல்கள் புரிந்தது, தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் முருகனை அழைத்து சூரபத்மனை அழித்து வர ஆணை தந்தது, முருகன் அதை ஏற்றுக் கொண்டு அன்னையின் அனுமதி வேண்டி அவள் வாயிலில் நிற்பது வரையிலான கதையைச் சுருக்கமாக பாடலாகவோ, விருத்தமாகவோ, உரை நடையாகவோ கூறுவார். பின்
அம்பிகையைத் துதித்துப் பாடல்கள் பாடப்படும். அம்பிகை ஆசி வழங்குவதுடன் வேல் தருவதாகக் கூறும் பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சர்வ வாத்தியங்களும் முழங்க அம்பிகைக்கும் முருகனுக்கும் ஏக காலத்தில் தீபாராதனை நடக்கும். பின்னர் அர்ச்சகர் அம்பிகையின் கையில் வைக்கப்பட்டிருக்கும்
அலங்கரிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து முருகன் திருக்கரத்தில் வைப்பார். ஊர்ப் பெரியவர்கள் ஊர்ப் பொதுவில் வழிபடப்படும் கனத்த இரும்பு வேலாயுதத்தை எடுத்து வந்து முருகன் வேடமிட்டவரிடம் அளிப்பார். உடனிருக்கும் நவவீரர்கள் வேடம் புனைந்தவர்கள் வில்லம்பு அல்லது நெடிய பட்டாக்கத்தியைத்
தாங்குவர். அவர்கள் அம்பிகையை வணங்கி, சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்திற்கு வீதி உலாவாகச் செல்வர். முருகனைக் குதிரை அல்லது ஆட்டுக்கடா வாகனத்தில் அமர்த்தித் தம்முடன் எடுத்துச் செல்வர். இதுவே பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி, இரண்டு மணி நேரத்திற்குக் குறையாமல் நடக்கும்.
எண்ணற்ற தலங்களில் இத்தகைய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றாலும் அவற்றில் தலையானது சிக்கலில் நடைபெறுவது! ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்பது பழமொழி. சிக்கலில் வேல் வாங்கும்போது முருகன் திருமேனியில் வியர்ப்பது இன்றும் நடக்கும் அதிசயம். முருகனுடன் தோன்றிய வீரவாகு
தேவரின் வம்சத்தில் வந்தவர்கள் என்று புராணம் போற்றும் செங்குந்தர்களான கைக்கோளர்கள் பெரும்பாலான ஊர்களில் சூரசம்ஹார நாடகத்தினை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் செட்டியார்கள் நடத்துகின்றனர். சிவபெருமானிடமிருந்து முருகன் வேல் வாங்குதல் பொதுவாக சூரசம்ஹார விழாவில் அன்னை பராசக்தியிடம்
வேல் வாங்கும் நிகழ்ச்சியே அனைத்து ஆலயங்களிலும் நடத்தப்படுகிறது. அபூர்வமாக சில தலங்களில் சிவபெருமானிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சூரசம்ஹாரத்தின்போது முருகன் சபைக்கு எழுந்தருள்கின்றார். அவரோடு அன்பர்களும், ஐதீக நாடகத்தில் பங்கு பெறும்
முருகன், நவவீரர்கள், நாரதர் முதலியோரும் சபைக்கு வருகின்றனர். நடராஜரின் இடப்பக்கத்தில் இருக்கும் சிவகாமி அம்பிகையின் கரத்தில் வேல் வைக்கப்பட்டு தீபாராதனை ஆனதும் அது முருகன் திருக்கரத்தில் வைக்கப் படுகிறது. பின்னர் முருகன் அன்பர்களும் ஐதீக நாடக நடிகர்களும் தொடர சூரசம்ஹாரத்திற்கு
எழுந்தருளுகின்றார். முருகன் முத்துக்குமாரசுவாமி என்னும் பெயரில் கோலாகலமாக வீற்றிருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழாவில் முருகன், கருவறைக்கு முன்பாக எழுந்தருளி மூலவரான வைத்தியநாத சுவாமியிடமிருந்தே வேலாயுதத்தைப் பெறுகிறார். இவை மகா கந்தபுராணத்தில் சிவபெருமான் முருகனுக்கு
வேலாயுதத்தை அளித்ததை அடியொற்றி நடத்தப்படுவதாகும்.
ஸ்கந்தா சரணம்! ஸ்கந்தா சரணம்!
சரவணபவ குஹா சரணம்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

5 Nov
A Comprehensive summary of all the authentic Sankara Vijayas has been presented in a tamil discourse by Smt. Sindhuja Chandramouli with the blessings of Jagadguru Sri Sankara Vijayendra Saraswati Swamigal. List of authentic significant event from Sri
Acharyal’s Punya charitram:
1) Birth of Sri Adi Acharyal to the divine couple Aryamba-Shivaguru
2) Acharyal praying for Swarnavrushti using Kanakadhara Stothram
3) His initiation into Sanyasa from Sri Govinda Bhagavatpadacharya on the banks of River Narmada
4) Lord Parameshvara’s
test for Sri Adi Acharyal in Kashi
5) His grace towards His Sishya Sri Padmapadacharya
6) His debate with Sri Veda Vyasa on His Brahma Sutra Bhashyam & with Mandana Mishra followed by initiating Him with appellation of Sri Sureshwaracharya
7) Receiving the five spathika lingams
Read 4 tweets
5 Nov
அதிகம் பகிரப்பட வேண்டிய பதிவு. Please RT and share.
#ஜெய்பீம் படம் பார்த்தேன். பிரமாதமான மேக்கிங். விழுப்புரம் மாவட்டத்தின் பேச்சு வழக்கை எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் உதவியுடன் தத்ரூபமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள். வட தமிழக பேச்சு வழக்கை வெள்ளித் திரையில் காட்டி
இருப்பதற்கு மிக்க நன்றி. எங்கள் இருளர் சமுதாய சொந்தங்களின் வாழ்வியலையும் அழகாக காட்டி இருந்தீர்கள். அதற்காகவும் நன்றி. இப்படத்தின் மூலம் சம்பாதித்த பல கோடியில் ஒரு கோடியை எங்கள் சமுதாயத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள். (இதை கணக்கு காட்டி வருமான வரியை குறைத்து செலுத்தலாம் என்பது
தனிக்கதை). இருந்தாலும் எங்கள் சமுதாயத்திற்கு உதவியதற்கு நன்றி. சரி விஷயத்திற்கு வருகிறேன். உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என்பதால் வழக்கறிஞர் சந்துரு, பாதிக்கப்பட்ட அப்பாவி ராஜிகண்ணு என கதா பாத்திரங்களின் பெயர்களை அப்படியே நிஜ பெயரிலேயே காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்
Read 13 tweets
5 Nov
Some clarity on how this Govt Works. Impatient people think nothing is Happening. Do you have any idea why this kisan andolan has suddenly fizzled out? It is a common knowledge that all along this andolan has been funded by people inimical to india's growing clout internationally
This was funded mainly by overseas indians and khalistanis. Two prominent being Darshal pal singh Dhaliwal of US and Amrikpal singh of Spain. It is said that the Turnover of Darshan pal is higher than even Punjab's budget. He owns more than 100 gas stations in US DPS landed in
Delhi directly from Chicago on 24/25th October. He was interrogated at the airport and was sent back by the same flight. He is PIO, meaning holds permanent visas for india visit. But now this stands cancelled. Cannot come to india in future. Same is the case with Amrik. He
Read 5 tweets
5 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஹோட்டல் உரிமையாளர் மாணிக்கம் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது பெரியவர் சின்னையன் மதிய உணவுக்கு எவ்வளவு பணம் என கேட்டார். உரிமையாளர் மாணிக்கம் மீன் குழம்புடன் 50 மீன் இல்லாமல் 20 ரூபாய் என்றார். கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை
எடுத்து உரிமையாளரை நோக்கி நீட்டினார் 65 வயது பெரியவர் சின்னையன். இதுவே என் கையில் உள்ளது. இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க. வெறும் சாதமானாலும் பரவாயில்லை. எனக்கு மிகுந்த பசி. நேற்று முதல் எதுவும் சாப்பிடவில்லை என்று சொல்லத் தயங்கியபடியே அவர் தொண்டை நடுங்கியது. ஹோட்டல்
உரிமையாளர் மாணிக்கம் மீன் குழம்போடு, அனைத்தையும் அவருக்கு பரிமாறினார். பெரியவர் சின்னையன் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன. நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? பொறுமையாக சாப்பிடுங்கள் அய்யா. அந்த வார்த்தையைக் கேட்டவரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார், எனது கடந்த கால
Read 11 tweets
4 Nov
#HappyDeepavali #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள். நம் பண்டிகைகளில் தீபத்திற்கு முக்கியத்துவம் உண்டு. தீபம் இல்லாத வழிபாடே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக Image
தீபாவளி அன்று வரிசையாய் விளக்கேற்றி வைக்கும் போது, புற இருள் மட்டுமின்றி, அக இருளும் அழிந்து போகும். இதற்கு காரணம் தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து வருகின்றனர் என்ற நம் ஐதீகமே. தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரத்தை மஹாவிஷ்ணுக்கும்,
பூமாதேவிக்கும் மகனாக
பிறந்தவன் நரகாசுரன். முதலில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான். அவன் வளர வளர தன்னுடைய அசுர குணதிற்கே உரித்தான அம்சத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். தவத்தில் சிறந்த மகரிஷிகள், குருமார்கள் போன்றவர்களை இகழவும் செய்தான். ஈரேழு லோகங்களை
Read 10 tweets
3 Nov
கஷ்டப்படுகிறோம். அதற்கு நிவர்த்தி செய்ய பரிகாரம் செய்கிறோம். ஆனாலும் துன்பப் படுகிறோமே என்று நினைப்பவர்களுக்கு-பரிகாரம் என்பது என்ன என்பதை விளக்கும் கதை இது. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த
ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பணத்தை செலுத்தினார். அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து ஐயோ அம்மா என்ற குரல்
கேட்டது. யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தார். அங்கு பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான். இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே என்று பதைபதைத்த அரசன் உடனே காவலாளிகளை கூப்பிட்டு, இவன் பெற்றோர் அருகே தான்
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(