Censorship : இதுவும் பிரிட்டனிடம் இருந்து நாம் கற்ற கட்டுப்பாட்டு முறைதான். முகலாய காலத்தில் கூட அரசர்களையே கேலியும், கிண்டலும் செய்து வந்த பல்வேறு கலைவடிவங்கள் எந்தவிதத் தடையுமின்றி நடந்து வந்த பண்பாட்டுச் சூழல் இது. நாட்டார் பாடல்களில் அதன் எச்சத்தை இன்னமும் நாம் காணலாம்.
பிரிட்டிஷ் அரசுதான் முதன்முறையாக மேடை நாடகங்களுக்குத் தணிக்கை முறையைக் கொண்டு வந்தனர். அதன்படி நாடகம் மேடை ஏறுவதற்கு முன் அதன் முழு ஸ்கிரிப்டை காவல்துறையிடம் தந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. திரைப்படங்கள் வரத் தொடங்கியபோது அவைகளுக்கு தணிக்கை இல்லாமல் இருந்ததாம்!
பிறகு, அதன் ஆதிக்கத்தைக் கண்டு மிரண்டு போன அரசு திரைப்படங்களுக்கு என தணிக்கைத் துறை உருவாக்கியது. எந்த ஒரு கட்டுப்பாட்டு அமைப்பும் நாளடைவில் தேவைப்படாமல் போவதுதான் சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளம். இங்கிலாந்தில் இப்போது திரைப்படத் தணிக்கைத் துறையின் பணி வெறுமனே, Age Rating
தருவது மட்டும்தான். மற்றபடி ஒரு திரைப்படத்தின் எந்தவொரு காட்சியையோ, வசனத்தையோ நீக்குவதோ, மாற்றுவதோ செய்வதில்லை. போர்ன் வகைப் படமாகவே இருந்தாலும் அதற்குரிய முத்திரை இட்டு வெளியிட அனுமதிப்பதுதான் அந்த நாட்டு ஜனநாயகம். இந்தியாவில் சென்சார் துறை மிகவும் பொறுமையாகவே மாற்றம் கண்டது.
60, 70, 80 களில் சென்சாரில் சிக்கிச் சின்னாபின்னமாகி கதையே மாறிப் போய் காணாமல் போன திரைப்படங்கள் ஏராளம். இப்போது ஹிந்தி படங்களில் அனுமதிக்கப்படும் கவர்ச்சியின் அளவுகோல், பிராந்தியப் படங்களில் அரசுக்கு எதிராக பேசப்படும் வசனங்கள், காட்சியமைப்புகள் பெரும்பாலும் தடை செய்யப்படாமல்
அனுமதிக்கும் அளவுக்கு ஒரு மெச்சூரிட்டி (ஓரளவுக்கு) வந்துள்ள இந்தச் சூழலில் மத்திய அரசு முன்னெடுக்கும் சட்ட முன்வடிவு கலைப்படைப்புகளுக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது.
எந்தவொரு திரைப்படமும் சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு அதை தடுக்கவோ, திரையிட மறுக்கவோ யாருக்குமே அதிகாரம் இல்லை
என்பதுதான் சட்டம். அண்மைக்காலத்தில் மதத்தின் பேரால், சாதியின் பேரால் இந்த உரிமையே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. கருத்துரிமையின் பக்கம் நிற்க வேண்டிய அமைப்புகள், அரசியல் சட்டத்தைக் காக்க வேண்டிய அரசுகள் கூட பெரும்பான்மை / சிறுபான்மை வாக்கு அரசியல் அழுத்தத்தால்
தடுமாறும் இந்தச் சூழலில் மேலும் ஒரு புதிய சட்ட அதிகாரம் உருபெற்று வருவது கலைஞர்களின் ஒட்டுமொத்த படைப்புச் சுதந்திரத்தையும் அழிக்கும் செயல். இது வெறுமனே திரைப்படத்தின் மீதான அடக்குமுறை மட்டுமல்ல! மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் செயல்பாடுகளின் மீதான அடக்குமுறை. இப்படித்தான் இனி
மக்கள் சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், செயல்பட வேண்டும் என அரசு நேரடியாக அச்சுறுத்தும் ஃபாசிஸ உத்தி. சென்சார் முறையே தேவை இல்லாமல் போகுமளவுக்கு ஒரு சமூகம் சகிப்புத்தன்மையுடன் வளர்ந்து பரிணமிக்க வேண்டும் என்பதுதான் மக்களாட்சியின் நீண்டகால குறிக்கோளாக இருக்க முடியும். ஆனால்,
திரைப்படங்கள் சென்சார் சான்றிதழ் பெற்று வெளியானப் பிறகும் அவைகளை ஒன்றிய அரசின் அதிகாரி ஒருவர் மேசையில் இருந்து தடை செய்து விட முடியும் எனும் நினைப்பே நாஜிக்களை நினைவூட்டுகிறது. திரைத்துறையில் பெயரும், புகழும் பெற்ற அனைத்துக் கலைஞர்களும் ஒரே குரலில் இந்தக் கொடுமையான சட்டத்தை
எதிர்க்க முன்வர வேண்டும். இந்தப் படைப்புச் சுதந்திரம் இல்லாமல் உங்களை உங்களது ஆசான்கள் உருவாக்கி இருக்க முடியாது. இந்தக் கருத்துரிமை இல்லாமல் நீங்கள் வீராவேச வசனங்களை, பஞ்ச் டயலாக் பேசி கைத்தட்டல் வாங்கி இருக்க முடியாது. நாளை என்பது நேற்றின் தொடர்ச்சியாக இருக்க வேண்டுமெனில்
களம் இறங்குங்கள். இந்தக் கொடுமையான சட்டமுன்வடிவு குறித்து மக்களிடம் விளக்கிச் சொல்லி அவர்களின் கவனத்தை ஈர்க்க, திரைத்துறை ஒரே குரலில் பேசிட வேண்டியது அவசியம். Otherwise, this will be the beginning of the End of Movies. Unite together to oppose the Proposed Cinematograph Act 2021.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#திமுகஇளைஞரணி
தாய்க் கழகத்துக்குப் பிறகு திமுகவின் மிக முக்கிய அணியாக இளைஞர் அணி இருப்பதின் காரணம் யாவரும் அறிந்ததுதான்! அந்த அணியைத் துவக்கி, 30 ஆண்டுகள் திறம்பட நடத்தி வந்தது திமுகவின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனாலேயே இயல்பாக கூடுதல் கவனம் பெற்ற இளைஞர் அணி உருவாக்கிய
தலைவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பெரும் வெற்றிகளின் போதும், தொடர் தோல்விகளின் போதும் கட்சிக்கு அச்சாணியாக இருந்து செயல்பட்டது திமுக இளைஞர் அணிதான். அந்த இடத்தை இட்டு நிரப்ப மூன்றாண்டுகளுக்கு முன்னர் @Udhaystalin தேர்வு செய்யப்பட்ட போது அவர் எதிர்கொண்ட கடுமையான விமர்சனமும், இங்கே
நடந்த தொடர் விவாதங்களும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவியை தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியைப் போல பூதாகரமாக்கியது. அதனாலேயே, இளைஞர் அணிச் செயலாளரின் தேர்வு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
நான் கவனித்தவரை இளைஞர் அணியின் இந்த மூன்றாண்டு செயல்பாடுகளை தொகுத்து எழுதினால் அது ஒரு
#தேசப்பற்று என்பதை தேசத்தின் எல்லையில் கிடைக்கும் பொருள் அல்ல. அது மக்களின் உணர்வுகளில் கிளர்ந்தெழக் கூடிய உணர்வு. தேசத்தைக் காப்பது என்பது தேசத்தின் எல்லையைக் காப்பது மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளைக் காப்பதும்தான். தேச சேவை என்பது எல்லையில் பணிபுரிவது
மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் அடிதட்டு மக்களை மேலுயர்த்தும் பணியும்தான்.
எப்போதெல்லாம் தங்களின் போலி முகமுடிகள் கிழிந்து தொங்குகிறதோ, அப்போது மட்டும் "எல்லையில் ராணுவ வீரர்கள்" என கூச்சலிட்டு உருவாக்கும் போலி எழுச்சிக்கு ஆயுள் ஓரிரு நிமிடங்கள் கூட இருக்காது. உதாரணமாக, எல்லையில்
ஒரு ரெஜிமெண்டில் பணிபுரியும் 1000 ராணுவ வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களை மாநிலம் வாரியாக பிரிப்போம். பிறகு பொருளாதார வாரியாக, மதம் வாரியாக, சாதி வாரியாக பிரிப்போம். இவர்கள் அனைவருமே தேசத்தின் பாதுகாவலர்கள்தானே! இவர்கள் அனைவருக்குமே தேசத்தின் வளங்கள் சமமாக பிரித்துத்
நீண்ட திரெட் :
நேற்று இந்நேரம் டைம்லைன் இருந்த கொதிநிலையை எண்ணிப் பார்க்கிறேன்.
தடுப்பூசி முகாம்களுக்கு மக்களைக் கொண்டு வரும் பணியைச் செய்ய சென்று கொண்டிருந்த நேரத்தில் டிவிட்டரை திறந்தபோது திருச்சியில் நடந்த சம்பவத்தை அறிந்தேன். இதென்ன! தவறான அணுகுமுறையாக உள்ளதே என நினைத்தபோது
நண்பர் ஒருவர் அழைத்து பாதிக்கப்பட்ட பையனுக்கு உதவ முடியுமா என கேட்டார். அந்தப் பக்கம் நடந்தது எதுவென தெரியலையே என்றேன். அந்த சம்பவத்தின் இணைப்பை அனுப்பி வைத்தார். பார்த்தால் அது நான் ப்ளாக் பண்ணி வைத்திருக்கும் ஐடி. அப்போதே நான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே
அதற்கான எதிர்வினையாக உங்களிடம் எழுந்த கோபமும், ஆத்திரமும் என்னையும் உள்ளே இழுத்து விட்டு விட்டது. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்களான @IlovemyNOAH2019 , @Surya_BornToWin போன்றோர் கூட சமநிலை இழந்திருந்ததை என்னால் இப்பவும் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் நிதானமாக தமது
"மாநில வளர்ச்சி கொள்கைக்குழு" எனப்படும் முன்னாள் மாநிலத் திட்டக்குழுவுக்கு துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு தமிழக அரசின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரங்களும், வசதிகளும் கொண்ட உயர்ந்த பொறுப்பாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில்
தமிழக அரசின் கொள்கைகள், மக்களுக்கான இலவசத் திட்டங்கள், கல்வி, மருத்துவ அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக வடக்கில் இருந்து சங்கிகள் நடத்திய மிகப் பெரிய பண்பாட்டுப் போரை நாம் எதிர்கொண்டோம். அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து நமது சமூகநீதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு
ஆதரவாக ஆதாரப்பூர்வமாக பேசியும், எழுதியும் இளம் தலைமுறையினருக்கு "நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம்" என ஆற்றுப்படுத்தி வழி நடத்திய பொருளாதார மேதைக்கு இந்த உயரிய கவுரம் அளித்தது மிகப் பொருத்தமே!
அடுத்ததாக பேரா. ம. விஜயபாஸ்கர். The Dravidian Model புத்தகம் எழுதிய ஆய்வாளர். அதுபோக
இந்திய தபால் துறை :
நான் மிகவும் மதிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் இது. உலகிலேயே மிகச் சிறப்பான கட்டமைப்பும், அர்ப்பணிப்பும் கொண்ட நிறுவனம் இது என்று கூட நான் சொல்வேன். சின்ன வயசிலே நான் பல பரிசோதனைகளை செய்து பார்த்த அனுபவத்தில் இதை சொல்கிறேன்.
நினைவு 1 : அட்லஸ் எடுத்து வடக்கே
ஒரு சின்ன ஊரின் பெயரைத் தேர்ந்தெடுப்பேன். 15 பைசாவுக்கு போஸ்ட் கார்டை வாங்கி அந்த ஊரில் ஒரு கற்பனைக் கேரக்டரை உருவாக்கி, உடைந்த ஆங்கிலத்தில் எங்க ஊர், கோவில் பற்றி, அன்றைக்கு மயில் பார்த்தது, வீட்டுப்பாடம் எழுதியது எல்லாம் டைரி போல எழுதி தபால் பெட்டியில் போடுவேன். நாட்கள் மிக மிக
மெதுவாக நகர்ந்த காலம் அது. பல நாள் கழித்து அந்த தபால் கார்டு மேலே பற்பல முத்திரைகளை வாங்கி குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப்போட்ட துணி போல எனக்கே திரும்ப வரும். addressee not found என முத்திரை தாங்கி.. நான் கொடுத்த 15 பைசாவுக்கு மதிப்புத் தந்து அந்த அட்டையை பல ஆயிரம் மைல்கள் பற்பல
+2 தேர்வை எப்படி நடத்தவது?
எனது யோசனைகள்.. பரிசீலினைக்கும் & விவாதத்துக்கும். 1. சராசரியாக 8 லட்சம் பிள்ளைகள் +2 தேர்வை எழுதுகின்றனர். 2. எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் 6 தேர்வுகள்தான். 3. அதில் இரண்டு மொழிப்பாடங்கள். 4. மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்கள்தான்
உயர்கல்விக்கான தகுதி மதிப்பெண்கள். சரிதானே!
எனது யோசனை :
1.) 8 லட்சம் பேர்களுக்கும் மொழிப்பாடங்களுக்கு அவர்களின் +1, +2 (பிற தேர்வுகள்) அடிப்படையில் மதிப்பெண்களைத் தந்து விடலாம். கூடுதலாக Covid Consideration ஆக 10 மதிப்பெண்களும் தரலாம் 2) வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள
கலை & அறிவியியல் கல்லூரி, பட்டயக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மீதமுள்ள 4 பாடங்களுக்கும் கூட இதே முறையில் மதிப்பெண்கள் வழங்கிவிடலாம்.
மேற்சொன்ன கல்லூரி / பாலிடெக்னிகளில் தேவைக்கும் அதிகமான இரு மடங்கு இடங்கள் உள்ளமையால் இவர்கள் கோரும் இடங்களைத்