#தேசப்பற்று என்பதை தேசத்தின் எல்லையில் கிடைக்கும் பொருள் அல்ல. அது மக்களின் உணர்வுகளில் கிளர்ந்தெழக் கூடிய உணர்வு. தேசத்தைக் காப்பது என்பது தேசத்தின் எல்லையைக் காப்பது மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளைக் காப்பதும்தான். தேச சேவை என்பது எல்லையில் பணிபுரிவது
மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் அடிதட்டு மக்களை மேலுயர்த்தும் பணியும்தான்.
எப்போதெல்லாம் தங்களின் போலி முகமுடிகள் கிழிந்து தொங்குகிறதோ, அப்போது மட்டும் "எல்லையில் ராணுவ வீரர்கள்" என கூச்சலிட்டு உருவாக்கும் போலி எழுச்சிக்கு ஆயுள் ஓரிரு நிமிடங்கள் கூட இருக்காது. உதாரணமாக, எல்லையில்
ஒரு ரெஜிமெண்டில் பணிபுரியும் 1000 ராணுவ வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களை மாநிலம் வாரியாக பிரிப்போம். பிறகு பொருளாதார வாரியாக, மதம் வாரியாக, சாதி வாரியாக பிரிப்போம். இவர்கள் அனைவருமே தேசத்தின் பாதுகாவலர்கள்தானே! இவர்கள் அனைவருக்குமே தேசத்தின் வளங்கள் சமமாக பிரித்துத்
தரப்பட்டுள்ளதா என பாருங்கள். உங்களின் தேசப்பற்று உண்மையாக இருப்பின் அது எந்தத் திசை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பது புரியும். நாட்டின் வளங்களை தங்களது தகுதிக்கு மீறி அனுபவிப்பவர்களின் குற்ற உணர்வின் வடிகாலே தேசப்பற்றை எல்லையில் கொண்டு வைக்கும் யுத்தி. தேசத்தின் எல்லை மாறக்
கூடியது. அண்மையில் கூட லடாக்கில், டோக்லாமில் மாற்றப்பட்டுள்ளன. அருணாச்சலப் பிரதேசத்தில், காஷ்மீரில் நமது இல்லாத எல்லைக் கோட்டுக்கு போராட்டம் நடக்கிறது. தேசத்தின் எல்லை காக்கும் போர் வரும்போது இந்த நாட்டுமக்கள் ஒருபோதும் பிரிந்து நின்றதில்லை. நிற்கவும் போவதில்லை. அதே நேரத்தில்
பூச்சாண்டி வருவான் என மிரட்டி குழந்தைக்கு சோறு ஊட்டும் அணுகுமுறையை தேசப்பற்றாக ஏற்க முடியாது. எல்லையில் ராணுவவீரர்களின் பணி மகத்தானதுதான். அதேபோல, காடு,மரம்,இயற்கை வளம் காக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூகநீதி காக்க போராடும் போராளிகள், தாய்மொழிக் காவலர்கள், ஆசிரியர்கள்,
மருத்துவர்கள், தூய்மைப்பணியார்கள் என தன்னலமின்றி முழு ஈடுபாட்டுடன் பணிபுரியும் எவருமே ராணுவ வீரர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. இவர்களின் தேசப்பற்றின் மீது கேள்விகள் எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை. நித்தமும் தங்களது கற்பை நிருபித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எந்த நாட்டின்
குடிமகனுக்கும் இல்லை. தேசப்பற்று என்பது "ஜெய்ஹிந்த்" எனும் வாய்ச் சொல்லில் மட்டும் இல்லை. அது தேசத்து மக்களின் உரிமை காக்கும் ஒவ்வொரு செயலிலும் உள்ளது. எங்களுக்கு அதுதான் இப்போதைய முன்னுரிமை. முக்கியத் தேவை.
"வாழிய செந்தமிழ்!
வாழிய நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு". 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீண்ட திரெட் :
நேற்று இந்நேரம் டைம்லைன் இருந்த கொதிநிலையை எண்ணிப் பார்க்கிறேன்.
தடுப்பூசி முகாம்களுக்கு மக்களைக் கொண்டு வரும் பணியைச் செய்ய சென்று கொண்டிருந்த நேரத்தில் டிவிட்டரை திறந்தபோது திருச்சியில் நடந்த சம்பவத்தை அறிந்தேன். இதென்ன! தவறான அணுகுமுறையாக உள்ளதே என நினைத்தபோது
நண்பர் ஒருவர் அழைத்து பாதிக்கப்பட்ட பையனுக்கு உதவ முடியுமா என கேட்டார். அந்தப் பக்கம் நடந்தது எதுவென தெரியலையே என்றேன். அந்த சம்பவத்தின் இணைப்பை அனுப்பி வைத்தார். பார்த்தால் அது நான் ப்ளாக் பண்ணி வைத்திருக்கும் ஐடி. அப்போதே நான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே
அதற்கான எதிர்வினையாக உங்களிடம் எழுந்த கோபமும், ஆத்திரமும் என்னையும் உள்ளே இழுத்து விட்டு விட்டது. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்களான @IlovemyNOAH2019 , @Surya_BornToWin போன்றோர் கூட சமநிலை இழந்திருந்ததை என்னால் இப்பவும் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் நிதானமாக தமது
"மாநில வளர்ச்சி கொள்கைக்குழு" எனப்படும் முன்னாள் மாநிலத் திட்டக்குழுவுக்கு துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு தமிழக அரசின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரங்களும், வசதிகளும் கொண்ட உயர்ந்த பொறுப்பாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில்
தமிழக அரசின் கொள்கைகள், மக்களுக்கான இலவசத் திட்டங்கள், கல்வி, மருத்துவ அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக வடக்கில் இருந்து சங்கிகள் நடத்திய மிகப் பெரிய பண்பாட்டுப் போரை நாம் எதிர்கொண்டோம். அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து நமது சமூகநீதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு
ஆதரவாக ஆதாரப்பூர்வமாக பேசியும், எழுதியும் இளம் தலைமுறையினருக்கு "நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம்" என ஆற்றுப்படுத்தி வழி நடத்திய பொருளாதார மேதைக்கு இந்த உயரிய கவுரம் அளித்தது மிகப் பொருத்தமே!
அடுத்ததாக பேரா. ம. விஜயபாஸ்கர். The Dravidian Model புத்தகம் எழுதிய ஆய்வாளர். அதுபோக
இந்திய தபால் துறை :
நான் மிகவும் மதிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் இது. உலகிலேயே மிகச் சிறப்பான கட்டமைப்பும், அர்ப்பணிப்பும் கொண்ட நிறுவனம் இது என்று கூட நான் சொல்வேன். சின்ன வயசிலே நான் பல பரிசோதனைகளை செய்து பார்த்த அனுபவத்தில் இதை சொல்கிறேன்.
நினைவு 1 : அட்லஸ் எடுத்து வடக்கே
ஒரு சின்ன ஊரின் பெயரைத் தேர்ந்தெடுப்பேன். 15 பைசாவுக்கு போஸ்ட் கார்டை வாங்கி அந்த ஊரில் ஒரு கற்பனைக் கேரக்டரை உருவாக்கி, உடைந்த ஆங்கிலத்தில் எங்க ஊர், கோவில் பற்றி, அன்றைக்கு மயில் பார்த்தது, வீட்டுப்பாடம் எழுதியது எல்லாம் டைரி போல எழுதி தபால் பெட்டியில் போடுவேன். நாட்கள் மிக மிக
மெதுவாக நகர்ந்த காலம் அது. பல நாள் கழித்து அந்த தபால் கார்டு மேலே பற்பல முத்திரைகளை வாங்கி குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப்போட்ட துணி போல எனக்கே திரும்ப வரும். addressee not found என முத்திரை தாங்கி.. நான் கொடுத்த 15 பைசாவுக்கு மதிப்புத் தந்து அந்த அட்டையை பல ஆயிரம் மைல்கள் பற்பல
+2 தேர்வை எப்படி நடத்தவது?
எனது யோசனைகள்.. பரிசீலினைக்கும் & விவாதத்துக்கும். 1. சராசரியாக 8 லட்சம் பிள்ளைகள் +2 தேர்வை எழுதுகின்றனர். 2. எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் 6 தேர்வுகள்தான். 3. அதில் இரண்டு மொழிப்பாடங்கள். 4. மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்கள்தான்
உயர்கல்விக்கான தகுதி மதிப்பெண்கள். சரிதானே!
எனது யோசனை :
1.) 8 லட்சம் பேர்களுக்கும் மொழிப்பாடங்களுக்கு அவர்களின் +1, +2 (பிற தேர்வுகள்) அடிப்படையில் மதிப்பெண்களைத் தந்து விடலாம். கூடுதலாக Covid Consideration ஆக 10 மதிப்பெண்களும் தரலாம் 2) வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள
கலை & அறிவியியல் கல்லூரி, பட்டயக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மீதமுள்ள 4 பாடங்களுக்கும் கூட இதே முறையில் மதிப்பெண்கள் வழங்கிவிடலாம்.
மேற்சொன்ன கல்லூரி / பாலிடெக்னிகளில் தேவைக்கும் அதிகமான இரு மடங்கு இடங்கள் உள்ளமையால் இவர்கள் கோரும் இடங்களைத்
#பரிவு
முதல் அலையின் போது நண்பர் ஒருவர் ஸ்டான்லி #COVID பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். தனிமை, மவேற்று மனிதர்கள், கவச உடை அணிந்த பணியாளர்கள் என புதியச் சூழலைக் கண்டு கடுமையாக பதட்டமாகி ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. தலைமை டாக்டர், நண்பரின் உறவினர் யாரையாவது உள்ளே சென்று
உடன் இருந்து தைரியம் சொல்லச் சொன்னார். PPE kit கூட தருவதாக சொல்லி இருக்கிறார். தாய், தந்தை வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு அனுமதி இல்லை. சகோதரன் ஏதோ காரணம் சொல்லி விட்டான். மனைவியை உள்ளே செல்ல அவரது பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. நண்பர்கள் சிலர் துணிந்தபோதும் முயற்சி கைகூடவில்லை.
இறுதியில் யாருமே நேரில் சென்று பாராமலேயே, தனிமையில் அவன் இறந்து விட்டான்.
இன்று தொலைக்காட்சியில் முதல்வர் @mkstalin PPE Kit அணிந்து கொண்டு #COVID வார்டுக்கு செல்லும் காட்சியைப் பார்த்த நண்பன் இந்த நிகழ்வை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
முதல்வர் ஸ்டாலினுக்கு 69
திரியின் இரண்டாவது, மூன்றாவது ட்வீட்லேயே ராஜகோபாலனை ரிலீஸ் பண்ணிட்டாங்க. அவர் குற்றம் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவார் எனும் நம்பிக்கையை கூட வாழ விடலை. இதுதான் நான் சொல்லும் நியாயமற்ற ஒப்பீடு. நாம நிற்க வேண்டியது victim பக்கம் எனில், ஒற்றைக் குரலாக பள்ளிக் குழந்தைகள்
பக்கம் நிற்க வேண்டாமா? வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஜட்ஜ்மெண்ட் தருவதும், விசாரணைக்கே வராத வழக்கை உடன் ஒப்பிட்டு பேசுவதும் எந்த விதத்தில் இந்தப் பிள்ளைகளுக்கு உதவும்?
மைனர் குழந்தைகளின் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான வன்கொடுமையும் வெவ்வேறு. தனிதனி குற்றங்கள், சட்டங்கள்.
அழக்கூட தெரியாத குழந்தைகளை பாதுகாப்பதுதான் முன்னுரிமை. குடிச்சுட்டு பஸ் ஓட்டுறவனும், குடிபோதையில் பைக் ஓட்டுறவனும் ஒரே குற்றத்தை செய்யலை.
இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசும்போது மேலும், மேலும் பல தரப்பு வாதங்கள் வந்து குவிந்து மாணவிகளுக்கு நடந்த வன்கொடுமை மீதான கவனத்தை