அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.
அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார்.
1/2
அப்படி கட்டப்பட்ட கோவில்தான் தஞ்சை பெரியகோவில்.
வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது.
கோவிலை சுற்றி மதிலரண், நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார்.
1/3
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில் கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில்
15 தளங்கள் கொண்ட 60 மீ உயரமான கற்கோயிலை எழுப்பினார்.
கருவறைக்கு மேலே உள்ள விமானம் 13 தளங்களையும் 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
1/4
உயர்ந்து காணப்படும் விமானம், "தட்சிணமேரு எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
இராஜராஜசோழன் காலத்தில் திருச்சுற்று மாளிகை அருகே, பிரதான நுழைவு கோபுரத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
இராஜராஜன் நுழைவு வாயிலையும்,
சோழ ஒற்றனை சிறை வைத்த, சேர மன்னன் ராஜராஜ பாஸ்கர ரவிவர்மனை,
1/5
கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை என்னும் பகுதியில் போரில் வென்றதன் நினைவாக கேரளாந்தகன் நுழைவு வாயில் எழுப்பட்டது.
அதன் பிறகு, கருவறை வடக்கில் சண்டீகேஸ்வர் கோவிலையும், நடராஜர் மண்படபத்தையும், நந்தியம் பெருமானையும் அமைந்தார். அந்த நந்தி தற்போது திருச்சுற்று மாளிகையில்,
1/6
வராகியம்மன் சன்னதி அருகே, வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும்.
ஆறடி உயரமும், 54அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13அடி உயரம், 23 1/2 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. 1/7
சிவலிங்கத்தைச் சுற்றி வர இடமும் உள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேகம், ஆராதனை நடத்த இருபுறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சைக் கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் நடக்கிறது.
1/8
தினமும் காலை சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என நான்கு கால பூஜைகள் நடக்கின்றன.
தஞ்சைப் பெரியகோயில் விமானத்தில் நான்கு தளங்கள் உள்ளன அவற்றிற்கு மேல் பார்வதியும்,சிவபெருமானும், தேவர்களும்,கணங்களும் சூழ்ந்துள்ளனர். 1/9
கயிலாயத்தில் அவர்கள் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
உட்கூடாக உள்ள விமானத்தை மூடியுள்ள ‘பிரம்மராந்திரக்கல்’ 26.75 சதுர அடி சதுரம் கொண்டது.
இதன் 4 மூலைகளிலும் 1.34 மீ உயரமும், 1.40மீ நீளமும் உடைய நான்கு நந்திகள் உள்ளன.
வடமேற்குத் திசையில் பூதஉருவம் ஒன்று உள்ளது.
1/10
கிரீவம் எனப்படும் கழுத்துப்பகுதியும், அதற்கு மேல் அரைக்கோளமாக அமைந்துள்ள சிகரம் எனப்படும் தலைப்பகுதியும் எட்டுப்பட்டை வடிவில் அமைந்துள்ளன.
தட்சிணமேரு என்பது ‘தெற்கே இருக்கும் மலை’ என்று பொருள் தமிழர்களின் கட்டடக்கலைத்திறனுக்கு சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரியகோயில்.
1/11
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, நம் கண் முன்னே நிற்கும் பிரம்மாண்டம்’ என தஞ்சை பெரிய கோயில் கட்டுமானத்தைப் பற்றி வரலாற்று வல்லுநர்கள் அதிசயிக்கின்றனர்.
கோமுகத்தை தாங்கும் பூதகணம்:-
கருவறையில் அபிஷேகம் தீர்த்தம் வெளிவரும் நிர்மால்யத் தொட்டி இங்கு வித்தியாசமானதாகும்.
1/12
விமானத்திற்கு வடக்குப்புற அடிபாகத்தில் உள்ள கோமுகத்தை பூதகணம் ஒன்று தாங்குகிறது. எதையும் பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் செயல்படுத்துபவர் இராஜராஜன் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
நந்தி மண்டபம்:-
தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது.
1/13
இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.
நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும்.
1/14
பின் தஞ்சை நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர்.
முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.
சந்நிதிகள் பற்றிய பார்க்கலாம்:-
1/15
சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், நடராசர், வராகி, முருகர், விநாயகர் மற்றும் கருவூர்த்தேவர் கோயில்களும் இவ்வளாகத்துள் அமைந்துள்ளன.
பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் லிங்கவடிவில் உள்ளார்
1/16
இந்த மூலவரை இராஜராஜ சோழன் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார்.
இக்கோவிலில் தனிச்சன்னதியில் உள்ள வராகி அம்மன் சோழர் கால கட்டுமானமாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது
1/17
கோயிலில் அன்றாட பணிகளை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்கு எம்பெருமானார் இராஜராஜ சோழன் அவர்கள் பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும் மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
1/18
50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் நமக்கு பகிர்கின்றன.
1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அதிலிருந்து இந்த
(Elaeocarpus serratus)
(Elaeocarpus tuberculatus)
(Elaeocarpus ganitrus)
மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுகிறது.
இவை ஏப்ரல்,மே மாதங்களில் பூ பூக்கும் ஜீன் மாதங்களில் காய்க்கும்.
ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்கள் அரசுக்கு சமர்பித்த ஆய்வு கட்டுரை பத்தி தெரியுமா?
உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத்துறை, மற்றும்
ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே வருவதற்க்கு புண்ணியம் செய்திருந்தால் வேண்டும் என கூறப்படுகின்றது.
ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம்.
ருத்ராட்சத்தின் கோடுகளை கணக்கிட்டு எத்தனை முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது.
தற்ச்சமயம் 1 முதல் 21முக ருத்ராட்சங்கள் வரை கிடைக்கபடுகிறது
ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ஆண்,பெண்,சாதி மதம் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
5 முகம் ருத்ராட்சம் பொதுவானது அனைவரும் தாரளமாக அனியலாம்,
5 முகம் ருத்ராட்சம் தான் அதிகம் விளைகிறது, அனைவருக்குமான ருத்ராட்சம் என்பதே இதன் பொருள்,
ருத்ராட்சத்தின் பயன்களை பற்றி முன்னமே 2 திரேட் எழுதியதால் நேரடியாக 27 நட்சத்திரத்திக்கு ஏற்ப, எந்த எத்தனை முகம் ருத்ராட்சத்தை அணியலாம் என்று பார்ப்போம்,