#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி
இறைவனடி சேர்ந்து விட்டார்.
தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்
முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.
தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞான பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.
‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே
நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று அருளினார். காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார். அதற்குள் இருக்கும் சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால்
பரமாத்மாவான, பெருமாள் ஆதி வராகரை அடையலாம். இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு. வராகர் யக்ஞ மூர்த்தி. வேதம் சொல்லும் தர்மங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட
திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில், திருமண நிகழ்வில் கன்னிகா தானம் மிகமிக முக்கியமானது என்றும் சொல்லப் பட்டுள்ளது. திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப் படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான். எனவேதான் வராகர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது
கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார். முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகைகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராகப் பெருமாள் எழுந்தருளச் செய்தார். காலவ முனிவர் வராகரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார். ‘திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும்
நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று பெருமாள் உறுதி கூறினார். இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாணபுரி’ என்றும் பெயர் உண்டு. இந்த திருத்தலம் - சென்னை- மாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருவிடந்தை.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

4 Dec
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.
இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது. அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர் Image
எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார். பார்த்தனுக்கு (அர்ஜுனன்) கிருஷ்ணர் தேரோட்டி- சாரதியாக இருந்தார். இதனால் தான் நாம் கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த சாரதி என்கிறோம். இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர்
விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி வேங்கட கிருஷ்ணனாக சேவிக்கப் படுகிறார். இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே
Read 7 tweets
4 Dec
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி பெருவிழா
"நம்பெருமாளின் ராஜதர்பார் "
ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் நம்பெருமாள் உடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி நாலாயிரதிவ்ய பிரபந்தங்களை அரையர்கள் இசைக்க கேட்டு அருள்பாலித்தல். அற்புதமான சேவை🙏🏾 ImageImageImageImage
காணக்கண் கோடி வேண்டும்🙏🏾 ImageImageImageImage
ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீ மணவாள மானிகள் திருவடிகளே சரணம்🙏🏾 ImageImageImageImage
Read 4 tweets
4 Dec
மகா பெரியவா பற்றி, அவர் யார் என்று தெரியாது என்று இக்காலத்தில் வாழும் யாரும் சொல்லக் கூடாது. நம்மிடைய நடமாடிய தெய்வம் அவர். இப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்.
1. இவர் 13 வயதில் (1908ஆம் ஆண்டு) சந்நியாசம் பெற்று காஞ்சி சங்கர மடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
2. நான்கு வேதம், ஆறு ImageImage
சாஸ்த்திரம், புராணங்களை கற்றுத் தேர்ந்தவர்.
3. 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
4. தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்.
5. அவருக்கு தெரியாத துறையே கிடையாது. Astro physics, Neuro science, rocket technology, கர்நாடக இசை என்று
எந்த subject பற்றியும் முனைவர் பட்டம் பெற்றவர்களிடமே புதிய தகவல்களை தந்தும் விவாதித்தும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
6. இந்து மத வேதங்கள் உபநிஷத்கள் தழைக்க அருளியவர்.
7. எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்
Read 18 tweets
3 Dec
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் மணிவர்மனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது. பாவத்தின் தந்தை யார்? அரசவையில் இருந்த பண்டிதர் ஆனந்தனை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றான். (கதையை மேலே Image
தொடர்ந்து படிக்கும் முன் நீங்களும் யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு சரியான விடை தெரிகிறதா என்று. நான் பயம் என்று நினைத்தேன் ஆனால் அது தவறான பதில்.) பண்டிதர் ஆனந்தனுக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது.
யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில்
நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன் மணிவர்மன் “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லா விட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான். வீடு திரும்பிய பண்டிதர் ஆனந்தன் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார்.
Read 15 tweets
3 Dec
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் பாஞ்சஜன்யம் எனும் சங்கும், திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். பாஞ்சஜன்யம் கிருஷ்ணருக்கு கிடைத்தது வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. Image
சாந்தீபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி #பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் தங்கள் மகனைக் கடத்திக் கடற் பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குரு தட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினாள். கிருஷ்ணரும் பலராமரும் கடலரசனை அழைத்து
வழி கேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர் கிருஷ்ணரும் பலராமரும். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்து ஊதத் Image
Read 11 tweets
2 Dec
#கார்த்திகைஸ்பெஷல்
ஸ்வாமி சரணம்🙏🏻
மகரஜோதி அன்று சபரிமலையில் ஐயப்பன் திருவாபரணங்கள் அணிந்து பூரண சொரூபனாகக் காட்சி கொடுப்பான். திருவாபரணம் பந்தள ராஜா அரண்மனையில் இருந்து 3 பெட்டிகளில் கொண்டுவரப்படும். பக்தர்கள் அதைக் காணும்போதே மெய்சிலிர்ப்பதைக் காண முடியும். இந்தத் திருவாபரணப்
பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள பலருக்கும் ஆவல் உண்டு. மூன்று
திருவாபரணப் பெட்டிகளில் ஒன்று ஆபரணப்பெட்டி, இன்னொன்று வெள்ளிப்பெட்டி, மற்றது கொடிப்பெட்டி. இதில் ஆபரணப் பெட்டியில்தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.
திருவாபரணம்
1. திருமுக மண்டலம்
எனப்படும் முக கவசம்.
2. பூரணா புஷ்கலா தேவியருடைய உருவங்கள்.
3. பெரிய வாள் மற்றும் சிறிய வாள்.
4 இரண்டு யானை உருவங்கள்.
5. கடுவா எனப்படும் புலி உருவம்.
6. வில்வமாலை.
7. சரப்பொளி மாலை.
8. நவரத்தின மாலை.
9. வெள்ளிகட்டிய வலம்புரிச் சங்கு.
இவை இந்த ஆபரணப் பெட்டியில் இருக்கும். அடுத்த
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(