தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் பாஞ்சஜன்யம் எனும் சங்கும், திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். பாஞ்சஜன்யம் கிருஷ்ணருக்கு கிடைத்தது வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.
சாந்தீபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி #பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் தங்கள் மகனைக் கடத்திக் கடற் பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குரு தட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினாள். கிருஷ்ணரும் பலராமரும் கடலரசனை அழைத்து
வழி கேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர் கிருஷ்ணரும் பலராமரும். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்து ஊதத்
தொடங்கினார். இந்த சங்கின் விஷயத்தில் பெரும் இறை தத்துவம் அடங்கியுள்ளது. தன்னை வந்தடையும் தகுதி என்னவென்று ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் அழகாகவும் தெளிவாகவும் சொல்கிறான். அவனுடைய அந்த சொல்லுக்கு உதாரணமாக அவன் கையில் உள்ள பாஞ்சசன்யமே விளங்குகிறது. #பாஞ்சசன்யம் என்பது கடலில் கிடைக்கும்
ஒரு சங்கு தான். ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை. ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்கும். ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும்.
வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற
சங்கு கிடைக்கும். சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சசன்ய சங்கு கிடைக்கும். சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை வாத்தியம். அதிலும் சுத்தமான பிரணவ மந்திரம் ஒலிப்பது பாஞ்சசன்யம் சங்கில் மட்டும் தான். அந்த சங்கு கிருஷ்ணன்
கையில் மட்டும் தான் இருக்கும். அது ஏன்? கண்ணன் கீதையில் விளக்கம் தருகிறான்.
பல்லாயிரம் பேர்களில் ஒருவன் மட்டுமே கண்ணனின் செய்தியை கேட்கிறான். இது கீதையின் வார்த்தை. இந்த அமுத மொழிக்கு உதாரணமாக தெரிவது இடம்புரி சங்கு. பல்லாயிரம் பேர்களில் யாரோ ஒருவன் மட்டுமே கிருஷ்ணனை பற்றி
சிந்திக்கிறான். அதற்கு உதாரணம் வலம்புரி சங்கு. கண்ணனை பற்றி சிந்திப்பவர்களில் ஆயிரத்தில் ஒருவன் தான் அவனை அடைய முயற்சி செய்கிறான். இதுவும் கீதையின் தெய்விக வாக்கு. இதற்கு எடுத்தக்காட்டாக இருப்பது தான் சலஞ்சல சங்கு. பெரும் தவத்தால் மட்டுமே அடைய கூடிய மாதவனின் திருவடியை நிரந்தரமாக
அடைய முயற்சி செய்யும் ஆயிரத்தில் ஒருவன் தான் கோபாலனின் கோமள திருவடியை சென்றடைகிறான். இது கீதை அறிவிக்கும் தர்ம மொழி. இந்த தர்ம மொழியின் ஒட்டுமொத்த வடிவமே பாஞ்சஜன்யம். அப்படி பாஞ்சஜன்யமாக மாறி கண்ணனின் திருவடியில் நித்யசூரியாக சேவை செய்கிறவனே பிரணவ மந்திரத்தை வெளிப்படுத்த
வல்லவனாகவும் பிரணவ மந்திர வடிவாகவும் ஆகிவிடுகிறான். பிரணவம் என்ற ஓம்கார சமூத்திரத்தில் கரைந்த பின் துன்பம் ஏது! தோல்வி ஏது! பிறப்பு என்பதே ஏது! நாம் கண்ணனை விரும்புவோம். கண்ணனை மட்டுமே விரும்புவோம்! இன்று இல்லை எனினும் என்றாவது ஒரு நாள் அவன் கைகளில் பாஞ்சஜன்ய சங்காக கம்பீரமாக
அமர்வோம். இது சத்தியம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தாய் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையதாகவே மாரியம்மன் வழிபாடும் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கானமர்ச்செல்வி, காடமர்ச்செல்வி முதலியவை பழங்குடி மக்கள் தொழுத தெய்வமாகும். இந்தத் தாய் தெய்வத்தை துர்கை என்றும் பலர் வழிபட்டனர். பழந்தமிழர் கொற்றவை என்றனர். இந்தத் தாய்
தெய்வம் மிகப் பழைமையான குடிகளிடமிருந்து நாம் பெற்றது. அதனால்தான் ‘பழையோள்’ என்றும் ‘மூத்த அம்மா - முத்தம்மா, ஆத்தாள்’ என்றெல்லாம் ஆதி நினைவுகளின் தொடர்ச்சியாக மாரியம்மனை அழைக்கிறோம். ஆண் கடவுளரான ஐயனார், வீரனார், பதினெட்டாம் படி கருப்பன், முன்னடியான், காத்தவராயன், இருளன்,
சங்கிலிக் கருப்பன், மதுரை வீரன் போன்ற சாமிகளையும், பெண் தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், காட்டேரி, பொம்மி, செல்லாயி, குழுமாயி போன்ற தெய்வங்களையும் பொதுவாக சிறு தெய்வம் என்றும் நாட்டார் தெய்வமென்றும் அழைக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. “துடியுள்ள சாமி” என்று மக்கள் இவற்றிடம்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.
இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது. அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர்
எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார். பார்த்தனுக்கு (அர்ஜுனன்) கிருஷ்ணர் தேரோட்டி- சாரதியாக இருந்தார். இதனால் தான் நாம் கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த சாரதி என்கிறோம். இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர்
விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி வேங்கட கிருஷ்ணனாக சேவிக்கப் படுகிறார். இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே
மகா பெரியவா பற்றி, அவர் யார் என்று தெரியாது என்று இக்காலத்தில் வாழும் யாரும் சொல்லக் கூடாது. நம்மிடைய நடமாடிய தெய்வம் அவர். இப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். 1. இவர் 13 வயதில் (1908ஆம் ஆண்டு) சந்நியாசம் பெற்று காஞ்சி சங்கர மடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2. நான்கு வேதம், ஆறு
சாஸ்த்திரம், புராணங்களை கற்றுத் தேர்ந்தவர். 3. 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர். 4. தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர். 5. அவருக்கு தெரியாத துறையே கிடையாது. Astro physics, Neuro science, rocket technology, கர்நாடக இசை என்று
எந்த subject பற்றியும் முனைவர் பட்டம் பெற்றவர்களிடமே புதிய தகவல்களை தந்தும் விவாதித்தும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். 6. இந்து மத வேதங்கள் உபநிஷத்கள் தழைக்க அருளியவர். 7. எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் மணிவர்மனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது. பாவத்தின் தந்தை யார்? அரசவையில் இருந்த பண்டிதர் ஆனந்தனை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றான். (கதையை மேலே
தொடர்ந்து படிக்கும் முன் நீங்களும் யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு சரியான விடை தெரிகிறதா என்று. நான் பயம் என்று நினைத்தேன் ஆனால் அது தவறான பதில்.) பண்டிதர் ஆனந்தனுக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது.
யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில்
நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன் மணிவர்மன் “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லா விட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான். வீடு திரும்பிய பண்டிதர் ஆனந்தன் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி
இறைவனடி சேர்ந்து விட்டார்.
தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்
முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.
தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞான பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.
‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே