#கார்த்திகைஸ்பெஷல்
ஸ்வாமி சரணம்🙏🏻
மகரஜோதி அன்று சபரிமலையில் ஐயப்பன் திருவாபரணங்கள் அணிந்து பூரண சொரூபனாகக் காட்சி கொடுப்பான். திருவாபரணம் பந்தள ராஜா அரண்மனையில் இருந்து 3 பெட்டிகளில் கொண்டுவரப்படும். பக்தர்கள் அதைக் காணும்போதே மெய்சிலிர்ப்பதைக் காண முடியும். இந்தத் திருவாபரணப்
பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள பலருக்கும் ஆவல் உண்டு. மூன்று
திருவாபரணப் பெட்டிகளில் ஒன்று ஆபரணப்பெட்டி, இன்னொன்று வெள்ளிப்பெட்டி, மற்றது கொடிப்பெட்டி. இதில் ஆபரணப் பெட்டியில்தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.
திருவாபரணம் 1. திருமுக மண்டலம்
எனப்படும் முக கவசம். 2. பூரணா புஷ்கலா தேவியருடைய உருவங்கள். 3. பெரிய வாள் மற்றும் சிறிய வாள்.
4 இரண்டு யானை உருவங்கள். 5. கடுவா எனப்படும் புலி உருவம். 6. வில்வமாலை. 7. சரப்பொளி மாலை. 8. நவரத்தின மாலை. 9. வெள்ளிகட்டிய வலம்புரிச் சங்கு.
இவை இந்த ஆபரணப் பெட்டியில் இருக்கும். அடுத்த
பெட்டியாக இருக்கக்கூடிய வெள்ளிப் பெட்டியில் தங்கக்குடம் மற்றும் பூஜா பாத்திரங்கள் இருக்கும். கொடிப் பெட்டியில் யானைப் பட்டம், தலப்பாற மலை முதலிய மலையின் கொடிகள் ஆகியன இருக்கும். ஆபரணப் பெட்டி தவிர்த்த இரண்டு பெட்டிகளும் மாளிகை புறத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு 'எழுந்தளிப்பு'
என்னும் நிகழ்வு நடைபெறும் அப்போது யானைக்கு அந்தப் பட்டத்தை சாத்தி ஊர்வலங்கள் நடைபெறும். திருவாபரணப் பெட்டி சந்நிதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பகவானுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். சபரிமலை க்ஷேத்திரத்தின் சிறப்பே மகர சங்கரம்தான். மகர சங்கரம் காலத்தில்தான் பகவான் தவக்
கோலத்திலிருந்து கண் விழிக்கிறார். அன்று ராஜ அலங்காரத்தில் தரிசனம் கொடுக்கிறார். மணிகண்டன் அவதாரக் காலத்தில் தன் வளர்ப்புத் தந்தையிடம், "ஆண்டுதோறும் தவக்கோலத்தில் இருக்கும் ஐயன் அந்த ஒருநாளில் கண்விழித்து தன் பக்தர்களைப் பார்த்து அனுக்கிரகம் செய்வேன்" என்று வாக்களித்து இருந்தார்.
பகவான் கண்விழிக்கும் அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் விசேஷமாக ஆராதனை செய்வார்கள். இத்தனை சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாகத் திருவாபரணங்களைக் கோஷயாத்திரையாகக் கொண்டுவந்து அணிவித்து மகிழ்கிறார்கள். அந்தக் காலத்தில் மகர சங்கராந்தி அன்று காலையில்தான் பந்தள அரண்மனையில் இருந்து
இந்தப் பெட்டிகள் கிளம்புமாம். இந்தப் பெட்டிகளைச் சுமப்பவர்கள், பெட்டியைத் தலைமேல் ஏற்றிக்கொண்டதும் தேவதா ஆவேசம் கொண்டு ஓடிவந்து அந்த நாளின் மாலையிலேயே சந்நிதானம் வந்து சேருவார்களாம். தற்போது சுமார் இரண்டரை நாட்கள் ஆகின்றன. மகரஜோதிக்கு முன் பந்தளத்தில் இருக்கும் கோயிலில் வழிபாடு
செய்து திருவாபரணப் பெட்டியைக் கொண்டு வந்து வெளியே வைப்பார்கள். இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்கென்றே சில குடும்பங்கள் உள்ளனர். அவர்கள் தான் இவற்றைச் சுமப்பர். இதில் பகவானின் சாட்சியம் என்பது போல் இந்தப் பெட்டிகள் வெளியே எடுத்துவரப்பட்டுக் காத்திருக்கும் போது கிருஷ்ணப் பருந்து மேலே
வரும். கருடனை தரிசனம் செய்த பின்புதான் தலையில் திருவாபரணப் பெட்டிகள் ஏற்றப்பட்டு யாத்திரை புறப்படும். இந்தப் பருந்தும் கூடவே பறந்து வரும். திருவாபரணப் பெட்டியோடு ஒரு பல்லக்கில் பந்தள ராஜாவும் உடன் வருவார். இந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் உள்ள மக்கள், பகவானை தரிசனம் செய்ய
வீட்டு வாசல்களில் கோலமிட்டு பூக்கள் தூவி வரவேற்பார்கள். இப்படி சரணகோஷத்தின் நடுவே மிதந்து வரும் இந்தத் திருவாபரணப் பெட்டி பம்பை, நீலிமலை வழியாக சந்நிதானத்தை மகரசங்கராந்தி அன்று அடையும். திருவாபரணத்தைச் சுமந்துசென்று 18 படிகளில் ஏறி ஸ்வாமிக்கு அணிவிப்பார்கள். ஐயப்பன் தன் முக
மண்டலத்தில் மீசையோடும் பூரணா புஷ்கலா சமேதராக அச்சன்கோயில் அரசராகக் காட்சிகொடுப்பார். யானை புலிகள் எல்லாம் முன்பாக இருக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முன்பாக இரு வாள்களும் வைக்கப்பட்டு ஐயன் அருட்காட்சி தருவார். அந்தக் கோலத்தில் ஐயப்பனுக்கு தீபாராதனை முடிந்ததும் மகரஜோதி தரிசனம்
நடைபெறும். மகர சங்கரத்தன்று மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நாள்களுக்கும் இந்தத் தரிசனம் நடைபெறும். திருவாபரண தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கும் பெரும் பாக்கியம். வாழ்வில் விலைமதிக்க முடியாத தரிசனம் திருவாபரண தரிசனம். சபரிமலைக்குச் செல்லும் ஸ்வாமிகள் அந்த ஆனந்த அற்புத தரிசனங்களைக்
கண்டு மகிழ்கின்றனர்.
சுவாமி சரணம்🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் மணிவர்மனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது. பாவத்தின் தந்தை யார்? அரசவையில் இருந்த பண்டிதர் ஆனந்தனை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றான். (கதையை மேலே
தொடர்ந்து படிக்கும் முன் நீங்களும் யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு சரியான விடை தெரிகிறதா என்று. நான் பயம் என்று நினைத்தேன் ஆனால் அது தவறான பதில்.) பண்டிதர் ஆனந்தனுக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது.
யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில்
நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன் மணிவர்மன் “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லா விட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான். வீடு திரும்பிய பண்டிதர் ஆனந்தன் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் பாஞ்சஜன்யம் எனும் சங்கும், திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். பாஞ்சஜன்யம் கிருஷ்ணருக்கு கிடைத்தது வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.
சாந்தீபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி #பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் தங்கள் மகனைக் கடத்திக் கடற் பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குரு தட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினாள். கிருஷ்ணரும் பலராமரும் கடலரசனை அழைத்து
வழி கேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர் கிருஷ்ணரும் பலராமரும். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்து ஊதத்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி
இறைவனடி சேர்ந்து விட்டார்.
தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்
முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.
தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞான பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.
‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே
#MahaPeriyavaa#YogiRamsurathkumar
Once during the mid-eighties, Pujya Sri Maha Periyava desired to see Bhagavan Yogi Ramsuratkumar and invited him through a personal attendant. He asked the personal attendant to bring Yogiji. Yogiji, accepting the invitation of Kanchi Sri Maha
Periyava, went to Kanchipuram. Sri Maha Periyava sat down and so did Yogi. Maha Periyava and Yogi looked at each other. They did not speak a word to each other verbally. After looking at each other for sometime, Kanchi Sri Maha Periyava, laughing lightly, said to His personal
attendant who had brought Yogi to Kanchi, “The matter for which he came is over. You may take him back to Tiruvannamalai.”
Did they meet just to see each other or did they exchange some news? Nothing could be comprehended. Yogi went back to Tiruvannamalai. Later when Yogiji was
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவசங்கரன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் கல்யாணம் முடிந்த மண்டபத்தில் கட்டப்பட்டு இருந்த வாழை மரத்தில் ஒருவர் தனக்குத் தேவையான வாழை பழங்களை
எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே வாழை மரத்தில் தனக்குத் தேவையான வாழை இலைகளை அறுத்து எடுத்துச் சென்றார். மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான வாழைத் தண்டுகளை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார். அதன்பின் ஒருவர் வந்து வாழை மர பூவினை பறித்து
சென்றார். கடைசியாக வந்த ஒரு பசுவும் ஆடும் மீதம் கிடந்த வாழை மர நாற்றினையும் சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டன. இதைப் பார்த்த படு தோல்வி அடைந்த சிவசங்கரன் மனத்தில், ஒரு சிறிய வாழை மரத்தில் இத்தனை பயன்பாடுகள்
என்றால், இந்த பரந்து, விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும்
#துர்க்கை துர்க்கைதான் ஆதிபராசக்தியாய் அனைத்தும் கைவரச் செய்பவள். துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் வட மாநிலங்களில் அழைக்கபடுகிறாள். துர்க்கை புகழ்பெற்ற தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் வெல்லமுடியாதவள் என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவள்
தேவி மாகாத்மியம் நூலில் துர்க்கை, இரம்பன் எனும் அசுரனின் மகனான மேதியவுணனை அழிப்பதற்காக முத்தேவர்களின் உடலிலிருந்தும், மற்ற தேவர்களிலிருந்தும் ஒளி வடிவில் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. துர்தரன், துன்முகன், தூம்ரலோசனன் முதலான மேதியவுணனின் (மகிஷாசுரமர்த்தனன்) படைத்தளபதிகளைக் கொன்று
இறுதியில் அவனையும் அன்னை வதைத்த கதை அந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. விந்திய மலைத்தொடர், மற்றும் இமய மலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகள் போர்த் தெய்வமாக துர்க்கையை வணங்குகிறார்கள். பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களில், கொற்றவை என்ற