#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் மணிவர்மனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது. பாவத்தின் தந்தை யார்? அரசவையில் இருந்த பண்டிதர் ஆனந்தனை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றான். (கதையை மேலே
தொடர்ந்து படிக்கும் முன் நீங்களும் யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு சரியான விடை தெரிகிறதா என்று. நான் பயம் என்று நினைத்தேன் ஆனால் அது தவறான பதில்.) பண்டிதர் ஆனந்தனுக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது.
யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில்
நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன் மணிவர்மன் “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லா விட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான். வீடு திரும்பிய பண்டிதர் ஆனந்தன் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார்.
சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன.
ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே! அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி
பண்டிதரை அழைத்தாள்.
என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம் என்று கேட்டாள். பண்டிதர் ஆனந்தன், பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன் என்று புலம்பினார். அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே என்று அவள் எளிதாக
சொன்னாள். பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே பதில் தெரியும் என்று, பதிலைச் சொல்லேன் என்று கெஞ்சினார் பண்டிதர் ஆனந்தன். சொல்கிறேன், ஆனால் இங்கல்ல. எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர, தட்சிணையாக ஒரு பொன் காசும் தருகிறேன் என்ற அவள் ஒரு பொற்காசைத்
தந்தாள். அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் ஆனந்தன் தன் மனதிற்குள் இதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார். தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர் ஆனந்தன், இப்போது பதிலைச் சொல் என்றார். வந்தது வந்தீர்கள். என் வீட்டில் அமர்ந்து கொண்டு பதிலைக்
கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம் என்றாள் அவள். சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். மேலும் வைர மாலையையும் கூடவே தருகிறேன் என்றாள் அவள். பண்டிதர் ஆனந்தன் தன் மனதில் சரி, சரி பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான் என்று அவர்
மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் வீட்டில் அமர்ந்தார். ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு கன்னத்தில் ஒரு அறை விட்டாள். பண்டிதர் ஆனந்தன் துடிதுடித்துப் போனார். பண்டிதரே, இப்போ
தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை-பேராசை. தெரிந்ததா பதில்? தாசியின் குரல் பண்டிதரின் மனத்தில் ஆழப் பதிந்தது. அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது. கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார். சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டது” என்று கத்திக்
கொண்டே ஓடலானார் ஆனந்தன். நேராக அரண்மனைக்குச் சென்ற மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.
மன்னா! பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது என்று சொல்லி நடந்தது அனைத்தையும் அப்படியே சொன்னார். மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய்
இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன். என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள் என்று உருக்கமாக வேண்டினார். “ஆஹா! பாவத்தின் தந்தை ஆசையா-பேராசையா? சரியான பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை நண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார். “நாட்டை விட்டு வெளியேறுவதா?
ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுக்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான் அரசன்.
ஆமாம், பாவத்தின் தந்தை பேராசை தான்! துரியோதனனின் பேராசையே பாரத யுத்தம் வர காரணம். பேராசைகளை தவிர்ப்போம். பரந்தாமன் திருவடி சேர்வோம். (இந்தக் கதையில் இதை உணர்த்திய தாசியை முக்கியமாக பாராட்டி அங்கீகாரம் கொடுத்திருக்க வேண்டும் அரசர். அவளை தான் அவர் குருவாக ஏற்றுக் கொண்டிருக்க
வேண்டும். அவர் செய்யவில்லை. நாம் செய்ததாக சேர்த்துக் கொள்வோம்👍)
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தாய் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையதாகவே மாரியம்மன் வழிபாடும் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கானமர்ச்செல்வி, காடமர்ச்செல்வி முதலியவை பழங்குடி மக்கள் தொழுத தெய்வமாகும். இந்தத் தாய் தெய்வத்தை துர்கை என்றும் பலர் வழிபட்டனர். பழந்தமிழர் கொற்றவை என்றனர். இந்தத் தாய்
தெய்வம் மிகப் பழைமையான குடிகளிடமிருந்து நாம் பெற்றது. அதனால்தான் ‘பழையோள்’ என்றும் ‘மூத்த அம்மா - முத்தம்மா, ஆத்தாள்’ என்றெல்லாம் ஆதி நினைவுகளின் தொடர்ச்சியாக மாரியம்மனை அழைக்கிறோம். ஆண் கடவுளரான ஐயனார், வீரனார், பதினெட்டாம் படி கருப்பன், முன்னடியான், காத்தவராயன், இருளன்,
சங்கிலிக் கருப்பன், மதுரை வீரன் போன்ற சாமிகளையும், பெண் தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், காட்டேரி, பொம்மி, செல்லாயி, குழுமாயி போன்ற தெய்வங்களையும் பொதுவாக சிறு தெய்வம் என்றும் நாட்டார் தெய்வமென்றும் அழைக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. “துடியுள்ள சாமி” என்று மக்கள் இவற்றிடம்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.
இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது. அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர்
எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார். பார்த்தனுக்கு (அர்ஜுனன்) கிருஷ்ணர் தேரோட்டி- சாரதியாக இருந்தார். இதனால் தான் நாம் கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த சாரதி என்கிறோம். இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர்
விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி வேங்கட கிருஷ்ணனாக சேவிக்கப் படுகிறார். இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே
மகா பெரியவா பற்றி, அவர் யார் என்று தெரியாது என்று இக்காலத்தில் வாழும் யாரும் சொல்லக் கூடாது. நம்மிடைய நடமாடிய தெய்வம் அவர். இப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். 1. இவர் 13 வயதில் (1908ஆம் ஆண்டு) சந்நியாசம் பெற்று காஞ்சி சங்கர மடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2. நான்கு வேதம், ஆறு
சாஸ்த்திரம், புராணங்களை கற்றுத் தேர்ந்தவர். 3. 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர். 4. தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர். 5. அவருக்கு தெரியாத துறையே கிடையாது. Astro physics, Neuro science, rocket technology, கர்நாடக இசை என்று
எந்த subject பற்றியும் முனைவர் பட்டம் பெற்றவர்களிடமே புதிய தகவல்களை தந்தும் விவாதித்தும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். 6. இந்து மத வேதங்கள் உபநிஷத்கள் தழைக்க அருளியவர். 7. எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் பாஞ்சஜன்யம் எனும் சங்கும், திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். பாஞ்சஜன்யம் கிருஷ்ணருக்கு கிடைத்தது வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.
சாந்தீபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி #பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் தங்கள் மகனைக் கடத்திக் கடற் பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குரு தட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினாள். கிருஷ்ணரும் பலராமரும் கடலரசனை அழைத்து
வழி கேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர் கிருஷ்ணரும் பலராமரும். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்து ஊதத்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி
இறைவனடி சேர்ந்து விட்டார்.
தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்
முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.
தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞான பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.
‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே