#தீட்டு இது குறித்த அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும்.
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது! தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து
விடும், தீட்டுக் கூடாது என்பார்கள். ஆண் பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால் தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத்
தொட்டால் தீட்டு என்பார்கள். தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத் தான் இவற்றை தீட்டு என்று சொன்னார்கள்.
கடைப்பிடிக்கிறோம். ஆனால் உண்மையான தீட்டு காமம், குரோதம், லோபம், மதம், மாத்சரியம் என்னும் பஞ்சமா பாதங்களே ஆகும். 1. காமத் தீட்டு:
காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே
ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை
தீண்டாதே என்றார்கள். 2. குரோதத் தீட்டு:
குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், சிந்திக்காமல், கொடூரமாகப் பேசி கேவலமான நிலைக்கு ஆளாவது நேர்கிறது. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். கோபத்தைப் போலக் கொடியது
உலகில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடிப்பேர். கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் இரண்டாவது தீட்டு. 3. லோபத் தீட்டு:
லோபம் என்பது சுயநலம். பிறரைப் பற்றிச் சிந்திக்காமல், இரக்கம் இல்லாமல், சுயநலத்துடன் பொருள் சேர்த்து எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணம் லோபம் ஆகும். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப்
பற்றிச் சிந்திக்க முடியாது. லோபம் மூன்றாவது தீட்டு. 4. மதத் தீட்டு:
மதம் என்பது கர்வம், ஆணவம், ஒருவரையும் மதிக்காது மமதையோடு இருப்பது. தான் என்னும் அகந்தையால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இக்குணமே. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய
முடியுமா? கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு. 5. மாத்சரியத் தீட்டு:
மாத்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. தான் மட்டும் சுகமாக இருக்க வேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு
விடுவர். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பவர்கள் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.
இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள்
இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீஜ்வாலாமுகி_அம்பாள்
ஹிமாசல ப்ரதேசத்தில் காங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீஜ்வாலாமுகி எனும் அம்பாளின் ஆலயம் ஶ்ரீலலிதா பரமேஸ்வரி வீற்றிருக்கும் ஆலயங்களில் மிகவும் பழமையான ஆலயமாகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். ஒன்பது அக்னி பிழம்புகள் எப்படி, எப்போதிருந்து தோன்றின என்று
யாராலும் இதுவரை கண்டறியப் படவில்லை. ஆலயத்தில் அம்பாளுக்கு எவ்வித உருவமும் இல்லை. பிண்டி அல்லது லிங்கம் போன்ற மூர்த்தங்களும் இல்லை. சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள். பாறைகளின் இடுக்கில் எரியும் தீயானது எப்படி எரிகின்றது என்பது இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. பல வருடங்கள்
முன் பூமிசந்த் என்னும் மன்னன் காங்க்ரா நகரத்தை தலைநகரமாக கொண்டு இந்த கோவில் இருக்கும் பகுதியை ஆண்டு வந்தான். அவர் ஒரு சிறந்த தேவி பக்தர். மன்னரின் கனவில் தோன்றிய சக்தி தேவியானவள் தீச்சுடரின் வடிவில் அம்பாள் வீற்றிருக்கும் இடத்தை மன்னருக்கு தெரியப்படுத்தினாள். அந்த இடத்தைத் தேடி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நேருக்கு நேர் பேசும் ஆற்றல் பெற்றவர் #திருக்கச்சிநம்பிகள். இவர் காஞ்சி வரத /தேவப்பெருமாள் கோவிலில் எம்பெருமானுக்கு ஆலவட்டம் (விசிறி) வீசும் சேவையை செய்து வந்தார். இவர் வீசும் ஆலவட்டச் சேவையில் வரதருக்கு அலாதி சுகம். திருக்கச்சி
நம்பிகள் ஒருநாள் தேவப்பெருமாள் சன்னிதிக்கு வரவில்லை என்றாலும் தேவபெருமாள் அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பார். திருக்கச்சி நம்பிகளும் தினம் தேவப்பெருமாளை பார்க்க வந்து விடுவார். காஞ்சிபுரத்தில் இராமானுஜரும் தன் மனைவியோடு வசித்து வந்தார். இராமானுஜர் தனக்கு ஒரு குருவைத் தேடி
அலைந்து கொண்டிருக்கையில், திருக்கச்சி நம்பிகளிடம் தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, திருக்கச்சி நம்பிகளோ தாழ்வான குலத்தில் நான் பிறந்ததால் உங்களை சிஷ்யராக ஏற்க முடியாது என்று தீர்க்கமாக கூறிவிட்டார். அப்போது ஸ்ரீராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடமே தன் பிரச்சினையைத் தீர்க்க
#திருத்துறைப்பூண்டிஸ்ரீமருந்தீஸ்வரர் #சுமங்கலி_பாக்கியம்
திலிபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்தபோது பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால் அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி
வடிவெடுத்தது முனிவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். அம்மா, மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி,
மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள் என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை அதிலும் அந்தணப் பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன
#ஸ்நானம் பற்றி முக்கிய தகவல்கள் அடங்கிய பதிவு இது. ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நம் சாஸ்திரங்கள் விவரமாக சொல்கின்றன. ஸ்நானங்கள் இரு வகைப்படும். அவை #முக்கிய ஸ்நானம் #கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம்
மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.
#க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதே க்ரியா ஸ்நானம். நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
#காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில க்ஷேத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
#அரங்கன்#பாண்டியன்_கொண்டை அரங்கன் தன் பக்தர்களில் ஒருவரைக் கொண்டே இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்ய வைத்தார். அவர் தான் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி. அவர் பரம ஏழை. உஞ்சவ்ருத்தி எடுத்துப் பணம் சேர்த்து இந்தப் பாண்டியன் கொண்டையைச் செய்து கொடுத்தார். தமிழ்
நாட்டு சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீக்ஷிதர், ச்யாமா சாஸ்திரிகள் போல் ஆந்திர நாட்டு மும்மூர்த்திகள் தலப்பாக்கம் அன்னமாசார்யா, பத்ராசலம் ராமதாசர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி ஆகியோர். அவர் திருமலையில் திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டு, பின்னர் அவர்
காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை, தானியங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப் பெருமாளின் சந்நிதிக்குக்ப் பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் பல
#பகவத்கீதை எளிய விளக்கம்:
பகவத் கீதை என்பது
விடு – பிடி அல்லது
பிடி – விடு
விடு பிடி என்றால், இந்த உலக பந்தங்களையெல்லாம்
உதறித் தள்ளிவிடு. அதே நேரம் பரந்தாமன் பாதங்களை இறுகப் பற்றிக்கொள் என்று அர்த்தம். ஆனால் நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு, இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித்
தள்ளுவது எளிதல்ல. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் இறுகப் பற்றுவது? கவலை வேண்டாம். இன்னொரு வழி உள்ளது. அது தான் பிடி விடு.
பிடி என்றால் முதலில் பரந்தாமன் பாதங்களைப் பிடி அல்லது பற்று. அந்தப் பிடி இறுக, இறுக இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.
இது எப்படி என்று புரிந்து கொள்ள ஓர் எளிய உதாரணம் உள்ளது. ஹோமத்துக்கான சில சமித்து குச்சிகள், ஒரு கயிற்றால்
இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன, முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.
(இது நம்முடைய உலக
பாசபந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே அதை விட இறுக்ககட்டி ஒரு குலுக்கு