Balu⚡️ Profile picture
Jan 28 23 tweets 9 min read
#சோலார்_பேனல் மாட்டி பவர் உற்பத்தி செய்யலாம்னு முடிவு செஞ்சுட்டீங்னா முக்கியமாக நம்ம என்ன மாதிரி பேனல், எந்த கம்பெனிய வாங்க போறோம்னு தேர்வு செய்யனும் ஏன்னா பேனல் எபிசென்சி கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும் இப்ப கரண்ட்ல இருக்க சோலார் பேனலோட #எபிசென்சி பற்றிய இந்த #திரட்ல பாக்கலாம்.🙏
சோலார் பேனல் எபிசென்சி மேல்படும் சன்லைட்ட எத்தனை % மாக மின்சாரமாக மாற்றப்படுகிறது என்பதற்கான மெசர்மெண்ட் ஆகும். இப்ப பயன்படுத்தப்படும் சோலார் பேனல்க தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) படி, 16% டூ 22% வரை எபிசென்சி கொண்டவை. சராசரி எபிசென்சி 19.2% ஆகும்..⚡️
20% க்கும் மேல எபிசென்சி இருக்க சோலார் பேனல்கள் பிரீமியம் எபிசென்சி பேனல்களாகவும் விலையும் அதிகமாக வருகிறது, மேலும் #Sun_power , #LG_Solur , #REC இந்த கம்பெனிக பிரீமியம் எபிசென்சி பேனல்க தர்றாங்க. இதுல நம்ம முக்கியமாக கவனிக்க வேண்டியது..⚡️
20% எபிசென்சிங்றது அதிக எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரியவில்லை என்றாலும், சோலார் பேனலோட எபிசென்சிய பொறுத்தவரையில் நாம் உண்மையில் வெகுதூரம் வந்துவிட்டோம்..⚡️
சிலிக்கான் சோலார் பேனல்க முதன்முதலில் 1954ல கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​​​ஒரு சோலார் பேனல் 6% மட்டுமே எபிசென்சி மெசர்மெண்ட் இருந்துச்சு அதுவே 2012 க்கு முன்பு, சராசரி சோலார் பேனல் 13.4% எபிசென்சி தான் இருந்துச்சு இப்போது, ​​ 19.2% ஆக இருக்கிறோம்.⚡️
SunPower 440w22.80% SunPower 420w22.50%
LG R ACE 405w22.30%
REC 410w22.20%
Panasonic 380w21.70%
Silfop 380w21.40%
Raison 410w21.30%
Q Peak 370w20.60%
Solaria 370w20.50%
Ginkgo 390w20.43%

⚡️
இந்த கம்பெனிக மார்கெட்ல இருக்காங்க இன்னும் புது புது கம்பெனிக 500w 540wனு கொடுக்காங்க அதோட டேட்டா கிடைக்கல அடுத்து பெரோவ்ஸ்கைட் சோலார் செல்கள் போன்ற அற்புதமான புதிய முன்னேற்றங்களுடன், நாம் 50% எபிசென்சி மதிப்பீடுகளை கூட அடைய முடியும்னு சில கம்பெனிகளோட R&D போயிட்டு இருக்கு..⚡️
நார்மல் எபிசென்சி பேனல்களை விட கை எபிசென்சி பேனல்களை மாட்ட நமக்கு அதிக பணம் செலவாகும். இருந்தாலும் அதிகமான சோலார் பேனல் கப்பெனிக, குறிப்பாக சைனா கம்பெனிக, 20% க்கும் அதிகமான எபிசென்சி கொண்ட பேனல்களுடன் அதிக போட்டி விலையில கொடுக்காங்க.⚡️
#Trina_Solar $ #Longi போன்ற பிராண்டுக இப்போது 20% க்கும் அதிகமான எபிசென்சி மதிப்பீடுகளுடன் சிறந்த தரமான பேனல்கள கொடுக்காங்க இதுல முக்கியமாக கவனிக்க வேண்டியது #Sunpower போன்ற கம்பெனிகளோட விலைய விட மிகக் குறைந்த விலையில கொடுக்காங்க .⚡️
என்ன நார்மல் எபிசென்சி பேனலை விட அவை இன்னும் கொஞ்சம் விலை அதிகம், அவ்வளவு தான் இந்த போக்கு தொடர்ந்தால், ஹை எபிசென்சி கொண்ட சைனா சோலார் பேனல்களுக்கான விலைக நார்மல் பேனல்களின் விலையைப் போலவே குறைவாக இருக்கும்..⚡️
சோலார் பேனல்க ஒரு லேயர் கேக் டைப்ல தயாரிக்கப்படுகின்றன, முன்னாடி கண்ணாடி பேப்பர், ஒரு லேயர் Envelope, ஒரு லேயர் சோலார் செல்க, ஒரு லேயர் Backsheet மற்றும் அலுமினியம் பிரேம் அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கும்.
இந்த அடுக்குகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும்..⚡️
இந்த லேயர்ல பயண்படுத்தும் பொருள்களோட தன்மைய வச்சுத்தான் ஒரு சோலார் பேனல் எவ்வளவு Efficiently சன்லைட்ட மின்சாரமாக மாற்றும் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது,⚡️
சோலார் பேனல்ல #சிலிக்கான் சோலார் செல்கள்ல பாலிகிரிஸ்டலின் & மோனோகிரிஸ்டலின், இதுல இப்ப பீக்ல இருக்க பேனல்னு பாத்தோம்னா மோனோகிரிஸ்டலின தான்..⚡️
மேலும் இப்ப மார்கெட்ல இருக்க ஒவ்வொரு ஹை எபிசென்சி சோலார் பேனலும் சில வகையான #மோனோகிரிஸ்டலின் சோலார் செல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன..⚡️
#மோனோகிரிஸ்டலின் #சிலிக்கான் செல்க #PERC சோலார் செல்களால் : 'செயல்படுத்தப்பட்ட Emissive மற்றும் பின்புற தொடர்பு செல்கள்' என்றும் அழைக்கப்படும், #PERC செல்கள் பொதுவாக 1% கூடுதலாக எபிசென்சி வழங்குகின்றன..⚡️
ட்ரை லைட் லேயர் செல்களுடனான #ஹெட்டோரோஜங்ஷன் என்பது பாரம்பரியமான #மோனோகிரிஸ்டலின் சோலார் செல்கள் ஆகும், அவை வெவ்வேறு வகையான #சிலிக்கான் லேயர்க்கு இடையில் இணைக்கப்பட்டுள்ளன,.அவை ஒளியின் பல்வேறு #Wavelengths Absorbent எடுத்து மின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.⚡️
#Panasonic & #REC கம்பெனிக #HJT சோலார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நெம்பர் ஒன் கில்லாடிக. #ஸ்பிளிட்_செல் தொழில்நுட்பம் சரியாகத் தெரிகிறது சோலார் செல்க உயர் துல்லியமான லேசர் மூலம் பாதியாக வெட்டப்படுகின்றன, இது வெப்பத்தையும் எதிர்ப்பையும் குறைக்கிறது,⚡️
#சோலார் பேனலின் மெல்லிய கோடுகளாக இருக்கும். இவை மின்சாரத்தை கடத்தும் காப்பர்,at அலுமினிய கம்பிகளின் லைன் இருக்கும் இது சோலார் செல்கள்லயிருந்து சோலார. பவரை transformer மூவ் பண்ணும்..⚡️
இப்ப சில கம்பெனிக #மல்டி_பஸ்பார் டெக்னாலிஜிக்கு மாறியுள்ளனர், தடிமனான பஸ்பார்களுக்கு மாறாக, பல #அல்ட்ரா_தின் #பஸ்பார்க பயன்படுத்தப்படுகின்றன. மெல்லிய #பஸ்பார்க சோலார் செல்க நிழலின் அளவைக் குறைத்து அதிக சன்லைட் absorb அனுமதிக்கு, இதனால் எபிசென்சி அதிகரிக்கிறது..⚡️
இவை இன்டர்டிஜிட்டட் பேக் காண்டாக்ட் Ar ஐபிசி செல்களைப் பயன்படுத்துகிறது, அங்கு அனைத்து பஸ்பார்களும் வயரிங்களும் சோலார் செல்க்கு பின்புறத்தில் இருக்கும்..⚡️
பிளாக் சோலார் செல்க சில ஒயிட் இடங்களால் சூழப்பட்டிருக்கும் அந்த ஒயிட் இடம் பேனலின் பிளாக் கலர் சோலார் பேனல்க பிளாக் பேக்ஷீட்டைக் கொண்டிருக்கலாம்.
பிளாக் பேக்கிங் சோலார் செல்ல கலர் கூட தடையின்றி கலப்பதன் மூலம் பேனல்களுக்கு மிகவும் நேர்த்தியான, சீரான தோற்றத்தை அளிக்கிறது.⚡️
இருப்பினும், பிளாக் சப்போட் பேனல்க ஒயிட் பேஸ் பேனல்கள விட சற்று குறைவான எபிசென்சி கொண்டவை, ஏனெனில் இது சோலார் பேனல்களை வெப்பமாக்குகிறது. சோலார் பேனல் எவ்வளவு சூடாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்..⚡️
சோலார் பேனல மேற்பரப்பு வெப்பமடைவதால், அதன் எபிசென்சி குறைகிறது. சோலார் பேனல்கள் இதமான கூலிங்ல இருந்தா சிறப்பாக செயல்படுகிறது..⚡️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Balu⚡️

Balu⚡️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @balu_gs

Jan 4
#EV_கார்ல இருக்க பேட்டரியோட லைப் டைம் என்ன? அதோட சார்ஜிங் டைம் என்ன? சார்ஜிங் கட்டணம் என்ன? நம்ம #EV பேட்டரிய என்ன மாதிரி பராமரிப் செய்யனும்னு #EV_கார் கம்பெனிக சொல்றாங்க அதில் அதில் பொதுவாக இருக்கர்த பற்றி இந்த #திரட்ல பாப்போம்..🙏

⚡️
#EV_கார் பயன்பாடு வருச வருசம் அதிகமாகிட்டே வருதாலும் பலருக்கு #WV பேட்டரியோட லைப் மற்றும் பேட்டரி மாற்றத்துடன் தொடர்புடைய செலவுகள் குறித்து சந்தேகங்கள பதிவு செய்யறாங்கனு #காக்ஸ்_ஆட்டோமோட்டிவ் நடத்திய கணக்கெடுப்பின்படி சொல்றாங்க..⚡️
கடந்த பத்து வருசத்துல #லித்தியம்_அயன் பேட்டரிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பேட்டரியோட லைப் டைம், பாதுகாப்பை அதிகரித்தது, பேட்டரியோட வெயிட், விலையை குறைத்ததுனு.⚡️
Read 28 tweets
Jan 2
பெட்ரோல்,டீசல் எஞ்சின் கார் வச்சிருக்கவுங்க, #EV_கார் வாங்கன என்ன மாதிரியான சில முக்கியமான நன்மைகள் இருக்கும்னு பாக்கலாம் வாங்க..😎

👇👇👇
பெட்ரோல்,டீசல் எஞ்சின்க பொதுவாக 1.5L கிமீலயிருந்து 2L கிமீ வரை புல் எபிசென்சில ஓடும், அதுக்கு அப்புறமா மேஜரா என்ஜின் வேலை,மற்ற ஸ்பேர்ஸ் சேஞ்சுனு வேலை வந்துட்டே இருக்கும்..👇
அதே #EV_கார்ல ஹார்ட்னுனா #BLDC_Motor தான் அதோட லைப்னு எடுத்துக்கிட்டா (சரியான முறைல மெயிண்டேன் பண்ணா)
10L கீமி எந்த பிரச்சனையும் இல்லாது இயங்கும்னு சொல்றாங்க..👇
Read 10 tweets
Dec 28, 2021
ரூப்டாப் #சோலார்_பேனல் மாட்டலாம்னு இருந்தீங்கனா அதில் உள்ள பல்வேறு சாதக பாதகங்களை நீங்கள் அறிந்து புரிந்துகொண்டு ரூப்டாப் #சோலார்_பேனல் மாட்ட முடிவு செய்ய உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கட்டும்னு இந்த #திரட்ல எனக்கு தெரிஞ்சத எழுதியிருக்கு.!

👇👇👇
முதல்ல நம்ம கவனிக்க வேண்டியது நம்ம ரூப் (சிமெண்ட் சீட்) லைப் சிமெண்ட் சீட்டோட லைப்னு எடுத்துட்டா 20ல இருந்து 25 வருசத்துக்குள்ள தான் நல்லமுறைல இருக்கும், அதற்கு மேல் அதோட எபிசென்சி குறைந்து விடும், 👇
நம்ம புதிதாக மாட்ட இருக்கும் #சோலார்_பேனல்கள அந்த கண்டிசன்ல இருக்க ரூப் மேல லோடு பண்ண முடியாது, ஏன்னா சோலார்_பேனல்க ஒரு டைம் எரக்சன் பண்ணிட்டா 20 வருசத்துக்கு எடுக்க வேண்டியிருக்காது.👇
Read 11 tweets
Dec 12, 2021
உலகில் பல நாட்டுகள்ல பல அறிஞர்களோட நவீன தொழில்நுட்ப அறிவுல பல மாடல்கள்ல காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி #விண்ட்மில் வழியாக மின் உற்பத்தி செய்வதற்கு வெவ்வேறு வித்தியாசமான டர்பைன்க கண்டுபிடிச்சுயிருக்காங்க அந்த சில டர்பைன் பற்றி இந்த #திரட்ல பதிவு செஞ்சிருக்கு..😍👇
நம்ம இப்ப அதிகமாக பார்த்தது இந்த விண்டுமில் டர்பைன் தான் அது ஒரு பெரிய மூன்று~பிளேடு விசிறி போல் இருக்கும். காற்று வீசும்போது பிளேடு சுழலும் போது விண்டுமில் டர்பைன் வழியாக மின் உற்பத்தியாகி கிரிட்டுக்கு அனுப்ப படுகிறது..👇
இது காற்றிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான மிகவும் பொதுவான வழியாகும், ஆனால் இந்த தொழில்நுட்பம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. இது உண்மையில் விண்டுமில் எனர்ஜியை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழியானு பாத்தா..? பல உலக அறிஞர்க இல்லைனு சொல்றாங்க..👇
Read 22 tweets
Oct 25, 2021
இந்தியால சமிபத்துல பவர்கட் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னனு பாத்தோம்னா நமக்கான மின் தேவைகள 70 % மேல பூர்த்தி செய்யர்து அனல் மின் நிலையங்க தான் அந்த ஆனல்மின் நிலையங்க இயங்க மூலப்பொருள் நிலக்கரி தான்..அந்த நிலக்கரி ஏன் தட்டுப்பாடு ஆச்சுனு இந்த #திரட்ல பாக்கலாம் வாங்க..🙏
நாடு தற்போது எதிர்கொள்ளும் அனல் மின்சார நெருக்கடி நிலக்கரி கிடைக்காததால் ஏற்படுகிறது, பெரும்பாலான அனல் மின்சார பிளான்டுக நிலக்கரி கிடைக்காததால் அனல் மின் உற்பத்தியில்லாத இருக்கு..👇
நிலக்கரி இருப்பு குறைந்தபட்சம் 50 முதல் 60 நாட்கள் வரை இருக்க வேண்டும்.ஆனால் இது 4 நாட்களுக்கு குறைந்துவிட்டது இந்தியா போன்ற நாட்டிற்கு தேவை அதிகரிப்பது இயற்கையானது .👇
Read 11 tweets
Sep 28, 2021
ஒரு சின்ன ஸ்பின்னிங் யூனிட் மெசின் செட்டப் முடிச்சு உற்பத்திய தொடங்க என்ன பட்ஜெட் ஆகும்னு ஒரு #திரட்...🙏

👇👇👇
முதல் இடம் பார்க்கனும்னா உங்கள் ஊர்ல போக்குவரத்துக்கு சாலை வசதி உள்ள இடமாகவும்... ஊரை விட்டு தள்ளி ஒரு ஏக்கர்ல இடம் இருக்க வேண்டும்...👇
கரிசல் பூமியாக இல்லாத இருந்தா.ஏனென்றால் பில்டிங் செலவு அதிகமாகும் என்பதனால்.. பூமிக்கு குறைந்தபச்சம் ஒரு ஏக்கர் 6லட்சம் முதலீடாக இருக்கட்டும்...👇
Read 38 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(