சிவாஜி பான்ஸ்லே என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் சிவாஜி மஹாராஜா என்றால் குழந்தைக்கு கூட தெரியும்.
பாரத தேசம் பெற்ற ஒரு மராத்திய வீர புருஷன். சிவாஜி ஹிந்து வெறியன் அல்ல. அவருடைய ஒன்றரை லக்ஷம் வீரர்கள் படையில் பாதிக்கு மேல் முஸ்லிம்கள்!.
சிவநேரி என்ற கோட்டையில் பிறந்ததாலும், குலதெய்வம் சிவை என்பதாலும் அவருக்கு சிவாஜி என்று அம்மா ஜீஜாபாய் வைத்த பெயர்.
சிவபெருமான் பெயர் என்று நினைக்கவேண்டாம். அப்படி நினைத்தாலும் ஒன்று தான். துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்தவர் தானே சிவாஜி.
தனது மராத்திய சாம்ராஜ்யத்தை பாதுகாக்க சிவாஜி மேற்கொள்ளாத தந்திரம், சாமர்த்யம், திட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல
இளம் வயதிலேயே, பாலகனாக இருந்தபோதே சிவாஜி ஒரு கோட்டையைக் கைப்பற்றினார்
சிவாஜி நன்றாக செயல்படும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட படை எவ்வளவு அவசியம் என்று தெரிந்தவர்.
தனது வீரர்களை பழக்கப்படுத்தி அனுபவங்கள் கொடுத்து ஒரு சக்தி வாய்ந்த படையைக் கொண்டவராக இருந்தார்
தனது எதிரியாக இருந்தாலும் ஒளரங்க சீப்புக்கு உதவ முன்வந்தவர்
பலம் வாய்ந்த எதிரி அப்ஸல் கானை புலி நகங்கள் அணிந்து அவன் துரோகமாக தன்னைக் கொல்லும் முன்பு தனி ஒருவனாக அவனைத் தீர்த்து கட்டிய தைரியசாலி.
முள்ளை முள்ளாலே தானே எடுக்கமுடியும் என்று அனுபவ பூர்வமாக அறிந்தவர் சிவாஜி.
கடலை ஒட்டி கோட்டைகள் கட்டி இயற்கை அரணை உபயோகித்துக் கொண்ட புத்திசாலி.
கிருஷ்ணனுக்கு அடுத்தபடி கெட்டிக்காரர். அவரது வீரம் புத்தி கூர்மை முகலாய அரசர்களையும், அடில் ஷா வம்சத்தினரையும், நவாப், சுல்தான்களையும் வெற்றி கொள்ளச் செய்தது.
எல்லோரிடமும் அன்பும் பண்பும் கொண்ட அவரது குணம் அவருடைய வெற்றிக்கு அவரோடு இருந்தவர்களின் ஒத்துழைப்பைக் கொடுத்தது.
அனைவருடனும் சேர்ந்து இருக்கும் குணம் எல்லோரையும் அவரோடு இணைத்தது. தர்ம தானங்கள் நிறைய செய்து எல்லோர் மனதையும் கவர்ந்தார்.
புராதன சின்னங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் எதையும் அவர் எதிரிகள் அழிக்க விடாமல் காப்பாற்றியவர். அவர்களை நெருங்க விடவில்லை.
ஒரு மாதத்திற்கும் மேலாக @SivaRoobini555@VasaviNarayanan இருவரால் அற்புத தமிழ் விருந்து அளிக்கப்பட்டு, கோதையின் கீதை என்று அவள் திருப்பாவையை ரசித்து எழுதினார்கள்.
கடந்த 30 நாட்களாக அற்புதமான அந்தப் பெண் ஆண்டாள் எனும் கோதையோடு பழகி அவள் தேன் தமிழ் திருப்பாவை பாசுரங்களை ரசித்தோம்.
அவள் காத்யாயனி விரதம் இருந்தாள் . அரங்கனையே மணாளனாக அடைய விரும்பினாள் . அவளுக்கு அவனைப் பிடித்தது போல் அவனுக்கும் அவளை ரொம்ப பிடித்தது .
அவனோடு மணம் ஆகும் வைபவத்தை கனா கண்டாள். கனவு நிஜமானது. ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சென்றடைந்தாள் அந்த சிறுமி.
அவள் கண்ட கனவு எவ்வளவு திவ்யமானது என்று அவள் விவரிக்கும் நாச்சியார் திருமொழியில் சுவைத்து ரசிக்கலாம்.
முன்னெச்சரிக்கை: இந்த பதிவு #தன்மை_நிலையில் (First person singular - Grammar) எழுதப்பட்டுள்ளது.
முழுவதும் கற்பனை... யார் மனதையும் புண்படுத்த இல்லை
குறிப்பாக... இது @rgkannan & @makkolam அவர்கள் விரைவில் குணமடையவும் அவர்கள் மன அமைதியோடு நிறைய ஓய்வு எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.... இதோ ஒரு இசைப் பதிவு ( #கொஞ்சம்_நகைச்சுவையும் கலந்து தான்)
தற்போது கொரோனா பாதிப்பால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் போது இங்கே ட்விட்டரில் விரைவில் நலம்பெற வாழ்த்திய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியும் அன்பும்...
இந்த தலைப்பிற்கும் நம்ப @bullettuupandi அவர்கள் பதிவு செய்த கீழேயுள்ள வீடியோவில் கதை சொல்லும் #பேராசிரியர்_ஜெயந்தி ஶ்ரீ அவர்களுக்கும் ஒரு reference உண்டு.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை. பெங்களூரில் எனது அண்ணி PhD பட்டம் பெற்றதை கொண்டாடும் வகையில் என் அக்கா வீட்டில் எங்கள் குடும்பம் சார்ந்த ஒரு விழா நடந்தது.
அந்த குடும்ப விழாவிற்கு Prof.Jayanthi அவர்கள் என் அண்ணிக்கு professional educational coordinator என்ற முறையில் அவரையும் வரச்சொன்னதால் அவரும் வந்திருந்தார்.
எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சிலர் Prof.Jayanthi அவர்களை பேசச் சொல்லி கேட்டார்கள்.