#தீட்சை தீக்ஷா என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருள். ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று ஆகமங்கள் சொல்கின்றன. இச் சொல்லில் தீ-கொடு, க்ஷி-அழித்தலைக் குறிக்கிறது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை
அழிப்பதால் இது தீக்ஷா (தீட்சை). #தீக்கை உள்ளத்து அழுக்கைத் தீயிலிட்டுக் கொளுத்துவது தீக்கை (தமிழ்ச்சொல்). மனிதப் பிறவியின் நோக்கம் இறைவனை அடைவதே. உலகியல் அறிவு எல்லாமே ஏதோ ஒரு ஆசிரியர் வழியே தான் நாம் அறிகிறோம். அப்படியிருக்க எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஆன்மீக அறிவு, அதில் அனுபவம்
பெற்ற ஒரு குரு வழியேதான் ஒரு சாதகனுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட குருவிடம் பூரண சரணாகதி செய்வதன் மூலமே ஒரு ஆன்மீக சாதகன் தன் அகங்காரத்தைத் துறந்து அறிய வேண்டியதை அறிய முடியும். அதற்கு, குருவருளின் ஒரு அங்கமாக, வழிகோலும் ஒரு அடிப்படைச் சாதனமாக குரு தருவதுதான் தீட்சை எனலாம்.
தீட்சை என்பதற்கு நெருப்பால் செய்யப்படும் செய்முறை என்று பொருள். தச தீட்சை, முப்பு தீட்சை, சிவ தீட்சை இவை அனைத்தும் தீயை பயன்படுத்தி செய்யப்படும் செய்முறைகள். என அகத்தியர் பெருமான் கூறுகிறார்.
ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு
உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள். தீட்சைகள் ஆறு
வகைப்படும். அவை ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை. #ஸ்பரிச_தீட்சை
ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது ஸ்பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால்
சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலாதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே ஸ்பரிச தீட்சையாகும். #நயன_தீட்சை
ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின்
வெப்பத்தினால் முட்டை
பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். #பாவானா_தீட்சை
ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள்
சென்று முட்டைகள்
பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையான ஆனந்தப்
பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. #யோக_தீட்சை
ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார,ய வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா
இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும். #வாக்கு_தீட்சை
ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்கள்
உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும். #நூல்_தீட்சை சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களை
அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களை நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சை.
#யோக_தீட்சை என்பது
மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே,
மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம். எடுத்த இப்பிறப்பில் மெய்யான ஞானகுருவைத் தேடி, கண்டு, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைவனை உணர்ந்து
வாழ்ந்து அவன் திருவடிகளை இறுதியில் அடைவதே நம் வாழ்வின் குறிக்கோள், பயன்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Sri Maha Periyava was running a high temperature. His chest was congested with phlegm. Vengudi Doctor usually attended on Periyava and prescribed medication. This time Periyava did not take his medicines. The fever did not subside nor did the phlegm decrease.
A lady who came regularly for darshan arrived. Seeing Periyava’s condition, she had made a paste of saffron on the stone used for grinding sandal paste and then heating it to the right temperature and brought it. Periyava was then seated inside the mena (palanquin). The lady
offered the costly medicine reverentially. Taking it casually as if it were a common object, Periyava placed the leaf-cup in a corner of the mena. Sri Kamakshiamman was then arriving outside SriMatham in the ceremonial procession down the streets.
“Kamakshi has arrived in front
சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளாள். அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தமிழில் ‘அறம் வளர்த்த நாயகி.’ நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப தர்மங்களை செய்து
பலன் பெறுவோம். பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. #தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்: 1. அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம்
கிடைக்கும்.(பழைய சாதத்தை எப்பொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் வருமானத்தை விட அதிகப்படியான செலவுகளையே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.) 2. மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களுக்கு இரட்சையாக இருக்கும்.
ஐந்து வடத்திற்கு ஒரு முறை ஆறு மாதங்கள் நடத்தப்படும் #துபாய்எக்ஸ்போ#DubaiExpo2022 எனப்படும் கண்காட்சியில், எந்த நாடும் தன் நாட்டிற்காக என்று ஸ்டால் போடலாம். ஆனால் ஒரு நாடு தான் ஸ்டால் போட முடியும். ஒரு நாட்டின் தனிப்பட்ட மாகாணம் அல்லது மாநிலம் அல்லது அந்நாட்டு நிறுவனங்கள் அல்லது
தனி மனிதர்கள் தனித்தனியாக ஸ்டால் போட முடியாது. அந்தந்த நாடுகளின் ஸ்டால்களில் அவரவர் நாட்டு மத்திய அரசாங்கம், அந்தந்த மாநில வாரியாகவும் 3 முதல் ஆறு நாட்களுக்கு, அந்தந்த நாடுகளின் ஸ்டால்கள் உள்ளே, கடை நடத்தும். அதன்படி இந்தியா ஒரு ஸ்டால் வாங்கியுள்ளது. இந்தியா தன் ஸ்டாலை ஆறு
மாதங்களாக நடத்திக் கொண்டு வந்து கொண்டுள்ளது. அதில் மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஸ்பெஷல் டிஸ்ப்ளே அடிப்படையில், மத்திய அரசு மூன்று முதல் ஆறு நாட்கள் வரை அம் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றிய கடை விரிக்கும். மத்திய அரசு அதன்படி நாட்களை ஒதுக்கீடு செய்து
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தனஞ்ஜெயன் என்ற மகான் தன் அன்றாட தேவைகளை ஒருவன் கவனித்துக் கொண்டால் தான் ஸ்ரீமந் நாராயணன் வழிபாட்டில் மூழ்கி இருக்கலாமே என்ற எண்ணத்தில் தனக்கு ஓரு பணியாளை நியமித்துக் கொண்டார். பணியாள் மாதவனின் பணிவும் மரியாதையும் அவருக்கு மிகவும் பிடித்தது.
உன் பெயரென்ன என்று
அவர் கேட்டபோது நீங்கள் என்னை எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது என்றான் பணியாள் மாதவன்.நீ என்ன வேலை செய்வாய் என்றதற்கு, தாங்கள் என்ன உத்தரவு அளிக்கின்றீரோ அதை செவ்வனே செய்து முடிப்பதே என்னுடைய கடமை என்றான் அவன்.
நீ என்ன சாப்பிடுவாய்?
தாங்கள் என்ன
தருகின்றீரோ அதை சாப்பிடுவேன்.
உனக்கு ஏதேனும் ஆசை இருக்கின்றதா?
எஜமானர் நீங்கள் இருக்கும் போது எனக்கு என்று ஒரு ஆசை தனியாக இருக்க முடியுமா? தங்களுடைய நாட்டமே என் விருப்பம்.
அவனுடைய அந்த தன்னடக்கமான பேச்சைக் கேட்டதும் மகான் தனஞ்ஜெயனுக்கு அழுகையே வந்து விட்டது. தனக்கும் ஸ்ரீமந்
கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்யும் போது #செய்ய_வேண்டியவைகள்#செய்ய_கூடாதவைகள்.
இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட முன்பாக தானம் செய்வது நல்லது. அதாவது கோவில் வாசலில் இருக்கும் யாசகர்களுக்கு உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கோவிலுக்குள் போகும்
போது கொடுக்க வேண்டும், திரும்பி வரும்போது அல்ல. பலருக்கும் இது தெரியாது. கோவிலுக்கு வெறும் கையுடன் செல்லக் கூடாது. பூ, பழம், நல்லெண்ணெய், தேங்காய் கற்பூரம் என எல்லாமுமோ சக்திக்கு முடிந்த அளவு ஏதாவதோ கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்று கடன் வாங்க கூடாது. உடல், ஆடை, மனம் எல்லம்
தூய்மையாக இருக்க வேண்டும். பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும். (கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலுக்கு பிரதான வாயில் வழியாக சென்றால் ஆட்சி பீடம் போய் விடும் என்று பக்க வாயில் வழியாக சென்றது உங்களுக்கு நினைவிருக்கும். அது தவறு.) மூடியிருக்கும் கோவிலில் வெளியிலிருந்து சாமி
#யோகிஆதித்யநாத்#YogiAdityanath
தேர்தலுக்கு முன் அவரிடம் 'இண்டியா டிவி' பேட்டி எடுத்தது. பேட்டியாளர், உங்கள் குடும்பத்தார் நீங்கள் முதலமைச்சர் ஆனதால் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா எனக் கேட்கிறார்!. யோகியின் சகோதரி, ஒரு கோவில் அருகே காய்கறி வியாபாரம் செய்கிறார். அத்துடன் ஒரு
டீக்கடையும் சில பிஸ்கெட்களையும் விற்கிறார். மிகவும் ஏழ்மையான வாழ்க்கை நடத்துகிறார். இதுதான் ஒரு முதலமைச்சரின் சொந்த சகோதரியின் நிலைமை! டிவியாளர் கேட்ட கேள்விக்கு யோகியால் பதில் சொல்ல இயலவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் பெருகி ஓடுகிறது. கண்ணீருக்கு இடையே தழுதழுத்த குரலில், "நான்
இந்த மாநிலத்திற்காக என்னை அர்ப்பணிப்பதாக சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளேன். என் குடும்பம் முன்னேற சபதம் எடுக்கவில்லை.எனது குடும்பத்தைப் பற்றி என்னால் கவலைப்பட முடியாது. எனது கவனமெல்லாம் உபி மக்களின் முன்னேற்றமே!" எனக் கூறி கண் கலங்குகிறார்!
உபி மாநிலம்