#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு கடைந்தெடுத்த நாஸ்திகன், கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமே இல்லை என்று மேடையில் முழங்கினான். அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும் என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். மதத் தலைவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக
உண்டாக்கிக் கொண்ட கட்டுக் கதைகள் தான் மதம் என்று சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டு இருந்தான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடினார்கள். கடைசியாக, கடவுளுமில்லை, கத்திரிக்காயும் இல்லை, எல்லாம் பித்தலாட்டம் எனச் சொல்லி முடித்து, யாராவது கேள்வி கேட்க
வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்றும் அழைத்தான். வயதான ஒருவர் மேடைமீது ஏறினார். தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தார். கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் நாஸ்திகன். பழத்தை உரித்தவர் சுளை சுளையாகத்
தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன் என்று சொல்லியவாறு ரசித்துத் தின்று கொண்டிருந்தார். உண்டு முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டார்.
பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று
எவ்வாறு சொல்ல முடியும் என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன். “கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப் பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான். #பகவத்கீதை &
#ஸ்ரீமத்பாகவதம் போன்ற வேத சாஸ்த்திரங்களை படிக்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள் பரமபுருஷ பகவான் பரம்பொருள் என எப்படி அறிய முடியும்? பலர் தவறான பாதையில் போக முக்கியமான காரணம் வேத சாஸ்த்திரங்களை படிப்பதில்லை
எனவே நானே இறைவன் என்று பிதற்றுகிறார்கள். ஏமாற்றும் நபரிடம்
மாட்டிக் கொண்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆன்மீக ராஜ்ஜியம் அடையாமல் மீண்டும் மீண்டும் ஜடவுலகிலேயே பிறவி எடுக்கிறார்கள்
ஹரேகிருஷ்ண, ஹரேகிருஷ்ண.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காவல்காரன் முனியாண்டி தினம் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் #ஜாக்ரதை என்று கத்திக் கொண்டே போவான். ஒருநாள் அவசரமாக முனியாண்டி வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை சண்முகம் செய்யவேண்டியதாயிற்று.
அவன் பிள்ளை சண்முகம் முன்
ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது. இரவில் மகன் சண்முகம் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்ரதை சொல்லிக்கொண்டு அப்பன் முனியாண்டி வேலையை செய்தான்.
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் அந்தப் பையனைப் பார்க்க வந்தார்.
ஐயோ
ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ, இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவாரோ என்று காவல்காரன் முனியாண்டி நடுங்கினான். ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தார்! எதற்காக? முதல் நாள் இரவு பையன் சண்முகம் ‘ஜாக்ரதை
#கல்லுக்குழி_ஆஞ்சனேயர்#திருச்சி மூர்த்தி சிறிது ஆனால் அவரின் கீர்த்தியானது சொல்லில் அடங்காதது. இடது திருப்பாதம் வடக்கு நோக்கி, வலது திருப்பாதம் கிழக்கு நோக்கி இடது திருக்கரத்தில் பாரிஜாத மலர், வலது திருக்கரம் அபய ஹஸ்த முத்திரையுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவர் இங்கு வந்து
அமர்ந்தவிதம் அற்புத அதிசயம். சுமார் 120 வருடங்களுக்கு முன், ஒரு நாள் ரயில் பயணி ஒருவர், திருச்சி ஜங்க்ஷனில் தான் கொண்டு வந்திருந்த சாமான்களுடன் இறங்கினார். அதில் ஒரு சாக்கு மூட்டையை தூக்க முடியாதபடி தூக்கிக் கொண்டு நடந்தார். ரயில்வே டிக்கெட் பரிசோதகர், எடை அதிகம் உள்ளதாகக்
கருதி அனைத்துப் பொருட்களையும் எடை போட்டு பயணிகளுக்கு அனுமதிக்கப்படும் அளவை விட அதிகமாக உள்ளதால் அபராதப் பணம் கட்டும்படி கூறி இருக்கிறார். பயணியோ, தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். பணம் கொண்டு வந்து கொடுத்து விட்டு இந்த மூட்டையை வாங்கிச் செல் என்று சொல்லி
#மகாபெரியவா ஒரு ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது. மகாபெரியவாளைத் தான் தெரியும். தினமும் வந்து வந்தனம் செய்வாள். பல செல்வந்தர்கள் பெரியவாளுக்குக் காணிக்கையாக விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு வந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று
ஏங்கினாள். ஒரு நாள் மனமுருகி பெரியவாளிடம் சொல்லி விட்டாள்.
பெரியவாள் சொன்னார்கள், "அவர்கள் கொண்டு வந்து கொடுக்கிற எந்தப் பொருளையும் நான் தொடுவது கூட இல்லை. நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை. என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! உனக்குப் பிடிச்ச ஒரு வேலை
சொல்றேன், செய்கிறாயா?"
பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.
"மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காயவைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது. சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உப்யோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்"
பாட்டியின்
#MahaPeriyava Noted lyricist Kannadasan visited Kanchi Maha Periyava and as usual discussed spiritual matters. Kannadasan was earlier an atheist and wrote articles criticizing Hinduism. Slowly he changed due to the effect of Maha Periyava. But his critical outlook still persisted
He asked Maha Periyava, 'When milk is White then how come Parkadal (Ocean) or the ocean of milk is shown as Megavarnam? (Blue). Has the colour of Mahavishnu dissolved in the ocean of milk?'
Acharyal gave a smile. He just said ‘You will get the reply by noon’.
Kannadasan was
perplexed. He dare not say anything further. Vummidi Bangaru Chetty visited the mutt that afternoon. Both Kannadasan and Vummidiyar greeted each other in their traditional way. Afterwards Vummidiyar placed a Large Green Emerald at the Acharyal’s feet and pleaded with him to
#ஸ்ரீராமானுஜர் ராமானுஜரை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்குத் தமையன் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆண்டாள் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ராமானுஜரோ 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆனாலும் வாழி திருநாமத்தில்,
திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள்
வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
என்று போற்றுகிறோம். இது எவ்வாறு ஏற்பட்டது? ஆண்டாள் அரங்கனை மணந்தால் நூறு தடா (அண்டா) அக்கார அடிசில் நிவேதனம் செய்வதாக மனமார வேண்டிக் கொண்டார்.
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு
நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ
(நாச்சியார் திருமொழி)
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள், மாலிருஞ்சோலையில் வாழும் நம்பியே, என்னைக் கோவிந்தனோடு சேர்த்து வைத்தால் உனக்கு 100தடா அக்கார
#மகாபெரியவா
பெரியவாளை தரிசனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு
ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் சாலையைக் கடந்து எதிர் பக்கம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். 5 நொடிகளுக்கு ஒரு முறை குறைந்தது 2 வண்டிகளாவது போய்க் கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை
பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல, "தாத்தா" என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக் கொண்டு சாலையை கடக்க ஆரம்பித்தாள். வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக் குழந்தைக்கு இல்லை. அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம், வேகமாக வந்த லாரி, அந்தக்