#அறிவோம்_மகான்கள்#அறிவோம்_ஆன்மீக_கலைஞர்கள்#ஊத்துக்காடு_வேங்கடகவி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
அலைபாயுதே கண்ணா
பால்வடியும் முகம்
ஆடாது அசங்காது வா கண்ணா
ஸ்வாகதம் கிருஷ்ணா
மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட
பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
இந்தப் பாடல்கள் எல்லாம் நாம் கர்நாடக சங்கீதம் அறியாவிட்டாலும் ரசிக்கும் பிரபலமான கர்நாடக சங்கீத பாடல்கள் இல்லையா? இதையும் இன்னும் நூற்றுக்கணக்கான பக்திப் பரவசமூட்டும் பாடல்களை, நாம் புரிந்து கொள்ளும் அளவு எளிய தமிழில் இயற்றியவர் ஊத்துக்காடு வேங்கட
சுப்பய்யர் ஆவார். இவர் (1715 - 1775) 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர். தமிழிலும் வடமொழியிலும் பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் ஜாவளி, தில்லானா, காவடிச்சிந்து போன்ற பல்வகை இசைவடிவங்களையும் இயற்றியவர். இவர் மன்னார்குடியில் ராமசந்திர ஐயர் - கமலநாராயணி
தம்பதியருக்கு 1715-ல் ஆவணி மாதம் மக நட்சத்திரத்தில் பிறந்தார். மன்னார்குடிக்கும் கும்பகோணத்திற்கும் இடையில் உள்ள ஊத்துக்காடு என்னும் ஊரில் வாழ்ந்தார். இவ்வூரில் காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு கோவில் இருக்கிறது. (இவ்வூருக்கு அருகில்தான் பாகவதமேளாவுக்குப் பெயர் போன மிலட்டூர் உள்ளது)
இன்றும் பாகவத மேலா நடக்கின்றது. அவர் அந்த கிருஷ்ணன் சந்நிதியில் பாடும் போது, அவர் முன்பு ஸ்ரீ கிருஷ்ண பகவான் தோன்றி அருள் புரிந்துள்ளார். நீடாமங்கலத்தில் வாழ்ந்து வந்த ராஜா பாகவதர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். கிருஷ்ண யோகி என்பவரிடம் இசை பயில வேண்டுமென அணுகியபோது அவர் அதை
மறுத்துவிட்ட்தாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு தாயின் அறிவுரைப்படி கிருஷ்ணனை குருவாகக் கொண்டு உபாசனையில் ஈடுபட்டார். வேங்கட சுப்பையர் திருமணம் செய்துகொள்ளாமல் இறுதி வரை துறவு வாழ்வே வாழ்ந்தார். இவருடைய சகோதரர் காட்டுக் (ஊத்துக்காட்டு) கிருஷ்ணய்யர் இவருடைய பாடல்களை ஒலைச்சுவடிகளில்
எழுதி வைத்தார். காட்டுக் கிருஷ்ணய்யர் தஞ்சை பிரதாப சிம்மன் என்ற மன்னரின் (1739-1763) அவைப்புலவராக இருந்தார். கிருஷ்ணய்யர் சந்ததியினர் தான் இன்றும் அவர் பாடல்களை பாதுகாத்து அவருக்கு அக்டோபரில் வரும் ஜெயந்தியையும் வருடா வருடம் கொண்டாடுகின்றனர். இவர் மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக்
கவிராயர் ஆகியோரின் சமகாலத்தவர். இவர் கிருஷ்ணர் மேல் தான் அநேகப் பாடல்கள் பாடியிருந்தாலும் மற்ற தெய்வங்கள் மீதும் பல பக்தி ரசம் சொட்டும் பாடல்களை எழுதியுள்ளார். வேங்கட கவியின் இசையமைப்புகள் அவரது இசையில் புலமை, நாட்டியம் மற்றும் தாளம் பற்றிய அறிவு, அவர் வாழ்க்கையில் பின்பற்றிய
அத்வைதத் தத்துவம் மற்றும் அவரின் மொழியியல் ஆளுமையை வெளிப் படுத்துகின்றன. அவரது கீர்த்தனங்கள் ஒலிக்காத மேடைகளே இல்லை. கொஞ்சல், கெஞ்சல், வேண்டுதல், ரசித்தல், அவதானிப்புகள் என கண்ணனை இவர் அணுகாத பரிமாணங்களே இல்லை. பாரதிக்கு முன்பே கண்ணனை எளிய தமிழில், எழில் மிகு நாயகனாக மாற்றிய
பெருமை மிக்கவர் இவர். வேங்கடகவியின் பாடல்களைப் பிரபலப் படுத்தியவர்களின் வரிசையில் மிக முக்கியமானவர் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர். இவரால்தான் இன்று அப்பாடல்கள் பிரபலமாக உள்ளன என்று சொன்னால் மிகை ஆகாது. இவர் சமீக காலத்தில் வாழ்ந்து நாடெங்கும் ஹரிகதா காலக்ஷேபங்களை நடத்தி
வந்தவர். வேங்கடகவியின் பல பாடல்களை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டவர். கிருஷ்ண கானம் எனும் பெயரில் அவர் செய்து வந்த ஹரிகதாவும், அதன் ஒலிப்பதிவு நாடாகளும் பாடல்களை அனைவரிடமும் எடுத்துச் சென்றது. இது வரை இவர் பாடல்கியா ரசித்ததில்லை என்றால் இணையத்தில் தேடி கேட்டு மகிழுங்கள். அனைத்து
பிரபல இசைக் கலைஞர்களும் இவர் பாடல்களை பாடியுள்ளனர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
ஆடாது அசங்காது வா கண்ணா
Kalinga narthana thillana rendered by Needamangalam krishnamurthy Bhagavathar
Swagatham Krishna
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
ஒருசமயம் வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்து ரொம்பவே எளிமையான பக்தர் ஒருவர் தன் குடும்பத்துடன் பெரியவாளை தரிசனம் செய்வதற்கு மடத்துக்கு வந்திருந்தார். மகா பெரியவாளை தரிசனம் செய்து விட்டு, ஏதோ ஒரு விஷயத்தை அவரிடம் சொல்ல வந்திருந்த அவருக்கு, கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே கூச்ச
சுபாவம் இருந்தது. அவரோட ஏழ்மையும் ஒரு காரணமா இருக்கலாம். எல்லா சமயத்திலேயுமே நிறையப் பேர் இருந்ததால் பெரியவா இடம் நெருங்கிப் போய் தன் குறைகளைச் சொல்ல அவரால் முடியவில்லை. வறுமையான நிலையில் ஓட்டல் போன்ற இடங்களில் ஆகாரம் சாப்பிடாத ஆசாரம் கொண்டு இருந்ததால் அந்த இரண்டு நாட்களிலும்
குடும்ப சகிதம் ஸ்ரீமடத்திலேயே சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிட வந்தவரை கவனித்த மடத்து ஊழியர் ஒருவர், அடுத்த நாள் இங்கே சாப்பிட வரக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லி அனுப்பிவிட்டார். தங்க இடமும் இல்லை, சாப்பாட்டுக்கும் வழி இல்லை.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு செல்வ செழிப்பான ராஜா இருந்தார். அவருக்கு நான்கு மனைவிகள். அவர் நான்காம் மனைவியை மிகவும் நேசித்தார். அனைத்து செல்வங்களையும் அவளுக்காகவே செலவிட்டார். தன்னிடம் உள்ளதில் சிறப்பானதை மட்டுமே அவளுக்கு கொடுத்தார். அவர் மூன்றாம்
முன்றாம் மனைவியையும் நேசித்தார். அவளுக்கு அவரது மற்ற ராஜாங்கத்தை காட்டி மகிழ்வூட்டுவார். ஆனாலும் அவள் என்றாவது வேறொருவனுடன் சென்றுவிடுவாள் என அஞ்சினார். அவர் தனது இரண்டாம் மனைவியையும் நேசித்தார். அவள் எப்போழ்தும் அவரிடம் அன்பாய் நடந்துகொள்வாள். அவர் சோர்ந்து போகும் போதோ அல்லது
அவர் ஏதேனும் பிரச்சனையை சந்திக்கும் போதோ அவள் ஆதரவாக இருந்து ஆலோசனையும் வழங்குவாள். ராஜாவின் முதல் மனைவி மிகவும் முக்கியமானவள். ராஜாங்க சொத்துகளை கவனிப்பதற்கும், ராஜா ஆட்சி செய்வதற்கும் அதிக பங்கு அவளையே சேரும். அவளே அனைத்திற்கும் காரணமானவள். எனினும் ராஜாவுக்கு முதல் மனைவி மீது
#MahaPeriyava
When Periyaval was camping in Kollankode, He had convened a vidvat sadas (assembly of scholars) there. Since the invitation came to our Thatha also, he had gone there. Whatever else is not available for my Thatha in the morning, a cup of coffee was a must! But in
ShrImatham there was no coffee supply. Strict niyama (regulations)! When Thatha was yearning for a cup of coffee, a man came and took him outside the Matham and bought him a cup of coffee. Only then Thatha felt his life-force returning to his body! Thatha went and sat in the
Sadas. In a short while Periyaval came there. After doing namaskaram to the sage, Thatha went near him. Looking at Thatha, Periyaval asked, "Had your coffee?"
What reply to give? Thatha was confused. With the remorse that no one present there took a cup of coffee except him, he
#Kerala is indeed God’s own land! #கேரலா_கோவில்கள் மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமனால் உருவாக்கப்பட்டது கேரளம். இன்று அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக கிறுஸ்துவர்களாக மாறிவிட்ட போதும் அங்கிருக்கும் இந்துகள் வழிபாட்டு முறையும், கோவில்களில் இருக்கும் ஒழுங்கும், கோவிலின் உள்ளே
பக்தர்களின் ஒழுக்கமும், அர்ச்சகர்களின் சுத்தம், பூஜையில் ஒரு முக கவனமும் பிற மாநில இந்துகள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அங்கே சிவ, விஷ்ணு பேதங்கள் இல்லை. மஹா தேவர் என்று அழைக்கப்படும் சிவ சன்னிதானத்தில் கூட சந்தனம் மட்டுமே பிரசாதம். ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி,
சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்.
தெருவுக்கு ஒரு புதிய கோவில், அதற்கு ஒரு தர்மகர்த்தா குழு என்றெல்லாம் கிடையாது. கோவிலுக்குள் சாதி சண்டைகள், முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல் இல்லை. எந்த கோவிலிலும் கட்டண தரிசனம், விரைவு தரிசனம் கிடையாது. எல்லாமே பணம் கொடுக்காமல் கிடைக்கும்
#மகாபெரியவா
மகா பெரியவாவை பார்ப்பதற்கு ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வருகை தருவார்கள். நிறைய கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் ஒரு பக்தன் கண்களில் கண்ணீரோடு முகத்தில் வாட்டதோடு வந்து மகா பெரியவா அவர்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, குங்குமத்தை பிரசாதமாகவும் வாங்கிக்
கொண்டு செல்கிறான். இதே போல மூன்று நாட்களும் நகர்ந்து சென்றது. மூன்று நாட்களும் மகா பெரியவா, கஷ்டத்தில் வந்த அந்த பக்தனை கவனித்துள்ளார். நான்காவது நாளும் அந்த பக்தன் கஷ்டத்தோடு வந்து, சொல்ல வந்த கஷ்டத்தை சொல்லாமல் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மஹா பெரியவாவை கடந்து சென்ற போது, மகா
பெரியவா அந்த பக்தனை நிறுத்தி, “சொல்ல வந்த கஷ்டத்தை ஏன் சொல்லாமல் செல்கிறாய்” என்று கேடார். கண்கலங்கி கஷ்டத்தை சொல்லத் தொடங்கினான். “தீர்க்கவே முடியாத பணக்கஷ்டம். அள்ளி அள்ளிக் கொடுத்த எங்களுடைய குடும்பம் இப்போது கிள்ளி கொடுப்பதற்கு கூட எதுவும் இல்லாமல் நிற்கிறது. அன்றாட
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தார். சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர், அப்பனே பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி
என்றார். அதற்கு கிருஷ்ணர், பரவாயில்லையே சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது. என்னுடன் வா என அழைத்துச் சென்றார். பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உடன் சென்றார். சிறிது தூரம் சென்றதும் "பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக
உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளை இட்டார். பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார். வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார். உங்கள் வீட்டிலிருந்து சொம்பில் தண்ணீர் வாங்கி வரச் சொன்னார்” எனச்