இந்து மதம் சார்ந்ததா? பிஜேபி-ஆ? இல்லை! மிக தவறான புரிதல்!!
உண்மையில் ரஜினி முன்னெடுக்கும் 'ஆன்மீக அரசியல்' என்ன?
அதற்கு முதலில் 'ஆன்மீகம்' என்றால் ரஜினி பார்வையில் என்ன? என பார்ப்போம்👇
Thread--> (1/n)
ஆன்மீகம் என்பதை நான் பக்தியிலிருந்து வேறுபடுத்தி பார்க்கிறேன். ஆன்மீகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. மதங்கள் மனிதனை குழப்புகின்றன. நான் ஆன்மீகவாதி- எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை.
(2/n)
அன்பும் மனிதநேயமும் மட்டுமே ஒருத்தனை ஆன்மீகவாதியா நமக்கு அடையாளம் காட்டுது. (3/n)
உலக அமைதிக்காகவும், மனித சமாதானத்துக்காகவும் நான் மத சமரசத்தை வரவேற்கிறேன். ஆனா தனிப்பட்ட ஒரு மதத்தின் மேலே `வெறி' கொள்வதை - அந்த மதத்துக்காகச் சார்ந்து பேசறதை நான் என்னிக்குமே விரும்பினதில்லை. (4/n)
‘நான் யாரு.. என்னன்னுகூட அங்கே வாழுற மலைவாசி ஜனங்களுக்குத் தெரியாது. அவங்ககிட்டே காசு பணம் இல்ல. ஆனா, அன்பு காட்டுறதுல அவங்களை போல பணக்காரங்க இந்த உலகத்துலயே கிடையாது. (5/n)
ரஜினி ஆன பிறகு நான் தொலைச்ச ‘சிவாஜி ராவ்’ அங்கேதான் மறுபடி வாழ்ந்து பார்க்கறான். (6/n)
மதங்களுக்கு அப்பாற்பட்டது..
அன்பும் மனிதநேயமும் உள்ளவனே ஆன்மீகவாதி..
Religious Fanaticism கிடையவே கிடையாது..
(8/n)
'உண்மையான, நேர்மையான வெளிப்படையான சாதி மத சார்பற்ற, தூய்மையான அரசியல்தான் ஆன்மிக அரசியல். இனிமேல்தான் பார்க்கப்போகிறீர்கள் ஆன்மிக அரசியல் என்னவென்று' - #Rajinikanth
(9/9) *End of Thread* Thanks for reading!! -itisVIN