, 49 tweets, 8 min read Read on Twitter
#thread #படிக்காதீங்கநீளமாஇருக்கும் #பார்ட்1
மூன்று நாள் பயணமாக தலைநகரம் தில்லி சென்றிருந்தேன்.
இம்முறை எனக்குப் பிடித்தமான பலரும், என்னைப் பிடிச்ச சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். அவர்களை ஒரே இடத்தில் சந்தித்து வாழ்த்தி வருவதுதான் மட்டும்தான் நோக்கம். அனைவருக்கும்
கவிப்பேரரசின் ‘தமிழாற்றுப்படை’ & நம்ம ரவிஷங்கரின் ‘அறியப்படாத தமிழ் மொழி’ என இரு புத்தகங்களை பரிசுப்பெட்டகமாக எடுத்துக் கொண்டேன். (இரண்டு புத்தகங்கள் x 20 எண்ணிக்கை = 14 கிலோ). தமிழ் புத்தகங்கள் “வெயிட்டு” இல்லைன்னு யார் சொன்னது? தூக்கிச் சுமந்த எனக்குதானே தெரியும்! 😂
பெரும்பாலான எம்பிகள் பழைய தமிழ்நாடு ஹவுஸில்தான் வாசம். நான் வந்த சேதி அறிந்ததுமே தோழர் சு.வெங்கடேசன் பார்லிமெண்டில் இருந்து அறைக்கு வந்து என்னைச் சந்தித்தார். முதல் வாழ்த்தும், பரிசும் எங்கள் வேள்பாரி நாயகனுக்கே!
அப்போதே அங்கே வந்த சகோதரி ஜோதிமணியையும் சந்திக்க நேரிட்டது
அடுத்தப் பரிசு அன்புடன் அளிக்கப்பட்டது. ஷீலா திக்‌ஷித் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள @jothims புறப்பட்டதால் அதிகம் உரையாட நேரமில்லை. சேர்த்து வைத்து சு.வெ விடம் கதைத்தேன். உலகத்தமிழ் மாநாட்டுப் பகிர்வுகள், பார்லிமெண்ட் நடைமுறைகள், பாஜகவின் தன்னிச்சையான செயல்பாடுகள் என நிறைய..
பேசினோம். மதியம் எனக்கு மிகப்பிடித்த மோத்தி மஹாலுக்கு நண்பர்களுடன் சென்று காத்திருந்து ரொட்டி, தந்தூரி சிக்கன், டிக்கா மசாலா, கபாப் என கட்டு கட்டினோம். இறுதியாக சுடசுட குலோப் ஜாமூன் வேற! #ட்வைன் .
தூக்கத்துக்குப் பிறகு மாலை இன்னொரு சுற்று சென்று மீதமுள்ள எம்பிகளை பார்க்கலாம்
என்றால், அவர்கள் பார்லிமெண்ட் முடிந்து அறைக்குத் திரும்பவே இரவு 8க்கு மேல் ஆகிவிடுகிறது. எனவே இரவு உணவும் நண்பர்களோட தில்லியின் இன்னொரு சிறப்பான உணவகத்துக்கு. செல்லும் இடம் வெவ்வேறு எனினும் உண்ணும் உணவு அதே ரொட்டி & தந்தூரி, பட்டர் சிக்கன் தான்.. 😍😍
மறுநாள் காலையில் நண்பர் ரவிக்குமாரை சந்தித்து வாழ்த்தினேன்! ‘அறியப்படாத தமிழ்மொழி’ புத்தகம் வாசிக்க வேண்டும் என்றிருந்ததாக சொல்லி மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். அண்ணன் திருமா ஊரிலிருந்து வந்துவிட்டதாகச் சொன்னார். உடனே அழைத்து நேரம் கேட்டேன். அப்போதே உணவகம் வரசொன்னார்.
டைனிங் ஹாலில்
எழுச்சித் தமிழருடன் காலை உணவுடன் உரையாடல். அவரோட ‘அமைப்பாய் திரள்வோம்’ நூல் மதிப்புரைக் கூட்டத்தில் நான் பேசிய உரையை நினைவில் வைத்திருந்து பாராட்டினார். 😊அருகிலிருந்தவர்களிடம் இது தம்பி கருணா என அறிமுகப்படுத்திய போது நெகிழ்ந்து போனேன். அடுத்த நாள் அவையில் அவர் பேச இருந்தார்!
திரும்பும்போது வழியில் அண்ணன் பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன் எதிர்பட்டனர். சீனியர்கள் அத்தனைப் பரிச்சயம் இல்லாததால் வணக்கத்துடன் விலகி வந்தோம். நாகப்பட்டினம் எம்பி தோழர் மட்டும் (எப்படியோ) அடையாளம் கண்டு அழைத்துக் கைக்குலுக்கினார் 😊 . நேராக அங்கிருந்து பார்லிமெண்ட். நண்பர்
சண்முகசுந்தரம் வெளியில் வந்து எனக்கு அனுமதிச் சீட்டை அளித்து, அத்தனை செக்யூரிட்டி கிளியரஸ் (7 இடத்தில்) போதும் உடனிருந்து நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் முன்வரிசையில் அமர வைத்துச் சென்றபோது காலை 10.45. எத்தனையோ முறை தில்லி சென்றிருந்தாலும் நாடாளுமன்றம் உள்ளே செல்வது இதுவே
முதன்முறை. மாடத்திலிருந்து வெகு அருகில் அவை என்பதால் அனைவரையும் நேராகப் பார்ப்பதைப் போலொரு உணர்வு.
எதிர்கட்சியில் முதலில் வந்து அமர்ந்தது சோனியா காந்தி. பின்னாலேயே ஜோதிமணியும், தமிழச்சியும் வந்தார்கள். அவையின் மார்ஷலிடம் சீட்டைத் தர வந்த அண்ணன் அ.ராசா யதேச்சையாக மேலே பார்க்க
என்னை அடையாளம் கண்டு புன்னகையுடன் கையசைத்தார். அருகிலிருந்தவர்கள் எல்லாம் என்னை உடனே திரும்பிப் பார்க்க பெருமையாக புன்னகைத்தேன்😃. கடைசியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியே கம்பீரமாக நடந்து வந்த காட்சியும், பெருமிதத்துடன் கலைஞர் எழுதிய கடிதமும் கண்ணிலாடியது. நீண்ட
நெடிய சட்டப்போராட்டத்தை வென்று, தேர்ந்தெடுத்து, பின் தோற்க்கடித்த அதே நீலகிரி மக்களைச் சந்தித்து அவர்கள் அனுமதியும் பெற்று கம்பீரமாக நாடாளுமன்றத்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்தார் எங்கள் திராவிட அறிவுப் பெட்டகம் அண்ணன் அ.ராசா 😊😊. அவரை அங்கே சந்தித்ததோடு சரி! பிறகு வீட்டுக்குச்
சென்று சந்திக்க நேரமில்லாமலே போச்சு. ஏற்கனவே ‘அறியப்படாத தமிழ் மொழியை’ அவரிடம் நேரில் சேர்த்திருந்தேன். படிக்க ஆரம்பிச்சிருக்கார். அவைக்குள் டி.ஆர்.பாலுவிற்கும், அ.ராசாவுக்கும் நல்ல மதிப்பும், அனைவரிடமும் பரிச்சயமும் இருப்பதைக் காண முடிந்தது. பாஜக எம்பிகள் பலரும் வந்து பேசினர்.
எதிர்கட்சி வரிசையில் மொத்தமும் தமிழ் , கேரள முகங்கங்கள்தாம்! 😃😃. அகிலேஷ் யாதவ் அ.ராசாவின் பின் இருக்கையில் வந்து அமர்ந்தார். அன்றைய கேள்வி நேரத்துக்கு முன் ஒரு பிரச்சனையை எழுப்ப திட்டம் இருந்தது அவர்களோட உடல்மொழியில் தெரிந்தது. ஆளும்கட்சி பக்கம் ஏகப்பட்ட காவிச் சாமியார்கள்
அமர்ந்ததைக் காண அதிர்ச்சியாக இருந்தது. ஓரிருவர் இருப்பார்கள் என நினைத்தேன். 10,15 பேர் காவி & தாடிதான். போதாக்குறைக்கு இரண்டு அமைச்சர்கள் காவி ஜிப்பா அணிந்திருந்தனர். அவர்களுக்கு நடுவில் வந்து ஓபிஎஸ் ரவீந்திரநாத் வந்து அமர்ந்தார். நேரில் சந்தித்து வாழ்த்தலாம் என கருதினேன்.
வாய்ப்பு அமையவில்லை. நம்ம முதன்முறை எம்பிகள் எல்லாம் கை நிறைய அவைக்குறிப்புகளுடன் அன்றைய நடவடிக்கைகள் குறித்து அப்டேட்டடா இருந்தார்கள். உற்சாகமாகவும் இருந்தனர். உடன் ஒரு சில இளம் கேரள எம்பிகளும். மத்தபடி காங்கிரஸ் கட்சி ஏனோ ஒட்டுதல் இல்லாமல் இருந்ததைப் போல உணர்ந்தேன்.
ராகுல் காந்தி அவைக்கு வராததால் ஏற்படும் அலட்சியமாக இருக்கலாம்! நிச்சயம் ஒரு மோட்டிவேஷன் தேவைப்படுகிறது. சோனியா காந்தி ஓரிரு ஆலோசனை சொன்னதோடு அமைதியாக இருந்தார். நேரெதிரில் அமித்ஷா வந்து அமர்ந்தவுடன், கவுதம் கம்பீர் அவரிடம் சென்று சில நிமிடம் பேசிவிட்டு சென்றார். அது காம்பீரா?
அவரோட டூப்பா? என்பது குறித்த மேல்விவரம் தெரியலை. சபாநாயகர் வந்து அமரும்போது ஹிந்தியில் ஒரு துதி பாடுகிறார்கள். ராஜ குலோத்துங்கவை கூட விடாமல்.. அந்த ஒருகணம் சிலிர்ப்பாகத்தான் இருந்தது. எத்தனை நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட ஜனநாயகம்! அது முடிந்தவுடம் தேசிய கீதம் பாடுவார்கள் என
எதிர்பார்த்தேன்! அப்படியெல்லாம் வழக்கம் ஏதுமில்லையாம்! அடப்பாவிகளா! சினிமா பார்க்க போன ஜனங்களுக்கு தேசப்பற்றுப் போதாதென தியேட்டரில் தேசிய கீதம் போட்டாங்களே! நாட்டின் தலையாய சபையை தினமும் தேசிய கீதத்தோட துவக்கக் கூடாதா?
சரி.. நாம மெல்லமாவே பேசுவோம். இதைக் கேட்டு சரஸ்வதி வந்தனம்னு
சமஸ்கிருதம் பாடறதை வழக்கமா கொண்டு வந்துடப் போறாங்க! 😃
சபா அமர்ந்தவுடனே, காங்கிரஸ் காஷ்மீர் பிரச்சனை குறித்து டிரம்பிடம் பிரதமர் பஞ்சாயத்து வைத்த செய்தியை கிளப்ப, அவை களேபரமானவுடன் தான், வழக்கமா லோக்சபா டிவியில் நாம பார்க்கும் பார்லிமெண்ட் தெரிஞ்சது. மத்தபடி, அவையின் மரபு,
ஒலி, ஒளிப்பதிவு முறைகள், உறுப்பினர்களின் அன்னோன்யம், பாதுகாப்பு நடைமுறை என நுணுக்கமா பல விஷயங்களை கவனித்தேன். பின்னாலே எழுதும்போது பயன்படலாம்!
கேள்வி நேரம் முடிந்தவுடன் வெளியே வந்து அந்த நீண்டு வளைந்த காரிடாரில் பெரும் தூண்களை ரசித்தபடி ப்ளாக் டீ அருந்தினேன்! இந்துப்பு, மிளகு
போட்டுத் தரானுவ! சுமாராதான் இருந்தது.
மாலை சகோதரி கனிமொழி வீட்டுக்குச் சென்றேன். சுற்றிலும் புத்தகங்களும், தாள்களுமாக இருக்க தேர்வுக்குத் தயாராகும் மாணவியைப் போல கையில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தார். மறுநாள் motor vehicle act amendment லே
பேச தயாராகிட்டு இருந்தாராம்! நம்ம தொழில்தான் என்பதால் சில கருத்துகள் சொல்ல தோணுச்சு. பேசாம, எங்க வழக்கமான இலக்கிய உரையாடலோட நிறுத்திகிட்டேன். அவரையும் அ.ப. தமிழ்மொழி சென்றடைந்தது. படித்துவிட்டு அழைக்கிறேன் என்றிருக்கிறார். அன்றிரவு கனாட் ப்ளேஸில் உள்ள காக்கா டா ஓட்டலில் வரிசையில்
நின்று ரொட்டி, பட்டர் சிக்கன் சாப்பிட்டோம். அங்கே மட்டும்தான் எனக்கு கடுகெண்ணெய்யில் சமைப்பது பிடிக்கும். செம டேஸ்ட்..👌
மறுநாள் காலையிலேயே மீதமிருப்போரைச் சந்திதேன். தம்பிகள், (எங்க எம்பி) அண்ணாதுரை, கவுதம் சிகாமணி, நண்பர் டாக்டர் கலாநிதின்னு பார்த்து முடித்தேன்.
பார்ட் 2 பிறகு
#பார்ட்2 #இதுவும்நீளமாதான்போகும்
இறுதியா மீதமிருப்பது தமிழச்சி மேடம் மட்டும்தான். அவரைப் பார்த்துட்டு ஊருக்கு பொட்டி கட்டுவோம் என மீண்டும் தமிழ்நாடு இல்லம் சென்றேன். எலிவேட்டருக்காக வைகோ காத்திருந்தார். அவருக்கு வணக்கம் வைத்து கையிலிருந்த கைத்தறி ஆடையை அணிவித்தேன். எப்போ
வந்தீங்க? என்றார். நேத்துண்ணா... அவர் குரலில் லேசான கடுமை இருந்ததாகப் பட்டது. நம்ம ட்விட் எதையாவது பார்த்திருப்பாரோ? 🤔 மெல்ல ‘அறியப்படாத தமிழ்மொழி’ புத்தகத்தை எடுத்து அண்ணா, இது உங்களுக்கு பரிசு என்றேன். புத்தகத்தைக் கண்டவுடன் சட்டென முகம் மலர்ந்து (அதான் வைகோ) கையில் வாங்கிக்
கொண்டார்! யாரோடது? தொ.ப வா என்றார்! இல்லைண்ணா.. இவர் நம்ம வட ஆற்காட்டு தம்பி! அமெரிக்காவில் வங்கிப் பணி, சிலம்பில் டாக்டரேட், பல்கலைப் பணி என ரவிசங்கரை அறிமுகம் செய்தேன்! புத்தகத்தின் வரலாற்றுப் பின்னணியை (வேறென்ன! நம்ம ட்விட்டர் பஞ்சாயத்துகள்தான்) சொல்ல சிரித்தபடி கேட்டார்.
கட்டாயம் படிக்கிறேன்! படிச்சுட்டு எழுத்தாளரையே அழைத்து கருத்தைச் சொல்கிறேன் என உறுதியும் அளித்தார். இனி எழுதியவராச்சு! வாசகராச்சு.. நாம தமிழச்சி மேடத்தைப் பார்க்க போவோம். வைகோ சென்ற பின்பு, திரும்பி வந்த எலிவேட்டரில் ஏறி மாடிக்குச் சென்றால், திறந்த கதவின் எதிர்புறம் தமிழச்சி!
என்ன! நேத்து இரவு 8 மணிக்கு பார்க்க வரீங்கன்னு சொன்னாங்க! ஆளையே காணோமே என்றார். யார் சொல்லிருப்பாங்க என திகைத்தேன். அநேகமாக சு.வெ எனக்காக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அதை என்னிடம் சொல்ல மறந்திருப்பார். ஒரு மாதிரியா சமாளிச்சு, பார்லிமெண்ட் புறப்பட்ட அவர்களை அங்கேயே வாழ்த்தி
புத்தகங்களை தந்தேன். அதை மட்டும்தான் படம் எடுத்தேன். மகிழ்வுடன் வாங்கிக்கொண்டவர், நேரா என் அறைக்குப் போங்க.. அத்தான் நேத்திலிருந்து உங்களுக்காகக் காத்திருக்கார் என்றார். அவருக்கு அத்தான் / கணவர், எங்களுக்கு ‘சார்’. அற்புதமான காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி. பண்பாளர். அவரையும் சந்தித்து
கதைச்சுட்டு, ஊருக்குப் புறப்பட்டேன்.
தில்லி அனுபவங்கள் ஓவர். இந்தப் பயணத்தில் நான் பார்த்து புரிந்து கொண்டவைகள்..
1. இதுவரை இந்தியா கண்ட நாடாளுமன்றம் வேற! இனி காணப்போகும் பார்லிமெண்ட் வேற! இதுவரையில் எந்தக் கட்சி ஆண்டாலும், அவையின் ஆளுமைகளாக சோஷியலிஸ்டுகள், கம்யூ, காங்கிரஸ்,
தமிழ், காஷ்மீரி, பெங்காலி, சிறுபான்மையினர் என பல்வகைக் கலவையான ஆளுமைகளால் நிரம்பியிருக்கும். ஒரே உறுப்பினர் என்றால் கூட அவருடைய குரலுக்கு பெரும் மதிப்பிருக்கும். சந்திரசேகர், ஜார்ஜ் ஃபெர்னானாண்டஸ், முரசொலி மாறன், ஜெயபால் ரெட்டி என பல ஜாம்பவான்கள் பேசுவார்கள். விவாதிப்பார்கள்.
பாஜக இரண்டே உறுப்பினர்களை வைத்திருந்த போதும், வாஜ்பாய் பெரும் ஆளுமையாக அங்கே இருந்தார்! இனிமேல் அப்படி இருக்க வாய்ப்பேயில்லை. ஆளும்கட்சி வரிசை மொத்தமும் காவிகளாலும், முரட்டு (ஆ)சாமிகளாலும் நிரப்பப்பட்டுள்ளது. அருண் ஜெட்லி, சுஷ்மா அமர்ந்திருந்த இடத்தில் அமித் ஷா உள்ளார்.
எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ், வடக்கே சுத்தமாக துடைத்தெறியப்பட்டு, ஒரு தென்னக கட்சி போல (தமிழ் + மலையாளி) தேசிய அளவில் பிரநிதித்துவம் இல்லாமல் காட்சியளிக்கிறது. ஏற்கனவே சொன்னேனே! தலைமை இல்லாமல் தடுமாறுவதை அனைவராலும் உணரமுடிகிறது. பாஜக அந்த பலவீனத்தை முழுக்க பயன்படுத்துகிறது.
அடுத்து திமுக. அதுதான் இப்போதைய எதிர்கட்சி. நிறைய புதுமுக எம்பிகள். அதிலும் பட்டதாரிகள், பேராசிரியை, டாக்டர்கள் என அறிவு + ஆர்வம் கொண்ட இளம் படை என்பதால் அத்தனை விவாதங்களிலும் கலந்து கொண்டு கருத்துக்களைப் பதிய வைக்கின்றனர். நம்ம எம்பிகள் பேசும் பொருளை முழுசா கேட்டுப் புரிந்து
கொள்ளும் திறமையோ, பொறுமையோ, பெரும்பாலான ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இல்லை. நம்மாளுங்க பேசும்போது, சோஷியல் ஜஸ்டிஸ், திராவிடம் பெரியார், கலைஞர், தமிழ் போன்ற ஒரு சில ‘கோட் வோர்ட்’ சொற்களை சொன்னாலே ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று ஜெய்ஶ்ரீராம்னு கத்தறதுதான் அவங்களோட வேலை. 😂😂
நம்ம எம்பிகள் இப்போதெல்லாம் வெகு சாமர்த்தியமாக, தாங்கள் பேச வேண்டியதை எல்லாம் பேசி பதிவு செய்தபின்னர், இறுதியா மொத்த ‘கோட் வோர்ட்களையும்’ பயன்படுத்தி நீளமா நிறுத்தாம அசத்தலா பேசி முடிச்சுடுறாங்க! 👌👌😂😂 திமுகவுக்குப் பிறகு திரிணாமுல் ஆக்டிவா இருக்காங்க.
2. தில்லி வந்துட்டு
பிரதமரைப் பார்க்காம போனா எப்படின்னு, அவரு எப்ப வருவார் என சண்முகசுந்தரத்திடம் கேட்டேன். ரெண்டு மாசமா தொகுதிப் பக்கம் கூட போகாம,நாள் தவறாம இங்கேயேதான் இருக்கேன்! மொத நாள் வந்ததோட சரி.. நாங்க பிரதமரைப் பார்த்தே ஒரு மாசம் ஆச்சு என்றார். இத்தனைக்கும் பக்கத்துலேயே பிரதமர் அலுவலகம்!
ரைட்டு.. அவர் வழக்கம்போல ஃபாரீன் போகும்போது டிவியிலே காட்டுவாங்க..அப்ப பார்த்துக்கலாம்னு வந்துட்டேன்.
3. போன முறை பாஜக ஆட்சி எனினும், தேசத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரான மசோதாக்களைக் கொண்டுவந்து சட்டமாக்குவதை தடுக்குமளவு எதிர்கட்சிகளுக்கு வலிமை இருந்தது.இம்முறை அது சாத்தியமல்ல!
ராஜ்யசபையில் ஜஸ்ட் 8 பேர் வித்தியாசம்தானாம்! அதற்குக்கூட அடுத்த ஆண்டு வரைக் காத்திருக்க மாட்டார்கள். அமித்ஷா ஒரு சொடக்குப் போட்டால் எதிர்கட்சியிலிருந்து 10 பேரை அவர் பக்கம் இழுத்துக்குவார் என்றனர். (கர்)நாடகம் முடிந்தவுடன் அந்தச் சொடக்குப் போடப்படும்.
4. நாம மனசை திடமாக்கிக்க
வேண்டியதுதான். பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி, சுகாதாரம், சமூகநீதிப் பங்கீடு, மொழிக்கொள்கை, ஏன் தேசத்தின் இதுநாள் வரையிலான வரலாறு வரை அத்தனையும் திருத்தி, மாற்றி எழுதப்படும். 60 ஆண்டுகள் போராடிப் பெற்ற பல உரிமைகள் இந்தப் ‘பொதுமைப்படுத்தல்’ சட்டங்களின் மூலம் பறிபோகும். இதையெல்லாம்
நம்மால் மவுன சாட்சியாக இருந்து வேடிக்கைப் பார்க்க இயலுமே தவிர நிச்சயம் தடுத்து நிறுத்த முடியாது. நாடாளுமன்றம், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் சட்டமாவது ஜனநாயக நடைமுறை. முன்பாவது நம்மோட அரசியலமைப்பு அடிப்படைக்கு எதிராக மசோதாக்கள்
இருக்குமானால், சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அதை நிறுத்தி வைக்கும்! ரத்து செய்யும். இப்போது தன்னாட்சியான அமைப்பு என நாட்டில் எதுவுமே ஏறக்குறைய இல்லாமல் ஆக்கிவிட்டச் சூழலில் இனி அந்த வாய்ப்பும் நமக்கில்லை.
5. இனி நடப்பது நடக்கட்டும். “போராடாமல் பணிவதில்லை” எனும் போர்க்குணத்தோட நாம
வாழ்ந்துட்டுப் போனா போதும்னு தோணுது. நமது மூத்தோர்கள் நமக்குப் போராடி வாங்கிக் கொடுத்துட்டுப் போன பல உரிமைகளை நாம நம்மோட இளையோருக்கு போய் சேர விடாமல், பறிகொடுத்த குற்ற உணர்வோட போய் சேர வேண்டியதுதான். நான் எப்போதும் எதையும், அவநம்பிக்கையா (pessimistic) அணுக மாட்டேன். இம்முறை
அந்த உணர்வைத் தவிர்க்க முடியலை. 😟 ஜனநாயக நாட்டில் மக்கள் தீர்ப்புதான் இறுதி. தேர்தல் முடிவுகள் என்பது மக்கள் விருப்பத்தின் பிரதிபலிப்பு என்பதெல்லாம் உண்மைதான் எனினும், வடக்கே வேறொரு கலாச்சாரத்தில் வாழும் மக்களின் தீர்ப்பு தெற்கே தனித்த பண்பாட்டுச் சூழலில் வாழ்வோரின் சமநிலையை
கலைத்துப் போடும்போது, நமது ஜனநாயகத்தின் மீது முதன்முறையாக எனக்கு பல்வேறு ஐயங்கள் எழுகிறது.
“நான் மகாத்மாவின் பிள்ளை. இந்தியாவின் குடிமகன். தமிழன் என்பது எனது பெருமைமிகு தனித்த அடையாளம். இதுதான் இத்தனை ஆண்டு வாழ்வில், வாசிப்பில் நான் கற்று, புரிந்து, ஏற்றுக்கொண்ட வாழ்வியல் முறை.
எதிர்வரும் நாட்களில் அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும்படியான பல சோதனைகள் ஏற்படத்தான் போகிறது. இதில் சலனப்படாமல், சபலப்படாமல், எனது நம்பிக்கையை நான் கைவிடாமல் இருக்க என்னை காலம் காப்பாற்றட்டும்.
இந்த இருள் என்றேனும் விலகும்.
நாளை நிச்சயம் சூரியன் உதிக்கும்.
காத்திருப்போம்.
இந்த மூன்று நாட்களும் என்னுடனே இருந்து, உண்டு, உபசரித்து, மகிழ்ந்த நண்பர், நாடாளுமன்ற உறுப்பினர் @kshanmugamdmk க்கு அன்பும்,நன்றியும். தனது தொகுதி மக்களுக்குக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிடவும், தமிழகத்தின் உரிமைக்குரலாக ஒலித்திடவும் நிறைய உழைக்கிறார். வாழ்த்துவோம். 🙏
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to SKP KARUNA
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Trending hashtags

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!