ஆனா இந்தக் காலத்திலும் அதே மனநிலையோடு இருக்கறது எனக்கு சரியாப்படலை.
சொந்த அனுபவத்தில் இந்த எண்ணம் எனக்கு இன்னும் வலுவடைந்திருக்கிறது.
விருப்பப் பட்டதை படி என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தோம்.
அறிவியல் உயர்நிலைப் பள்ளிக் கல்வி கற்றுவிட்டால் அதற்குப் பின் வாழ்வில் எதைவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று
அதென்னவோ எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை இருந்தது.
சில பாடங்களுக்கு மாலை வேலைகளில் தனிப்பயிற்சி எடுக்கவேண்டி வந்தது.
வாரநாட்கள் எல்லாம் பாடங்களும் தேர்வுகளும் சனி ஞாயிறு முழுக்க NEET, IIT-JEE நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் என்று ஒரு நாள் விடாமல் தொடர் வதை தான்.
வாரந்தோறும் நடத்தப்படும் தேர்வுகளில் அவள் எடுத்த மதிப்பெண்களும் அதை வெட்ட வெளிச்சமாக்கின.
11ம் வகுப்பு தொடங்கி ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் திடீரென்று, “இனிமேல் என்னால் பள்ளிக்குப் போக முடியாது, இந்தப் பாடங்களைப் படிக்க முடியாது,” என்று சொல்லிவிட்டாள்!!
அடுத்த ஓரிரு நாட்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை!
அவளோ மிகத்தெளிவாக இருந்தாள்.
இனிமேல் என்னால் chemistry, physics படிக்க முடியாது. Maths, biology படிக்கறேன். வேற history, economics மாதிரி ஏதாச்சும் வேணா படிக்கறேன்னு சொல்லிட்டா.
2 வாரம் அலைஞ்சு திரிஞ்சு NIOS (தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்) மாதிரி திட்டம்ங்கமெல்லாம் விசாரித்து கடைசியில் ஒரு மாதம் கழித்து கேம்பிரிட்ஜ் IGCSE பாடத்திட்டம் உள்ள ஒரு பள்ளியில் கொண்டு சேர்த்தோம்
இந்த ஒரு மாத காலத்தில் சில online aptitude tests எடுத்துப் பார்க்கச் செய்த்தோம் அப்புறம் எங்கள் நண்பர் ஒருவரிடம் counselling அழைத்துச் சென்றோம்.
எங்க வீட்டுக் கதை நல்லவேளையா நல்லவிதமா முடிஞ்சது ஆனா என்னோட நண்பர் – அந்த learning disability வல்லுநர் – சொன்ன பல கதைகள் கேக்கவே பாவமா இருந்துச்சு.
அதற்கு அவர் கூறும் முக்கிய காரணம் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக, பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி சேர்த்தியிருப்பார்கள் என்று.
நாம் முயன்று career guidance counselling வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அவர்கள் இயல்திறனிற்கு ஏற்ற படிப்பினை வழங்க முயல வேண்டும். <end>