ஏழாம்அறிவு படத்துல ஸ்ருதிஹாசன் இப்போதான் 9 கோள்கள் இருக்குறதை கண்டுபிடிச்சாங்க...ஆனால் முன்னோர்கள் 1000 வருஷம் முன்னாடியே 9 கோள்களையும் கண்டுபிடிச்சு, அதை நவக்கிரகமா கோவிலில வச்சு கும்புடாங்கன்னு ஒரு டயலாக் வரும்.
சமீபத்தில் அந்த படத்தை பார்க்கும்போது அந்த வசனம் வந்தது அதை கேட்டத்திலிருந்து அதெப்படி தொலைநோக்கி இல்லாமல் அந்த காலத்திலையே கண்டுபிடிச்சாங்க என்று எனக்கு குழப்பம்…அப்புறம் கொஞ்சம் ஆழமா இறங்கி யோசிப்போமே என்று
முன்னோர்கள் கண்டுபிடித்த நவக்கிரகங்கள் என்னவென்றால்
1.சூரியன்
2.புதன்
3.வெள்ளி
4.சந்திரன்
5.செவ்வாய்
6.வியாழன்
7.சனி
8.ராகு
9.கேது
அடுத்து ராகு, கேது இதுவும் கோள்கள் என்று நினைத்தால் தவறு, அவை இரண்டும் Shadow Planets அதாவது நிழற்கோள்கள்.
நானும் ஆரம்பத்தில் புதனில் இருந்து புளூட்டோ வரை முன்னோர்கள் 1000 வருடங்கள் முன்பே கண்டுபிடித்து விட்டார்கள் என்று நினைத்திருந்தேன்
முன்னோர்கள் கண்டுபிடித்த இந்த வானவியலும், ஜோதிடமும் கலந்து தான் நிறைய பேர் வாழ்க்கையில் விளையாடுவதை பார்க்கும்போது தான் வருத்தமாக உள்ளது.
#END