My Authors
Read all threads
Time Travel (Part 2)

போன பதிவோட தொடர்ச்சினாலும் இது ஒரு புது கோணத்துல Time Travelளை approach பண்ணுவோம். 

#TimeTravel
#Relativity
சென்ற பதிவை படிக்காதவங்களும் தொடர்ந்து படிக்கலாம், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதில்கொள்ளணும். அதாவது Einsteinனிற்கு முன் வாழ்ந்த விஞ்ஞானிகள் Timeஐ ஒரு மாற்றவேமுடியாத entityயா பாத்தாங்க. அதெல்லாம் இல்ல, Timeமும் Tasmac மாதிரி தான், இஷ்டத்துக்கு காலெக்ஷன் கட்டலாம்ங்கறார் Einstein.
போக, Einsteinக்கு முன்னாடி இருந்தவங்க Space மற்றும் Time ரெண்டையும் வேவ்வேறயா பாத்தாங்க. Einstein ரெண்டையும் அள்ளிப்போட்டு ஒன்னாக்கி Spacetimeங்கிற கலந்தசாதமாக்கிட்டார். இவ்ளோ தான் முன்கதை சுருக்கம்.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி Time Travelக்குன்னு அரைடஜன்னுக்கு மேல கான்செப்ட்கள் இருந்தாலும் basic science ஒன்னு தான். விலாவாரியா பாப்போம். இந்த பதிவுக்கு அதீத கற்பனை திறன்முக்கியம். எந்தளவுக்குனா உங்க கேர்ள் ப்ரெண்ட் மெசேஜ் படிக்கும்போது அவங்க குரலோட படிச்சு பரவசப்படுற அளவு அவசியம்
முதல்ல spaceனா என்ன? space ஒரு முப்பரிமாணம், அதாவது length, breath மற்றும் depth. இதை நாம x,y,zன்னு குறிப்பிடுவோம். Timeக்கு t. Space மற்றும் time ரெண்டையும் வெவ்வேறயா பாத்தா (x,y,z) மற்றும் (t). அதாவது எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் t ய கொத்தமல்லி தழை மாதிரி கடைசில தூவிருவானுங்க
Einstein தான் தனது Relativity கோட்பாடுகளின் மூலமா t யை space குள்ள கொண்டு வந்து Spacetime ங்கிறத (x, y, z, t)ன்னு ஒரே வார்த்தையாக்குறார். சின்ன inclusion தான். ஆனாலும் t bracket குள்ள போனதும் வேப்பெண்ணை போட்டு வறுத்த வேர்க்கடலையாட்டம் சயின்ஸ் கமகமன்னாகுது.
இப்போ சப்ஜெக்ட்க்குள்ள போவோம். Spacetimeஐ ஒவ்வொரு பரிமாணமா வரிசைப்படுத்துவோம். எக்காரணத்துக்கொண்டும் வரிசை மாறக்கூடாது. சாம்பார், ரசம், மோர்ன்னா அது தான். அப்பப்ப அவியல் allowed. 

வரிசைப்படுத்தப்பட்ட பரிமாணங்கள் முறையே x, y, z, t.
இந்த இடத்தை உன்னிப்பா கவனிங்க. Time Travelலின் basic science பயங்கர சிம்பிள். இப்போ நீங்க மேற்சொன்ன ஏதாவது பரிமாணத்தை மாத்தணும்னா அதற்கடுத்த பரிமாணத்துல கால் பதிந்திருக்கவேண்டியது அவசியம். அவ்வளவு தான்.
இப்போது x யை மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் y யில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் z ல் வாழும் பட்சத்தில் x மற்றும் y இரண்டையும் மாற்றலாம்.
Suppose t ல் வாழ்ந்துகொண்டிருந்தால் x, y, z என்று மூன்றையும் வச்சு தாயம் ளாடலாம். இவ்ளோ தாங்க மொத்த ரூல்ஸ்ஸுமே.
வழவழன்னு பேசிக்கிட்டே இருக்கானே தவிர விஷயத்த சொல்ல மாற்றானேங்கிற உங்க ஆதங்கம் புரியுது.
நாம இந்த பூமி பந்திற்கு மேல t ங்கிற நாலாவது பரிணாமத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அப்போ நம்ம கைல x, y, zங்கிற மூணு entity இருக்கு, இஷ்டத்துக்கு மாத்தலாம். அப்போ t ய மாத்தணும்னா என்ன வழி? சிம்பிள். அஞ்சாவது பரிணாமத்துக்கு போய்டவேண்டியது தான்.
அஞ்சாவது பரிமாணத்தை பற்றிய பலவித definitionகள் இருந்தாலும் கடைசியா Gravityல தான் வந்து நிக்கும். சென்னை 28ல வர்ற டயலாக் மாதிரி Gravityயை நாம் பிடிக்கவில்லை Gravity தான் நம்மை பிடித்து வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட விக்ரமாதித்தன் தோள்ல தொங்குற வேதாளம் மாதிரி.
Gravityக்கு ஒரு தனித்துவம் இருக்கு. ரம்மில வர்ற Joker card மாதிரி Gravityய dimensionனாவும் பாக்கலாம், Forceசாவும் பாக்கலாம். Interstellar படத்துல இந்த Gravityய dimensionனா பாத்துருப்பாங்க. அதுவே The Martian படத்துல இதை ஒரு Forceசா விவரிச்சுருப்பாங்க.
Interstellar படத்தையே எடுத்துப்போமே. நான் சொல்ல போற சீன் படத்துல ரொம்ப முக்கியமான கட்டத்துல வரும். படம்பாக்காதவங்க YouTubeல இந்த சீன் இருக்கு, பாருங்க. இது சம்பந்தமா YouTubeல நெறைய வீடியோகள் இருந்தாலும் நான் எதுவும் பாத்ததில்லை. மேற்சொன்ன Science படி மட்டுமே விவரிக்கிறேன்.
இப்போ உங்ககிட்ட 3 variables இருக்கு, A B C ன்னு வச்சுப்போம். அதோட value கண்டுபுடிக்கணும். என்ன பண்ணலாம்? மூணும் variable தானே, values மாத்தி மாத்தி போட்டு கண்டுபுடிக்கலாம்னா எத்தனை value போட்டுப்பாக்குறது? இதுக்கு logicalலா ஒரு வழி இருக்கு. (மறுபடியும் மொதல்லருந்தா?)
மூணு variableல ஒன்ன (C) constantடா வச்சுக்கணும். இந்த constant valueவை மாத்தவே கூடாது. ரெண்டாவதை (B) Arbitrary constantடா வச்சுக்கணும், எப்பவாவது மாத்திக்கலாம். மூணாவது (A) variable தான். இதுல மாத்தி மாத்தி போட்டுக்கலாம். இந்த methodல மூணோட valueவயும் மிகஎளிதா கண்டுபுடிக்கலாம்.
இந்த சயின்ஸ்ஸ தான் Interstellarலயும் சொல்லிருக்காங்க. அதாவது Cooper தனது மகள் Murphக்கு சில விஷயங்களை சொல்ல நினைக்கிறார். திடீர்னு தான் அஞ்சாவது பரிமாணத்துல பறந்துக்கிட்டு இருக்குறத உணர்றார். தான் அஞ்சாவது பரிமாணமான Gravityல இருக்குறனால Time Travel பண்ண முடியுமான்னு யோசிக்கிறார்.
அஞ்சாவதுலருந்து நாலாவது பரிமாணமான Timeம மாத்த முற்பட்டா அதுக்கு முந்தின Space (x,y,z)யவும் மாத்தலாம் தானே? அதுனால Cooper Gravityய Constantடாவும், Spaceசை எப்பயாவது மாத்துற Arbitrary Constantடாவும், timeஐ அடிக்கடி மாத்துற variableலாவும் யோசிக்கிறார்.
இப்போ Cooper தான் சார்ந்த Gravityலருந்து தன் மகளிருக்கும் ரூமை பார்க்கிறார். அந்த ரூம் அதாவது space is a Arbitrary Constant. இந்த Space entity அந்த ரூமா இருக்கணும்னு அவசியம் இல்ல, ஆனா Cooperய பொறுத்தவரைக்கும் அந்த entity ஒரு Arbitrary Constant.
இப்போ timeங்கிற variable அவர் கைல. இஷ்டத்துக்கு அழுத்துறார். முன்னாடி பின்னாடின்னு அவரால எந்த வருசத்துக்கு வேணாலும் போக முடியும். Gravityயவும் Spaceசயும் handbar மாதிரி புடிச்சுட்டு Timeங்கிற பெடல் அழுத்தி அவர் இஷ்டப்பட்ட வருசத்துக்கு போய் breakக போட்டு மார்ஸ் கோட்ல பேசறார்.
இந்த Time Travelல எந்த machineம் பயன்படுத்தல, எந்த complicated விஷயங்களுக்குள்ளவும் போகல. வெறும் dimension switching. அவ்ளோ தான். ஊட்டில கான்வெண்டு அதுல Cooper ஸ்டுடெண்டு rangeல தான் Time Travelல டீல் பண்ணிருக்கோம்
Timeஐ control பண்ணக்கூடிய அளவுக்கு Gravityக்கு பவர் இருக்குன்னா, Gravityயவும் மாத்தலாமானா முடியும். தலைவர் ஹீலர் பாஸ்கர் சொல்ற மாதிரி எத்தனாலுக்கு எத்தனால் வைன் ஷாப்பில் உண்டு தானே?
ஐந்தாவது dimension தாண்டி இன்னும் dimensionகள் இருக்கா? Time Travel பண்ணி போனதா வந்ததா சிலர் சொல்றாங்களே உண்மையா, அல்ரெடி நடந்த விஷத்தை travel பண்ணி டிஸ்டர்ப் பண்ணினா Parallel Universe possibleல? அந்த Universeலயாவது 90s கிட்ஸ்க்கு கல்யாணம் ஆகுமா? 

அடுத்த பதிவுல பாக்கலாம்.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with PhD Jokes & Memes

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!