#தெரிஞ்சிக்கோங்க
#இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு பற்றி எனக்கு புரிதல் இல்லாமல் இருந்தது சிறிது தேடலில் கிடைத்த விஷயத்தை பகிர்கிறேன்
வகுப்புரிமையே இட ஒதுக்கீட்டின் அடிப்படை.
வகுப்புரிமை என்பது என்ன?
உதாரணமாக ஒரு சமூகத்தில் 100 பேர் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதில்
வகுப்பு B யின் மக்கள் தொகை 30 பேர்.
வகுப்பு C யின் மக்கள் தொகை 50 பேர்.
இச்சமூகத்தில் 10 அரசு அலுவலர்கள் இருந்தால் அதில் 2 அரசு அலுவலர்கள் வகுப்பு A யைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இது அந்தந்த வகுப்புகளின் உரிமை. இதுவே சமூக நீதி.
ஏன் சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு?
உலகில் பல நாடுகளில் நிறத்தின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டார்கள் (கருப்பர், வெள்ளையர்). மதத்தின் அடிப்படையிலும்
ஆனால் இந்தியாவில் மக்கள் வர்ணத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு நான்கு படிநிலைகளில் வைக்கப்பட்டார்கள்.
அதற்கடுத்து சத்திரியனும்,
அதற்கடுத்து வைசியனும்
அதற்கடுத்து சூத்திரனும்
வைக்கப்பட்டனர்.
மேலிருப்பவன் அவனுக்குக் கீழ் இருக்கும் மூன்று நிலை மனிதர்களையும் சுரண்டினான்.
அடுத்து அவனுக்குக் கீழ் என படிநிலை அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டார்கள்.
கல்வி பிராமணனுக்கு உரியது மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று சாத்திரங்கள் மூலம் வரையறுக்கப்பட்டதால் கல்வியின் மூலமாகக் கிடைக்கும்
மற்ற வகுப்பினருக்கு இவைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. இதுவே சமூக அநீதி. இந்த படிநிலையினை வகுப்பு எனக் கொள்க. வகுப்புக்குள் பின்பு ஆயிரம் சாதிகள் முளைத்தன.
வர்ணாசிரம ஒடுக்குமுறை பொருளாதாரக் காரணங்களால் நிகழவில்லை. ஏழையாக இருந்ததால் ஒருவனுக்குக் கல்வி மறுக்கப்படவில்லை.
ஒரு சூத்திரன் பணம் படைத்தவனாக இருந்தாலும் அவனுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. அவன் மீது தீண்டாமை புகுத்தப்பட்டது.
இட ஒதுக்கீடு என்பது சலுகையா?
இல்லை.
இடஒதுக்கீடு வழங்குவது ஏழ்மையை அகற்றவா?
இல்லை.
இடஒதுக்கீட்டின் நோக்கம் அதிகார சார்புத்துவம்தானே ஒழிய வறுமை ஒழிப்பு அல்ல.
இதனால்தான் உயர்சாதியினருக்கு தரப்பட்டிருக்கும் 10% EWS இட ஒதுக்கீடு முறைகேடானது என்று கூறுகிறோம்.
இந்த உயர் வகுப்பினரின் விகிதம் மற்ற வகுப்பினரைக் காட்டிலும் பன்மடங்கு உள்ளது. இந்தியாவின் உயர் பதவிகள் அனைத்தும் இவர்கள் வசமே உள்ளன.
இடஒதுக்கீட்டால் திறமையானவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறதா?
இல்லை.
எவ்வளவு நாட்களுக்கு இட ஒதுக்கீடு தொடர வேண்டும்?
அனைத்து வகுப்பினரும் தங்களுக்கான அதிகார சார்புத்துவத்தை பெறும்வரையில் தொடர வேண்டும்.
இந்தியாவில் உயர் பதவிகள் குறிப்பிட்ட வகுப்பினரிடம் சிக்கிக் கொண்டிருப்பது களையப்படும் வரை தொடர வேண்டும்.
ஒருவேளை இடஒதுக்கீட்டை நீக்கி விட்டால் என்ன ஆகும்?
திறமையின் அடிப்படையில் ஒரே சமூகத்தை சேர்ந்த அந்த 100 பேரில் 30 பேர் ஒரே துறையில் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.இப்போது அடுத்து வேலைக்கு எடுக்க போகும் 70 பேரை திறமையின் அடிப்படையில் எடுக்க விடுவார்களா?
இடஒதுக்கீடு இருக்கும் போதே லட்சங்களில் பணம் கட்டிதான் வேலையை உறுதி செய்ய முடிகிறது, மெஜாரிட்டியான சமுதாயம் உள்ளே நுழைந்து விட்டதென்றால் அவர்களுக்கு கீழே இருக்கும் சமுதாயத்தை மதிப்பார்களா?
உண்மையில் இடஒதுக்கீட்டை நீக்கினால் திறமையின் அடிப்படையில் வேலை கொடுக்கப்படுமா?