My Authors
Read all threads
#Razor_Blade_Business_Model 😊
#ரேசர்_பிளேடு_வணிக_மாதரி
இது என்ன என்பதை எளிமையாக புரிந்து கொள்ள இந்த #இழை #Thread😂

"வணிகம் என்பதே இலாபம் என்ற ஒற்றை மைய இலக்கை நோக்கி கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலந்தி வலை போன்ற ஓர் அமைப்பு..!"
..... யாரோ ஒருவர் சொன்னது 🙄 Image
வணிகத்தில் மேற்கோள்ளப்படும் அனைத்து செயல்களும், இறுதியில் இலாபம் ஈட்டுதல் என்னும் ஒற்றை புள்ளியில் வந்து நிறைவு பெறுகிறது..!😂

இந்த இலாபம் ஈட்டுதல் என்னும் ஒரே இலக்கை அடைய வேண்டி பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றன நிறுவனங்கள்.! (சிறு வியாபரம் முதல் பெரும் வணிகம் வரை)🙄
அப்படிப்பட்ட வியாபார யுக்திகளில் ஒன்று தான் இந்த
"Razor Blade Business Model" - நம் வசதிக்காக இனி இதை #RBBModel என அழைப்போம்.!😊

#ஒரு_உதாரணம்
கொசு விரட்டிகளை தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் Liquid Refill Cartridge
(Mosquito Repellent Liquid) தனியாக வாங்கினால் ஒன்று 70 ரூபாய்.
அதையே Machine உடன் சேர்த்து Combo Offer என்ற பெயரில் 85 ரூபாய் க்கு விற்கிறார்கள்.🤔 அப்படியென்றால் அந்த Machine விலை (85-70) வெறும் 15 ரூபாய் தானா..!🙄

நிச்சயமாக இல்லை.! இதன் விலை அதை விட நிச்சயமாக பல மடங்கு அதிகம் இருக்கும்.! பிறகு ஏன் இவ்வளவு மலிவான விலையில் தருகிறார்கள்..!🤔
இங்கு தான் உள்ளது சூட்சமம்.🙄 ஒருவர் முதன்முதலில் இதை வாங்க வருகிறார் என கொள்வோம், அவருக்கு Machine மற்றும் Liquid Refill Catridge என இரண்டும் தேவைப்படும். எனவே ஒரு 15 ரூபாய் அதிகம் கொடுத்தால் "Machine ம் சேர்ந்து கிடைக்கிறதே" என இந்த Combo Pack ஐ பெருமையுடன்😂 தேர்வு செய்வார்..!
பிறகு மாதாமாதம் 70 ரூபாய் கொடுத்து அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் Refill Catridge வாங்குவதன் மூலம் அந்நிறுவனத்தின் நிரந்தர வாடிக்கையாளராக மாறிவிடுகிறார்..!
அவர் முதல் சில மாதங்களில் வாங்கும் Catridge மூலம் Machineக்கான அடக்கவிலை நிறுவனத்திற்கு திரும்ப கிடைத்துவிடும்..!😂
பிறகு அவர்கள் ஈட்டுவது எல்லாம் வெறும் இலாபம் அல்ல, கொள்ளை இலாபம்.🙄

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.,

📜Machine தான் பிரதான பொருள் (Primary Product, ஒருமுறை வாங்குவது)😊

📜Refill Catridge தான் நுகர் பொருள்
(Consumables, தேவைக்கு ஏற்ப தொடர்ந்து வாங்கி கொண்டே இருப்பது)😊
ஒரு பிரதான பொருளை (Main Product)
🔥மிகக் குறைந்த விலையில், (அதாவது உற்பத்தி செலவை விட மிகவும் குறைந்த விலையில்) விற்கப்படுவதன் மூலமாகவோ அல்லது
🔥இலவசமாக கொடுக்கப்படுவதன் மூலமாகவோ
🔥அதை வாங்கும் உங்களை, அந்த Main Product ஐ பயன்படுத்த தேவையான
🔥நுகர் பொருட்களை(Consumables) தொடர்ந்து வாங்கச் செய்து,
🔥உங்களை அந்நிறுவனத்தின் நிரந்தர வாடிக்கையாளராக (Permanant Coustomer)ஆக மாற்றுவதும்,
🔥பிறகு நீங்கள் தொடர்ந்து வாங்கும் Consumables மூலம் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் இந்த வித்தைக்கு பெயர் தான்
Razor Blade Business Model.😂
"Give them Razor and Sell them Blades"
என்ற ஆங்கில பழமொழி மற்றும் #RBBModel இவையெல்லாம் Disposable Razors ஐ கண்டுபிடித்த
#King_Camp_Gillette என்பவரை பெருமைபடுத்துபவை ஆகும்.
இவர் 1901 ல் Gillette Safety Razor Company என்ற பிரபல நிறுவனத்தை உருவாக்கியவர். 😊
ஆனால் இந்த #RBBModel ஐ இவர் உருவாக்கவில்லை.🤔 இவரது நிறுவனத்திற்கு போட்டியான மற்ற Razor நிறுவனங்கள் தான் இதை உருவாக்கி வெற்றிகரமாக இலாபம் ஈட்டினார்கள்.😂
ஆரம்பத்தில் Gillette நிறுவனத்தின் ரேசர்கள் விலை மிக அதிகம் (காப்புரிமை பிரச்சினையால்).
அப்பிரச்சனை தீர்ந்த பிறகு தான்‌
1920 ளில் Gillette நிறுவனம் மலிவு விலை ரேசர்களை #RBBModel முறையில் சந்தைபடுத்தியது. இன்றுவரை அது அவர்களுக்கு இலாபகரமான மற்றும் வெற்றிகரமான ஒரு வணிக மாதிரி..!😊

இந்த #RBBModel லில் உள்ள மிகப் பெரிய பின்னடைவு யாதெனில் போட்டி நிறுவனங்கள் மிகவும் குறைந்த விலைக்கு Consumables ஐ விற்க
ஆரம்பித்தால் Main Products தயாரிக்கும் நிறுவனத்தின் கதை கந்தலாகி விடும்..!😂 அவர்களின் பிழைப்பே அந்த Main Products ஐ சார்ந்து அமோகமாக நடைபெறும் Consumables ன் வியாபாரம் தான்.!😂
#உதாரணம்:
நாம் முதலில் பார்த்த அந்த Machine + Liquid Catridge Offer ஐ அந்த பிரபல 😂 நிறுவனம் இப்போது
குறைத்து விட்டது அல்லது ஒவ்வொரு Brand Liquid Catridge க்கு ஏற்ப பிரத்தேயமாக வடிவமைக்கப்பட்ட தனித்தனி Machineகளை கொண்டு வந்து விட்டது.!🙄

இதற்கு காரணம்,
இதன் பிரபல போட்டிநிறுவனம் 'எல்லா Machineகளிலும் வேலை செய்யுக்கூடிய வகையில் Catridge தயாரித்து குறைந்த விலைக்கு சந்தைபடுத்தியதே'
இந்த #RBBModel வெறும் Razor, Mosquito Liquid Machine போன்ற சில்லறை வணிகத்தில் தான் கை கொடுக்கும் என நினைத்தால் அது தவறு..!

அதற்காக மேலும் சில உதாரணங்களை பார்க்கலாம்..!😊

🔥DTH Service
இதில் Set Top Box தான் Main Product. இதை இலவசமாகவோ அல்லது தள்ளுபடியிலோ தருகிறார்கள்.
இதில் பிரதி மாதம் நாம் செலுத்தும் சந்தா மூலம் அவர்களுக்கு நல்ல லாபம்..!

🔥 ரிலையன்ஸ் மொபைல்
இந்தியாவில் மொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் போன். Main Product ஆன Phone இலவசமாகவே வழங்கப்பட்டது. நாம் மாதாமாதம் செய்யும் ரீசார்ஜ் அவர்களுக்கு இலாபம் + வருமானம்.!😊
🔥Kodak
பிரபல Camera தயாரிப்பு நிறுவனமான Kodak இதன் கேமரா& பிரிண்டர் போன்ற Main Productsஐ தள்ளுபடி விலையில் வழங்கியது.
இதில் கேமராவில் தொடர்ந்து பயன்படுத்தபடும் ஃபிலிம் சுருள், பிரிண்டரின் அச்சு காகிதம் மற்றும் அச்சு மை போன்ற நுகர்பொருட்கள் வாயிலாக அமோகமாக மகசூலை அள்ளினார்கள்😂
🔥 அணுசக்தி ஒப்பந்தங்கள்.
இந்த அணுசக்தி ஒப்பந்தங்கள் எல்லாம் பெரும்பாலும் இந்த #RBBModel படிதான் செயல்படுத்தப்படுகிறது. அணுசக்தி பயன்பாட்டிற்கு தேவையான Nuclear Reactors ஐ ஒரு நாடு மற்ற நாட்டிற்கு உதவிக்கரம் என்ற பெயரில் குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ வழங்கும்.!
அதை தொடர்ந்து இயக்கத் தேவையான எரிபொருட்களை (யுரேனியம்) அதிக விலைக்கு விற்று நல்ல லாபம் சம்பாதிப்பார்கள்.!
இதில் Nuclear Reactor Maintenance என்ற வகையிலும் கல்லா கட்டும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறும்.!😂

குறிப்பு:முதல் Thread ல் குறிப்பிட்ட அந்த 'யாரோ ஒருவர்' நான் தாங்க..!😂
மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..!😊

நன்றி மக்களே..!😂
🙏🙏🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with நிவா 🦋

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!