My Authors
Read all threads
#Kodak vs #Fuji_Film 😊
#கோடாக் vs #பியூஜி_ஃபிலிம் 😊

இரண்டு பாரம்பரியமான புகைப்பட நிறுவனங்களுக்கு இடையே நடந்த #சுவாரஸ்யமான சம்பவங்கள் 😂 #இழை #Thread

#PhotographyDay #camera #photograghy

வாங்க ஜாலியாக பயணிப்போம் 🧞
"அனேகமாக 1990 க்கு முற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பல புகைப்படங்கள் யாவும்,
இவ்விரு நிறுவனங்கள் தயாரித்த கேமிராக்கள் மற்றும் ஃபிலிம்கள் கொண்டே எடுக்கப்பட்டன.!"
இதில்
#கோடாக் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம்.
#பியூஜி_ஃபிலிம் ஜப்பானை சேர்ந்த நிறுவனம்.
#கோடாக்_நிறுவனம்
The East Man Kodak Company என்பதையயே Kodak என சுருக்கி செல்லமாக அழைத்தார்கள்.
(நம்மூரு கிருஷ்ணமூர்த்திய 'கிச்சா' ன்னு கூப்பிடற மாதிரி..!)😂
இது 1888 ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.🙄 புகைப்பட துறையில் #Kodak பாரம்பரியமான ஒரு மிகப்பெரிய நிறுவனம்..!😊
அக்காலகட்டத்தில்,
புகைப்படத்துறை சம்பந்தமான
'அ' முதல் 'ஃ' வரையான அனைத்து பொருட்களையும் அவர்கள் தான் தயாரித்தார்கள். அதனை சிறந்த முறையில் சந்தைபடுத்தவும் செய்தாராகள்..! அன்றைய புகைப்பட சந்தையின் Monopoly அவர்கள் தான்.😊
அப்படி என்னெல்லாம் தயாரித்தார்கள் ன்னு பார்ப்போம்..!

🔥புகைப்படம் எடுக்கும் கேமரா (Camera)
🔥அதில் பயன்படும் ஃபிலிம் சுருள்
(Film Roll)
🔥அந்த பிலிம் சுருளை Develop செய்ய பயன்படும் எந்திரம்.
(Film Roll Developing Machine)
🔥Developer ல் பயன்படும் வேதிப்பொருட்கள்
(Developer Chemicals)
🔥அச்சு எந்திரம் (Photo Printers)
🔥அச்சு காகிதம் (Printing Paper)
🔥அச்சு மை (Printing Ink)
🔥புகைப்படங்களை பாதுகாக்கும்
ஆல்பம் (Photo Albums)
🔥துணைக் கருவிகள்
(Camera Accessories)
Kodak தனது எல்லா தயாரிப்புகளையும் இரண்டு வகையாக பிரிச்சு வியாபாரம் பண்ணாங்க.!
🔥Camera, Developer Machine, Printers
இதெல்லாம் பிரதான பொருட்கள். (Main Products)
🔥FilmRolls, DeveloperChemicals, Photo PrintingSheets, PrintingInk, Accessories இதெல்லாம் நுகர் பொருட்கள் (Consumables)
இந்த Main Products ஐ மிகக்குறைந்த தள்ளுபடி விலையில் கொடுப்பாங்க..! அதைத் தொடர்ந்து பயன்படுத்த தேவையான அதோட நுகர் பொருட்களை (Consumables) தொடர்ந்து வாங்கணும். இப்படி நாம தொடர்ந்து வாங்குற Consumables மூலமா அவங்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்.
இதன் மூலமா நாம் அந்த நிறுவனத்தோட நிரந்தர வாடிக்கையாளராகவும் மாறிடுறோம்.இப்படிதான் Kodak நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நல்லலாபம் பார்த்தார்கள்.
இத #Razor_Blade_Business_Model ன்னு சொல்லுவாங்க.!😊
இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு இந்த Linkஐ Clickகவும்😂
ஒருபக்கம் பிசினஸ் டெக்னிக்ஸ் அப்படின்னு இருந்தாலும் இன்னொரு பக்கம் அவங்களுடைய அப்டேட்ஸ். Kodak நிறுவன் தொடர்ந்து அவங்களோட Products அ Update பண்ணிட்டு வந்துட்டே இருந்தாங்க. கேமரா ல நிறைய புது புது Models கொண்டு வந்தாங்க,
மற்றும் புது புது Technologyகளையும் புகுத்துனாங்க..!😂
📜Compact Size Camera
📜 Fixed Focus Camera
📜Black&White Film
📜Monochrome Film
📜Colour Film
📜Retina Series Camera(35 mm)
📜Brownie Camera
📜Instamatic Camera (Point&Shoot)
📜Military Use Cameras
📜Digital Camera
📜MegaPixel Sensor
📜Digital Single Lens Reflex(DSLR) Camera
🤔
இன்னும் நிறைய இருக்கு..! (முக்கியமானதை மட்டும் தான் குறிப்பிட்டு இருக்கேன்) இப்படி ஏகப்பட்ட Updates & Innovations😊

இப்படி 1900 களில் Pickup ஆன இந்த Kodak ங்கற Byepass Rider 1984 வரை சும்மா அடிச்சு நகர்த்தி Full Swing ல தான் போய்கிட்டு இருந்தது 😂
இப்படி FullSwing ல போய்கிட்டு இருந்தாலும் 1984ஆம் ஆண்டு இதுக்கு ஏற்பட்ட ஒரு BreakDown இதன் சந்தைமதிப்பை பெரிதும் பாதித்தது🙁

அது என்னங்கறதை பார்க்கலாம்

#பியூஜி_ஃபிலிம்_நிறுவனம்
இது 1934ஆம் ஆண்டு ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்.
இவங்க ஆரம்பத்தில் PhotoFlims தயாரிச்சாங்க😊
ஒரு பத்து பதினைந்து வருஷத்துல மெல்ல மெல்ல Motion Film, X-Ray Film, Lens, Camera ன்னு கடைய பெருசா விரிக்க ஆரம்பிச்சாங்க..!🙄
இவங்க 1962 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் உள்ள Xerox ங்கற நிறுவனத்துடன் கைகோர்த்து
Fuji Xerox Corporation Ltd ன்னு ஒரு Joint Venture நிறுவனத்தை தொடங்குறாங்க.!😊
இதன் மூலமாக மருத்துவ துறைக்கு தேவையான Photo Imaging சம்பந்தமான பல உபகரணங்களை தயாரிக்க ஆரம்பிக்கிறாங்க. இவங்க உருவாக்குன Computer Radiography (CR) க்கு நல்ல வரவேற்பு. இது மருத்துவர்களிடமும், மருத்துவ பணியாளர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெறுகிறது. இந்த Product நல்லாவே Hit ஆகுது.
(X-Ray எடுக்கும்போது நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதும் படும் கதிர்வீச்சின் தாக்கம் பெருமளவு இதனால் குறைக்கப்பட்டது.!)😊

இந்த மாபெரும் வெற்றியூடன் FujiFilms அமெரிக்காவின் மார்க்கெட்டிலையும் 1980களின் தொடக்கத்தில் நுழையிறாங்க.!😊 இதுவரைக்கும் எந்த விதமான போட்டியாளரும்
இல்லாமல் கோலோச்சிக் கொண்டிருந்த கோடாக் நிறுவனத்திற்கு இது ஒரு பேரிடி.!
ஏன்ன இது வரைக்கும் Kodak என்ன புதுசா கொண்டு வந்தாலும் அதை தான் அமெரிக்கமக்கள் கொண்டாடிட்டு இருந்தாங்க. போட்டியாளர்கள் இல்லா சந்தையாக இருந்ததனால Kodak நிறுவனத்திற்கு பெரிசா மெனக்கெட வேண்டிய அவசியம் ஏற்படலை🙄
Fuji Films அறிமுகப்படுத்திய விலை குறைவான Films அமெரிக்காவுல நல்ல வியாபாரம் ஆச்சு. இந்த Periodல தான் 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடைபெற்ற Olympics க்கான Title Sponsor ஆ FujiFilms கைப்பற்றறினாங்க.! இது அமெரிக்காவில் FujiFilmsன் சந்தைமதிப்பு & BrandName மேலும் உயர காரணம் ஆச்சு😊
இதுதான் Kodakங்கற வண்டி Break Down ஆன கதை.! அதுக்கு அப்புறம் FujiFilms அமெரிக்காவிலேயே Factoryய திறந்து Business அ நல்லா டெவலப் பண்ணிட்டாங்க. 1984 - 1991 வரைக்கும் Kodak நல்லாவே தாக்குபிடிச்சாங்க..! ஆன இந்த 1991 க்கு அப்புறம் Digital Photography ல ஏற்பட்ட அசுரத்தனமான வளர்ச்சி
Kodak நிறுவனத்தை சரிவை நோக்கி கொண்டு போச்சு..!🤔 Fuji Films அமெரிக்காவுல Success ஆன அளவுக்கு Kodak ஆல ஜப்பான்ல வெற்றியடைய முடியல.🙁
வெறுத்து போன Kodak 1995ல FujiFilms மேல அமெரிக்க அரசாங்கம் மூலமா உலக வர்த்தக நிறுவனத்திடம் (WTO) வழக்கு போட்டாங்க..! அதாவது "Fuji Films நிறுவனம்...
...Kodakக்கு எதிராக ஜப்பான் Film Marketல வெற்றி பெற முடியாத படி மறைமுகமா, சில உள்குத்து வேலைகளை செய்யுறாங்கன்னு"🙄
வழக்கை விசாரித்த WTO 1998ல Kodak ட்டா, " தம்பி, போய் புள்ளகுட்டிய படிக்க வைக்குற வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்கன்னு" அட்வைஸ் பண்ணி Case அ தள்ளுபடி பண்ணிட்டாங்க..!😂
Digital வளர்ச்சி ஏற்படுத்த போகும் வணிக சந்தை மாற்றங்களை புரிஞ்சுகிட்ட FujiFilms நிறுவனம், தங்களை நிலைநிறுத்திக் கொள்ள புகைப்பட கருவிகள், டிஜிட்டல் சாதனங்கள்,அழகுசாதனப் பொருட்கள், உயிரியல் மருத்துவம் சார்ந்த சேவைகள், மருத்துவ புகைப்பட உபகரணங்கள்ன்னு தங்களை மேம்படுத்திக்கிட்டாங்க😊
ஆனா,ஒரு வாழ்ந்துகெட்ட குடும்பம் கடைசியில கடனாளிங்கற பேரு வராம இருக்க எப்படி தங்களிடம் உள்ள பாரம்பரியமான சொத்துக்களை எல்லாம் விற்று சமாளிப்பாங்களோ,அதே நிலைமை தான் 2012 ஆம் ஆண்டு Kodak நிறுவனத்துக்கும் ஏற்பட்டுச்சு. திவாலாகுவதை தவிர்க்க தங்களுடைய புகழ்பெற்ற பல Patent Rights களை
Adobe Systems, Apple, Amazon, Google, Facebook, Microsoft போன்ற நிறுவனங்களிடம் விற்று நிலைமையை சமாளிக்க வேண்டியதாயிற்று..!🙁
நஷ்டத்தில் இயங்கிய சில துணை நிறுவனங்களையும் இழுத்து மூடினார்கள்..!
பிறகு, நிலைமையை சமாளிக்க பல மாற்றங்களை செய்தாலும் எதுவும் பெருசாக இலாபத்தை கொண்டுவரல.!🙄
கடைசியா ஒரு நல்ல செய்தி என்னன்னா கொரோணா காரணமா அமெரிக்காவுல குறைஞ்சு போன மருந்துகளின் கையிருப்பை மீண்டும் அதிகரிக்க, மருந்துகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு கோடாக்கிற்கு 765 மில்லியன் டாலர் கடன் வழங்க டிரம்ப் அரசு முன்வந்தது இருக்கிறது..!😊
ஒருவிஷயம் தெளிவாக தெரியுது, இந்த Digital Photography தொழில்நுட்பம் சந்தைக்கு வந்த பிறகுதான் போட்டிய சாமாளிக்க முடியாமல் Kodak நிறுவனம் வீழ்ச்சியை நோக்கி சென்றது.🙁 இதுல,ரொம்ப ஆச்சர்யமான விஷயம் என்னென்னா, இந்த Digital Camera வை 1975 களிலேயே கண்டுபுடிச்சு அதுக்கான Patent Rights ம்
வாங்கியிருந்தாங்க Kodak.🙄அதுல பயன்படும் Megapixel Senor ம் இவங்களோட கண்டுபிடிப்பு தான்!😂
(இந்த தொழில்நுட்பத்த Canon, Sony எல்லாம் 1990 கள்ல தான் கஷ்டப்பட்டு Develop பண்ணாங்க.!😂)
1980 களிலேயே Digital Cameras ஐ சந்தைபடுத்தலாம் என நிறைய யோசனைகள் Kodak இடம் முன்வைக்கப்பட்ட போது,
பழம்பெருமை பேசிய சில சீனியர்கள், இதனால் Film Roll, Developers போன்ற நமக்கு லாபம் தரும் பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டு நமக்கு நஷ்டம் ஏற்படும் என தவறாக அனுமானித்தார்கள். Kodak நிறுவன வரலாற்றில் இது ஒரு மாபெரும் வரலாற்று பிழை.!🙄
அத கண்டுபிடிச்சவரையுமே ரொம்ப நையாண்டி பண்ணாங்க.!
தொல்காப்பியம் உணர்த்தும் 3 உண்மைகள் மாதிரி இந்தரெண்டு நிறுவனங்களும் நமக்கு 3 உண்மைகளை உணர்த்துராங்க🤔

🔥ஒரு துறையில் மட்டுமே வணிக ரீதியான கவனம் செலுத்தாமல், அது சார்ந்த அல்லது சாராத மற்ற பல்வேறு துறைகளிலும் வணிகங்களை உருவாக்கி செயல்படவேண்டும்.
(பல்துறை வணிகம்)
🔥 புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிச்சா மட்டும் போதாது, அதை யாரு மலிவான விலையில் மக்களுக்கு கொடுக்குறாங்களோ அவங்கதான் ஜெயிக்கிறாங்க.

🔥ஒரு துறையோட எதிர்காலம் எப்படி இருக்கும்,அதுக்கு நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் முன்னரே கணித்து செயல்படுதல் மிகஅவசியம்.😊
இன்னும் நிறையவே எழுதலாம்..!😊
மற்றுமொரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..!😂

நன்றி மக்களே..!
🙏🙏🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with நிவா 🦋

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!