கடந்த சனி அன்று இரவு 8 மணிக்கு ஒரு நல்லவர் எனது காரின் பின்புற பம்பரை சிதைக்க, நான் 100ஐ அழைக்க, ஏட்டைய்யா திருப்பி என்னை அழைத்தார். சம்பவத்தை விவரித்தேன். யாருக்கும் எந்தவித காயம் இல்லை. எனவே spot photo எடுத்து விட்டு கிளம்புங்கள்.
நாளை மாலை 3 மணிக்கு ஸ்டேஷன் வாருங்கள் என கூறினார்.
நெல்லையில் ஆய்வாளராக இருக்கும் நண்பரை அழைத்து process சரியா என cross check செய்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினேன்
ஞாயிறு மாலை மீண்டும் ஏட்டைய்யாவை அழைத்தேன். திங்கள் காலை 11 மணிக்கு வரச் சொன்னார்.
10.45க்கே சென்றேன். மனு, RC, Licence, Insurance etc கையில். கொடுத்து விட்டு காத்திருந்தேன். யாருக்கும் உட்கார இடம் இல்லை. என்னைப்போல ஒரு பத்து பேர். பெரும்பாலும் கூட 2/3 பேர். நானும் இன்னொருவரும் மட்டுமே தனியாக இருந்தோம். 30 நிமிடம் கழித்து வந்து வேலை குடும்ப விபரங்களை கேட்டார்.
இடித்தவன் செல் எண் கேட்டார். நான் வாங்கவில்லை என்றதும் சற்று கோவப்பட்டார். நிறைய free advice திகட்ட திகட்ட கிடைத்தது.
மீண்டும் சிறிது நேரம் கழித்து வந்து பிரிண்ட் செய்த போட்டோ கேட்டார். கையிலோ பர்ஸ் இல்லை. காரில் 20₹ மட்டுமே இருந்தது. தங்கையின் அலுவலகம் பக்கம் தான்.
அவளிடம் 200 வாங்கி வந்து பிரிண்ட் போட்டு கொடுத்தேன்.
மீண்டும் காத்திருப்பு. 1.30 இருக்கும். "அம்மா (ஆய்வாளர்) கூப்பிடுவாங்க. கேட்டா ஏட்டைய்யா ஸ்பாட்டுக்கு வந்து பாத்தாருனு சொல்லனும்" என கட்டளை இட்டார். அங்கே தான் முதல் முறையாக சற்று எரிச்சல் வந்தது. 1.45க்கு அழைக்கப்பட்டேன்
ஆய்வாளர் வணக்கம் சொல்லி மிக கனிவாகவும் மரியாதையாகவும் பேசினார்.
"என்ன ஆச்சுங்க" ஆய்வாளர்
"மேடம், ஆவாரம்பாளையம் பாலத்துல ஒருத்தன் ஏறி வந்து சைடு மிரர் தட்டிட்டான். நான் hazard போட்டு நிறுத்தி என்ன ஆச்சுன்னு பாக்க போனேன். அப்போ பின்னால வேகமா வந்தவன்...." நான் முடிக்கவில்லை.
"சரி, நீங்க போலாம் சார்" ஆய்வாளர் வணக்கத்துடன் விடை பெற்றார்.
நானாகவே மேலும் சில வினாடிகள் எடுத்து முழுமையாக சொல்லி வணக்கம் கூறி வெளியே வந்தேன்.
மீண்டும் காத்திருப்பு. உட்கார ஒரு நாற்காலி கூட இல்லை. ஒரே எரிச்சல். மீண்டும் ஏட்டைய்யாவின் அழைப்பு. ஒரு சில கையொப்பமிட்டு வந்தேன்.
பின்னாலயே ஏட்டைய்யா வந்தார். மனுவின் ரசீதும் CSRம் கொடுத்தார். நீங்க அவனை விட்டு இருக்கக் கூடாது. இன்சூரன்ஸ் முழுசா வராதே. சில ஆயிரம் போயிடுமே. நம்பர் இருந்தா வரவெச்சு இருப்பேன்
கிளம்பி எத்தனித்த போது "சார், 350 ரூவா ஆன்லைன் சார்ஜ் கட்டணும். குடுங்க" என்றார்
நான் சற்றும் யோசிக்காமல் "அதெல்லாம் ஆன்லைன்ல கட்டியாச்சு" என்று அவரை தீர்க்கமாக பார்த்தேன். 😂. சில வினாடிகள் மெளனம். அவர் மேற்கொண்டு பேச யோசித்து கொண்டு இருந்தார்.
நான் கிளம்பலாமா என்றேன். ம்ம் போங்க என சலித்துக் கொண்டார்.
வந்த வேலை இனிதே முடிந்தது
நான் கண்ட சில காட்சிகள்:
1. நான் உட்பட, இருவரை தவிர எல்லோரும் கூடவே சில ஆட்கள் உடன் வந்தார்கள். ஏன்? புரியவில்லை
2. உட்கார ஒரு நாற்காலி கூட இல்லை. புகார்தாரரும் சேவை பெற வந்த வாடிக்கையாளர் தானே.
3. படிக்காதவர்களும், இளைஞர்களும் வா, போ என்றே அழைக்கப்பட்டனர்.
4. யாருமே இயல்பாக இல்லை
எல்லோரிடமும் ஒருவித பணிவு கட்டாயமாக வந்திருந்தது.
இடைநிலை / மேல்நிலை அதிகாரிகள் புகார்தாரரை நன்றாகவே நடத்துகின்றனர். நமக்கு பேச வாய்ப்பு தருகின்றனர். ஆனால் பெரும்பாலான ஆளிநர்கள் ஒருமையிலேயே பேசினர்.
என்னுடைய சில யோசனைகள்:
1. ஆளிநர்களுக்கு soft skills பயிற்சி குறிப்பிட்ட இடைவெளியில் நிச்சயம் தரப்பட வேண்டும்
2. Fleecing முற்றிலும் தடுக்க வேண்டும். இங்கு சேவை இலவசம் என்று பலகை வைக்க வேண்டும்
குறிப்பு: இந்த பதிவு ஒரு புரிதலுக்கு மட்டுமே. யாரும் இதன் மீது எந்தவித உரிமையும் கோர முடியாது.
தகவல்களை வேறு தளங்களில் உங்கள் திருப்திக்கு சரி பார்க்கவும்.
தனிநபர் மருத்துவ காப்பீடு பற்றி அறிய வேண்டிய தகவல்கள்.
(இதை அரசுக் காப்பீடு திட்டத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்)
Sum assured (SI) உங்கள் காப்பீட்டு தொகையை குறிக்கும்.
1.உங்கள் SI 5லட்சம் என வைத்துக் கொள்வோம். நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகு பில் 3 லட்சம் என வைத்துக் கொள்வோம். அத்தனையும் உங்களுக்கு க்ளைம் வராது. பொதுவாக ஒரு நாள் ரூம் வாடகை SIயில் 1%, ஒரு நாள் ICU பெட் சார்ஜ் 2%
உங்களிடன் குறிப்பிட்ட அளவு சேமிப்பு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்தால் வட்டி குறைவாகவே கிட்டும். டெபாசிட் போட்டால் அவசரத்திற்கு உடைக்க முடியாது. முதிர்வுக்கு முன்பு எடுத்தால் சில சமயம் penalty வரும்.
என்ன செய்யலாம்?
Flexi-deposit கணக்கை துவங்கி அதில் வையுங்கள். குறிப்பிட்ட இருப்பிற்கு மேல் (எ.கா. ௹10,000) டெபாசிட்டாக மாறி விடும். வட்டியும் சேமிப்புகணக்கு விட அதிகம் கிடைக்கும். 24×7 உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
புதிய தலைமுறை தனியார் வங்கிகள் (Axis, Hdfc, Icici) இந்த வசதியை வழங்குகிறது.
இந்த வசதி ஒரு சில பொதுத்துறை வங்கிகளிலும் உள்ளது. உங்கள் கணக்கு இருக்கும் கிளையை அணுகுங்கள் 🙂
வங்கி சம்பந்தப்பட்ட பதிவுகள் என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. இது நான் பணிபுரியும் வங்கி / வேறா எந்த ஒரு நிறுவனத்தின் கருத்தோ அல்ல. இதை எந்தவித சட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.
முன் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்
👍🏼👍🏼👍🏼
புதிய தொழிலுக்கு வங்கிக் கடன் - Project Finance
பலருக்கு தொழில் துவங்கி சொந்த காலில் நிற்க ஆசை, வேட்கை, கனவு.. ஆனால் எல்லோரும் அது நடப்பதில்லை. அவர்கள் சொல்லும் முதல் குறை 'எந்த பேங்க் கடன் தரான்'
உங்கள் project உங்களுக்கு தான் கனவு. மற்றவருக்கு அது just ஒரு project தான்
உங்கள் project viability / visibility இல்லாமல் எந்த வங்கியும் கடன் தராது. ஏன், உங்கள் பெற்றோர் தருவது சந்தேகமே.
Related industry இல் அனுபவம் இல்லையா? கடன் இல்லை. MBA படித்துவிட்டு 5 வருடம் இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றி விட்டு garment unit போட project ready செய்தால் எந்த
நம்ம ஊர் ஆதார்அட்டைக்கு expirydate கிடையாது. வளைகுடா நாடுகளில் குடிமக்கள் அட்டையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை renewal செய்ய வேண்டும்
உங்களின் வங்கிகணக்கு, சொத்து, பாஸ்போர்ட் முதல் கார் நம்பர்பிளேட் வரை எல்லாம் அத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். சாலை விதிமீறல் செய்தால்
தானாகவே உங்கள் அட்டையில் அபராதம் சேர்க்கப்படும். உங்களுக்கு notice ஏதும் வராது. நீங்கள் அவ்வப்போது onlineல் பார்த்து, அபராதத்தை கட்டிக் கொள்ள வேண்டும்.
உங்களின் குடிமக்கள் அட்டை expiry ஆகிவிட்டால் வங்கி கணக்கு முதல் பாஸ்போர்ட் வரை முடங்கி விடும்.
அபராதம் நிலுவையில்
இருந்தால் renewal ஆகாது. அதை கட்டினால் மட்டுமே renewal ஆகும். Renewal ஆகாவிட்டால் ATMல் 100 ரியால் கூட எடுக்க முடியாது.
இதுபோன்ற கடுமையான system மூலமே சாலையில் ஒழுக்கத்தை கொண்டு வரும்.
வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்தது. முதலில் காவல்துறை மூலம் பேரிக்கேட் வேத்தோம். அது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது. பின்னர் கிராம சபையில் தீர்மானம் போட்டு, ஆட்சியரிடம் அளித்து, குறை தீர்க்கும் நாளில் விடுமுறை எடுத்து,
கேள்விகள் கேட்டு, விடாமல் பின்தொடர்ந்து ஓராண்டு கழித்து போடப்பட்டது. இப்போது மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கிறார்கள்.
மக்களின் அதிகாரத்தை உணர்ந்த தருணம்.
இத்தகைய கிராம சபையை முடக்குவது அரசின் பொறுப்பற்ற செயல்.