குறிப்பு: இந்த பதிவு ஒரு புரிதலுக்கு மட்டுமே. யாரும் இதன் மீது எந்தவித உரிமையும் கோர முடியாது.
தகவல்களை வேறு தளங்களில் உங்கள் திருப்திக்கு சரி பார்க்கவும்.
தனிநபர் மருத்துவ காப்பீடு பற்றி அறிய வேண்டிய தகவல்கள்.
(இதை அரசுக் காப்பீடு திட்டத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்)
Sum assured (SI) உங்கள் காப்பீட்டு தொகையை குறிக்கும்.
1.உங்கள் SI 5லட்சம் என வைத்துக் கொள்வோம். நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகு பில் 3 லட்சம் என வைத்துக் கொள்வோம். அத்தனையும் உங்களுக்கு க்ளைம் வராது. பொதுவாக ஒரு நாள் ரூம் வாடகை SIயில் 1%, ஒரு நாள் ICU பெட் சார்ஜ் 2%
என cap செய்யப்படும்.ஒருசில கம்பெனியில் இந்த cap கிடையாது. இதை கவனிக்க வேண்டும்.
2. மருத்துவ கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம் போன்றவை நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரூமை ஒட்டி இருக்கும். எகா. மேற்கொண்ட பாலிசி படி நீங்கள் நாளொன்றுக்கு 5000 ரூம் வாடகை க்ளைம் செய்யலாம்.
ஒரு வேளை 8000க்கு எடுத்தால், வாடகை மட்டுமல்ல எல்லா கட்டணங்களுமே உயரும்.
3. Co-pay option - வேண்டவே வேண்டாம்.
Copay என்பது ஒரு வகையான cost sharing model. நீங்கள் 10% copay எடுத்தால் 90% க்ளைம் கிடைக்கும். 3லட்சம் பில் என்றால் 30,000 நீங்கள் கட்ட வேண்டும்.
ப்ரீமியம் அதிகம் ஆனால் பரவாயில்லை. Copay எடுக்க வேண்டாம்
4. Waiting period - காத்திருக்கும் காலம்.
ஒருசில சிகிச்சைக்கு காப்பீடு இன்று எடுத்தால் சில ஆண்டுகளுக்கு (2 முதல்4ஆண்டு) பிறகே க்ளைம் செய்ய முடியும். இதை சரியாக புரிந்து பாலிசி எடுங்கள்.
5. ஒரு சிலருக்கு அலுலகத்தில் மருத்துவ காப்பீடு இருக்கும். நீங்கள் வேலையை விட்டால் உடனே அல்லது வருட இறுதியில் செல்லாதாகிவிடும். உங்கள் waiting period செல்லாது. இதை தடுக்க நீங்கள் வேலையை விடும் முன் வேறு ஒரு பாலிசி எடுத்து wiating period ஜ port செய்து கொளாளலாம்.
IRDA சுற்றறிக்கை படி இது சாத்தியம். உங்கள் காப்பீடு சேவையாளரை (Third Party Administrator) அணுகவும்
6. Family floater பாலிசியில் ஒரே குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுகளை இணைக்கலாம். அதில் ஒரு சிக்கல் உண்டு. குடும்பத்தின் மூத்த உறுப்பினரே primary policy holder ஆவார்.
அவர் இறந்து போனால் பாலிசி காலாவதியாகிவிடும். எனவே மூத்தோருக்கு தனி பாலிசி எடுப்பது நல்லது.
7. Cumulative bonus-
ஆண்டு முடிவில் நீங்கள் க்ளைம் செய்யவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட % உங்கள் SI கூடும். எகா. உங்கள் 5லட்சம் பாலிசி அடுத்த ஆண்டு 5.25லட்சமாக உயரும். ப்ரீமியம் மாறாது.
8. Topup பாலிசி-
உங்கள் SIஐ அதிகரிக்க விரும்பினால் topup பாலிசி எடுக்கலாம். அதற்கு ப்ரிமீயம் குறைவாகவே இருக்கும். அதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம். மருத்துவமனையில் சேர்ந்த பிறகு topup போட முடியாது
9. Cashless hospital network-
உங்கள் வீட்டின் அருகே உள்ள மருத்துவமனையில் எந்த காப்பீடு நிறுவனம் cashless வசதி தருகிறதோ அதை தேர்ந்தெடுங்கள். உங்கள் பில்லை, eligibility பொறுத்து நேரடியாக காப்பீட்டு நிறுவனமே மருத்துவமனைக்கு செட்டில் செய்யும்.
10. Customer Information Sheet- வாடிக்கையாளர்கள் தகவல் புத்தகத்தை நன்றாக படித்து புரிந்து கொள்ளுங்கள். நாம் பெரும்பாலும் அதை படிப்பதில்லை. சந்தேகம் இருந்தால் TPA ஐ அணுகுங்கள்
கடந்த சனி அன்று இரவு 8 மணிக்கு ஒரு நல்லவர் எனது காரின் பின்புற பம்பரை சிதைக்க, நான் 100ஐ அழைக்க, ஏட்டைய்யா திருப்பி என்னை அழைத்தார். சம்பவத்தை விவரித்தேன். யாருக்கும் எந்தவித காயம் இல்லை. எனவே spot photo எடுத்து விட்டு கிளம்புங்கள்.
நாளை மாலை 3 மணிக்கு ஸ்டேஷன் வாருங்கள் என கூறினார்.
நெல்லையில் ஆய்வாளராக இருக்கும் நண்பரை அழைத்து process சரியா என cross check செய்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினேன்
ஞாயிறு மாலை மீண்டும் ஏட்டைய்யாவை அழைத்தேன். திங்கள் காலை 11 மணிக்கு வரச் சொன்னார்.
10.45க்கே சென்றேன். மனு, RC, Licence, Insurance etc கையில். கொடுத்து விட்டு காத்திருந்தேன். யாருக்கும் உட்கார இடம் இல்லை. என்னைப்போல ஒரு பத்து பேர். பெரும்பாலும் கூட 2/3 பேர். நானும் இன்னொருவரும் மட்டுமே தனியாக இருந்தோம். 30 நிமிடம் கழித்து வந்து வேலை குடும்ப விபரங்களை கேட்டார்.
உங்களிடன் குறிப்பிட்ட அளவு சேமிப்பு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்தால் வட்டி குறைவாகவே கிட்டும். டெபாசிட் போட்டால் அவசரத்திற்கு உடைக்க முடியாது. முதிர்வுக்கு முன்பு எடுத்தால் சில சமயம் penalty வரும்.
என்ன செய்யலாம்?
Flexi-deposit கணக்கை துவங்கி அதில் வையுங்கள். குறிப்பிட்ட இருப்பிற்கு மேல் (எ.கா. ௹10,000) டெபாசிட்டாக மாறி விடும். வட்டியும் சேமிப்புகணக்கு விட அதிகம் கிடைக்கும். 24×7 உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
புதிய தலைமுறை தனியார் வங்கிகள் (Axis, Hdfc, Icici) இந்த வசதியை வழங்குகிறது.
இந்த வசதி ஒரு சில பொதுத்துறை வங்கிகளிலும் உள்ளது. உங்கள் கணக்கு இருக்கும் கிளையை அணுகுங்கள் 🙂
வங்கி சம்பந்தப்பட்ட பதிவுகள் என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. இது நான் பணிபுரியும் வங்கி / வேறா எந்த ஒரு நிறுவனத்தின் கருத்தோ அல்ல. இதை எந்தவித சட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.
முன் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்
👍🏼👍🏼👍🏼
புதிய தொழிலுக்கு வங்கிக் கடன் - Project Finance
பலருக்கு தொழில் துவங்கி சொந்த காலில் நிற்க ஆசை, வேட்கை, கனவு.. ஆனால் எல்லோரும் அது நடப்பதில்லை. அவர்கள் சொல்லும் முதல் குறை 'எந்த பேங்க் கடன் தரான்'
உங்கள் project உங்களுக்கு தான் கனவு. மற்றவருக்கு அது just ஒரு project தான்
உங்கள் project viability / visibility இல்லாமல் எந்த வங்கியும் கடன் தராது. ஏன், உங்கள் பெற்றோர் தருவது சந்தேகமே.
Related industry இல் அனுபவம் இல்லையா? கடன் இல்லை. MBA படித்துவிட்டு 5 வருடம் இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றி விட்டு garment unit போட project ready செய்தால் எந்த
நம்ம ஊர் ஆதார்அட்டைக்கு expirydate கிடையாது. வளைகுடா நாடுகளில் குடிமக்கள் அட்டையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை renewal செய்ய வேண்டும்
உங்களின் வங்கிகணக்கு, சொத்து, பாஸ்போர்ட் முதல் கார் நம்பர்பிளேட் வரை எல்லாம் அத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். சாலை விதிமீறல் செய்தால்
தானாகவே உங்கள் அட்டையில் அபராதம் சேர்க்கப்படும். உங்களுக்கு notice ஏதும் வராது. நீங்கள் அவ்வப்போது onlineல் பார்த்து, அபராதத்தை கட்டிக் கொள்ள வேண்டும்.
உங்களின் குடிமக்கள் அட்டை expiry ஆகிவிட்டால் வங்கி கணக்கு முதல் பாஸ்போர்ட் வரை முடங்கி விடும்.
அபராதம் நிலுவையில்
இருந்தால் renewal ஆகாது. அதை கட்டினால் மட்டுமே renewal ஆகும். Renewal ஆகாவிட்டால் ATMல் 100 ரியால் கூட எடுக்க முடியாது.
இதுபோன்ற கடுமையான system மூலமே சாலையில் ஒழுக்கத்தை கொண்டு வரும்.
வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்தது. முதலில் காவல்துறை மூலம் பேரிக்கேட் வேத்தோம். அது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது. பின்னர் கிராம சபையில் தீர்மானம் போட்டு, ஆட்சியரிடம் அளித்து, குறை தீர்க்கும் நாளில் விடுமுறை எடுத்து,
கேள்விகள் கேட்டு, விடாமல் பின்தொடர்ந்து ஓராண்டு கழித்து போடப்பட்டது. இப்போது மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கிறார்கள்.
மக்களின் அதிகாரத்தை உணர்ந்த தருணம்.
இத்தகைய கிராம சபையை முடக்குவது அரசின் பொறுப்பற்ற செயல்.