நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!
நிறைய பேரு என்ன நினைக்கிறாங்கன்னா நாம தான் Screen Lock போட்டிருக்கோம்ல்ல..
இது போதாதான்னு..!
ஊ..ஊஹூம் 😕
பாதுகாப்பு என்பது வெறும் Main Gate அ பூட்டறது மட்டும் இல்ல, அதையும் தாண்டி (மேல குறிப்பிட்ட மாதிரி) நாம கவனிக்க வேண்டிய விஷயங்களும் நிறைய இருக்கு..!🤗
நம்ம Mobile க்கு Security சரியாக இல்லன்னா என்னெல்லாம் பண்ணலாம்..!😊
📜 Mobile ஐ தவறான வழிக்கு பயன்பாடுத்தலாம் (Misuse)
📜 தனியுரிமை பிரச்சினை
(Privacy Issues)
📜உங்களோட தகவல்களை திருடலாம்/அழிக்கலாம்
(DataTheft/Erase)
📜வைரஸ், Malware பாதிப்புகள்
📜கண்காணிக்கப்படலாம் (Tracking)
📜பண பரிவர்த்தனை மோசடி
(Financial Transactions Issues)
📜 தேவையற்ற விளம்பரங்கள்
( Unnecessary Ads)
📜Hacking க்கான வாய்ப்புகள்
📜Mobile ன் செயல் திறன் பாதிப்புகள் (Performance Issues)
...புரிஞ்சிருக்குமே மொபைலுக்கு செக்யூரிட்டி எவ்வளவு அவசியமானதுன்னு.!
சரி ஒவ்வோன்னா பார்ப்போம்😊
1. #Screen_Lock
இது ரொம்ப முக்கியமானது..!
இது இல்லைன்னா நீங்க மொபைலை எங்கேயாவது மறந்து வச்சுட்டு போயிட்டீங்கன்னா உங்க மொபலை மத்தவங்க மிஸ்யூஸ் பண்றதுக்கும், நோண்டுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.!🙄
இதுல
🔥 Password or Pin
🔥 Pattern Lock
🔥 Finger Print Lock
🔥 FaceRecognition Lock
இதுல முதல் இரண்டு Lock குமே Memory Lock. நீங்க இல்லாவிடினும் இது தெரிந்த வேறு ஒரு நபரால் Mobileஐ Unlock செய்ய முடியும்.
கடைசி இரண்டு BioMetric Lock. இத நீங்க இல்லாம பயன்படுத்த முடியாது. அனா நீங்க சுயநினைவு இல்லாமலோ, கேளிக்கை, விபத்து போன்ற சமயங்களில் மற்றவர்கள் தவறாக பயன்படுத்த
வாய்ப்புகள் அதிகம். இந்த ரெண்டுக்கும் ஆன சாதகபாதகங்கள் அப்படியே Vice-versa.
2. #No_to_UnknownApps
நம்ம வீட்டுக்கு புதுசா வரக்கூடிய நபர்கள் முன்வாசல் வழியாக தானே வரனும். அது விட்டுட்டு பின்வாசல் வழியாகவோ or ஓட்ட பிரிச்சோ வந்தா அதுக்கு என்ன அர்த்தம். அந்தமாதிரி தான் சிலநேரங்களில்
Virus or Malwares உள்ள சில UnKnown Apps ம்
🔥Mail களில் வரும் Attachments களில் தொற்றிக் கொண்டு வரலாம்.
🔥 Browser மூலம் இணையதளத்தை பயன்படுத்தும் போது வரும் Ad Links மூலம் ஒரு Appனுடைய Link ஆக ஒட்டிக்கொண்டு வரலாம்.
🔥Drive வழியாக பகிரப்படும் Files & Folders மூலமாகவும் வரலாம்.
🔥 WhatsApp, Telegram போன்ற
Messenger மூலமாக அனுப்பப்படும் Files வழியாகவும் வரலாம்.
இந்த App File (.apk) ஆனது நம்மிடம் அனுமதி பெறாமாலையே App ஆக அப்படியே நம்ம Mobileல Install ஆகி உட்கார்ந்துகிட்டு அது தன்னோட வேலைய பார்க்க ஆரம்பிச்சிடும்.
இதை எல்லாம் நாம் Allow பண்ணவே கூடாது.
இத தடுக்க ஒரே வழி,
Apps & Notifications ->
Special App Access ->
Install Unknow Apps ->
Not Allowed குடுத்தரனும்.
(எதெல்லாம் நம்ப முடியாதோ அதுக்கெல்லாம் Not Allowed குடுத்துருங்க.! Better எல்லாத்துக்கும் கொடுத்தரலாம்.)😊
எந்த App ஆக இருந்தாலும் Play Store வழியாக மட்டுமே Install செய்யுங்கள்..!
அல்லது Mobile Manufacturers ன் தளங்களில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்ளலாம். (Samsung Store, Sony Apps..etc)
சில Paid Apps இலவசமாக கிடைக்கிறதே என்று மாற்று வழிகளில் முயற்சிக்க வேண்டாம்.!🙄
3. #Device_Admin_Apps
ஒரு App க்கு நம்ம Device Admin App ங்கற அந்தஸ்து கொடுக்கிறது என்பது அந்த App க்கு
" Power of Attorney" யின் அதிகாரங்கள் கொடுப்பதற்கு சமம். உங்கள் சார்பாகவும் அல்லது தனித்தும் இதனால் எந்த விஷயங்களையும் செயல்படுத்த முடியும். இந்த உரிமைகள் எல்லாம் ,
ஒரு அவசர நிலையில் (Mobile Missing or Theft) போன்ற நேரங்களில் நம் Data பிறர் கையில் போகாமல் இருக்கவும், நம் Mobile தவறான முறையில் பயன்படுத்துவதை தடுக்கவும் இது பயன்படுகிறது..!
பெரும்பாலான Anti Virus App கள் தங்களை Admin App ஆக மாற்றிக்கொள்ளுமாறு உங்களுக்கு Push Notifications களை
தொடர்ந்து தள்ளிக்கொண்டே இருக்கும்..!
உங்க வீட்டு சாவியை மூன்றாவது நபரை நம்பி கொடுப்பது போல, எனவே Appsக்கு இந்த அனுமதி வழங்குவது என்பது அந்த App மீது வைத்திருக்கும் உங்கள் நம்பிக்கையை பொறுத்து..!
Google Product ஆன
"Find My Device" Appக்கு மட்டும் இந்த அந்தஸ்தை தருவது நல்லது.!😊
நார்மலா Officeல Permission வாங்கத்தான் நம்ம Manager கிட்ட போகனும்.!இங்க Google தன்னோட தத்துப் பிள்ளையான Android நம்முடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக சிறப்பாக செயல்பட Permissionsஆ கட்டுப்படுத்துறதுக்கே தனியா ஒரு Managerஐ போட்டு வச்சிருக்கான்.
அவன் தான் "Permissions Manager"..!
ஆரம்ப காலகட்டத்தில், Android ன் Versions ஆன Honeycomb, Icream Sandwich, JellyBean KitKat இது எல்லாம், ஒரு App ஐ நிறுவ (Install) வேண்டும் எனில் அது கேட்கக்கூடிய எல்லா Permissions க்கும் Agree பண்ணிதான் DownLoad பண்ணி Install பண்ண முடியும்.
அந்த Permissions அ Apps எப்படி பயன்படுத்தும் என்பது நமக்கு புரியாத புதிர்தான்.
ஒரு Face Beauty Appக்கு எதுக்கு,
Location ஐ Access பண்ண
Contacts ஐ Access பண்ண
Messages ஐ Read/Write பண்ண Permission 🤔
ஒரு Game Appக்கு எதுக்கு
Camera, Call Logs, Microphone Access பண்ண Permission🤔
அந்த அளவுக்கு ஒவ்வொரு Appம் மனசாட்சியே இல்லாம,நம்மளோட விஷயங்களை Access பண்ற மாதிரி எக்கச்சக்கமான Permissions கேட்கும்.!
(Angry Bird என்னெல்லாம் கேட்குது பாருங்க.!)
ஆனா, இப்போ வர்ற Oreo, Pie, Q versions ல இதுக்கு ஒரு விடிவுகாலம் ஓரளவு வந்திருக்கு.! (இன்னும் முழுமையாக வரவேண்டும்) அதாவது ஒரு App Download பண்ணும் போது அது என்னலாம் Permissions கேட்டிருந்தாலும்., நாம Download செய்து Install பண்ணும் போது நமக்கு எது எது தேவையோ அதுக்கு மட்டும்
Permission குடுத்தா போதும்..!
(ஆனா, அந்த App work பண்ண தேவையான Basic Permissions ஐ நம்ம தரணும். அப்போ தான் அதால work பண்ணவே முடியும்)
உதாரணமா : Memory Manager Appக்கு
Internal Storage + Memory Card Accessக்கான Permission குடுத்தா தான் அதால அந்த வேலைய செய்ய முடியும்.
அதுக்கு Camera, LocationAccess, இந்த மாதிரியான Permissions லாம் தேவையில்லாதது.!
Apps & Notifications ->
Permission Manager
இதுல போய் நம்ம Appsக்கு தேவையான Permissions ஐ கட்டுப்படுத்தலாம்.!
(SS for Permissions Given & Denied for some of the Apps usedby me.Apps r working normal)
Google Security Update பண்ணும் போதே Google Play System மும் Update ஆகிடும். சில நேரம் Apps பற்றிய புகார்கள், விதிமீறல்கள் போன்றவை தெரியவந்தால், சம்பந்தபட்ட Apps ஆனது Play Storeல் இருந்து நீக்கப்படும். அதே நேரம் அதிலிருந்து நம் Mobile ஐ பாதுக்காகவும்,
மேலும் இதுபோன்ற விதிமீறல்களில் மற்ற Appகள் ஈடுபடுகின்றனவா என்பதை கண்காணிக்கவும் Google Play Systemத்திற்கு மட்டும் தனியாக Updates வரும். எனவே அதை தவறாமல் உடனே செய்து கொள்வது நல்லது.! 😊
மற்றும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.!😊
நன்றி மக்களே.!
🙏🙏🙏
#வந்தாரை_வாழவைக்கும்_தமிழகம்😊
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!
அப்போ அதைபத்தி இங்க இருந்தா யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄
அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!
நம்ம மக்களோட
🔥நேர்மை,
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄
இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி
என்னுடைய மிக நெருங்கிய நண்பர்ன்னு சொல்றத விட அண்ணன்னு சொல்லலாம்.!
அவருடைய வீடுக்கு ஒரு வேலை விஷயமா கூப்பிட்டிருந்தாரு.!
ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அதே ஏரியால வேற வீடு மாத்தியிருந்தாரு.!
அதனால அவரு அட்ரஸ் சொன்ன அந்த சந்து வரைக்கும் போய்ட்டேன்.
அதுல தான் வீடுன்னும் தெரியும்..!, ஆனா, அதுக்குள்ள எந்த வீடுன்னு கண்டுபிடிக்க முடியல..! ஃபோன் பண்ணா 'நாட் ரீச்சபிள்' . சரி நம்மளால முடியாதா..!
விசாரிச்சு கேட்டு போகவேண்டியது தான்னு முடிவு பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சேன்.
அவர் பேரை சொல்லி விசாரிச்சா பக்கத்துல தெரியாதுன்னு சொல்லிட்டாங்க..!
அப்புறம் அவரு வேலை பார்க்குற இடத்தை பற்றி சொல்லி கேட்டுபார்த்தேன் அப்பவும் தெரியலன்னு சொல்லிட்டாங்க..!
அவரை பத்தி மேலும் சில விபரங்களை சொல்லி கேட்டேன்..!
யாருக்கும் சரியா தெரியலை..!
என்னடான்னு நினைக்கும் போது,
இந்த வரிகளில்
அந்த முண்டாசு தலைப்பாகை மற்றும் முறுக்கு மீசைக்குள்
ஒளிந்து இருக்கும் காதல் நம்முன் பரிணமித்து நிற்கிறது..!
உவமைகளின் அரசன் என்றுமே பாரதிதான்..!
🔥காதலியின் ஒரு சிறு புன்னகையை அவன் இவ்வாறு வர்ணிக்கிறான்.
சோலை என்பது பூக்களும் பூஞ்செடி கொடிகளும் நிறைந்த மனதிற்கு பிடித்த ரம்மியமான சூழல் நிறைந்த இடம். அந்த ரம்மியமான சூழலில்
நிலவின் ஒளியானது பூக்களின் மீது உள்ள நீர் திவலைகள் வழியே பிரதிபலிக்கும் போது அந்தப் பூக்கள் ஒளிர்வது போல தோற்றமளிக்கும். இதனால் அந்த அழகிய பூக்களின் அழகு இன்னும் மேம்பட்டு மிகவும் மனதை கவரும் படி பேரழகாக தெரியும்.
"நானும் அந்த பூஞ்சோலையில் உன்னுடைய அந்த சிறிய புன்னகையை
OTT தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு இப்போது நம்மில் பலர் நமது TV ஐ 40" + திரைகொண்ட Full HD அல்லது 4K TV ஆக Update செய்திருப்போம்.!
எல்லாம் ஒரு நல்ல Movie Watching Experience கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.!
ஒரு முழுமையான Movie Watching Experience என்பது பெரிய திரையில் படம் பார்ப்பது மட்டும் அல்ல அதை நல்லஒலி அனுபவத்துடன் கேட்டு ரசிப்பதும் ஆகும்.
இந்த நல்லஒலி அனுபவத்தை நமக்கு தரவல்லது தான்,
🔥 Sound Bar
🔥 Home Theater
சரி இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு முதல்ல பார்ப்போம்.😊
#Sound_Experience#ஒலி_அனுபவம்
சின்ன பிசிறு கூட இல்லாத முழுமையான ஒலி.! #இசைஞானி யின் பாடல்களில் தவழும் Bass Guitar, #ARR ன் பாடல்களில் இழையோடும் Beats இப்படி குண்டுசி விழும் சத்தம் முதல் டைனோசர் கத்தும் அலறல் வரை எல்லாம் அதன் அளவுகளில் மிகச்சரியாக தெளிவாக இருக்கவேண்டும்.😊
🎬 #Aapla_Manus#ஆப்லா_மனுஸ்
🎙️: Marathi
🍿 : Triller & Family Drama
❤️ : 91% Google User Rating
⭐ : 4
📺 : Netflix
📜 : ஒரு வயசானவர் அப்பார்ட்மென்ட் பால்கனியில் இருந்து கீழே விழுகிறார்..! அதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அவரது மகன் ஒரு வழக்கறிஞர். மருமகள் ஆசிரியை.
இது தற்கொலை அல்ல கொலை தான் என விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரி. வேலைக்கு செல்லும் மருமகள், அன்பிற்காக ஏங்கும் வயதான அப்பா, அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள்.. சமாளிக்க முடியாமல் தவிக்கும் மகன்... என ஃப்ளாஷ் பேக். இந்த நான்கு கதாபாத்திரங்கள் தான் படமே..!
இது கொலை தான் என காவல்துறை அதிகாரி நிறுவ முயறிச்சிக்கும் இடங்கள், விசாரனை காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்தது..! யூகிக்க முடியாத ஒரு திருப்பம், ஒரு சோசியல் மெசேஜ் என நிறைவு பெறுகிறது படம்.
வயதான அப்பாவாகவும், விசாரனை அதிகாரியாகவும் இருவேறு வேடங்களில்
ஒரு வினோத பழக்கம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தியாக வந்தது..!
அதாவது ஒருவருக்கு கல்யாணம் ஆகல அல்லது பெண் கிடைக்கல அப்படின்னா ரொம்ப எல்லாம் பெருசா வருத்தப்பட வேண்டாம்.
இவங்கள அணுகினால் போதும் அவருக்கு ஒரு பெண் மனைவியாக வாடகைக்கு கிடைப்பாள்.
இதை ஏற்பாடு செய்வதற்கென்று பிரத்யேகமான ஆட்கள் அங்கு உள்ளார்கள்.
அதுல சில கண்டீசன்ஸ் உண்டு.!
(எதுக்கும் Quoted Tweet ஐ ஒரு முறை முழுமையாக படிச்சுட்டு வந்துருங்க..!)😂
1.ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவளை மனைவி மாதிரி வைத்தக்கொள்வது