Bonafide Certificate என்ற சொல்லைப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். 'இவர் எங்கள் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தைச் சேர்ந்தவர்' என்று அந்தப் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தின் நிர்வாகத்தினர் வழங்கும் சான்றிதழ் இது என்று தெரியும், ஆனால், |1
அதை ஏன் 'Bonafide Certificate' என்று அழைக்கிறார்கள் என்றோ, இதிலிருக்கும் 'Bonafide' என்ற சொல்லின் நேரடிப் பொருள் என்ன என்றோ யோசித்ததில்லை.
இன்றைக்கு ஒரு கட்டுரையில் 'Mala fide' என்ற சொல்லைப் பார்த்தேன். இதை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதே என்று யோசிக்கும்போது, |2
இதற்கும் Bonafideக்கும் தொடர்பு இருக்குமோ என்று தோன்றியது, கூகுள் செய்து பார்த்தேன், இவை இரண்டும் எதிர்ச்சொற்கள் என்று தெரிந்துகொண்டேன்.
முதலில், Bonafide என்பது ஒரு சொல் இல்லையாம், ‘Bona fide’ என்று இதை இரண்டு சொற்களாகப் பிரித்து எழுதவேண்டும். |3
லத்தீன் மொழியில் இதன் பொருள், ‘in good faith’, அதாவது, நன்னம்பிக்கையுடன், நல்லெண்ணத்துடன் செய்யப்படுகிற செயல்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். ‘இந்த மாணவர் என் பள்ளியைச் சேர்ந்தவர்’ என்று அந்தப் பள்ளியின் முதல்வர் நன்னம்பிக்கையுடன் கையெழுத்திட்டு வழங்கும் சான்றிதழ் என்பதால் |4
அது ‘Bona fide certificate’ ஆகிறது.
மாறாக, Mala fide என்றால், ‘in bad faith’, அதாவது வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன், தீய நோக்கத்துடன் செய்யப்படுகிற செயல்களுக்கு இதைப் பயன்படுத்தலாம், தன்னையும் அறியாமல் (அதாவது, கெட்ட நோக்கம் இல்லாமல்) செய்த பிழைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. |5
கொஞ்சம் எளிமையாகச் சொல்வதென்றால், ஒரு புதுப்படம் வெளியாகிறது, நீங்கள் ஆர்வத்துடன் அதைப் பார்க்கிறீர்கள், படம் படு மோசமாக இருக்கிறது, ‘ம்ஹூம், தேறாது’ என்று ஃபேஸ்புக்கில் எழுதுகிறீர்கள், அது ஒரு bona fide விமர்சனம். ஏனெனில், |6
அந்த நடிகர்/இயக்குநர்/தயாரிப்பாளர் தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும், மற்ற ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் நீங்கள் அதை எழுதியுள்ளீர்கள். |7
ஒருவேளை, படம் உண்மையிலேயே நன்றாக இருந்து, அந்த நடிகரை உங்களுக்குப் பிடிக்காது என்பதால் நீங்கள் வேண்டுமென்றே ‘ம்ஹூம், இந்தப் படம் தேறாது’ என்று ஃபேஸ்புக்கில் எழுதினால் அது mala fide விமர்சனம். ஏனெனில், அந்தப் படம் ஓடிவிடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்துடன் நீங்கள் எழுதியுள்ளீர்கள்.|8/8
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எனக்கு அலுவலக வெள்ளைப் பலகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதன்முன் நின்று ஒரு பேனாவைத் திறந்துகொண்டால் போதும், 'கவித அருவிமாதிரி கொட்டுது' ஃபீலிங்தான். |1
இத்தனைக்கும் என்னுடைய கையெழுத்து திராபையானது, சுமாரான கோட்டுப்படங்களைக்கூட வரையத் தெரியாது. ஆனாலும் எதையும் வெண்பலகையில் சிந்திப்பதையே விரும்புவேன். எப்பேர்ப்பட்ட பிரச்னையை எடுத்துக்கொண்டாலும் சரி, அதைப் பலகையில் விரித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டால் போதும், |2
சிறு கட்டங்கள், வட்டங்கள், கோடுகள், அம்புக்குறிகளின் துணையோடு மளமளவென்று அதை உடைத்துத் தீர்வை நோக்கி நகர்ந்துவிடலாம் என்பதாக ஓர் எண்ணம்.
முன்பு நான் நிறையப் பயிற்சி வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தேன். அங்கெல்லாம் பவர்பாயின்ட் பிரசன்டேஷனைவிட வெண்பலகையைத்தான் மிகுதியாக நம்புவேன்.|3
ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் ஒரு சிறிய உணவகம், அசைவ உணவுக்கு மிகவும் புகழ் பெற்றது. எப்போது அங்கு சென்றாலும் பெரிய கோழிகள் ஒன்றிரண்டை அப்படியே உரித்துக் கம்பியில் குத்திச் சுட்டுக்கொண்டிருப்பார்கள். |1
அப்போது என்னுடன் தங்கியிருந்த இருவரும் அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றுதான் நினைவு. ஆனால், ஆந்திரக் காரத்தை ருசிப்பதில் அவர்களுக்கு ஏதோ தயக்கம் இருந்தது. ஆகவே, அவர்களும் தாற்காலிகமாகத் தாவர உண்ணிகளாகியிருந்தார்கள், ஊருக்குப் போகும்போதுமட்டும்தான் மாமிச உணவு. |2
இதனால், அவ்வளவு பக்கத்தில் இருக்கிற அந்தப் புகழ் பெற்ற உணவகம் எங்களுக்குப் பயன்படவே இல்லை. நாள்தோறும் இருமுறை அந்தப் பக்கமாக நடந்து செல்வதோடு சரி, எப்போதும் உள்ளே நுழைந்ததில்லை. |3
என்னுடைய நண்பர்கள் மூவர் சமீபத்தில் ஆளுக்கொரு புது முயற்சியை நிறைவுசெய்திருக்கிறார்கள்: ஒருவர் தமிழ்க் குறுநாவல் ஒன்றை எழுதியுள்ளார், இன்னொருவர் ஆங்கிலத்தில் முழு நீள நாவல் ஒன்றை எழுதியுள்ளார், |1
மூன்றாமவர் (இதுவரை சிறுகதை, நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தவர்) முதன்முறையாக ஒரு கதையல்லாத நூலை வெளியிட்டுள்ளார். வெவ்வேறு சூழ்நிலைகளில் இவர்கள் மூவருடனும் பேசியதில் எனக்குத் தென்பட்ட சில பொதுத்தன்மைகள்: |2
1. ஒரு புதிய விஷயத்தை நிறைவு செய்யும்போது ஒரே நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சி வருகிறது; இன்னொருபக்கம், மிகுந்த எரிச்சலும் வருகிறது, 'இந்த வேலையில்தான் எத்தனை தொல்லை! இனி இதைத் தொடவே கூடாது' என்று தோன்றுகிறது. |3
சிறு வயதில், எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் நெடுஞ்சாலை வழியில் ஒரு மளிகைக்கடை. அங்கு ஐம்பது பைசாவுக்குக் கை நிறைய வேர்க்கடலை கிடைக்கும். வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாகத் தின்றபடி நடந்தால் பள்ளி வந்துவிடும். |1
மறுநாள் மீண்டும் அதே ஐம்பது பைசா, அதே உப்புப்போட்ட வேர்க்கடலை, ஆண்டுமுழுக்க எனக்கு அதே தின்பண்டம்தான், ஒருநாளும் சலித்ததில்லை. |2
அந்த மளிகைக்கடையிலிருந்து சற்றுத்தள்ளி வலப்பக்கம் காந்தித்தாத்தா நின்றிருப்பார். அவருடைய சிலைக்குக் கீழே நீளமாகத் தாடி வைத்த இஸ்லாமியார் ஒருவருடைய தின்பண்டக்கடை. வேர்க்கடலையில் வேறு தினுசுகளும் உண்டு என்பதை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். |3
17 வயது இளைஞர் ஒருவர், பள்ளிப்படிப்பில் ஆர்வமில்லை, ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நினைக்கிறார், சட்டைப்பையில் வெறும் 200 ரூபாயுடன் பெரிய ஊரொன்றுக்குச் செல்கிறார், மிகவும் அலைந்து திரிந்தபிறகு, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலைக்குச் சேர்கிறார். |1
அந்த மென்பொருள் நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு கணினி இருக்கிறது, அலுவலகத்தில் கூட்டமில்லாத நேரங்களில் இவர் அந்தக் கணினியை நோண்டிப்பார்க்கிறார், சில விஷயங்களைத் தானே கற்றுக்கொள்கிறார். |2
ஒருநாள், இவர் இப்படிக் கணினியில் வேலை செய்துகொண்டிருப்பதை இன்னோர் ஊழியர் பார்த்துவிடுகிறார், ஆனால், அதட்டவில்லை, மிரட்டவில்லை, |3
எங்கள் நிறுவனத்திலுள்ள ஒரு வேலை வாய்ப்பைப்பற்றி இன்று மதியம் பதிவுசெய்திருந்தேன். அதற்காகப் பலர் தங்களுடைய தகவல்களை அனுப்பியிருந்தார்கள், அவற்றை உரியவர்களுக்கு அனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறேன். |1
அந்த மின்னஞ்சல்களையெல்லாம் மேலோட்டமாக இன்னொருமுறை பார்த்தபோது, இவ்விதமான வேலை நாடல் மின்னஞ்சல்களுக்கென்று சில சிறு குறிப்புகளை எழுதத் தோன்றியது. வேலை தேடுகிற புதியவர்கள்/ வேலை மாற எண்ணியுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். |2
1. உங்களுடைய படிப்பு, வேலை அனுபவம் போன்ற விவரங்களைக் கொண்ட கோப்புக்கு resume.docx என்று பொத்தாம்பொதுவாகப் பெயர் வைக்காதீர்கள். உங்கள் முழுப்பெயர் அதில் இருக்கட்டும், இயன்றால் உங்களுடைய சிறப்புத்திறன், எத்தனை வருட அனுபவம் போன்றவற்றையும் சேர்க்கலாம். |3