எனக்கு அலுவலக வெள்ளைப் பலகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதன்முன் நின்று ஒரு பேனாவைத் திறந்துகொண்டால் போதும், 'கவித அருவிமாதிரி கொட்டுது' ஃபீலிங்தான். |1
இத்தனைக்கும் என்னுடைய கையெழுத்து திராபையானது, சுமாரான கோட்டுப்படங்களைக்கூட வரையத் தெரியாது. ஆனாலும் எதையும் வெண்பலகையில் சிந்திப்பதையே விரும்புவேன். எப்பேர்ப்பட்ட பிரச்னையை எடுத்துக்கொண்டாலும் சரி, அதைப் பலகையில் விரித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டால் போதும், |2
சிறு கட்டங்கள், வட்டங்கள், கோடுகள், அம்புக்குறிகளின் துணையோடு மளமளவென்று அதை உடைத்துத் தீர்வை நோக்கி நகர்ந்துவிடலாம் என்பதாக ஓர் எண்ணம்.
முன்பு நான் நிறையப் பயிற்சி வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தேன். அங்கெல்லாம் பவர்பாயின்ட் பிரசன்டேஷனைவிட வெண்பலகையைத்தான் மிகுதியாக நம்புவேன்.|3
யாரோ எழுதிய ஸ்லைடை அப்படியே நிறுத்திவிட்டுப் பலகையில் எழுதத் தொடங்கினால், சில நிமிடங்களில் மாணவர்களை அப்படியே நம்வசமாக்கிவிடலாம். Starting with a clean slate என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அதைப்போல, ஒரு விஷயத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் இருக்கிறவர்களை |4
ஒரு சிறு புள்ளிகூட இல்லாத வெண்பலகையின்முன் அமரவைத்து, அதிலிருந்து படிப்படியாக அனைத்தையும் விளக்கிப் புரியவைத்து மகிழ்விப்பது மிகப் பெரிய மன நிறைவைத் தருகிற விஷயம். |5
அடுத்த வகுப்பில், இன்னொரு வெண் பலகை இருக்கும். இதே தலைப்பைப்பற்றி எதுவும் தெரியாத ஒருவரும் இருப்பார். மறுபடி ஆனா, ஆவன்னாவிலிருந்து தொடங்கவேண்டும். ஆனால், அதற்கான சிறு சலிப்பும் என்னிடம் தெரியாது. பலகையை ஆளும் பணி அப்படிப்பட்ட பரவசம் தருவது! |6
சென்ற ஆண்டு, எங்களுடைய மேலதிகாரிகள் சிலர் ஐரோப்பாவிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களுக்குச் சில தொழில்நுட்ப விஷயங்களைச் சொல்லித்தரவேண்டியிருந்தது. 'ஒரு பவர்பாயிண்ட் செஞ்சுடலாமே' என்று யாரோ சொன்னார்கள். 'ம்ஹூம், வேணாம்' என்றார் என்னுடைய சக ஊழியர், 'வெறும் வொய்ட்போர்டிங் போதும்!'|7
அந்தக் கூட்டம் தொடங்குவதற்குக் கால் மணிநேரம் முன்பாக அவர் என்னுடைய மேசைக்கு வந்தார், 'கிளம்பலாமா?'
'இன்னும் நேரம் இருக்கே' என்று கடிகாரத்தைப் பார்த்தேன் நான். |8
'பரவாயில்லை வாங்க' என்று என்னை இழுத்துக்கொண்டு கூட்ட அறைக்குச் சென்றார். வண்ணப் பேனாக்களை எடுத்தார். மளமளவென்று வெண்பலகையை நிரப்பத் தொடங்கினார். |9
சில நிமிடங்கள்தான், நானும் அவருடன் சேர்ந்துகொண்டேன். இருவரும் சேர்ந்து பேசியபடி எங்களுடைய இரண்டாண்டு உழைப்பை ஒரு பலகையில் நிரப்பிவிட்டோம். மேலதிகாரிகள் வரும்போது அவர்களிடம் நாங்கள் பேசவேண்டிய விஷயங்கள் அனைத்தும் கண்ணெதிரில் தயாராக இருந்தன. |10
என் அலுவலகத்தில் பலரும் பலகைப் பிரியர்கள்தான். ஏதேனும் ஒரு கூட்டத்தில் யாராவது (அநேகமாக அது நானாகதான் இருக்கும்) வெண்பலகையை நோக்கிச் சென்று எழுதத் தொடங்கினால் போதும், மறுகணம், பேசாதவர்களும் பேசுவார்கள், சில நிமிடங்களில் |11
அந்தப் பலகையைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் சேர்ந்துவிடும், அழிப்பார்கள்,மாற்றுவார்கள், சேர்ப்பார்கள்,வண்ண வண்ணப் பேனாக்களைப் பயன்படுத்திச் சுவை கூட்டுவார்கள். அதன்பிறகு, மேசையைச் சுற்றி உட்கார்ந்திருப்பவர்களும் வேறு வழியில்லாமல் எழுந்து வந்து விவாதத்தில் சேர்ந்துகொண்டுவிடுவார்கள்|12
வன்பொருள், மென்பொருள், ஆள் பலம், நாள் கணக்கைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இஷ்டம்போல் கற்பனை செய்ய அந்தப் பலகை மிக வசதி. |13
இவ்வாறு விவாதித்தபின், அந்தப் பலகையைப் படமெடுத்துச் சேமிக்கும் வழக்கமும் உள்ளது. ஆனால், அந்தப் படங்கள் பெரும்பாலும் டெலகிராமில் கிடைக்கிற திருட்டு பிடிஎஃப் ஈபுத்தகங்களைப்போலதான், ஆவலுடன் டவுன்லோட் செய்யப்படும், ஆனால், பெரும்பாலும் பயன்படுத்தப்படாது. |14
ஏனெனில், வெண்பலகையின் படங்கள் வெறும் படங்கள்தான். அவற்றில் வெண்பலகையின் சிறப்புகள் எவையும் இல்லை. நினைத்த நேரத்தில் ஒரு கோடு போட்டு முற்றிலும் வேறொரு பரிணாமத்துக்குக் கொண்டுசெல்ல இயலாத பொம்மையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அருவியின் படத்தை வைத்துக்கொண்டு குளிக்கவா முடியும்?|15/15
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Bonafide Certificate என்ற சொல்லைப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். 'இவர் எங்கள் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தைச் சேர்ந்தவர்' என்று அந்தப் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தின் நிர்வாகத்தினர் வழங்கும் சான்றிதழ் இது என்று தெரியும், ஆனால், |1
அதை ஏன் 'Bonafide Certificate' என்று அழைக்கிறார்கள் என்றோ, இதிலிருக்கும் 'Bonafide' என்ற சொல்லின் நேரடிப் பொருள் என்ன என்றோ யோசித்ததில்லை.
இன்றைக்கு ஒரு கட்டுரையில் 'Mala fide' என்ற சொல்லைப் பார்த்தேன். இதை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதே என்று யோசிக்கும்போது, |2
இதற்கும் Bonafideக்கும் தொடர்பு இருக்குமோ என்று தோன்றியது, கூகுள் செய்து பார்த்தேன், இவை இரண்டும் எதிர்ச்சொற்கள் என்று தெரிந்துகொண்டேன்.
முதலில், Bonafide என்பது ஒரு சொல் இல்லையாம், ‘Bona fide’ என்று இதை இரண்டு சொற்களாகப் பிரித்து எழுதவேண்டும். |3
ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் ஒரு சிறிய உணவகம், அசைவ உணவுக்கு மிகவும் புகழ் பெற்றது. எப்போது அங்கு சென்றாலும் பெரிய கோழிகள் ஒன்றிரண்டை அப்படியே உரித்துக் கம்பியில் குத்திச் சுட்டுக்கொண்டிருப்பார்கள். |1
அப்போது என்னுடன் தங்கியிருந்த இருவரும் அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றுதான் நினைவு. ஆனால், ஆந்திரக் காரத்தை ருசிப்பதில் அவர்களுக்கு ஏதோ தயக்கம் இருந்தது. ஆகவே, அவர்களும் தாற்காலிகமாகத் தாவர உண்ணிகளாகியிருந்தார்கள், ஊருக்குப் போகும்போதுமட்டும்தான் மாமிச உணவு. |2
இதனால், அவ்வளவு பக்கத்தில் இருக்கிற அந்தப் புகழ் பெற்ற உணவகம் எங்களுக்குப் பயன்படவே இல்லை. நாள்தோறும் இருமுறை அந்தப் பக்கமாக நடந்து செல்வதோடு சரி, எப்போதும் உள்ளே நுழைந்ததில்லை. |3
என்னுடைய நண்பர்கள் மூவர் சமீபத்தில் ஆளுக்கொரு புது முயற்சியை நிறைவுசெய்திருக்கிறார்கள்: ஒருவர் தமிழ்க் குறுநாவல் ஒன்றை எழுதியுள்ளார், இன்னொருவர் ஆங்கிலத்தில் முழு நீள நாவல் ஒன்றை எழுதியுள்ளார், |1
மூன்றாமவர் (இதுவரை சிறுகதை, நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தவர்) முதன்முறையாக ஒரு கதையல்லாத நூலை வெளியிட்டுள்ளார். வெவ்வேறு சூழ்நிலைகளில் இவர்கள் மூவருடனும் பேசியதில் எனக்குத் தென்பட்ட சில பொதுத்தன்மைகள்: |2
1. ஒரு புதிய விஷயத்தை நிறைவு செய்யும்போது ஒரே நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சி வருகிறது; இன்னொருபக்கம், மிகுந்த எரிச்சலும் வருகிறது, 'இந்த வேலையில்தான் எத்தனை தொல்லை! இனி இதைத் தொடவே கூடாது' என்று தோன்றுகிறது. |3
சிறு வயதில், எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் நெடுஞ்சாலை வழியில் ஒரு மளிகைக்கடை. அங்கு ஐம்பது பைசாவுக்குக் கை நிறைய வேர்க்கடலை கிடைக்கும். வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாகத் தின்றபடி நடந்தால் பள்ளி வந்துவிடும். |1
மறுநாள் மீண்டும் அதே ஐம்பது பைசா, அதே உப்புப்போட்ட வேர்க்கடலை, ஆண்டுமுழுக்க எனக்கு அதே தின்பண்டம்தான், ஒருநாளும் சலித்ததில்லை. |2
அந்த மளிகைக்கடையிலிருந்து சற்றுத்தள்ளி வலப்பக்கம் காந்தித்தாத்தா நின்றிருப்பார். அவருடைய சிலைக்குக் கீழே நீளமாகத் தாடி வைத்த இஸ்லாமியார் ஒருவருடைய தின்பண்டக்கடை. வேர்க்கடலையில் வேறு தினுசுகளும் உண்டு என்பதை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். |3
17 வயது இளைஞர் ஒருவர், பள்ளிப்படிப்பில் ஆர்வமில்லை, ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நினைக்கிறார், சட்டைப்பையில் வெறும் 200 ரூபாயுடன் பெரிய ஊரொன்றுக்குச் செல்கிறார், மிகவும் அலைந்து திரிந்தபிறகு, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலைக்குச் சேர்கிறார். |1
அந்த மென்பொருள் நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு கணினி இருக்கிறது, அலுவலகத்தில் கூட்டமில்லாத நேரங்களில் இவர் அந்தக் கணினியை நோண்டிப்பார்க்கிறார், சில விஷயங்களைத் தானே கற்றுக்கொள்கிறார். |2
ஒருநாள், இவர் இப்படிக் கணினியில் வேலை செய்துகொண்டிருப்பதை இன்னோர் ஊழியர் பார்த்துவிடுகிறார், ஆனால், அதட்டவில்லை, மிரட்டவில்லை, |3
எங்கள் நிறுவனத்திலுள்ள ஒரு வேலை வாய்ப்பைப்பற்றி இன்று மதியம் பதிவுசெய்திருந்தேன். அதற்காகப் பலர் தங்களுடைய தகவல்களை அனுப்பியிருந்தார்கள், அவற்றை உரியவர்களுக்கு அனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறேன். |1
அந்த மின்னஞ்சல்களையெல்லாம் மேலோட்டமாக இன்னொருமுறை பார்த்தபோது, இவ்விதமான வேலை நாடல் மின்னஞ்சல்களுக்கென்று சில சிறு குறிப்புகளை எழுதத் தோன்றியது. வேலை தேடுகிற புதியவர்கள்/ வேலை மாற எண்ணியுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். |2
1. உங்களுடைய படிப்பு, வேலை அனுபவம் போன்ற விவரங்களைக் கொண்ட கோப்புக்கு resume.docx என்று பொத்தாம்பொதுவாகப் பெயர் வைக்காதீர்கள். உங்கள் முழுப்பெயர் அதில் இருக்கட்டும், இயன்றால் உங்களுடைய சிறப்புத்திறன், எத்தனை வருட அனுபவம் போன்றவற்றையும் சேர்க்கலாம். |3