கூந்தல் எண்ணெய், பற்பசை மற்றும் சோப்பு போன்ற பொது பொருள்களின் வரி விகிதங்கள் ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்தில் 29.3 சதவீதத்தில் இருந்து ஜிஎஸ்டியில் 18 சதவீதமாகக் குறைந்தது.
குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், தூசி உறிஞ்சும் இயந்திரங்கள், உணவு அரவை மற்றும் கலவை இயந்திரங்கள், பழச்சாறு பிழியும் இயந்திரங்கள், முக சவர இயந்திரங்கள், முடி கிளிப்புகள் ஆகிய அனைத்தின் மீதான வரி விகிதம் ஜிஎஸ்டியின் காரணமாக 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்தது.
திரைப்பட டிக்கெட்டுகளின் மீதான வரி முன்பு 35-இல் இருந்து 110 சதவீதத்துக்கு இடையில் இருந்த நிலையில், 12 மற்றும் 18 சதவீதமாக சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் குறைக்கப்பட்டது.