கூடி நின்ற ஆயிரமாயிரம் உள்ளங்களும் துடித்தன. ஒரே அமைதி! என்ன நடக்கப் போகிறதோ என்று மக்கள் வெள்ளம் அலையடங்கிக் கிடந்தது. துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் வளையம் வளர்ந்தது. கலெக்டர்,டி.எஸ்.பி.,சர்க்கிள், சப் இன்ஸ்பெக்டர்கள், மாஜிஸ்டிரேட் சார்ஜண்ட் எல்லாரும் எங்கள் பக்கம் வந்தனர்.
ஏன் இப்படிப் படுத்திருக்கிறீர்கள்?" என்றனர்.
“எங்கள் இலட்சியத்தை எடுத்துச் சொல்வதற்காக!” என்றேன். இது பொதுஜனங்களுக்கும், பிரயாணிகளுக்கும் இடையூறான காரியம் அல்லவா.
"அப்படி நீங்கள் கருதினால் வருந்துகிறோம். ஆனால் இந்தப் பொது ஜனங்களைக் கேளுங்கள். அல்லது வண்டியிலுள்ள பிரயாணிகளைக் கேளுங்கள். அவர்கள் சொல்லட்டும், “டால்மியாபுரமே இருக்க வேண்டும், இந்தப் போராட்டம் கூடாது' என்று. நாங்கள் உடனே எழுந்து விடுகிறோம்" என்று படுத்துக் கொண்டே பதில் சொன்னோம்.
டால்மியாபுரம் வேண்டாம் என்றால், அதற்கு மேலிடத்திற்கு எழுதுங்களேன்.
எல்லா முயற்சிகளும் முடிந்து விட்டன. தீட்டிய கடிதங்கள் எவ்வளவு! தீர்மானங்கள் எத்தனை! தில்லியின் திருநோக்குப்பட வில்லை, எம்மீது! ஆகவே அவர்கள் கவனத்தை இழுக்க இம்முறையைக் கையாள்கிறோம்.
இப்படிச் செய்வதால் வெற்றி கிடைத்துவிடுமா ?
எங்களுக்கு முன்னே நிற்க வைக்கப்படும்- இந்த ரயிலின் 'கிரீச் என்ற சப்தமோ- அல்லது ரயில் எம்மீது ஏறி எமது எலும்புகள் மளுக் மளுக்' என்று முறியும் சப்தமோ- தில்லி ஆட்சி பீடத்தின் காதில் எட்டுமோ எட்டாதோ? மக்கள் மன்றத்துக்கு எட்டும்.
நிச்சயமாக எட்டும். அது இந்த ஆதிபத்தியக்காரரை ஆயிரம் தேள்போலக் கொட்டும். அது போதும், எங்களுக்கு!
சொல்கிறோம்- கேளுங்கள், உடனே எழுந்து விடுங்கள்!" "
"அதுதான் 'கல்லக்குடி' என்று ஒட்டிவிட்டீர்களே?"
ஓட்டுவதென்ன, எங்கள் ஓவியர்களை விட்டு எழுதியே தருகிறோம், கல்லக்குடி என்ற பலகையை!
ஆனால் ஆட்சி, அதிகார பூர்வமாகச் சொல்ல வேண்டும்.
அதிகாரிகளின் கேள்விகளும், என் பதில்களும் அதோடு முடிந்து விட்டன. "ஆல் ரைட்” என்று கூறிவிட்டு அதிகாரிகள் அப்பால் நகர்ந்தார்கள்.
புகைவண்டி 'கூ' என்று கிளம்பியது. சக்கரங்கள் சுழன்றன ஊளையிட்டது.
கடைசியாக ஒருமுறை கதிரவனைப் பார்த்தேன். கல்லக்குடியைப் பார்த்துக் கொண்டேன். என்னைச் சீராட்டிய தமிழ் மாதாவை ஆசை தீரப்பார்த்துக் கொண்டேன்.
எதிரே நின்றவர்களையும் பார்த்துக் கொண்டேன்.
எல்லாம் நொடியில் முடிந்தது. கண்ணை மூடிக் கொண்டேன். சாவின் இன்ப முத்தத்திற்குக் கன்னத்தைத் தயார் படுத்திக் கொண்டோம். எல்லோரும், ஆம், ஐவரும். கடகட வெனக் கிளம்பிய புகை வண்டி நகர்ந்ததை உணர்ந்தேன்.
தமிழ் வாழ்க! என இருதயம் உச்சரித்தது. ஒரு சப்தம் மீண்டும் கண்ணைத் திறந்தேன். உயிரோடிருந்தேன். அதை உணர்ந்தேன் சிறிது தூரத்தில் புகை வண்டி என் உடலை ஒட்டினாற்போல் நின்று கொண்டிருந்தது.
மீண்டும் அதிகாரிகள் வந்தனர் முடிவென்ன என்றனர் .
முடிவைத்தான் எதிர்பார்க்கிறோம்” என்றேன்
சரி, எல்லோரும் கைது செய்யப்படுகிறீர்கள்" என்றார்கள்.
"தண்டவாளத்தில் தலைவைத்துப்படு என்றாலும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் சமமாகக் கருதுபவர் தான் என் தம்பி கருணாநிதி “
⁃பேரறிஞர் அண்ணா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாட்டிலேயே மொழியின் பெயரை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
-சஞ்ஜிப் பானர்ஜி
(சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி )
அண்ணா “தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவில்லை என்றால் வடவர்கள் நம்மை தமிழர்கள் என்று அல்ல பெரும்பாலும் மதராசி என்று தான் விழித்திருப்பார்கள்”
1/n
“தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்,18-07-1967
⁃பேரறிஞர் அண்ணா
“தமிழ்நாடு " என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்பு இருந்த திரு வெங்கட்ராமன் அவர்கள் ஒரு நாட்டுக்கும் இன்னொரு 2/n
நாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம்
திருத்தி எழுதப்பட வேண்டிவரும் அதனாலே சிக்கல்கள் நாடுகளுக்கெல்லாம் விளையும் என்றெல்லாம் சொன்னார்கள் அதிலிருந்து அவர்கள் வெளிநாடுகளெல்லாம் போய் வந்தார்கள் என்பதைத்தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாக சிக்கல்கள் 3/n
காங்கிரஸ் கட்சி தொண்டர்: வாப்பா, கழகம்! என்ன உங்க கழகத்திலே இப்படிக் குழப்பம். . . .?
தி. மு. க. தொண்டர்: குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டதே. நீ என்னப்பா தூங்கி விழித்தவன் கதைபோலப் பழைய விஷயம் பேசுகிறாயே. . 1/n
கா. க. : ஒரே அடியாக மூடி மறைக்கிறாயே! பெரிய புள்ளி எல்லாம் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக்கட்சி அமைத்துக்கொண்டு, உங்களை வெளுத்து வாங்கு கிறார்கள், நாள் தவறாமல்.
தி. மு. க. : அட, அதைச் சொல்கிறாயா? உள்ளே இருந்து உருக்குலைப்பதைவிட, கூடஇருந்துகொண்டே, குமுறிக் கொண்டிருப்பதைவிட, 2/n
சமயம் பார்த்துக் குழப்பம் செய்வதைவிட, தனியே போய்விடுவது நல்லதுதானே, யாராருக்குக் கழகம் பிடிக்கவில்லை, கழக இலட்சியம் பிடிக்கவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. கூடஇருப்பவர்களிலேயே, யாருக்கு, எந்த நடவடிக்கை பிடிக்கவில்லையோ, எந்தக் கொள்கை பிடிக்கவில்லையோ, எந்தத் 3/n
உடல் வலியை காரணம் காட்டி மக்கள் சேவையில் பின்வாங்காமல் செயலாற்றிய ஒரே தலைவர் “கலைஞர்” .
அருந்ததயினருக்கான 3% உள் ஒதுக்கீடு மசோதாவை முன்மொழிந்து கலைஞர் எழுதிய முன்னுரை வருமாறு:
1/n
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேராசிரியர் அவர்களே,சட்டப் பேரவை அனைத்துக் கட்சி உடன்பிறப்புகளே,
இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும் கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை மன்னிக்க வேண்டுகிறேன் 2/n
நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் நங்கூரம் போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி! ஒன்று உடல் வலி - பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி .
3/n
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் தொடர்பாக டாக்டர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற உரை . (14-03-1997). 1/n
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் அதிவிரைவில் வளர்ச்சி அடைந்து வருகின்ற, வேகமாக மாறுதல் அடைந்து வருகின்ற தகவல் தொழில் நுட்பத் துறையில் நாம் பின்தங்கிவிடாமல் 2/n
21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற தகவல் தொழில் நுட்பத் துறையிலே உலகத்தில் முன்னோடியாக விளங்குவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத்தான் இந்தத் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம்.
In (17/10/2020) yesterday’s debate at @PTTVOnlineNews show named “Naer Pada Pesu”, Dr @sumanthraman , has abruptly recorded as the RTI information provided by the Director of Medical Council as a fake document, when it was presented in a public talk show by @Dr_Ezhilan 1/n
It is a dirty mind game being played by the current government for not making the exact information reach the general public. The information provided by @Dr_Ezhilan was released as a statement by opposition leader @mkstalin , and it had a vide circulation in the social media
Knowing all this, Dr @sumanthraman , being a professional, is trying to create a dark cloud regarding the Medical college admission among the general public.