"அவர்கள் ஊழல்வாதிகள்தான் ; குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வருபவர்கள்தான், நாத்திகர்தான்; ஆனால், என்ன செய்ய? வேறு மாற்று இல்லையே " என்று ஒவ்வொரு முறை வாக்களித்தபின் "உங்களை நீங்களே தேற்றிக்கொண்டிருக்கீறீர்கள் "-இவ்வாறு வாக்காளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல்
செய்து இருக்கிறார் "துக்ளக்"கில் மாலன் என்ற பூணூலார்.
முதலில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் யோக்கியதை பார்ப்பனர்களுக்கு கிடையவே கிடையாது.
மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் , நாங்கள் மட்டுமே தான் துவிஜாதியினர்- இருபிறப்பாளர்கள் என்று அறிவிக்கும் பூணூலை அணிந்து கொள்வோர் யாராக
இருந்தாலும் பார்ப்பன அல்லாதவர்களுக்கு அறிவுரை கூறவோ வழிக்காட்டவோ யோக்கியதை கிடையாது.
சங்கர மடம் என்ற குறிப்பிட்ட பார்ப்பனர்கள் தான் சங்காரச்சாரியாராக வர முடியும் என்பதை வரிந்துக் கட்டிக் கொண்டு பேசும்-எழுதும் கூட்டத்துக்கு அரசியல் வாரிசு பத்தி பேச கிஞ்சிற்கும் உரிமை கிடையாது.
கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப்பனர்கள் தான் வர முடியும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று கூக்குரல் போடும் கூட்டம் குடும்ப அரசியல் குறித்துப் பேனா நகர்த்த எந்த வகையிலும் உரிமை படைத்தது அல்ல.
கிரிக்கெட்டில் இப்பொழுது சாதனை படைத்த இளைஞர்கள் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் ;
வாரிசு அடிப்படையில் வந்தவர்கள் அல்ல என்று எழுதுகிறார்கள்.
ஜீவா என்ற திரைப்படம் வந்ததே நினைவு இருக்கிறதா? முதுகில் பூணூல் இருக்கிறதா என்று தடவிப் பார்த்து ஆட்டத்தில் இடம் கொடுப்பது குறித்து முகரையில் அறைவது போன்ற காட்சி இடம் பிடித்ததே - மறந்து போயிற்றா?
கிரிக்கெட் என்றாலே அக்ரகாரவாசிக்கு உரியது என்ற நிலைப்பற்றி மாலன்கள் சிந்திக்கட்டும்.முதலில் மற்றவர்களை சமமானவர்கள் என்ற மதிக்கும் வகையில் பூணூலை அறுத்து எறிந்து விட்டு போனா பிடிக்கட்டும்.
அடம் ஸ்மித்ன் முழுமையான செலவினங்கள் அடிப்படையிலான அனுகூலங்கள் பற்றிய கோட்பாடு(Theory of Absolute Cost Advantage) ஒரு அரசியல் பொருளாதாரப்புரிதல் அற்ற அரைவெந்த கோட்பாடு.
இதற்கு உதாரணமாய் இந்தியா, சீனா என்ற இரண்டு நாடுகளை எடுத்துக்கொள்வோம்.
இந்த நாடுகள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதை நாம் அறிவோம். இங்கே உதாரணத்திற்கு பால், செல்போன் என்ற இரண்டு பொருட்களை மட்டும் எடுத்துகொள்வோம்.
இந்தியாவை விட சீனா பால் உறுபத்திக்கு அதிகம் செலவு செய்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அதேசமயம் செல்போன் உற்பத்தியில் இந்தியாவை விட சீனா மிகக்குறைந்த விலைக்கு உற்பத்தி செய்வதாகவும் எடுத்துக்கொள்வோம்.
”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?” விகடனின் கேள்வி
”விடுதலைப் புலிகளின் தலைவர் #பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர்
பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவறமாட்டார்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.
1986-ம் ஆண்டு
நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்து, ஈழப் பிரச்னை தொடர்பாக சுமுகமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி
கடவுளானாலும், காந்தியார் ஆனாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படுகிறவரைதான் - பயன்படவில்லை என்றால் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி அவை குப்பைக் கூடையில்தான்.
இதோ ஒரு தகவல்:
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞர் அவர்களோ 'எங்கள் ஆட்சியில் அய்யா பெரியார் போராட்டம் நடத்துவதா?' என்று கூறி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்.
ஒருமுறை அல்ல, இருமுறை சட்டம் இயற்றினார்.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டு 206 மாணவர்கள் 18 மாதங்கள் பயிற்சி பெற்று தீட்சையும் பெற்றனர் (2008).
Married couple should behave to each other like bosom
friends. In any matter, the bridegroom should not have the vanity that he is
the husband. The bride also should behave in such a manner as not to think of
herself as her husband's slave and cook.
Married couple should not be hasty in bringing forth children. It will be good
if children are born at least three years after the marriage.
Married people should spend according to what they earn. They should not
borrow. Even if the income be meagre,
they should save at least a little. This
is what I would call discipline in life.
Married people should have a helpful bent of mind. Even if they cannot do
good, they should desist from doing harm.
ஆச்சாரியாருக்கு பெரியார் பதில்! “நாங்கள் எறும்புகள் தான்”
நம்மைப் பார்த்து ஆச்சாரியார் எறும்புகள் என்கிறார். எறும்புகளையும், மூட்டைப் பூச்சிகளையும் நசுக்குவது போல நம்மை ஒழித்து விடுவதாகவும் முதலமைச்சர் ஆச்சாரியார் கூறியுள்ளார்.
நாம் உண்மையில் எறும்புகளைப் போல்தான் இருக்கிறோம். டாக்டர்கள் இன்ஜக்ஷன் போடும் போது பயப்படாதே! ஒன்றும் செய்யாது; சாதாரணமாக எறும்பு கடித்தது போல் இருக்கும் என்று கூறுகிறார். எறும்புக்கடி சாதாரணம் என்றுதானே பொருள். அந்தக் கருத்தை வைத்துத்தான் ஆச்சாரியார் கூறினார்.
நம்மிடம் விஷம் இல்லை என்று தெரிந்து கொண்டார். விஷமிருப்பதாக அவர் நினைத்திருந்தால் தேள், பாம்பு என்று சொல்லியிருப்பார். திராவிடர் நிலை இத்தகு நிலையில் கீழாகப் போய் இருக்கிறது. மிக மிகத் தாழ்வான நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறோம்.
பெரிய மனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றி ருந்தேன்- நீங்களே வந்துவிட்டீர்கள்.
சாஸ்திரி: அப்படியா, என்ன விசேஷம்?
பெரிய மனிதர்: ஒன்றுமில்லை; ஒரு தத்துக்கிளியினை கழுத்தில் ஒரு பையன் கயிறு கட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?
சாஸ்திரி : ஆஹா, உண்டு!
அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்-இல்லாவிட்டால் அந்தப் பையனைப் பார்க்கவே கூடாது.
பெரிய மனிதர்: தத்துக்கிளியின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன் தான்.