#கடல் May 15 ,2021
தாமதமாகவே கிளம்ப முடிந்தது. இரவில்தான் வந்து சேர்ந்தேன் கடலுக்கு. வந்தவுடன் டென்ட் போடும் முயற்சியில் , 10 ஆண்டு உழைத்த டென்ட் காற்றில் உடைந்து விட்டது. Duct Tape போட்டு பட்டி & டிங்கரிங் முறையில் ஒருவழியாக இரவு கொட்டகையை போட்டு முடிக்க 10 மணியாகிவிட்டது.
வீட்டில் இருந்து கிளம்பும் நேரத்தில் நண்பர் ஒருவரின் சகோதரி இந்தியாவில் கொரோனாவில் இறந்த செய்தி😔. தினமும் ஒரு செய்தி வருகிறது ..நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு ஏனோதானோ என்று கிளம்பியதில் முக்கியமான Sleeping Bag ஐ மறந்துவிட்டேன். .
குளிர் & கடற்காற்று ..
வாகனத்தில் எப்போதும் சில emergency சாமான்சட்டுகள் இருக்கும். ரெயின்கோட்,குளிருக்கான தொப்பி இப்படி. அவற்றை வைத்து குளிரைச் சமாளித்து தூங்கி எழுந்தாகிவிட்டது.
சூரியனோடு எழுந்து கடலோடு காலை ஆரம்பித்தது. காலையில் காபி போட்டு குடித்துவிட்டு , மிதிவண்டியில் ஊரைச் சுற்ற கிளம்புகிறேன்
இரண்டுநாள் தனியாகவே (தனிமை காடு அல்ல) இங்கு இருக்கப்போகிறேன்.
இதுவரை பலமுறை இங்கு வந்துவிட்டேன்.என்னைத்தவிர so called இந்திய மொகரையை பார்க்கவில்லை

மெக்சிகன் புல் வெட்டுவார் பெயிண்ட் அடிப்பார் என இளக்காரமாக so called இந்தியன்கள் பேசுவான்கள். ஆனால் அந்த மெக்சிகன்கள் இங்கு அமெரிக்கர்களுக்கு (Caucasian race)அடுத்து அதிகம் டெண்ட் போடுபவர்கள்
Most of the so called Indians..Even in USA still live to work not working for living.🤦
ஆண்களின் டாட்டூ கொடூரமாக உள்ளது. வளைவுகளில் பூ வரைந்தாலும் பூவையரின் டாட்டுகளே அழகு. Sea சிந்தனைகள்
~தோழர் seagull
Well...Going for a run ...
டவுசரோடு அலைகளின் ஊடே 😁👍
பசிக்குது...காலையில் இருந்து ஒரே காபில வண்டி ஓடுது. முட்டை சாப்டுவோம்😁
Done..😁
முட்டை ஒரு லக்சுரி உணவு எனக்கு. காடுகளில் அலையும்போது கனவில் முட்டை வரும். காட்டுப்பயண உணவு பிக்காலித்தனமானது. 😁 சுடுதண்ணில ஊறக்கூடிய எதுவும் உணவு அங்கே. சுமக்கும் எடைக்காக ,பதப்படுத்த முடியாத காரணங்களால் hiking time food are dry 😁
துப்பட்டா போடுங்க தோழி வகையறா கல்ச்சுரா மடையன்களும்,"பண்டங்களை துணி போட்டு வைக்க அரபி மத ச்தாபகர் சொன்னார். நீங்கள் அப்படி இல்லாட்டி சொர்க்கம் டிக்கெட் இல்லை" எனும் அரபி மத ஆர்வலர்களும், இந்தப்பக்கம் வந்தால் கடலில் குதித்து செத்துருவானுக. பிகினி தூதர்களைப் பார்த்து.😁😁
இரவு....
இரவிற்கான விதிகள் தனி.
இரவில் ஊர்ப்பக்கம் மிதிவண்டியில் போய்வந்தேன்..சின்ன கிராமம். கோவிட் க்குப்பிறகு ஆடல் பாடல் என களை கட்டிவிட்டது.
ஒரு கூட்டம் இரவில் சுறா பிடிக்க தூண்டில் போடுது.
குட் நைட்
காலையில் பேசுவோம்😁
காலை வணக்கம்.
(இவனோட இம்சையாப் போச்சு என்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடவும்😁)
காபி இல்லாத காலை பாவகரமானது
உதயசூரியன்
பார்த்தாகிவிட்டது. நேர்த்திக்கடன் முடிஞ்ச்😁
சாவுங்கடே சீரிசு...தொடர்ந்து விவாதிப்போம் இணைப்பில் இருங்கள்😁
உள்ளூர் நண்பருக்கு அனுப்பினேன். "கண்ணு அவிஞ்சு போச்சு. நீ சாவுயா.. நாசமாப்போக உன் படத்த ஏன்யா அனுப்புற" என வசைபாடினார்😁
கரை ஒதுங்கிய மனிதன். கடலுக்கு போக ஆயத்தம்
அழகி
துயில் கொள்கிறாள்
அக்கடாவென
ஆடை களைந்து
சிக்கலானது கடல் சில நேரம்
கவிழ்ந்த மரங்கள்
விடுபட்ட
அல்லது விடுவிக்கப்பட்ட
இரும்பு மனிதர்கள்
அலையாத்தி புற்கள்
சிறகிழந்த
சிப்பிகள்
பவளமாய்
மஞ்சனத்தி
மனம் வெதும்பி
கரை ஒதுங்கினாள்
படகு மூலமே அடையக்கூடிய குடடித் தீவு. அடுத்தமுறை சின்னதா ஒரு inflatable boat அல்லது Paddle Board வாங்கி இந்தத்தீவை அடைய வேண்டும்.
ஏகாந்தம் என்பார்களே....அப்படி ஒரு ஓடி களைக்கும் கடற்கரை.
விடாமல் நச்சரிக்கும் அலை
நிலமும் நீரும் காதலர்கள்
என்ன செய்யப் போகிறாய்
என எதிர்த்து நிற்கும் மணற் குன்றுகள். Sand Dunes
பேசும் கடல்
ஏதோ முளைக்கிறது
சாய்ந்த மரங்களில்
எல்லைகளை நீரில் எழுதும் நீர்
பாவம் நீருக்குத் தெரியுமா
நீரில் எழுதிய எழுத்து பழமொழி.

தினமும் எல்லை வகுத்து ஓய்ந்துவிடுகிறது அலை.
மறுநாளும் எழுந்து வருகிறது
ஒரு ஓடை கடலில் காதல் செய்ய விளைகிறது
அடித்த அலையில்
காற்று சிறைப்பட்டு
மூச்சுவிடுகிறது
மயிர் வளர்க்கும் சிப்பிகள்.
முத்தை இழந்தோம்
முடியாவது வளர்ப்போம்.
என்னை விரட்டிய பறவைகள்
சிறைபட்ட நீர்
அத்தனை அழகையும் அள்ளிக் குடிக்க பெரும்பசியாலும் முடியாது பேரன்பே.

கடல் அழகி
நேற்று இரவு (சனிக்கிழமை) குப்பைத் தொட்டியில் தீ பிடித்துவிட்டது. பெரிய இரும்பு தொட்டி. சிகரெட் அல்லது camp fire மிச்சங்களை யாரோ போட்டிருக்கவேண்டும் தெரிந்தோ தெரியாமலோ.😬🤦

மெதுவாக புகையத் தொடங்கியது பெருந்தீயாகிவிட்டது.
உடனே பலரும் சேர்ந்து மண்ணை அள்ளி கொட்டியும் அணையாமல், தீயணைப்பு வீரர்கள் வந்து அணைத்தனர்.
*
காலையில் மறுபடியும் வந்து சுத்தம் செய்தனர்.

கடற்கரை மணலில் ஓடக்கூடிய தனித்துவ ட்ரக்.

இந்த ஊர் கடற்கரை சுற்றுலாவை நம்பி இருக்கும் பொருளாதாரம்.

அனைத்தும் தயாராக உள்ளது ஊர் நிர்வாகத்திடம்.
இன்று இரவு தங்குவதற்கும் சேர்த்தே camp site முன்பதிவு. நாளை வேலை என்பதால் இரவில் (around 10 to 11 PM) கிளம்பி ஊரு போகத்திட்டம்.

கடையை அடைத்தாகிவிட்டது
டென்ட் மற்றும் படுக்கை வகையறாக்களை பிரித்து மேய்வது அதுவும் தனியாக ஒரு சவால்..பிடித்தமானதும் கூட.
Sand Anchor பைகளில் மணலை காலி செய்து வேலை தொடங்கியாகிவிட்டது.
டென்ட் கழற்றப்பட்டு விட்டது.
பத்து வருடமாக உழைத்த டென்ட் இந்தமுறை ஆரம்பத்திலேயே உடைந்துவிட்டது.அதை Duct Tape வைத்து ஓட்டிவிட்டேன்

Duct Tape இருந்தால் ராக்கெட்டைக்கூட பட்டி பாத்து அனுப்பலாம் என்பார்கள் இங்கே😁

பட்டி டிங்கரிங். Good one
👇 👇
அப்பலாச்சியன் பயணத்தில் இரவில் ஒரு shelter ல் தங்கியபோது கடும் மழை. நேராக தலைக்கு மேலை ஒரு ஓட்டையில் மழைநீர் வரத்தொடங்கிவிட்டது. Duct Tape வைத்து சரிசெய்து தூங்கினேன்.

Duct Tape எப்போதும் இருக்கும் வண்டியில்/emergency bag ல் கொஞ்சமாவது இருக்கும்.
சமையல் சாமான்களை மூட்டை கட்டியாகிவிட்டது.

மூட்டை கட்டுவதில் ஒரு ஒழுங்கு இல்லையென்றால் வந்தது தொலைத்தது போக , அடுத்தமுறை அவசரத்திற்கு கிளம்பமுடியாது.
பலவித கயிறுகள் கொக்கிகள் பேட்டரி லைட்டுகள் என்று எனது பொட்டி ஒரு சின்ன கடை. பல வருடமாக சேர்ந்துவிட்டது.

எனது கேம்ப் including Hiking Gear சமான்சட்டு வாங்காமல் 10 வருடத்திற்குமுன் பிட்டுகாயின் வாங்கியிருந்தால் இன்று அதைப் பார்த்துக்கொண்டு சாகலாம்😁. ஆனால் எனது தெரிவுகள் இப்படி
எல்லாத்தையும் மூட்டை கட்டியாகிவிட்டது. இரவு சிலமணி நேரம் உலாத்திவிட்டு, இரவுக்கடலில் குளித்துவிட்டு நெருப்பில் உலர்த்தி (campfire) அப்டியே ஊருபக்கம் கிளம்ப வேண்டும்.

பீச்சைவிட்டு வண்டியை நகர்த்திய பிறகு Air Up செய்யவேண்டும்.
பீச் மணலில் வண்டியை ஓட்ட டயர் air pressure ஐ குறைத்துவிட வேண்டும். 25 PSI or less .

மறுக்கா சாலையில் ஓட்ட normal pressure க்கு காற்று ஏற்ற வேண்டும். இம்சையான வேலை but fun.
எல்லாம் முடிந்து ஊர் தெருக்களில் சுற்றிவிட்டு ஒரு பார்க்கில் அமர்ந்துவிட்டேன்.
Doing nothing just typing this😁
was not in my plan...பசியால் ஒரு கடையில் pizza வாங்கிவிட்டேன். 5 மைல் சைக்கிளில் கொண்டுவர கயிறு இல்லை. 😔 வழக்கமான சைக்கிள் kit ஐ எடுக்காமல் மஞ்சள் (வெள்ளை)பையுடன் போயிட்டேன். கீழே கிடந்த வயர் & சைக்கிள் lock chain கொண்டு கட்டி இழுத்து வந்துட்டேன்.

இரவு பிட்சா ...பிட்சா பிட்சா😁
Started the campfire early
கடையை அடைத்து மூட்டை முடிச்சை கட்டியாச்சு
கடலை கரையை விட்டு வெளியே
கடல் மணலைக் கடந்து அருகே தார் ரோட்டுக்கு வந்தவுடன் காற்று நிரப்பல். நாலு டயரு... 15 நிமிடம் ஆகும்
இரவு 11 மணி .. இது வேற ஊரையே எழுப்புது 😬
ஆல் டன்...அவுட் ஆப் கடல் கிராமம். ரேடியோல.ஏதோ ஒரு உரை ஓடிக்னு இருக்கு😁
**
தொடர்ந்து உடன் இருந்த அனைவருக்கும் நன்றி!
💐🖤❤️💙
**
இந்தியாவில் கொரோனா அலை ஓய்ந்து,உங்களின் விடுமுறைப் பயணங்கள் சிறக்கட்டும்🍻

தமிழ்நாட்டில் உதயசூரியன் ஒளிரட்டும்👍💐
#கடல்
#Sea

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கல்வெட்டு

கல்வெட்டு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalvetu

16 May
"பிராமிண் வர்ணத்தான் கழுவி,பொட்டு வைத்த சிலைகளை,அவன் தட்டு நீட்டி லஞ்சம் வாங்கும் இடங்களுக்கு வாழ்நாளில் போகவே மாட்டேன்" என சிலை பார்க்கும் தமிழர்கள் உறுதியெடுத்தால் அவனுக ஓடிடுவானுக.

இதை ஏன் தமிழர்கள் செய்யாமல் இருக்கிறார்கள்?
அறநிலையத்துறை மட்டும் அனைத்தையும் செய்ய முடியாது😔
3% கெடுக்குறான் என்று பொலம்பித்தள்ளும் அந்த 97% சிலை பார்ப்பாளர், சிலை தனக்கு துட்டு & கெல்த் கொடுக்கும் என்று நம்பி 3% வளர்க்கிறார்கள். கெரகத்த 🤦😬
*
So called 97% கிந்துக்களே , திருந்த வேண்டியது நீங்களே. சதவீதமே.நீங்கள்தான் 3% வைரசை வளர்க்கிறீர்கள்.

வெட்கம் கெட்டவர்கள்🤦
சிலைகளைப் பார்பது பேசுவது உங்களின் அவஅறிவியல் உரிமை💪
குறைந்த பட்சம் சூடு சொரணை வகையறா இருந்தால்,"பார்ப்பான் பராமரிக்கும் சிலை பார்க்கவோ,சடங்குகளுக்கு அழைக்கவோ மாட்டேன்"என இருக்கலாமே? நீங்கள்"அறநிலையத்துறை எங்கது"என்பது,பனை மரத்துல ஒரு குத்து தென்னை மரத்துல ஒரு குத்து போங்காட்டம்
Read 4 tweets
27 Feb
#Wine #Brandy #Beer
ஏற்கனவே #Whisky பற்றியும் responsible drinking பற்றியும் எழுதியுள்ளேன்.

இப்போது #Distillation
மற்றும் எல்லா மது வகைகளையும் ஒரு அறிவியல்(வேதியியல்) பார்வையில்.

வாழைப்பழ #பிராந்தி வடிப்பதை தெளிவாக விளக்கும் வீடியோ
👇👇
அனைத்து மதுக்களுக்கும் மூலப் பொருள் சீனி சக்கரை இனிப்பு Sugar தான். அந்த இனிப்பு பொருளை (starch source)எதில் இருந்து பெறுகிறார்கள் என்பதும், அது எந்த வேதியியல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே பிள்ளைக்கு பெயர் வைக்கப்படுகிறது.
👉 #Beer க்கு பொதுவான "Starch Source", malted #barley (அரிசி,கோதுமை,மக்காச் சோளம்-Corn எல்லாம் சேர்க்கலாம்) அதனோடு சுவைக்கு #Hops சேர்த்து தண்ணீர் கலந்து fermentation செய்து வடிகட்டினால். பியர் ரெடி.

ஊரின் தண்ணீருக்கும் ஒரு சுவையுண்டு. எனவே ஒவ்வொரு ஊரின் பியரின் சுவை வேறுபடும்.
Read 16 tweets
26 Feb
டுவீட்டர் தொடர்பு...
👇👇
நீங்கள் யாரையாவது follow செய்கிறீர்கள் என்றால் 4 மாதங்களுக்கு ஒருமுறை தூசி தட்டவும். கடனே என்று வாக்கப்பட்டது போல தொடராதீர்கள்🤦

தேவையற்ற ஆணி என்றால் unfollow செய்துவிடுங்கள். எப்போதோ பிடித்த ஒருவர் இன்றும் பிடித்திருக்க தேவையில்லை. Do the cleanup work
உங்கள் எண்ணிக்கை இருப்பதால், சினிமா விளம்பரம் என்று அவர்கள் கடைவிரிக்கலாம். தவறே அல்ல அது அவர்கள் உரிமை.💪

ஆனால், நீங்கள் தொடர வேண்டுமா என்பது உங்களுக்கான கேள்வி.
கூட்டமாக கும்மி, feeling part of the crwod, pride of association என்பதற்காக, நிர்ப்பந்தம்போல தேவையற்று யாரையும் தொடருவதில் பலன் இல்லை.

பிரபலம் என்று யாரும் இல்லை. 👉Don't follow if u r not convinced

உங்களின் சோசியல் மீடியா இருப்பின் நோக்கம் என்ன? என்பதற்கான விடை இருக்கவேண்டும்.
Read 6 tweets
25 Feb
"அதற்குப்புறம் நான் சக்கர நாற்காலிலாம் இருந்துக்கிட்டு மக்களை *தொந்தரவு*படுத்த விரும்பல"
வொலக'நாய்'கன்
~@ikamalhaasan
👉 சக்கர நாற்கலியில் இருக்கும் அனைவரையும் அவர்கள் பிறருக்கு தொந்தரவாக, பாராமாக வாழ்வதாக அசிங்கப்படுத்துதல்.

👉தன் பிழைப்புக்காக, அதிகாரம் சக்கர நாற்காலியில் இருந்தாலும் தரையில் விழுதல். ஆள் இல்லை என்றவுடன் ஏளனம் செய்தல்.

இரண்டையும் செய்கிறது இந்த வொலகம். Image
திமுக என்ற அரசியல் இயக்கத்தை விமர்சிக்க எவ்வளவோ உள்ளது.

கலைஞரின் அரசியல் பொதுவாழ்வு செயல்பாடுகளை விமர்சிக்க எவ்வளவோ உள்ளது.

கலைஞரின் திரைப்படங்களை,கட்டுரைகளை எதையும் விமர்சிக்கலாம்.

"உடல் மூப்பு ஆனபின்பும் ஏன் அரசியலில் இருந்தாய்?" என்று உடல் இயலாமையை ஏளனம் செய்கிறது வொலகம்.
Read 9 tweets
23 Feb
#Nomadland
என்றொரு படம் .இப்போது சில நாட்களுக்கு முன் வெளியானது. February 19, 2021.

HULU வில் கிடைக்கிறது (subscription)

இந்தியப் பின்னணியில் அமெரிக்காவை நியூயார்க், வால்ட் டிசுனி..என்று *மட்டுமே* அறிந்தவர்களுக்கு இது புதிய செய்தியைச் சொல்லும்
இது போன்ற இடங்களில் இருந்துள்ளேன். ஒரு பயணியாக. இவர்களிடம் பழகியும் உள்ளேன்.

Hobo Ahle என்ற Alexandria Tejas நான் YouTube ல் பின் தொடரும் ஒருவர். Van வாழ்க்கை வாழ்பவர்.
இப்போது அவர் online ல் ஆக்டிவாக இல்லை. Looks like she is taking a break.
#Nomadland படம் சட்டென வீதிக்கு வந்த , அமெரிக்க பொருளாதாரக் கட்டமைப்பில், வீதியில் எறியப்பட்ட ஒரு ஊரின் கதை அந்த ஊரில் வாழ்ந்த ஒருவரின் கதையாக நகர்கிறது.

Empire (State:Nevada ) என்ற ஊரே காணாமல் போகிறது ஒரு தொழிற்சாலை மூடப்பட்டவுடன்.
Read 11 tweets
18 Feb
ஓரளவிற்கு சமச்சீர் உணவு
👇👇
Greens/Spinach🌿🍃 (கீரை)
Avocado 🥑🥑
Egg 🥚🍳
Green Onion
Bell pepper
Cheese 🧀

இவைகளை வைத்து ஒருவகை காய்கறி ஆம்லெட் போன்ற ஒன்றை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறை உண்பதே போதுமானதாய் உள்ளது. பசித்தால் மட்டும் சாப்பிடவும்😁
செய்முறை.
நான்கு அல்லது தேவையான முட்டைகளை oven ல் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் தடவி (I use olive oil) அப்படியே உடைத்து ஊற்றி , bake செய்யவும்.

Oven ல் அது புல்பாயில் (ஆம்லட்) ஆயிடும்
முட்டை புல்பாயில் ஆகி oven ல் வெந்தவுடன் , தனியாக அதை வைத்துவிடவும். Let it cool
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(