1. சனி பகவான் சுயம்பு வடிவில் மூலவராக இருப்பது தனிச்சிறப்பு.
2. லிங்க உருவில் உள்ள இந்த சுயம்பு வளர்ந்து கொண்டே இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு பூசப்பட்டுள்ளது.
🇮🇳🙏1
3.பல நூற்றாண்டிற்கு முன்பு, தினகரன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அந்த மன்னனுக்கு வெகுநாட்களாகக் குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. ‘ உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். 🇮🇳🙏2
அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது ’. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். மன்னனுக்கு அசரீரி குரல் ஒலித்தபடி குழந்தை பிறந்தது. 🇮🇳🙏3
மன்னனுக்குப் பிறந்த குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். *வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன்* . ஆனால் மன்னனுக்குப் பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது.
🇮🇳🙏4
இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடி சூட்டப்பட்டது. அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. ‘வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்குச் சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது’ என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது.
🇮🇳🙏5
இதனால் சந்திரவதனன் *சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தை வடிவமைத்து வழிபட்டான். ‘தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் *தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்றும், 🇮🇳🙏6
அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான்’ சந்திரவதனன். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார். 🇮🇳🙏7
வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன் தோன்றிய சனி பகவான் ‘ உன்னைப் போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னைப் பிடித்ததற்குக் காரணம் உன் முன் ஜென்ம வினை தான் என்றும் கூறி’ மறைந்தார். 🇮🇳🙏8
இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புற்களைச் சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார் என்று கூறுகிறது வரலாறு. 🇮🇳🙏9
குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு
என்ற பெயர் வந்தது.
எப்பொழுதுமே, நாம் செய்யும் எந்த ஒரு சிறு செயலாயினும், அதன் முழு பொருள் உணர்ந்து செய்யும் பொழுது அதில் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனி தான் என்பதில் ஐயமில்லை அல்லவா ?
நமஸ்காரம் என்றால் என்ன ? அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன ?
காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து ஒரு சில தகவல்கள் பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார்.
“திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடலோர மாநில முதல்வர்களுக்கு அனாவசியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், 'புதிய இந்திய துறைமுக சட்டத்தால், மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது' என்று புலம்பி உள்ளார்.
இதன் வாயிலாக, முதல்வருக்கு ஆலோசனை கூறியது யாரோ ஒருவர் கற்றுக்குட்டி என்பதும், தன் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதும் தெரிய வருகிறது.
தனிச் சட்டம்
இந்தியாவில் கடல் வாணிபத்தையும், துறைமுகங்களையும் நிர்வாகம் செய்ய, கடல்சார் வாணிபச் சட்டம் 1058, இந்திய துறைமுகச் சட்டம் 1908, பெருந்துறைமுக அறக்கட்டளைச் சட்டம் 1963 ஆகிய சட்டங்கள் உள்ளன.
கொத்துக் கொத்தாக பழங்குடியின மாணவர்களின் கல்லறைகள் - போப் மன்னிப்பு கேட்க கனடா பிரதமர் வலியுறுத்தல்!
கனடாவில் 29ஆம் நூற்றாண்டில் பழங்குடி மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததற்காகவும் அவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதற்கு போப் பிரான்சிஸ் கனடாவிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் போலவே கனடாவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பழங்குடியின மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலையில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள், பிரெஸ்படேரியன், பிராட்டஸ்டன்ட் என அனைத்து வகையான கிறிஸ்தவ மிஷினரிகளும் ஈடுபட்டு வந்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் மாணவ, மாணவிகளை முஸ்லிமாக மதம் மாற்றுவதாக புகார்: 2 மவுலானாக்கள் கைது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வாய் பேசாத மாற்றுத்திறனாளியாக இருப்பவர் ஆதித்யா. இவர் கடந்த வருடம் மார்ச் 10-ல் வீட்டை விட்டு சென்றவர் முஸ்லிமாக மதம் மாறி அப்துல் என்ற பெயரில் கேரளாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இதை அறிந்த அவரது தாய் லஷ்மி கான்பூரின் கல்யாண்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கு உ.பி.யின் ஏடிஎஸ் சிறப்புபடைக்கு மாற்றப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பிற்கு பின் இடைத்தேர்தல் கரூருக்கு வந்தால் திமுகவின் வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அறிவிக்கப்படுவாரா ?
தமிழக அளவில் மட்டுமல்லாமல், திமுக வரலாற்றிலேயே தன்னுடைய செல்வாக்கினை விட, கோடீஸ்வரராக இருந்து தற்போது மிகுந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர், முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கே.சி.பழனிச்சாமி,
இவரை தற்போதைய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, அதிமுக வில் இருக்கும் போது, கே.சி.பி என்கின்ற வார்த்தையை மணல் அள்ளும் ஜே.சி.பி என்றும், மணல் திருடன் என்றும்,
இது உங்கள் இடம்: ‛ஜெய்ஹிந்த் என்றால் என்ன தெரியுமா!
எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்தியாவிற்கு, சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை. அதற்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
பல தலைவர்கள், ஆண்டுக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.சுதந்திர போராட்டத்தில், நாட்டுப்பற்றை தெரிவிக்க 'வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய்' போன்ற வார்த்தைகளை, தியாகிகள் பயன்படுத்தி வந்தனர்.
அதன் பின், அனைத்து இந்தியரையும் ஒன்றிணைக்க, செண்பகராமன் பிள்ளை என்ற தமிழரின், 'ஜெய்ஹிந்த்' கோஷம் பரவலாக ஒலிக்க துவங்கியது.'ஜெய்ஹிந்த்' என்றால், 'இந்தியா வாழ்க' என அர்த்தம்.