அரும்பாக்கம்: ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை - 1/4
ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதா?
அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருஷ்ணன் நகரில் குடியிருப்புகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை இன்று (01-08-2021) நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்கள் துயரில் பங்கெடுத்தேன். அவர்களின் உரிமைகள் - 2/4
நிலைநாட்டப்படும்வரை துணைநிற்பேன் என்ற உறுதியையும் அளித்தேன்.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் - 3/4
வருகின்ற ஆகஸ்ட்டு 3/08/2021 செவ்வாய்க்கிழமை அன்று நமது கட்சி புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அரசியல் ஆலோசகர் ஐயா தனசேகரன் அவர்களின் பல்பொருள் அங்காடி திறப்புவிழா நிகழ்வு உள்ளது அனைத்து உறவுகளும் தவறாமல் - 1/3
கலந்துகொள்ளவும்.
நாளை நமது ஐயா சுப.தனசேகரன் அவர்களது மல்லிகை அங்காடி திறப்பு விழாவிற்கு #ஐயா_இறையன்பு_இமயவன் அவர்கள் வருகைதர உள்ளதால் அனைத்து உறவுகளும் தவறாமல் வருகைதந்து ஐயா அவர்களை வரவேர்க்கவும் தலைமை அறிவுறுத்தல்
புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு!
இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்!
பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால் - 1/5
அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப்பெறுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கையில் நிகழ்ந்தேறும் செங்குத்தான வீழ்ச்சி, தாவரவகையின் தொகை விழுக்காடு அழிய வழிவகுக்கும். புலிகள் எண்ணிக்கை குறைவதன் மூலம் மான்கள் - 2/5
உண்ணும் இத்தாவரங்களின் விழுக்காடு அதிகரிப்பதனால் வனப்பகுதியில் அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, உணவுச்சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப்பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் கண்ணியாக விளங்குகிறது.