2 Smart Phon ஐ, வாட்ச்சை, லேப்டாப் ஐ விட பல மடங்கு அதிக நேரம் சார்ஜ் நிற்கிறது.
3, கண்களை உறுத்துவதில்லை.
4. தெரியாத, புரியாத ஆங்கில வார்த்தைகளைத் தொட்டல் போதும் சகல அர்த்தங்களும் கொண்ட அகாரதிப் பொருள் விளக்கம் உதாரணங்களுடன் என் விரல் நுனியில்.
5. அடிக்கோடிட்டு, தலைப்புக்களோடு குறிப்புகளையும் பதிந்து வைத்துக் கொள்ளும் வசதி . அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
6. இப்படி அடிக்கோடிடப்பட்டு, புத்தகத்தின் பின் முன் அட்டைகளில் குறிப்புகள் எழுதப்பட்ட எத்தனையோ புத்தகங்கள் இரவலாக போய் திரும்ப வரவே இல்லை. புதிதாக வேறு புத்தகம் வாங்குவது பெரிதில்லை.
ஆனால் மீண்டும் ஒரு முறை வாசித்து அதே போல் குறிப்புகள் பதிந்து வைக்கும் நேரத்தில் ஒரு புதிய புத்தகத்தை வாசித்து விட மனம் பரபரக்கும். அதனால் இழந்த குறிப்புகள் இதுவரை இழந்தவையாகவே இருக்கின்றன. ஆனால் கிண்டிலில் பதிந்து வைக்கும் குறிப்புகள் நிலைத்து நிற்கும்,
7, புத்தங்கங்கள் இடத்தை அடைக்கும், தாள்கள் கிழிந்து போகும், பைண்டிங் விட்டுக் கொண்டு வரும்...கிண்டிலில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
8. திருட்டு, வெள்ளம், தீ என எந்தப் பிரச்சினையிலும் எனது கிண்டில் நூல்கள் அழிந்து போகப் போவதில்லை.
9. நான், எனது இணையர், எனது மகள் என்று மூன்று பேரும் ஒரே நேரத்தில் ஒரே புத்தகத்தை சண்டை போடாமல் வாசிக்க முடிகிறது.
10. புத்தகங்கள் எனக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்பதும் மிக முக்கியக் காரணம். என்னற்ற இலவசப் புத்தகங்களும் கிடைக்கின்றன என்பது கூடுதல் பயன்.
11. புத்தகங்களைத் தேடி அலையத் தேவையில்லை. நினைத்த கணத்தில் விரல் நுனியில் உங்களுடைய விருப்பமான புத்தகம் உங்களை வந்து சேரும். 2003ல் இருந்து நான் தேடி அலைந்த Gulag Archipelago என்னும் புத்தகம் 2006 ஆம் ஆண்டு ரஷ்யாவில் படித்த ஒரு தோழரிடம் இருந்து அதிர்ஷ்ட்ட வசமாகக் கிடைத்தது.
இன்று இத்தனை வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை
12. Kindle Unlimited subscribe செய்தால் என்னால் உலகின் மிகப் பெரும் நூலகத்தை என் உள்ளங் கைக்குள் வைத்து செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியும்.
13. Kindle device - 8000 குடுத்து வாங்கணுமா ? என்று யோசிப்பவர்கள் kindle App மூலம் Smart phone , tablet, அல்லது kindle Cloud reader மூலம் computer, Laptop என எதில் வேண்டு மானாலும் வாசிக்க முடியும். கண்கள் எளிதில் அயர்ச்சியுறும் என்பது தான் இதில் உள்ள சிக்கல்.
14. கண்களைப் பாதுகாக்க வேண்டும், அதே சமயம் காலத்திற்கும் தேவையான புத்தகங்களை மலிவு விலையில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உள்ளதிலேயே மிகவும் விலை குறைவான kindle Reader ஐ வாங்குவது நலம்.
15. நாப்பது வயசுக்கு மேல சாளேஸ்வரம் வந்து Reading glass அ எங்க வெச்சோம் குறத மறந்து படிக்க முடியாம அவஸ்தப் படுறத Kindle ல்ல இருக்கும் Font Size increase option மூலமா எளிதில் கடந்து போலாம்.
விலை அதிகமாக கொடுத்து வாங்கினால் அதில் Extra Add on Features கிடைக்கும் என்பது kindle ஐப் பொறுத்த வரை illogical என்பது என் தாழ்மையான கருத்து.... அதனால Basic model என்ன வெலைல கெடச்சாலும் கண்ண மூடிக்கிட்டு வாங்கிட வேண்டியது தான்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு தொழில் நுட்பம் திறந்து விட்டுள்ள ஒரு பெரும் கதவு கிண்டில்.
பெண்கள் குழந்தை பெறவே பிறந்தவர்கள் என்று சமூகம் திரும்ப திரும்ப சொல்லும் காரணம் இதுதான். கூட்டத்திற்கு ஆள் சேர்க்க வேண்டும். அதனால் தான் தன்னுடைய சாதியிலயே, மதத்திலேயே, தன்னுடைய சொந்ததிலயே திருமணம் செய்ய வேண்டி வற்புறுத்துவது. அப்போதுதான் தான் சார்ந்த இனத்திற்கு ஆள் பலம் கூடும்
தாயான பின்பு தான் நீ பெண்மணி, பெண் என்றால் தாய், வம்சத்தை விருத்தி செய்ய வந்த மஹாலக்ஷ்மி, பெண்ணுக்கு குழந்தை பேரு தான் முக்கியம் அதனால் கனமான வேலைகள் செய்ய கூடாது, பெண் குழந்தை பெற விட்டால் உலகமே அழிந்து விடும் என்பது போன்ற கூற்றுக்கள் பெண்ணை வெறும் இனபெருக்கதிற்கு மட்டுமே தயார்
பண்டோரா (Pandora), கிரேக்க புராணத்தின் படி, பூமியின் முதல் பெண்.
கிரேக்க கடவுளான ஜீயஸ் ஒரு மாஸ்டர் பிளானோடு பண்டோராவை படைத்தார். ப்ரோமிதியஸ் (Prometheus) ஜீயஸ்க்கு தெரியாமல் மனிதகுலத்திற்கு நெருப்பைக் கொடுத்தார்.
இதற்காக ப்ரோமிதியஸ் ஐ தண்டித்த கடவுள் (அது தனி கதை அதை அப்புறமா சொல்றேன்!), மனிதர்களையும் தண்டிக்க விரும்பினார். அதற்காக உருவாக்கப்பட்டவள் தான் பண்டோரா.
ஹெஃபாஸ்டஸ் (Hephaestus) அவளை களிமண்ணிலிருந்து உருவாக்கினார், அவளைஅழகியாக வடிவமைத்தார்,
அப்ரோடைட் (Aphrodite) அவளுக்கு பெண்மையை வழங்கினார் மற்றும் அதீனா (Athena) தனது கைவினைகளைக் கற்றுக் கொடுத்தாள். ஜீயஸ், ஹெர்ம்ஸை (Hermes) அழைத்து பாண்டோராவிற்கு பிடிவாதம், ஏமாற்றுதல், ஆர்வம் போன்ற குணங்களை வழங்க உத்தரவிட்டார்.
இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் என்றாலும், ஏவாளைப் பற்றி வேறு எதுவும் பைபிள்/Qur'an/Torah வில் இல்லை. பல பெண்களைப் போலவே, ஏவாளின் சாதனைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஆதியாகமம் புத்தகத்தின் 2ம் அத்தியாயத்தில் , ஆதாமுக்கு ஒரு துணை மற்றும் உதவியாளர் இருப்பது நல்லது என்று கடவுள் முடிவு செய்தார். ஆதாம் ஆழ்ந்த உறக்கத்தில் விழ, கடவுள் அவனது விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து
லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண். Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல midrashic நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்)
தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன.
லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது.
கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு லிலித் மறுத்ததாகவும் கதை சொல்கிறது.
கடவுள் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுள் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.
இது ஒரு simple concept தான். அந்த காலத்துல மண்ணுல பொம்மை செஞ்சு பார்த்து இருக்காங்க.
மனிதனும் உயிர் இல்லாமல் போனால் வெறும் பொம்மை மாதிரி தான் இருக்கான். உடலும் விரைத்து விடும். இப்போ உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற மனிதனுக்கும் எளிதில் காணக்கூடிய ஒரு வித்தியாசம் என்ன? மூச்சு. உயிருள்ள மனிதன் மூச்சு விடுகிறான். உயிரற்ற மனிதன் மூச்சு விடுவதில்லை.
அப்போ அந்த காற்று தான் உயிர் அப்படின்றது ஒரு எளிய புரிதல். அந்த கால மனித அறிவுக்கு உண்டான புரிதல். அந்த புரிதல்ல விளைந்த கதை தான் இது.
எப்படி இந்த வெள்ள கதையை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பண்ணி உலகம் முழுக்க சொல்றங்களோ அதே போல தான் இந்த மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கிய கதையும்
கிரேக்க புராணங்களில் வரும் Narcissus ஒரு வேட்டைக்காரன், நதி கடவுள் Cephissus மற்றும் வனதேவதை Liriope ஆகியோரின் மகன். மிகவும் அழகான Narcissus ஐ, பலர் காதலித்தனர். இருப்பினும், Narcissus எல்லோர் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் மட்டுமே காட்டினான்.
ஒரு நாள், Narcissus காடுகளில் வேட்டையாடுகையில், மலைக்காட்டு தேவதை Echo அவனை பார்த்தாள், உடனடியாக Narcissus மீது echo காதலில் விழுந்தாள். Narcissus எங்கு சென்றாலும் echo அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றாள்.
யாரோ தன்னை பின்தொடர்வதை Narcissus உணர்ந்த போது எக்கோ தன்னை Narcissus க்கு வெளிப்படுத்தி Narcissus ஐ காதலிப்பதாக சொல்லி அவனை அணைக்க முயன்றாள். ஆனால், அவன் அவளைத் கீழே தள்ளி, அவளை அவமதித்துவிட்டு சென்றான்.