பெண்கள் குழந்தை பெறவே பிறந்தவர்கள் என்று சமூகம் திரும்ப திரும்ப சொல்லும் காரணம் இதுதான். கூட்டத்திற்கு ஆள் சேர்க்க வேண்டும். அதனால் தான் தன்னுடைய சாதியிலயே, மதத்திலேயே, தன்னுடைய சொந்ததிலயே திருமணம் செய்ய வேண்டி வற்புறுத்துவது. அப்போதுதான் தான் சார்ந்த இனத்திற்கு ஆள் பலம் கூடும்
தாயான பின்பு தான் நீ பெண்மணி, பெண் என்றால் தாய், வம்சத்தை விருத்தி செய்ய வந்த மஹாலக்ஷ்மி, பெண்ணுக்கு குழந்தை பேரு தான் முக்கியம் அதனால் கனமான வேலைகள் செய்ய கூடாது, பெண் குழந்தை பெற விட்டால் உலகமே அழிந்து விடும் என்பது போன்ற கூற்றுக்கள் பெண்ணை வெறும் இனபெருக்கதிற்கு மட்டுமே தயார்
செய்வதற்காக உண்டான கூற்றுகள்.
கருக்கலைப்பு பாவம், கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது பாவம் என்று எல்லாம் மதங்கள் சொல்லுவதின் பின்னணியும் இதே. நம்ம கூட்டத்திற்கு ஆள் வேண்டும். பல தார திருமணம், விதவைகள் பலரை திருமணம் செய்ய வேண்டும் என்று patriarchy சமூகம் முன்மொழியும்
எல்லாவற்றிலும் இந்த காரணமும் அடங்கி இருக்கிறது.
அந்த காலத்தில் வேண்டுமானால் ஆள் பலம் தேவை என்பது அவசியமானதாக இருந்து இருக்கலாம். எங்கோ நடு காட்டில் ஒரு 10 குடும்பங்கள் வாழும் போது அவர்களை அவர்கள் தற்காத்து கொள்ள தேவையாக இருந்தது இருக்கலாம். விவசாயம் பரவிய ஆரம்ப காலத்தில்
நிலத்தை, கால்நடைகளை பார்க்க பாதுகாக்க குடும்பத்தில் ஆள் பலம் தேவையாக இருந்து இருக்கலாம். அரசனுக்கு அவனது அதிகாரத்திற்கு கீழ் வரும் நாடுகளை அரசாள நிறைய மகன்கள் தேவை பட்டு இருக்கலாம்.
மக்கள் தொகை அதிகரித்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா வேலைகளும் செய்யும் இந்த காலத்தில், பல குடும்பங்களில் பெண்ணும் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இருக்கும் இந்நாளில் ஒரு குழந்தையே போதுமானது. எத்தனை நாளைக்கு தான் பெண்கள் பிள்ளைகளை பெற்று அவர்களை
வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது.
பிள்ளை வளர்ப்பு என்பதுலயே பெண்கள் முடங்கிவிடுவதால் திறமைகள் வெளிப்படுவது இல்லை. இந்தியாவில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஒலிம்பிக்கில் பெண்கள் எண்ணிக்கை குறைவு. அந்த குறைந்த எண்ணிக்கை பெண்கள் அதிக எண்ணிக்கையில் பதக்கம் வெல்லுகிரார்கள்.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போது அது பெண்களுக்கு மிக பெரிய விடுதலையாக இருந்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முன்னர் வரை ஒரு குழந்தை 10 வயதை தாண்டுவதே கடினமாக இருந்தது. எங்க பாட்டிக்கு 10 பிள்ளைங்க அதுல 6 தான் தங்குச்சு என்பது போன்ற பேச்சுக்களை கேட்டு இருப்பீர்கள்.
ஒரு பத்து பிள்ளை பெற்றால் தான் அதில் 5 வது தங்கும் என்ற நிலை தடுப்பூசிகள் வந்த பின் மாறியது. இப்போது 10 பிள்ளை பெற்று கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும் ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று, இரண்டு பிள்ளைகள் இருந்தால் தான் ஒன்றுக்கு ஒன்று துணையாக இருக்கும், ரெண்டும் பையனா
அப்போ ஒரு பொண்ணு பெத்துக்கோ ரெண்டு பொண்ணா ஒரு பையனா பெத்துக்கோ என்று எல்லாம் சொல்வது மடத்தனம் என்று படுகிறது. ஒரு பக்கம் ஆதரவற்ற குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்க இன்னொரு பக்கம் உன்னை போல் ஒரு ஆண் குழந்தை என்னை போல ஒரு பெண் குழந்தை என்று ஆசைக்காக குழந்தைகள் பெற்று போட...
அதிகமான பெண்கள் வேலை செய்யும் போது, பொருளாதாரங்கள் வளரும். பெண்கள் மற்றும் பெண்கள் கல்வியை அதிகரிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. ஆனால் இன்று, பெண்கள் இன்னும் ஆண்களை விட கணிசமாக குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் அதற்கான காரணமாக சொல்லப்படுவது
பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை குடுத்தாக வேண்டும் அவர்கள் விடுமுறையில் செல்லும்போது அந்த வேலை பாதிக்கப்படுகிறது. கல்வி, வேலை, அரசியல், விளையாட்டு மற்றும் சுய கவனிப்பு ஆகியவற்றிற்கு குறைந்த நேரமே பெண்கள் செலவிடுகிறார்கள் . இது அவர்களின் நீண்டகால பொருளாதார பாதுகாப்பை பாதிக்கிறது.
"உலகத்தில் மக்கள் கஷ்டப்பட்டு தன் தன் ஜீவனத்திற்கு பொருள் தேடுவதற்கே சுதந்திரத்தை விற்று அடிமையாக வேண்டிய நிலையில் இருக்கும்போது பிள்ளைகளையும் குட்டிகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தலை மேல் இருக்குமானால் அந்த இடத்தில் எப்படி சுயேச்சை இருக்க முடியும்?
ஆகையால் ஆண் பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கற்பமாவதும் பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது."
- பெரியார்
குடி அரசு - தலையங்கம் - 06.04.1930
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2 Smart Phon ஐ, வாட்ச்சை, லேப்டாப் ஐ விட பல மடங்கு அதிக நேரம் சார்ஜ் நிற்கிறது.
3, கண்களை உறுத்துவதில்லை.
4. தெரியாத, புரியாத ஆங்கில வார்த்தைகளைத் தொட்டல் போதும் சகல அர்த்தங்களும் கொண்ட அகாரதிப் பொருள் விளக்கம் உதாரணங்களுடன் என் விரல் நுனியில்.
5. அடிக்கோடிட்டு, தலைப்புக்களோடு குறிப்புகளையும் பதிந்து வைத்துக் கொள்ளும் வசதி . அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
6. இப்படி அடிக்கோடிடப்பட்டு, புத்தகத்தின் பின் முன் அட்டைகளில் குறிப்புகள் எழுதப்பட்ட எத்தனையோ புத்தகங்கள் இரவலாக போய் திரும்ப வரவே இல்லை. புதிதாக வேறு புத்தகம் வாங்குவது பெரிதில்லை.
பண்டோரா (Pandora), கிரேக்க புராணத்தின் படி, பூமியின் முதல் பெண்.
கிரேக்க கடவுளான ஜீயஸ் ஒரு மாஸ்டர் பிளானோடு பண்டோராவை படைத்தார். ப்ரோமிதியஸ் (Prometheus) ஜீயஸ்க்கு தெரியாமல் மனிதகுலத்திற்கு நெருப்பைக் கொடுத்தார்.
இதற்காக ப்ரோமிதியஸ் ஐ தண்டித்த கடவுள் (அது தனி கதை அதை அப்புறமா சொல்றேன்!), மனிதர்களையும் தண்டிக்க விரும்பினார். அதற்காக உருவாக்கப்பட்டவள் தான் பண்டோரா.
ஹெஃபாஸ்டஸ் (Hephaestus) அவளை களிமண்ணிலிருந்து உருவாக்கினார், அவளைஅழகியாக வடிவமைத்தார்,
அப்ரோடைட் (Aphrodite) அவளுக்கு பெண்மையை வழங்கினார் மற்றும் அதீனா (Athena) தனது கைவினைகளைக் கற்றுக் கொடுத்தாள். ஜீயஸ், ஹெர்ம்ஸை (Hermes) அழைத்து பாண்டோராவிற்கு பிடிவாதம், ஏமாற்றுதல், ஆர்வம் போன்ற குணங்களை வழங்க உத்தரவிட்டார்.
இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் என்றாலும், ஏவாளைப் பற்றி வேறு எதுவும் பைபிள்/Qur'an/Torah வில் இல்லை. பல பெண்களைப் போலவே, ஏவாளின் சாதனைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஆதியாகமம் புத்தகத்தின் 2ம் அத்தியாயத்தில் , ஆதாமுக்கு ஒரு துணை மற்றும் உதவியாளர் இருப்பது நல்லது என்று கடவுள் முடிவு செய்தார். ஆதாம் ஆழ்ந்த உறக்கத்தில் விழ, கடவுள் அவனது விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து
லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண். Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல midrashic நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்)
தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன.
லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது.
கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு லிலித் மறுத்ததாகவும் கதை சொல்கிறது.
கடவுள் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுள் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.
இது ஒரு simple concept தான். அந்த காலத்துல மண்ணுல பொம்மை செஞ்சு பார்த்து இருக்காங்க.
மனிதனும் உயிர் இல்லாமல் போனால் வெறும் பொம்மை மாதிரி தான் இருக்கான். உடலும் விரைத்து விடும். இப்போ உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற மனிதனுக்கும் எளிதில் காணக்கூடிய ஒரு வித்தியாசம் என்ன? மூச்சு. உயிருள்ள மனிதன் மூச்சு விடுகிறான். உயிரற்ற மனிதன் மூச்சு விடுவதில்லை.
அப்போ அந்த காற்று தான் உயிர் அப்படின்றது ஒரு எளிய புரிதல். அந்த கால மனித அறிவுக்கு உண்டான புரிதல். அந்த புரிதல்ல விளைந்த கதை தான் இது.
எப்படி இந்த வெள்ள கதையை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பண்ணி உலகம் முழுக்க சொல்றங்களோ அதே போல தான் இந்த மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கிய கதையும்
கிரேக்க புராணங்களில் வரும் Narcissus ஒரு வேட்டைக்காரன், நதி கடவுள் Cephissus மற்றும் வனதேவதை Liriope ஆகியோரின் மகன். மிகவும் அழகான Narcissus ஐ, பலர் காதலித்தனர். இருப்பினும், Narcissus எல்லோர் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் மட்டுமே காட்டினான்.
ஒரு நாள், Narcissus காடுகளில் வேட்டையாடுகையில், மலைக்காட்டு தேவதை Echo அவனை பார்த்தாள், உடனடியாக Narcissus மீது echo காதலில் விழுந்தாள். Narcissus எங்கு சென்றாலும் echo அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றாள்.
யாரோ தன்னை பின்தொடர்வதை Narcissus உணர்ந்த போது எக்கோ தன்னை Narcissus க்கு வெளிப்படுத்தி Narcissus ஐ காதலிப்பதாக சொல்லி அவனை அணைக்க முயன்றாள். ஆனால், அவன் அவளைத் கீழே தள்ளி, அவளை அவமதித்துவிட்டு சென்றான்.