பண்டோரா (Pandora), கிரேக்க புராணத்தின் படி, பூமியின் முதல் பெண்.
கிரேக்க கடவுளான ஜீயஸ் ஒரு மாஸ்டர் பிளானோடு பண்டோராவை படைத்தார். ப்ரோமிதியஸ் (Prometheus) ஜீயஸ்க்கு தெரியாமல் மனிதகுலத்திற்கு நெருப்பைக் கொடுத்தார்.
இதற்காக ப்ரோமிதியஸ் ஐ தண்டித்த கடவுள் (அது தனி கதை அதை அப்புறமா சொல்றேன்!), மனிதர்களையும் தண்டிக்க விரும்பினார். அதற்காக உருவாக்கப்பட்டவள் தான் பண்டோரா.
ஹெஃபாஸ்டஸ் (Hephaestus) அவளை களிமண்ணிலிருந்து உருவாக்கினார், அவளைஅழகியாக வடிவமைத்தார்,
அப்ரோடைட் (Aphrodite) அவளுக்கு பெண்மையை வழங்கினார் மற்றும் அதீனா (Athena) தனது கைவினைகளைக் கற்றுக் கொடுத்தாள். ஜீயஸ், ஹெர்ம்ஸை (Hermes) அழைத்து பாண்டோராவிற்கு பிடிவாதம், ஏமாற்றுதல், ஆர்வம் போன்ற குணங்களை வழங்க உத்தரவிட்டார்.
ஒவ்வொரு கடவுளும் அவளுக்கு ஒரு பரிசை வழங்கினார்கள், எனவே, கிரேக்க மொழியில் அவளுடைய பெயர் "எல்லா பரிசுகளையும் தாங்கியவர்" என்று பொருள்.
பண்டோராவுக்கு ஒரு பெட்டி அல்லது ஜாடி வழங்கப்பட்டது, கிரேக்க மொழியில் "பித்தோஸ் (pithos)" என்று அழைக்கப்படுகிறது.
கடவுள்கள் அவளுக்கு வழங்கிய பரிசுகள் எல்லாம் அந்த பெட்டியில் இருப்பதாக கூறினார்கள். ஆனால் அந்தப் பெட்டியைத் எப்போதும் திறக்க கூடாது என்று எச்சரித்தார்கள். (திறக்காமலே இருக்கிறதுக்கு எதுக்கு பரிசு?!) பின்னர் ஹெர்ம்ஸ் அவளை ப்ரோமிதியஸின் சகோதரர் ஸிடம் அழைத்துச் சென்றார்.
கடவுளர்களிடமிருந்து எதையும் ஏற்க வேண்டாம் என்று ப்ரோமிதியஸ் (அனுபவம்!) எபிமீதியஸுக்கு அறிவுறுத்தியிருந்தார், ஆனால் எபிமீதியஸ் பண்டோராவைப் பார்த்ததும் அவளது அழகில் மயங்கி உடனே அவளை மணமுடித்தார்.
பண்டோரா கொஞ்ச நாள் அவளது ஆர்வத்தை அடக்க முயன்றாள்,
ஆனால் இறுதியில் அவளால் ஆர்வத்தை தாங்க முடியவில்லை; பெட்டியைத் திறந்தாள். பெட்டியில் பரிசு என்று சொல்லி கடவுள்கள் குடுத்தது எல்லாம் நோய்களும் கஷ்டங்களும் தான். கடவுள்கள்கள் பெட்டியில் மறைத்து வைத்திருந்த அனைத்து நோய்களும் கஷ்டங்களும் வெளியே வரத் தொடங்கின.
பண்டோரா பயந்துப்போனாள் , ஏனென்றால் பெட்டியில் இருந்து பொறாமை, குரோதம், பகை, வலி, நோய், பசி, வறுமை, போர், இறப்பு போன்றவை ஒவ்வொவன்றாக வெளியே வந்து மனிதர்களை அடைந்தது. எல்லா தீய சக்திகளும் வெளியே வருவதைக் கண்டு, முடிந்தவரை விரைவாக பெட்டியை மூட முயன்றாள் பண்டோரா,
இறுதியில் உள்ளே "நம்பிக்கை" மட்டும் இருக்கும்போது பெட்டியை மூடினாள்.
பண்டோரா புராணத்தின் முக்கிய நோக்கம் உலகில் ஏன் தீமை இருக்கிறது என்ற கேள்விக்கு விடை காண்பதுதான்.
இன்றைய நாளில் "பண்டோராவின் பெட்டியைத் திறப்பது (opening a Pandora's box)" என்ற idiom ஓர் சிறிய அல்லது களங்கமில்லாத செயல் மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, மிகுந்த தாக்கமேற்படுத்துகின்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
பெண்கள் குழந்தை பெறவே பிறந்தவர்கள் என்று சமூகம் திரும்ப திரும்ப சொல்லும் காரணம் இதுதான். கூட்டத்திற்கு ஆள் சேர்க்க வேண்டும். அதனால் தான் தன்னுடைய சாதியிலயே, மதத்திலேயே, தன்னுடைய சொந்ததிலயே திருமணம் செய்ய வேண்டி வற்புறுத்துவது. அப்போதுதான் தான் சார்ந்த இனத்திற்கு ஆள் பலம் கூடும்
தாயான பின்பு தான் நீ பெண்மணி, பெண் என்றால் தாய், வம்சத்தை விருத்தி செய்ய வந்த மஹாலக்ஷ்மி, பெண்ணுக்கு குழந்தை பேரு தான் முக்கியம் அதனால் கனமான வேலைகள் செய்ய கூடாது, பெண் குழந்தை பெற விட்டால் உலகமே அழிந்து விடும் என்பது போன்ற கூற்றுக்கள் பெண்ணை வெறும் இனபெருக்கதிற்கு மட்டுமே தயார்
2 Smart Phon ஐ, வாட்ச்சை, லேப்டாப் ஐ விட பல மடங்கு அதிக நேரம் சார்ஜ் நிற்கிறது.
3, கண்களை உறுத்துவதில்லை.
4. தெரியாத, புரியாத ஆங்கில வார்த்தைகளைத் தொட்டல் போதும் சகல அர்த்தங்களும் கொண்ட அகாரதிப் பொருள் விளக்கம் உதாரணங்களுடன் என் விரல் நுனியில்.
5. அடிக்கோடிட்டு, தலைப்புக்களோடு குறிப்புகளையும் பதிந்து வைத்துக் கொள்ளும் வசதி . அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
6. இப்படி அடிக்கோடிடப்பட்டு, புத்தகத்தின் பின் முன் அட்டைகளில் குறிப்புகள் எழுதப்பட்ட எத்தனையோ புத்தகங்கள் இரவலாக போய் திரும்ப வரவே இல்லை. புதிதாக வேறு புத்தகம் வாங்குவது பெரிதில்லை.
இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் என்றாலும், ஏவாளைப் பற்றி வேறு எதுவும் பைபிள்/Qur'an/Torah வில் இல்லை. பல பெண்களைப் போலவே, ஏவாளின் சாதனைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஆதியாகமம் புத்தகத்தின் 2ம் அத்தியாயத்தில் , ஆதாமுக்கு ஒரு துணை மற்றும் உதவியாளர் இருப்பது நல்லது என்று கடவுள் முடிவு செய்தார். ஆதாம் ஆழ்ந்த உறக்கத்தில் விழ, கடவுள் அவனது விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து
லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண். Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல midrashic நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்)
தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன.
லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது.
கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு லிலித் மறுத்ததாகவும் கதை சொல்கிறது.
கடவுள் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுள் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.
இது ஒரு simple concept தான். அந்த காலத்துல மண்ணுல பொம்மை செஞ்சு பார்த்து இருக்காங்க.
மனிதனும் உயிர் இல்லாமல் போனால் வெறும் பொம்மை மாதிரி தான் இருக்கான். உடலும் விரைத்து விடும். இப்போ உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற மனிதனுக்கும் எளிதில் காணக்கூடிய ஒரு வித்தியாசம் என்ன? மூச்சு. உயிருள்ள மனிதன் மூச்சு விடுகிறான். உயிரற்ற மனிதன் மூச்சு விடுவதில்லை.
அப்போ அந்த காற்று தான் உயிர் அப்படின்றது ஒரு எளிய புரிதல். அந்த கால மனித அறிவுக்கு உண்டான புரிதல். அந்த புரிதல்ல விளைந்த கதை தான் இது.
எப்படி இந்த வெள்ள கதையை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பண்ணி உலகம் முழுக்க சொல்றங்களோ அதே போல தான் இந்த மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கிய கதையும்
கிரேக்க புராணங்களில் வரும் Narcissus ஒரு வேட்டைக்காரன், நதி கடவுள் Cephissus மற்றும் வனதேவதை Liriope ஆகியோரின் மகன். மிகவும் அழகான Narcissus ஐ, பலர் காதலித்தனர். இருப்பினும், Narcissus எல்லோர் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் மட்டுமே காட்டினான்.
ஒரு நாள், Narcissus காடுகளில் வேட்டையாடுகையில், மலைக்காட்டு தேவதை Echo அவனை பார்த்தாள், உடனடியாக Narcissus மீது echo காதலில் விழுந்தாள். Narcissus எங்கு சென்றாலும் echo அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றாள்.
யாரோ தன்னை பின்தொடர்வதை Narcissus உணர்ந்த போது எக்கோ தன்னை Narcissus க்கு வெளிப்படுத்தி Narcissus ஐ காதலிப்பதாக சொல்லி அவனை அணைக்க முயன்றாள். ஆனால், அவன் அவளைத் கீழே தள்ளி, அவளை அவமதித்துவிட்டு சென்றான்.