இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் என்றாலும், ஏவாளைப் பற்றி வேறு எதுவும் பைபிள்/Qur'an/Torah வில் இல்லை. பல பெண்களைப் போலவே, ஏவாளின் சாதனைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஆதியாகமம் புத்தகத்தின் 2ம் அத்தியாயத்தில் , ஆதாமுக்கு ஒரு துணை மற்றும் உதவியாளர் இருப்பது நல்லது என்று கடவுள் முடிவு செய்தார். ஆதாம் ஆழ்ந்த உறக்கத்தில் விழ, கடவுள் அவனது விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து
(லிலித்தை போல மண்ணிலிருந்து உருவாக்கினால் எங்கே இவளும் சம உரிமை கேட்பாளோ என்று இந்த புதிய முறையை கடவுள் பின்பற்றி இருக்கிறார். ஆதமிலிருந்து உருவாக்கப்பட்டதால் ஏவாள் ஆதாமிற்கு கீழ்படிந்து நடக்க வேண்டி இருந்தது) ஏவாளை உருவாக்க பயன்படுத்தினார்.
கடவுள் பெண்ணை Ezer என்று அழைத்தார், ஹீப்ரு மொழியில் "உதவி" என்று பொருள். ஆதாம் மனித இனத்தின் இனப்பெருக்கத்தில் அவளது பங்கைக் குறிப்பிட்டு, "உயிர்" என்று பொருள்படும் "ஏவாள்" என்கிற பெயரை அந்த பெண்ணிற்கு குடுத்தான்.
ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் உருவாகி இருந்தால் (cloning) அவளது genotype 44XY என்று இருக்கும் அதாவது ஒரு ஆண்!
இந்த chromosome கணக்கு எல்லாம் அக்கால மக்களுக்கு தெரியவில்லை.
இப்போதான் கதையில் ஒரு திருப்பம் வருது. ஒரு பாம்பு என்ன பண்ணுது. நேரா ஏவாள் கிட்ட போய் நன்மை தீமை அறியத்தக்க கனியை சாப்பிடு என்று சொல்லுது. (பாம்பு என்ன மொழியில் பேசி இருக்கும் என்று தெரியவில்லை அநேகமாக Hebrew அல்லது Aramaic la ல பேசி இருக்கும்.)
ஏவாள் சொல்லுறா இல்ல இல்ல இதை சாப்பிட்டா உடனே இறந்து போய்விடுவோம் என்று கடவுள் சொல்லி இருக்கிறார் என்று.
ஆனா பாருங்க ஆதாம் கிட்ட கடவுள் எதேன் தோட்டத்து rules and regulations சொல்லும்போது ஏவாள் பிறக்கவே இல்லை. கடவுள் நேரடியாக இதை ஏவளிடம் சொல்லியது போல தெரியவில்லை.
அநேகமாக ஆதாம் பின்பு ஏவாள்டம் சொல்லி இருக்கலாம். So Eve க்கு அந்த கனியை பற்றிய தீவிரத்தன்மை தெரியாமல் இருந்து இருக்க வாய்ப்புகள் அதிகம்.
பாம்பு சொல்லுது இல்ல இல்ல அதெல்லாம் நீங்க சாக மாட்டிங்க (கடவுள் ஆதாம் கிட்ட நீ இத சாப்பிட்டா உடனே இறந்து விடுவாய் என்று சொல்லி இருப்பார். உலகின் முதல் பொய்! ஆனாலும் ஆதாம் அதை சாப்பிட்டு 930 வருடங்கள் உயிருடன் இருப்பான்.)
இதை சாப்பிட்டால் நன்மை எது தீமை எது என்று தெரிந்துகொள்ளும் அறிவு பிறக்கும் என்று. ஆக அதை சாப்பிடும் வரை நன்மை எது தீமை எது என்று differentiate பண்ணி பார்க்கும் அறிவு ஆதாம் ஏவாள் இருவருக்கும் இல்லை.
அப்படியானால் கடவுள் செய்யகூடாது என்று சொன்ன ஒன்றை செய்வது தவறு என்று அலசி பார்க்கும் அறிவு அவர்களிடம் இல்லை. அப்போ அந்த கனியை அவர்கள் உண்டது அவர்கள் குற்றம் இல்லை.
ஏவாள் அந்த கனியை பறித்து ஆதாமிடம் தருகிறாள். அவனும் சாப்பிட்டான்.
எனக்கு கீழ்படிந்து இருக்கும் பெண் வேண்டும் என்பதுதான் ஆரம்பம் முதலே ஆதாமின் விருப்பமாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கடவுள் பண்ணாதே என்று சொன்ன ஒன்றை ஏவாள் செய்யும்போது ஆதாம் என்ன செய்ய வேண்டும் அவளை கண்டித்து திருத்த வேண்டும்.
அது போக கடவுள் இவனிடம் தான் rules and regulations எல்லாம் சொல்லி இருக்கிறார். ஆனால் ஆதாம் வசதியாக அதை எல்லாம் மறந்து விட்டு ஏவாள் மீது பழியை போட்டு விட்டான்.
ஏவாளுடைய கதை கில்கமெஷில் வரும் இன்னான கதை போல இருக்கிறது.
கிரேக்க புராணங்களில் வரும் Pandora கதையுடனும் ஒத்து இருக்கிறது.
இருவருமே உலகின் முதல் பெண்கள். இருவருமே கடவுள் செய்யகூடாது என்று சொன்ன ஒன்றை செய்தவர்கள். அவர்களின் ஆர்வத்தின் காரணமாக, உலகம் இன்று சபிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இரண்டு கதைகளிலிருந்தும், பெண்கள் எப்போதுமே வஞ்சகத்தின் குற்றவாளிகளாகவே பார்க்கப்படுகிறார்கள் என்பதையும், இந்த உலகின் ஒவ்வொரு தீமைக்கும் பெண்களே காரணம் என்று ஆண்கள் எழுதிய புராணங்கள் கூறுவதையும் நாம் பார்க்கலாம். உலகம் எங்கும் "ஆவதும் பெணணாலே அழிவதும் பெண்ணாலே" தான்.
இந்து புராணங்களில் கூட எல்லா அழிவிற்கும் பெண்களின் ஆர்வமும், சொல் பேச்சு கேளாமையும் தான் காரணமாக சொல்லப்படுகிறது.
கடவுளுக்கு கீழ்ப்படியாமல் ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியும் கனியை உண்டது தான் உலகின் ஆதி பாவம் (original sin) என்று அழைக்கப்படுகிறது.
பெண்கள் குழந்தை பெறவே பிறந்தவர்கள் என்று சமூகம் திரும்ப திரும்ப சொல்லும் காரணம் இதுதான். கூட்டத்திற்கு ஆள் சேர்க்க வேண்டும். அதனால் தான் தன்னுடைய சாதியிலயே, மதத்திலேயே, தன்னுடைய சொந்ததிலயே திருமணம் செய்ய வேண்டி வற்புறுத்துவது. அப்போதுதான் தான் சார்ந்த இனத்திற்கு ஆள் பலம் கூடும்
தாயான பின்பு தான் நீ பெண்மணி, பெண் என்றால் தாய், வம்சத்தை விருத்தி செய்ய வந்த மஹாலக்ஷ்மி, பெண்ணுக்கு குழந்தை பேரு தான் முக்கியம் அதனால் கனமான வேலைகள் செய்ய கூடாது, பெண் குழந்தை பெற விட்டால் உலகமே அழிந்து விடும் என்பது போன்ற கூற்றுக்கள் பெண்ணை வெறும் இனபெருக்கதிற்கு மட்டுமே தயார்
2 Smart Phon ஐ, வாட்ச்சை, லேப்டாப் ஐ விட பல மடங்கு அதிக நேரம் சார்ஜ் நிற்கிறது.
3, கண்களை உறுத்துவதில்லை.
4. தெரியாத, புரியாத ஆங்கில வார்த்தைகளைத் தொட்டல் போதும் சகல அர்த்தங்களும் கொண்ட அகாரதிப் பொருள் விளக்கம் உதாரணங்களுடன் என் விரல் நுனியில்.
5. அடிக்கோடிட்டு, தலைப்புக்களோடு குறிப்புகளையும் பதிந்து வைத்துக் கொள்ளும் வசதி . அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
6. இப்படி அடிக்கோடிடப்பட்டு, புத்தகத்தின் பின் முன் அட்டைகளில் குறிப்புகள் எழுதப்பட்ட எத்தனையோ புத்தகங்கள் இரவலாக போய் திரும்ப வரவே இல்லை. புதிதாக வேறு புத்தகம் வாங்குவது பெரிதில்லை.
பண்டோரா (Pandora), கிரேக்க புராணத்தின் படி, பூமியின் முதல் பெண்.
கிரேக்க கடவுளான ஜீயஸ் ஒரு மாஸ்டர் பிளானோடு பண்டோராவை படைத்தார். ப்ரோமிதியஸ் (Prometheus) ஜீயஸ்க்கு தெரியாமல் மனிதகுலத்திற்கு நெருப்பைக் கொடுத்தார்.
இதற்காக ப்ரோமிதியஸ் ஐ தண்டித்த கடவுள் (அது தனி கதை அதை அப்புறமா சொல்றேன்!), மனிதர்களையும் தண்டிக்க விரும்பினார். அதற்காக உருவாக்கப்பட்டவள் தான் பண்டோரா.
ஹெஃபாஸ்டஸ் (Hephaestus) அவளை களிமண்ணிலிருந்து உருவாக்கினார், அவளைஅழகியாக வடிவமைத்தார்,
அப்ரோடைட் (Aphrodite) அவளுக்கு பெண்மையை வழங்கினார் மற்றும் அதீனா (Athena) தனது கைவினைகளைக் கற்றுக் கொடுத்தாள். ஜீயஸ், ஹெர்ம்ஸை (Hermes) அழைத்து பாண்டோராவிற்கு பிடிவாதம், ஏமாற்றுதல், ஆர்வம் போன்ற குணங்களை வழங்க உத்தரவிட்டார்.
லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண். Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல midrashic நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்)
தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன.
லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது.
கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு லிலித் மறுத்ததாகவும் கதை சொல்கிறது.
கடவுள் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுள் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.
இது ஒரு simple concept தான். அந்த காலத்துல மண்ணுல பொம்மை செஞ்சு பார்த்து இருக்காங்க.
மனிதனும் உயிர் இல்லாமல் போனால் வெறும் பொம்மை மாதிரி தான் இருக்கான். உடலும் விரைத்து விடும். இப்போ உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற மனிதனுக்கும் எளிதில் காணக்கூடிய ஒரு வித்தியாசம் என்ன? மூச்சு. உயிருள்ள மனிதன் மூச்சு விடுகிறான். உயிரற்ற மனிதன் மூச்சு விடுவதில்லை.
அப்போ அந்த காற்று தான் உயிர் அப்படின்றது ஒரு எளிய புரிதல். அந்த கால மனித அறிவுக்கு உண்டான புரிதல். அந்த புரிதல்ல விளைந்த கதை தான் இது.
எப்படி இந்த வெள்ள கதையை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பண்ணி உலகம் முழுக்க சொல்றங்களோ அதே போல தான் இந்த மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கிய கதையும்
கிரேக்க புராணங்களில் வரும் Narcissus ஒரு வேட்டைக்காரன், நதி கடவுள் Cephissus மற்றும் வனதேவதை Liriope ஆகியோரின் மகன். மிகவும் அழகான Narcissus ஐ, பலர் காதலித்தனர். இருப்பினும், Narcissus எல்லோர் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் மட்டுமே காட்டினான்.
ஒரு நாள், Narcissus காடுகளில் வேட்டையாடுகையில், மலைக்காட்டு தேவதை Echo அவனை பார்த்தாள், உடனடியாக Narcissus மீது echo காதலில் விழுந்தாள். Narcissus எங்கு சென்றாலும் echo அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றாள்.
யாரோ தன்னை பின்தொடர்வதை Narcissus உணர்ந்த போது எக்கோ தன்னை Narcissus க்கு வெளிப்படுத்தி Narcissus ஐ காதலிப்பதாக சொல்லி அவனை அணைக்க முயன்றாள். ஆனால், அவன் அவளைத் கீழே தள்ளி, அவளை அவமதித்துவிட்டு சென்றான்.