#கர்பரக்ஷாம்பிகை சமேத #முல்லைநாதர் ஆலயம்.
கருதரித்தவர்களும், கர்ப்பம் அடைந்தவர்களும் தமது பிரசவம் நல்ல முறையில் அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு வணங்குவது கர்பரக்ஷாம்பிகை எனும் ஆலயத்தில்தான். இந்த ஆலயம் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தின் அருகில் உள்ள திருக்கருகாவூர் எனும்
கிராமத்தில் வனப் பகுதியில் உள்ளது. இந்த கிராமம் பாபநாசத்தில் இருந்து சுமார் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் இருந்து நிறைய பஸ்கள் உள்ளன. ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதின் காரணம் இது சோழ மன்னர்கள்
காலத்தில் கட்டப்பட்டது என்பதுதான். ஆலயம் காவேரி நதியின் கிளை நதியான வெட்டாட்றின் நதிக் கரையில் உள்ளது. முன் காலத்தில் இந்த ஆலயம் முல்லைப் பூக்கள் நிறைந்த வனப் பகுதியில் அமைந்து இருந்தது. ஆகவே இங்குள்ள சிவபெருமான் முல்லைநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அப்பர் திருஞான
சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். இந்த ஆலயத்தில் எறும்புப் புற்றினால் ஆன உருவையே முல்லைநாதராக கருதி வணங்குவதினால் சுவாமியின் திருமேனியில் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. நேரடியாக அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. வளர் பிறை பிரதோஷ நாட்களில்
புனுகு சாற்றி வழிபட்டால் தீராத வியாதிகள் தீரும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்டது. சுவாமி திருமேனியில் முல்லைக் கொடி சுற்றிய வடு உள்ளது. இங்குள்ள முல்லைநாதரின் சமேதகராக அவருடைய மனைவி அன்னை பார்வதி தேவியே கர்பரக்ஷாம்பிகை அம்பாள். இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கிய
படி உள்ளாள். அவளே இங்கு வந்து தன்னை வேண்டி வணங்கும் கர்பிணிகளுக்கு அடைக்கலம் தந்து அவர்களை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மழலைப் பேறு பெற அருள் பாலிக்கின்றாள் என்பது ஐதீகம். இக்கோயிலின் அமைப்பே சோமாஸ்கந்த அமைப்பாகும். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதே,
இக்கோயிலில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். #தலவரலாறு முன்னொரு காலத்தில் இந்த ஷேத்திர வனப் பகுதியில் நித்ருவா எனும் ரிஷி தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். நித்ருவா காஷ்யப ரிஷியின் பரம்பரையைச் சேர்ந்தவர். வாயு புராண செய்திப்படி அவர் வாத்சாய ரிஷியின் மகன்
ஆவார். அவர் வாயுவின் மைந்தரான ச்யாவனா மற்றும் சுகன்யா என்ற தம்பதியினருக்கு பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டவர். கணவன் மனைவி இருவருமே சிவ-பார்வதியின் பக்தர்கள். தமது குடிலுக்கு எதிரில் முல்லை வனப்பகுதியில் சிவ லிங்கம் போன்ற உருவில் இயற்கையாக அமைந்து இருந்த எறும்புப் புற்றின்
மீது தடுப்புப் போட்டு அதையே சிவலிங்கமாகக் கருதி தினமும் பல மணி நேரம் அதற்கு பூஜை செய்து விட்டே உணவு அருந்துவார்கள். இப்படியாக எளிமையான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருந்த அவர் மனைவி வேதிகை ஒருமுறை கர்ப்பம் அடைந்தாள். வெகு காலம் கற்பமே தரிக்காமல், குழந்தைப் பேறு அமையாமல்
இருந்ததினால் வருத்தத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்தவர்களுக்கு அந்த செய்தி மகிழ்ச்சியாகவே இருந்தது. ஒருநாள் மதியம் அந்த ரிஷி வெளியில் சென்று இருந்தார். நிறைமாத கர்பிணியான வேதிகை களைப்பினால் படுத்து இருந்தாள். அந்த நேரத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் அவர்கள் குடிலுக்கு வந்து
பிட்ஷைக் கேட்டு நின்றார். அறைகுறை மயக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்தவளுக்கு அவர் கூப்பிட்டது காதில் விழவில்லை. ஆகவே அவள் எழுந்து வரவில்லை. பிட்ஷையும் போடவில்லை. ஊர்த்துவ ரிஷி அதைக் கண்டு கடும் கோபம் அடைந்தார். உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் ‘பிட்ஷைக் கேட்டு வந்த என்னை
அவமானப்படுத்தும் விதமாக படுத்துக் கிடைக்கின்றாளே’ என கோபமுற்றவர் அவள் கரு கலையட்டும் என சாபம் இட்டு விட்டுச் சென்றார். சத்தமாக போட்ட சாபத்தைக் கேட்டு கண் விழித்து எழுந்தாள் வேதிகை. அழுது புரண்டாள். வெளியில் சென்று இருந்த நித்ருவா ரிஷி வந்ததும் அவரிடம் நடந்ததைக் கூறி அழுதாள்.
இத்தனைக் காலமும் குழந்தை இல்லாமல் இருந்த தமக்கு பிறக்க இருந்தக் குழந்தை மடிய வேண்டுமா? மனமுருகி அவர்கள் தாம் பூஜை செய்து வந்த இடத்தில் போய் சிவ – பார்வதியை வேண்டினார்கள். அவர்களுடைய அழுகுரல் கைலாயத்தில் இருந்த பார்வதியின் காதுகளில் ஒலித்தது . மனம் வருந்தினாள் பார்வதி. தனது
பக்தர்கள் செய்யாத பாவத்துக்கு ஊர்த்துவ ரிஷி தண்டனை தருவதா என கோபமுற்று என்ன ஆனாலும் சரி, என் பக்தர்களின் குலம் காப்பேன் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு அவர்கள் முன் தோன்றி ஆறுதல் அளித்தாள். ‘என்னை நம்பி வந்துள்ள உங்களைக் கைவிட மாட்டேன். கவலை வேண்டாம்’ எனக் கூறியவள் வேதிகையின்
கர்பத்தில் இறக்க இருந்தக் குழந்தையை வெளியில் எடுத்து அதை ஒரு தங்கப் பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொடுத்தாள். அதை அப்படியே வைத்து இருக்குமாறும் நிறை மாதத்தில் அதன் அழஊகுரல் ஒலிக்கும் எனவும் அப்போது அதை வெளியில் எடுத்து வளர்க்குமாறும் கூறிவிட்டு மறைந்தாள். அதைக் கண்ட நித்ருவா-
வேதிகை தம்பதிகள் பார்வதியின் கருணையை எண்ணி வியந்தார்கள். அவளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறி வணங்கினார்கள். அதன் பின் குடத்தில் வைக்கப்பட்டு இருந்த கருவை அவள் கூறியது போலவே அந்த தம்பதியினரும் மிகவும் கவனமாக காப்பற்றி வந்து பத்து மாதம் ஆனதும் அந்தக் குடத்தில் வைக்கப்பட்டு
இருந்து குழந்தை வயிற்றில் இருந்தக் குழந்தை சுகப் பிரசவம் பெற்றது போல வெளியில் எடுத்து வளர்த்தார்கள். ஆனால் அதே சமயத்தில் ஒரு ரிஷி கொடுத்த சாபத்தையும் தடை செய்வது சரி அல்ல என்பதை உணர்ந்த பார்வதி பிறந்தக் குழந்தையின் தாயாரின் மார்பில் குழந்தைக்கு தரும் பால் மட்டும் சுரக்காமல்
இருக்கட்டும் என அந்த சாபத்தை மாற்றி அமைத்தாள். அதனால் குழந்தையை வெளியில் எடுத்ததும் வேதிகையின் மார்பில் பால் சுரக்கவில்லை. ஆகவே ஏற்கனவே ஏற்பாடு செய்து இருந்ததுபோல பச்சிளம் குழந்தைக்கு உணவு எப்படித் தராமல் இருப்பது என்பதற்காக அந்தக் குழந்தைக்கு பால் தருவதற்காக பார்வதி தேவி
காமதேனுப் பசுவின் பெண்ணான நந்தினியை பூமிக்கு அனுப்பி வைத்தாள். நந்தினியும் பூமிக்கு வந்து அந்த முனிவரின் பர்ணசாலையில் தங்கி தினமும் தன்னுடைய மடியில் இருந்து சுரந்தப் பாலை ஒரு பாத்திரத்தில் நிரப்பிக் கொடுக்க நித்ருவா-வேதிகை தம்பதிகள் அச்சம் இன்றி குழந்தைக்கு அந்தப் பாலைக் கொடுத்து
வளர்த்தார்கள். இன்று அந்த ரிஷி பத்தினிகள் வாழ்ந்த இடத்தில்தான் இந்த ஆலயம் அமைந்துள்ளதாகவும் முல்லை வனப்பகுதியில் சிவ லிங்கம் போன்ற உருவில் எந்த எறும்புப் புற்றை சிவலிங்கமாகக் கருதி வணங்கி அதற்கு பூஜை செய்து ரிஷி தம்பதியினர் வழிபட்டார்களோ அந்தப் புற்றே இன்றும் இந்த ஆலயத்தின்
முல்லைநாதராக உள்ளார் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. கர்ப்பம் அடைந்தப் பெண்கள் இங்கு வந்து சுகப் பிரசவம் ஆகவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் விளக்கெண்ணை அல்லது நெய் போன்றவற்றை கர்பரக்ஷாம்பிகை- முல்லைநாதருக்கு காணிக்கையாக செலுத்தி அங்கு அம்பாளை வேண்டுகிறார்கள். அவர்கள் படைக்கும்
அந்த விளக்கெண்ணை அல்லது நெய் அவர்களுக்குப் பிரசாதமாக தரப்படுகிறது. விளக்கெண்ணையை கர்பிணிகள் சுகப் பிரசவம் ஆகா வேண்டும் என்பதற்காக தமது வயிற்றில் தடவிக் கொள்கிறார்கள். இந்த ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால் இங்கு உள்ள நவகிரகங்கள் அனைத்தும் வெவ்வேறு திசைகளை நோக்கி அமர்ந்து
கொண்டு இல்லாமல் அனைத்தும் சூரிய தேவரைப் பார்த்தபடியே உள்ளனர்.
ஆலய விலாசம்
The Executive Officer
Arulmigu Mullai Vananathar Thirukkoil
Thirukkarugavur (P.O)
Papanasam Tk.
Thanjavur Dt. 614 302
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப்
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
#NEET#நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)
மீனாக்ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )
SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும்
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்