A Thread on Free Life Insurance on your SIP Investment👇
SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு பற்றிய பதிவு:
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு? 2. எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்? 3. தேவையான தகுதிகள். 4. பின்வரும் சந்தர்ப்பங்களில் காப்பீட்டு நிறுத்தப்படும் 5. முக்கிய நன்மைகள். 6. முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள். 7. இந்த திட்டத்தின் குறைகள்.
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு?
உங்களின் SIP முதலீட்டின் மூலம் உங்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வேண்டுமா? இந்த பதிவை மேலும் படியுங்கள்.
நீங்கள் செய்யும் SIP முதலீட்டின் மூலம் ஆயுள் காப்பீடு இலவசமாகக் கிடைக்கும், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
அத்தகைய இலவச காப்பீடு சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் வழங்கப்படும் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் முதலீட்டாளர் குறைந்த பட்சம் 36 மாதங்கள் முதலீடு செய்தால் மட்டுமே இது பொருந்தும்.
பொதுவாக முதலீட்டாளர்கள் ஒரு SIP ஐத் தொடங்கிய பின், அதன் மூலம் வருமானம் கிடைக்கும், இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தரும் ரூ. 50 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு கிடைக்கும். இவை அடிப்படையில் ஒரு குழு காப்பீட்டு (Group Insurance) திட்டம் ஆகும்.
இது முதலீட்டாளர்களுக்கு முதலீடு திட்டமல்லாமல் அவர்களுக்குக் காப்பீட்டு பாதுகாப்பையும் அளிக்கிறது. முதலீட்டாளர்கள் செய்யும் மாதாந்திர SIP தவணையின் மூலம் காப்பீட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது.
காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ஆயுள் காப்பிட்டு திட்டங்களை வாங்கி, அதற்கான பிரீமியத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே ஏற்கிறது.
2. எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்?
ICICI, Axis, SBI மற்றும் Aditya Birla Sun Life நிறுவனங்கள் இந்த திட்டங்களை வழங்கி வந்தன, தற்போது 2 நிறுவனங்கள் மட்டுமே இந்த சேவையை வழங்குகின்றன.
Nippon India - SIP Insure (18 Plans) &
PGIM Smart SIP (9 Plans)
இத்தகைய SIP திட்டங்களுக்கு Nippon SIP Insure மற்றும் PGIM Smart SIP என்று நிறுவனங்கள் வேறு பெயர்களைக் கொண்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் உங்கள் SIP முதலீட்டின் அடிப்படையில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையை அதன் மடங்குகளில் வழங்குகின்றன.
உ: ரூ. 10,000/மாத SIP க்கு PGIM மற்றும் Nippon நிறுவனங்கள் தரும் காப்பிட்டு தொகைகளின் கணக்கிட்டுகள்.
3. முதலீடு செய்ய தேவையான தகுதிகள்:
- குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது - 18 / 51
- SIP மூலம் தடையில்லாமல் 36 மாதங்கள் (குறைந்தபட்சம்) முதலீடு செய்ய வேண்டும்
- Joint Account வைத்திருப்பின், காப்பீட்டின் முதலாம் விண்ணப்பதாரருக்கு காப்பீடு செய்யப்படுகிறது
4. பின்வரும் சந்தர்ப்பங்களில் காப்பீட்டு நிறுத்தப்படும்:
- SIP 36 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டால், காப்பீட்டு உடனடியாக நிறுத்தப்படும்.
- முதலீட்டாளர் SIP இன் முதல் 36 மாதங்களில் தொடர்ச்சியாக 3 SIP-ஐ கட்டத் தவறினால் காப்பீடு நிறுத்தப்படும்.
- SIP இன் பகுதி தொகையை எடுப்பது அல்லது SIP ஐ முழுவதாக எடுக்கும் போது.
- அதிகபட்ச வயது 55 வயது வரம்பை அடைந்தவுடன்.
5. முக்கிய நன்மைகள்:
- இவை Group Insurance என்பதால் மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை.
- காப்பீடு 55 வயது வரை செல்லுபடியாகும். எனவே, ஒரு முதலீட்டாளர் தனது 51 வயதில் 10 வருட SIP ஐத் தொடங்கினால், 55 வயது வரை காப்பீட்டுத்
தொகை கிடைக்கும்.
- முதல் SIP தேதியிலிருந்தே காப்பீடு தொடங்குகிறது,
- 3 வருடங்களுக்குப் பிறகு SIP நிறுத்தப்பட்டாலும், காப்பீடு அதிகபட்ச தகுதியான 55 வயது வரை காப்பீடு தொடரும்.
6. இலவச காப்பீட்டு SIPல் முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
- தொடர்ச்சியாக முதலீடு செய்வதன் மூலம், மற்ற திட்டங்களை விட அதிக வருமானம் வரும் திட்டமாக தேர்வு செய்ய வேண்டும்.
- இந்த இலவச காப்பீடு உங்கள் முதன்மையான காப்பீடாக இருக்கக்கூடாது.
- அத்தகைய சலுகைகளின் ஆயுள் காப்பீட்டின் அளவை முழுமையாகச் சார்ந்து இருக்காதீர்கள். ஒருவர் வருடாந்திர எடுத்துக்கொள்ளும் வருமானத்தில்
குறைந்தது 10 மடங்கு ஆயுள் காப்பீட்டை வைத்திருக்க வேண்டும். SIP காப்பீட்டுத் தொகை ஏற்கனவே இருக்கும் கவரேஜை மட்டுமே சேர்க்கும்.
- உங்கள் நீண்ட கால இலக்குகளுக்காக நீங்கள் SIP யில் முதலீடு செய்கிறீர்கள். உங்கள் இலக்கை அடைய ஒரு பகுதி தொகையைத் திரும்பப் பெறுவதன்
மூலம் கூட, இந்த இலவச காப்பீட்டு நிறுத்தப்படும்.
- முதலீடு செய்வதற்கு முன் ஃபண்ட் நிறுவனங்களின் வலைத்தளத்தில் உள்ள நிபந்தனைகளைக் கவனமாகப் படிக்கவும்.
7. குறைகள்:
- இலவச ஆயுள் காப்பீட்டு அதிகபட்ச தொகையான ரூ .50 லட்சத்தைப் பெற உங்கள் SIP தொகை கிட்டத்தட்ட ரூ .41,000 / மாதம் ஆக இருக்க வேண்டும்.
- இந்த நன்மையைப் பெற Nippon & PGIM வழங்கும் ஒரு வரையறுக்கப்பட்ட திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
இந்த நிறுவங்களை பற்றி சில தகவல்கள், அவர்களின் வலைத்தளத்தில் இருந்து
எடுக்கப்பட்டவை. mf.nipponindiaim.com
Information is Wealth!
மேலே சொன்ன தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளத்தாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்னும் நல்ல தலைப்புடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.
நன்றி.
வணக்கம். 🙏
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, நான் கற்றதை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளைத் தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.
டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி என்னுடைய பதிவுகள்.
A Thread on Term Insurance:
A Thread on how to select a Mutual Fund for investment:👇
முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃபண்டை எப்படித் தேர்வு செய்வது பற்றிய பதிவு:
மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்: 1. Financial Risks / Goal based 2. மியூச்சுவல் ஃபண்ட் நிதியின் அளவு மற்றும் மேலாளர் 3. நிலையான CAGR 4. கட்டணங்கள் 5. வரிவிதிப்பு 6. Direct vs Regular
1. Financial Risks / Goal based:
ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் நிதி நிலைமைகள், தேவைகள் மற்றும் நிதி இலக்குகள் வேறுபடும், அதன் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் நிதியை ஒருவர் தேர்வு செய்வது நல்லது.
முதலீடு செய்வதற்கு முன்,
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும், இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணம் சேகரித்து பங்கு, பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் பண சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம், நிதி மேலாளர்களால் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில் திட்டத்தின் முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்படுகிறது.
SIP, STP மற்றும் SWP முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிய பதிவு.
1. SIP முதலீட்டுத் திட்டம்:
a. SIP என்பது நடுத்தர மக்களுக்கான சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டம். ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்யும் முறையாகும். இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதற்குப்
பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில
- ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சமாக Rs 100 முதல் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- முதலீடு சராசரி, ஒவ்வொரு மாதமும் முதலீடுகள் வெவ்வேறு NAV களில் செய்யப்பட்டிருக்கும் (இது சந்தை மூலம் தீர்மானிக்கப்படுகிறது) எனவே
A Thread on Financial Planning for Middle Class Family👇
நடுத்தர குடும்பத்திற்கான நிதி திட்டமிடல் பற்றிய பதிவு:
1. நிதி திட்டமிடல் 2. சேமிப்பு VS முதலீடு 3. பணவீக்கம் 4. முதலீடு 5. நிதி திட்டமிடல் செய்வது எப்படி?
1. நிதி திட்டமிடல்:
நிதி திட்டமிடல் என்பது சம்பாதித்த பணத்தைச் சேமிக்க, செலவழிக்க, முதலீடு செய்யத் தேவையான தொகையைத் தீர்மானிக்கும் ஒரு செயல்முறையாகும்.
அதில் வரவு, செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய கணக்குகளை உள்ளடக்கியது.
இன்று நாம் செய்யும் நிதி திட்டமிடல்களைப் பொறுத்தே,
நமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். நிதி திட்டமிடல் என்பது செலவுகளைக் குறைக்க, முதலீடுகளை ஒழுங்குபடுத்த, நாம் வாழ்நாள் முழுவதும் நமது இலக்குகளை - திருமண செலவு, ஒரு வீடு / நிலம் வாங்க, குழந்தைகள் பள்ளியில்,
1. இப்போது வீடு வாங்கலாமா?
- எப்படியாவது ஒரு கடனை வாங்கியாவது ஒரு வீட்டை வாங்கிடணும் என்று ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தில் தினசரி நடக்கும் உரையாடல்களில் ஒன்று.
- ஒரு பெண் பார்க்க போவதுற்கு முன் பெண் வீட்டில் கேட்கும் முதல் கேள்வி மாப்பிள்ளைக்கு வேலை மற்றும் சொந்த வீடு இருக்கிறதா?
இவை அனைத்திற்கும் பதில் சொல்வது போல், தற்போதைய சூழ்நிலையில் வீட்டுக் கடன் விகிதம் குறைவாகவும் மற்றும் வீடுகளின் விலைகளும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடக் குறைவாக உள்ளன, இது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாகும்.
A Thread on smallcase Investment:
smallcase முதலீடு பற்றிய பதிவு:
1. smallcase முதலீடு என்றால் என்ன?
smallcase முதலீடு என்பது முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான ஒரு புதிய வழி முறை. அதாவது Mutual Fund ஐப் போலவே, பல/சில பங்குகளில் முதலீடு செய்வதாகும், ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலல்லாமல்,