A Thread on Mutual Funds Types: 👇

மியூச்சுவல் ஃபண்ட் வகைகளைப் பற்றிய பதிவு:
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும், இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணம் சேகரித்து பங்கு, பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் பண சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம், நிதி மேலாளர்களால் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில் திட்டத்தின் முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்படுகிறது.
இந்த கூட்டு முதலீட்டுத் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருமானம், முதலீட்டாளர்களிடையே அவர்களின் முதலீட்டு தொகைக்குக்கேற்ப விநியோகிக்கப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்:
அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் இந்த ஐந்து வகைகளில் வகைப்படுத்தப்படும்:
a. ஈக்விட்டி (Equity Funds)
b. கடன் (Debt Funds)
c. ஹைப்ரிட் (Hybrid Funds)
d. தீர்வு சார்ந்த (Solution oriented Funds)
e. மற்றவை (Other Funds)
a.Equity Funds:
ஈக்விட்டி திட்டங்கள் பொதுவாகப் பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களில் செய்யும் முதலீட்டுத் திட்டங்கள் ஆகும்:
பங்குச் சந்தை நிறுவனங்களை மூலதனத்தின் அடிப்படையில் largecap, midcap மற்றும் smallcap என்று பிரிக்கப்படுகிறது:
Large Cap - பங்குச் சந்தை முதல் 100 நிறுவனங்கள்.

Mid Cap - பங்குச் சந்தை முதல் 101-250 நிறுவனங்கள்.

Small Cap - பங்குச் சந்தை முதல் 251 பின் வரும் நிறுவனங்கள் ஆகும்.

Equity Funds மொத்தம் 10 வகைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானவை:
FlexiCap Fund:
Large cap, Midcap மற்றும் Smallcap பங்குகளில் குறைந்தபட்ச முதலீடு 65% முதலீடு செய்யும் ஒரு ஈக்விட்டி திட்டம்.

MultiCap Fund:
Large cap பங்குகளில் குறைந்தபட்சம் 25%, Mid cap ல் குறைந்தபட்சம் 25% மற்றும் smallcap ல் குறைந்தபட்சம் 25% முதலீடு இருக்கும்.
-Large Cap Fund:
Large cap பங்குகளில் குறைந்தபட்சம் 80%, முதலீடு இருக்கும்.

-Large & Mid Cap Fund
Large cap பங்குகளில் குறைந்தபட்சம் 35%, Mid cap ல் குறைந்தபட்சம் 35% முதலீடு இருக்கும்.

-Mid Cap Fund:
Midcap பங்குகளில் குறைந்தபட்ச முதலீடு 65% இருக்கும்.
-Small Cap Fund:
Smallcap பங்குகளில் குறைந்தபட்ச முதலீடு 65% இருக்கும்.

-Sectoral Fund:
ஈக்விட்டி திட்டம் முக்கியமாக IT, FMCG, Banking, Power, Infra மற்றும் pharma போன்ற குறிப்பிட்ட துறைகளின் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இதில் குறைந்தபட்ச முதலீடு 80% இருக்கும்.
-ELSS Fund:
Equity Linked Savings Scheme திட்டம் முக்கியமாக வருமான வரி விலக்கு மற்றும் மூன்று ஆண்டுகள் lock-in உடன் உள்ள ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்.
b.Debt Funds:
Debt Funds பெருமளவு பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் போன்ற நிலையான வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.

-Debt Funds மொத்தம் 16 வகைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானவை:
-Money Market Fund: 1 ஆண்டு வரை முதிர்வு கொண்ட முதலீடு.

-Short Duration Fund: 1-3 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கும் முதலீடு.

-Medium Duration Fund: 3-4 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கும் முதலீடு.

-Medium to Long Duration Fund: 4-7 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கும் முதலீடு.
-Long Duration Fund: 7 ஆண்டுகளுக்கும் மேலான முதலீடு.

-Corporate Bond Fund: முக்கியமாக அதிக மதிப்பிடப்பட்ட கார்ப்பரேட் பத்திரங்களில் 80% முதலீடு செய்கிறது.

-Banking and PSU Fund: வங்கிகள், பொதுத்துறை, பொது நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கடன் கருவிகளில் முதலீடு செய்யும் திட்டம்.
-Gilt Fund: அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம். G Secs இல் குறைந்தபட்ச முதலீடு 80% இருக்கும்.
c. Hybrid Funds:
ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. இது Equity, Debt மற்றும் தங்கத் திட்டங்களில் கலவையாக இருக்கலாம்.

Hybrid Funds மொத்தம் 6 வகைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானவை:
-Multi Asset Allocation: குறைந்தபட்சம் மூன்று திட்டங்களில் Equity, Debt மற்றும் தங்கம் குறைந்தபட்சம் 10% ஒதுக்கீட்டில் முதலீடு செய்யப்படுகின்றன

-Arbitrage Fund: Arbitrage ஃபண்ட் மேலாளர் ஒரே நேரத்தில் பணச் சந்தையில் பங்குகளை வாங்கி Futures அல்லது derivatives சந்தைகளில் விற்கிறார்
d. Solution Oriented Funds:
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியத் திட்டமிடல் மற்றும் குழந்தையின் எதிர்காலக் கல்வி போன்ற நீண்ட கால நோக்கங்களுக்கான நிதித் திட்டமிடலுக்கு இந்த திட்டங்கள் உதவியாக இருக்கும்.
Solution Oriented Funds மொத்தம் 2 வகைகள் உள்ளன:
-Retirement Fund மற்றும் Children’s Fund:
இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு Equity, Debt அல்லது கலவையாக இருக்கலாம். பொதுவாக இந்த திட்டங்களில் குறைந்தபட்சம் ஐந்து வருட Lockin, அதிகபட்ச ஓய்வூதிய வயது அல்லது குழந்தை மேஜர் ஆகும் வரை காலத்தைக் கொண்டிருக்கும்.
e. Other Funds 2 வகைகள் உள்ளன:
-Index Funds / ETFs:
Index Funds/ ETFs என்பது Nifty, Sensex போன்ற பங்கு சந்தை குறிப்பிட்ட Index ல் பின்பற்றும் பங்குகளில் / துறை / தொழில் / பத்திர / commodity சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.
-Fund Of Fund:
இதில் மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர் நேரடியாகப் பங்கு அல்லது பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, உள்நாட்டு மற்றும் வெளிநாடு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் திட்டமாகும்.
தற்போது இந்தியாவில் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவங்கள் மற்றும் 2500 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன.
இவற்றில் அனைத்து வகையான மியூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீடு செய்ய தேவையில்லை, தங்களின் நிதி நிலைமை, முதலீட்டுத் தேவைகளின் அடிப்படையிலும் திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் ஏன், எப்படி, எதை தேர்வு செய்யவேண்டும் மற்றும் சில நுணுக்கங்களை பற்றி வரும் வாரங்களில் எழுதுகிறேன்.

Information is Wealth!
மேலே சொன்ன தகவல்கள் அனைத்தும் பயனுள்ளத்தாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்னும் நல்ல தலைப்புடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.
நன்றி. வணக்கம். 🙏
@Karthicktamil86
@theroyalindian
@IamNaSen
@aram_Gj
@jamozhi
@akaasi
#learningguy
#LGWeeklyposts
#LGpost31
#mutualfunds
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, நான் கற்றதை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளைத் தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Learning Guy

Learning Guy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @learning_guy_

3 Sep
A Thread on SIP, STP & SWP 👇

SIP, STP மற்றும் SWP முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிய பதிவு.
1. SIP முதலீட்டுத் திட்டம்:
a. SIP என்பது நடுத்தர மக்களுக்கான சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டம். ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்யும் முறையாகும். இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதற்குப்
பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில
- ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சமாக Rs 100 முதல் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- முதலீடு சராசரி, ஒவ்வொரு மாதமும் முதலீடுகள் வெவ்வேறு NAV களில் செய்யப்பட்டிருக்கும் (இது சந்தை மூலம் தீர்மானிக்கப்படுகிறது) எனவே
Read 30 tweets
27 Aug
A Thread on Financial Planning for Middle Class Family👇

நடுத்தர குடும்பத்திற்கான நிதி திட்டமிடல் பற்றிய பதிவு:

1. நிதி திட்டமிடல்
2. சேமிப்பு VS முதலீடு
3. பணவீக்கம்
4. முதலீடு
5. நிதி திட்டமிடல் செய்வது எப்படி?
1. நிதி திட்டமிடல்:
நிதி திட்டமிடல் என்பது சம்பாதித்த பணத்தைச் சேமிக்க, செலவழிக்க, முதலீடு செய்யத் தேவையான தொகையைத் தீர்மானிக்கும் ஒரு செயல்முறையாகும்.
அதில் வரவு, செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய கணக்குகளை உள்ளடக்கியது.
இன்று நாம் செய்யும் நிதி திட்டமிடல்களைப் பொறுத்தே,
நமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். நிதி திட்டமிடல் என்பது செலவுகளைக் குறைக்க, முதலீடுகளை ஒழுங்குபடுத்த, நாம் வாழ்நாள் முழுவதும் நமது இலக்குகளை - திருமண செலவு, ஒரு வீடு / நிலம் வாங்க, குழந்தைகள் பள்ளியில்,
Read 39 tweets
20 Aug
A Thread on Free Life Insurance on your SIP Investment👇

SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு பற்றிய பதிவு:
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு?
2. எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்?
3. தேவையான தகுதிகள்.
4. பின்வரும் சந்தர்ப்பங்களில் காப்பீட்டு நிறுத்தப்படும்
5. முக்கிய நன்மைகள்.
6. முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.
7. இந்த திட்டத்தின் குறைகள்.
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு?
உங்களின் SIP முதலீட்டின் மூலம் உங்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வேண்டுமா? இந்த பதிவை மேலும் படியுங்கள்.
நீங்கள் செய்யும் SIP முதலீட்டின் மூலம் ஆயுள் காப்பீடு இலவசமாகக் கிடைக்கும், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
Read 24 tweets
13 Aug
A thread on Home Loan👇

வீட்டுக் கடனை பற்றிய பதிவு:
1. இப்போது வீடு வாங்கலாமா?
- எப்படியாவது ஒரு கடனை வாங்கியாவது ஒரு வீட்டை வாங்கிடணும் என்று ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தில் தினசரி நடக்கும் உரையாடல்களில் ஒன்று.
- ஒரு பெண் பார்க்க போவதுற்கு முன் பெண் வீட்டில் கேட்கும் முதல் கேள்வி மாப்பிள்ளைக்கு வேலை மற்றும் சொந்த வீடு இருக்கிறதா?
இவை அனைத்திற்கும் பதில் சொல்வது போல், தற்போதைய சூழ்நிலையில் வீட்டுக் கடன் விகிதம் குறைவாகவும் மற்றும் வீடுகளின் விலைகளும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடக் குறைவாக உள்ளன, இது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாகும்.
Read 31 tweets
6 Aug
A Thread on smallcase Investment:
smallcase முதலீடு பற்றிய பதிவு:
1. smallcase முதலீடு என்றால் என்ன?
smallcase முதலீடு என்பது முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான ஒரு புதிய வழி முறை. அதாவது Mutual Fund ஐப் போலவே, பல/சில பங்குகளில் முதலீடு செய்வதாகும், ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலல்லாமல்,
Read 24 tweets
30 Jul
A Thread on some small Self Employment ideas for women 👇

பெண்களுக்கான சில சிறு சுயதொழில் யோசனைகளை பற்றிய பதிவு:
பெண்கள் வீட்டிலிருந்தே தொழில்முனைவோர் ஆவதற்கும் பகுதி நேர வேலை செய்வதற்கும் இவை சிறந்த வணிக வாய்ப்புகள்.
*Conditions Apply:
தொழிலைத் தொடங்குவதற்கு முன் அவற்றை ஆராய்ந்து சரியாகச் செயல்படுங்கள்.
1. Blogging:
சிறந்த ஆன்லைன் வணிக யோசனைகளில் ஒன்று Blogging. நீங்கள் விரும்பியதை உங்கள் வலைப்பதிவில் பதிவிடலாம், ஃபேஷன் மற்றும் அழகுக் குறிப்புகள், மகப்பேறு பராமரிப்பு, குழந்தைகள் ஆரோக்கியம், வீட்டு வைத்தியம், பொருட்களை மதிப்பாய்வு, பெற்றோர் ஆலோசனை,
Read 28 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(