A Thread on Financial Planning for Middle Class Family👇
நடுத்தர குடும்பத்திற்கான நிதி திட்டமிடல் பற்றிய பதிவு:
1. நிதி திட்டமிடல் 2. சேமிப்பு VS முதலீடு 3. பணவீக்கம் 4. முதலீடு 5. நிதி திட்டமிடல் செய்வது எப்படி?
1. நிதி திட்டமிடல்:
நிதி திட்டமிடல் என்பது சம்பாதித்த பணத்தைச் சேமிக்க, செலவழிக்க, முதலீடு செய்யத் தேவையான தொகையைத் தீர்மானிக்கும் ஒரு செயல்முறையாகும்.
அதில் வரவு, செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய கணக்குகளை உள்ளடக்கியது.
இன்று நாம் செய்யும் நிதி திட்டமிடல்களைப் பொறுத்தே,
நமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். நிதி திட்டமிடல் என்பது செலவுகளைக் குறைக்க, முதலீடுகளை ஒழுங்குபடுத்த, நாம் வாழ்நாள் முழுவதும் நமது இலக்குகளை - திருமண செலவு, ஒரு வீடு / நிலம் வாங்க, குழந்தைகள் பள்ளியில்,
கல்லூரியில் சேர்க்க, அவர்களின் திருமண செலவுகளுக்கு, பணவீக்கத்தை எதிர்கொள்ள மற்றும் நம் ஓய்வுக் காலத்தில் நிதிப் பற்றாக்குறை இல்லாமல் வாழ்வதற்கும் இந்த திட்டமிடல் நடுத்தர குடும்பத்திற்கு மிக அவசியமான ஒன்று மற்றும் பல இலக்குகளை அடைய உதவும் ஒரு எளிய கணக்கியல்.
நிதித் திட்டத்தின்படி தொடர்ந்து சேமித்து முதலீடு செய்தால் மட்டுமே நிதி இலக்குகளை அடைய முடியும்.
2. சேமிப்பு VS முதலீடு:
சேமிப்பு என்பது சேமிப்புக் கணக்குகளில், நிலையான வைப்பு கணக்குகளில் மற்றும் நம் அம்மா அஞ்சறைப் பெட்டியில் வைத்திருக்கும் உபரி பணம் ஆகும்.
முதலீடு என்பது பணம் செலுத்தி பல்வேறு சொத்து / முதலீட்டுத் திட்டங்களை வாங்குவதாகும்,
அதன்மூலம் எதிர்காலத்தில் அதைத் திரும்பி வட்டியுடன் பெறுவீர்கள். நமது சேமிப்பு மூலம் நமது குறுகிய காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் நமக்குத் தேவையான நீண்ட கால இலக்குகளை அடைய முதலீடுகள் செய்ய வேண்டும். தொடர்ந்து சேமித்து முதலீடு செய்யுங்கள்.
3. பணவீக்கம்:
பணவீக்கம் என்பது நாம் வாங்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஏற்படும் விலை உயர்வு விகிதமாகும். இதற்குப் பல காரணிகள் உள்ளன. தேவை அதிகரிப்பதை விட விநியோகமானது வேகமாக உயர்ந்து பொருட்களும் சேவைகளும் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது. தற்போதைய சூழ்நிலைகளிலும்
எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களைப் பார்க்கும்போது, இது மேலும் தொடரும். எதிர்காலத்தில் பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு, இன்று நாம் கண்டிப்பாக நிதி திட்டமிட வேண்டும்.
உ: ரூ.10,000 முதலீடுக்கு 5% வருமானம் ஈட்டினால், ஆனால் பணவீக்க விகிதம் 8% ஆக இருந்தால் அதிக பணவீக்க விகிதங்கள் காரணமாக அந்த முதலீடு வருமானத்தை வைத்து செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் போகும். எனவே உங்கள் வருமானம் எப்போதும் பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. முதலீடு:
முதலீடு என்பது வருமானத்தை வளர்ப்பதற்காக வாங்கிய சொத்து அல்லது முதலீட்டுத் திட்டங்கள் ஆகும். கூடுதல் வருமான பெறுவதற்காக அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் லாபம் பெறுவதற்காக முதலீடு செய்யப்படுகிறது. அதற்காக நிதிகளைக் கண்மூடித்தனமாக முதலீடு செய்யக்கூடாது.
நமது தேவை, நமது தற்போதைய நிதி நிலவரம், பணவீக்கத்தை எதிர்கொள்ள மேலும் இலக்குகளைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்யவேண்டும். அதற்கு நிதி திட்டமிடல் மிகவும் அவசியம்
5. நிதி திட்டமிடல் செய்வது எப்படி?
நிதி திட்டமிடல் எப்படி படிப்படியாகச் செய்வது என்று பார்ப்போம்:
a. வரவு செலவு கணக்கு:
நிதி திட்டமிடல் தொடங்குவதற்கு வரவு செலவு கணக்கு தான் முதல் சிறந்த வழியாகும். உங்கள் செலவுகளைக் கணக்கிடுவதன் மூலம், எங்கே, எப்படிச் செலவழிக்கிறீர்கள் என்ற தெளிவாகத் தெரியும். எங்குக் குறைக்கலாம் மற்றும் எவ்வளவு சேமிக்க முடியும் என்று புரிந்துகொள்ள உதவுகிறது.
ஒரு எளிய பட்ஜெட் திட்டத்தைப் பின்பற்றி நிதி திட்டமிட ஆரம்பிக்கலாம்.
உதாரணமாக, 50-30-20 பட்ஜெட் விதி, அதில் நீங்கள் உங்கள் மாத வருமானத்தில் மூன்று வகைப்படுத்தவும். 1. தேவைகள் (50%) 2. விருப்பமானவை (30%) 3. முதலீடு மற்றும் சேமிப்புகள் (20%)
50% தேவையான செலவுகள். (அத்தியாவசியம் - வாடகை, மளிகை பொருட்கள், காய்கறிகள், பிற முக்கியமான செலவுகள்)
30% விருப்பமான செலவுகள். (வெளி உணவு, பொழுதுபோக்குகள் மற்றும் புதிய பொருட்கள் போன்ற செலவுகள்)
20% முதலீடு மற்றும் சேமிப்புக்கு
எப்போதும் பட்ஜெட் Vs செலவைக் கண்காணிக்கவும், உங்கள் செலவுகளை குறைக்கவும் மற்றும் உங்கள் சேமிப்பை அதிகரிக்க முயற்சிக்கவும்.
50-30-20 இருந்து 50-20-30 ஆகா மாற்றுங்கள்.
b. அவசர நிதி:
அவசர நிதி என்பது எதிர்பாராத செலவுகள், வேலை இழப்பு போன்ற சிக்கல்களைச் சமாளிக்க உதவும். அவசர நிதி சேமிப்புக் கணக்கு அல்லது முதலீட்டிலிருந்து திருப்பும் பொழுது அபராதம் விதிக்கப்படாமல் இருக்கவேண்டும் அல்லது ஒரு பகுதியைச் சேமிப்புக் கணக்கில் வைக்கலாம்,
மீதமுள்ளவற்றை விரைவில் திருப்பக் கூடிய முதலீடு திட்டத்தில் (F.D) இருந்தால் நல்லது.
இந்த அவசர நிதி குறைந்த பட்சம் 3 முதல் 6 மாத வரையிலான செலவுக்கான தொகையாக இருப்பது நல்லது.
c. கடன்:
கடனை நிர்வகித்து, திறம்படப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிதி பற்றாக்குறையிலிருந்து தப்பிக்கலாம்.
முதலில் யாருக்கு எவ்வளவு கடன், எவ்வாறான கடன்கள் உள்ளன என்று பிரியுங்கள்.
-குறைந்த வட்டி
-முழு வரி விலக்குடன் அடமானங்கள்
-அதிக வட்டி கடன்கள் மற்றும்
-அதிக வட்டி கடன் அட்டைகள்
இதன் மூலம் நீங்கள் எந்த கடனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை எளிதாக அடையாளம் காண முடியும்.
குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் மற்றொரு வங்கியில் கடனை மாற்றலாம்.
மதிப்பிழக்கும் சொத்துக்களுக்காக ஒருபோதும் கடன் வாங்காதீர்கள்.
d. காப்பீடு:
வாழ்க்கையில் சில எதிர்பாராத விபத்துகள் நடக்கலாம். அந்த நிகழ்வுகள் உங்கள் நிதி இலக்குக்கு ஒரு தடையை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு மருத்துவ மற்றும் டேர்ம் காப்பீடு மிகவும் உதவியாக இருக்கும். காப்பீடு நிதி திட்டமிடலின் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும்.
காப்பீடு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும் மற்றும் உங்கள் அவசர நிதியைப் பாதுகாக்கவும் மேலும் தேவையான நிதி வழங்கவும் இது உதவும்.
எப்போதும் முதலீடு வேறு மற்றும் காப்பீடு வேறு, இவை இரண்டையும் கலக்க வேண்டாம்.
e. இலக்குகள்:
இலக்குகளை தேவைக்கேற்ப முதலீடுகளாக அமைக்கவும் - குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால தேவையின் அடிப்படையில் அமைக்கவும்.
உங்கள் வருமானத்தைக் கணக்கிட்டு, அந்தந்த இலக்கை அடைய உதவும் முதலீட்டு வழிகளில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்.
குறுகிய கால இலக்குகள்: 1-3 வருடங்கள்.
நடுத்தர கால இலக்குகள்: 3-7 வருடங்கள்.
நீண்ட கால இலக்குகள்: 7-10+ வருடங்கள்.
பொதுவாக அதிக ரிஸ்க் முதலீடுகள் அதிக லாபத்தையும், அதேசமயம் குறைந்த ரிஸ்க் முதலீடுகள் நீண்ட காலத்திற்குக் குறைவான ஆனால் நிலையான
லாபத்தையும் அளிக்கிறது.
நீங்கள் எதை முதலீடு செய்யத் தேர்வு செய்தாலும், அவை உங்கள் நிதி இலக்குகளுடன் தொடர்புப்படுத்துங்கள்.
பரஸ்பர நிதிகள், பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. இவற்றில் எதில் முதலீடு செய்வதற்கு முன்,
மதிப்பீடு செய்ய வேண்டும்.
உங்களிடம் சேமிப்பு குறைவாக இருந்தால் (SIP) சிறியதாகத் தொடங்குங்கள்.
நீங்கள் அதிகம் சேமிக்கத் தொடங்கியதும், உங்கள் வசதிக்கேற்ப பல்வேறு திட்டங்களில் முதலீடுகளுக்குச் செய்யலாம். கண்மூடித்தனமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக போதுமான ஆராய்ச்சி செய்தபின்
உங்கள் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் படி முதலீடு செய்வது நல்லது.
சொத்து வகைகள் மற்றும் முதலீடுகளின் ஒதுக்கீட்டைச் சரியாக அமைக்கவும், முதலீடுகளை பல்வகைப்படுத்துங்கள்.
f.வரி சேமிப்பு
ஒவ்வொரு ஆண்டும், நீங்கள் கணிசமான தொகையை வரியாகச் செலுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் சில திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரி
விலக்கைக் குறைக்கலாம். உங்கள் வரிகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், பணத்தை முதலீடு செய்வதற்கும்,
வரிக்கு உட்பட்ட வருமானத்தை
குறைப்பதற்கும் சிறந்த வழிகளை நீங்கள் அடையாளம் காணலாம்.
உ- மியூச்சுவல் பண்டுகள் முதலீடு செய்வதற்கான வரி சேமிப்பு வழியை ELSS திட்டம் மூலம் வழங்குகிறது.
g. உங்கள் முதலீடுகளை பல்வகைப்படுத்துங்கள்
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பது ஒருபோதும் புத்திசாலித்தனம் அல்ல.
உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துவது மிகவும் நல்லது, ஏனெனில் உங்கள் பணத்தை ஒரு நிலையான வைப்புத்தொகையில்
வைப்பதை விட
மியூச்சுவல் பண்டுகள், கடன் பத்திரங்கள், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம் மற்ற முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் குறுகிய கால மாற்றங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களின் போது ஏற்படும் இழப்புகளை குறைக்கும்.
உங்கள் முதலீடுகளின் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த பல வழிகள் உள்ளன, ஆனால் உங்கள் வயதிற்கு ஏற்ப முதலீடுகளை திட்டமிடல் அவசியமானது.
h. ஓய்வூதிய திட்டமிடல்
உங்கள் ஓய்வுக்காலத்திற்கு 30 முதல் 40 வருடங்களாக இருக்கலாம். நீங்கள் ஓய்வு பெறும்போது தான் அதைத் திட்டமிடுகிறீர்கள் என்றால் அது மிகவும் தவறு
மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கையை அனுபவிக்க, நீங்கள் இப்போதே ஓய்வூதிய திட்டமிடல் தொடங்க வேண்டும்.
வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் திட்டமிடுவது உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும். மேலும், நீங்கள் ஆரம்பத்தில் குறைந்த அளவு முதலீடு செய்தால், 30-40 வருட காலத்தில் போதுமான அளவு கார்பஸை உருவாக்க உதவுகிறது.
உ- EPF, PPF, NPS மற்றும் Equity Fund முதலீடுகள்.
முதலில் உங்கள் நிதி நிலைமையை ஆராய்ந்து பின்னர் நிதித் திட்டமிடல் உருவாக்குங்கள், நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை சிறந்த முதலீடு செய்யும் போதும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போதும், ‘இந்த முதலீடு நிதி இலக்கை அடைய உதவுமா?’ என்று ஆராய்ந்து பின்னர் முதலீடு செய்யுங்கள்.
உங்கள் நிதித் திட்டமிடலைத் தவறாமல் மதிப்பாய்வு செய்து சரிசெய்வது எப்போதும் சாலச்சிறந்தது.
எனக்குத் தெரிந்ததையும் கற்றதையும் மேலே பதிவு செய்துள்ளேன், உங்களுக்கு ஏற்றவாறு நீங்கள் உங்களது நிதித் திட்டமிடலை உருவாகிக்கொள்ளுங்கள்.
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, நான் கற்றதை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளைத் தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A Thread on how to select a Mutual Fund for investment:👇
முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃபண்டை எப்படித் தேர்வு செய்வது பற்றிய பதிவு:
மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்: 1. Financial Risks / Goal based 2. மியூச்சுவல் ஃபண்ட் நிதியின் அளவு மற்றும் மேலாளர் 3. நிலையான CAGR 4. கட்டணங்கள் 5. வரிவிதிப்பு 6. Direct vs Regular
1. Financial Risks / Goal based:
ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் நிதி நிலைமைகள், தேவைகள் மற்றும் நிதி இலக்குகள் வேறுபடும், அதன் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் நிதியை ஒருவர் தேர்வு செய்வது நல்லது.
முதலீடு செய்வதற்கு முன்,
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும், இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணம் சேகரித்து பங்கு, பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் பண சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம், நிதி மேலாளர்களால் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில் திட்டத்தின் முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்படுகிறது.
SIP, STP மற்றும் SWP முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிய பதிவு.
1. SIP முதலீட்டுத் திட்டம்:
a. SIP என்பது நடுத்தர மக்களுக்கான சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டம். ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்யும் முறையாகும். இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதற்குப்
பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில
- ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சமாக Rs 100 முதல் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- முதலீடு சராசரி, ஒவ்வொரு மாதமும் முதலீடுகள் வெவ்வேறு NAV களில் செய்யப்பட்டிருக்கும் (இது சந்தை மூலம் தீர்மானிக்கப்படுகிறது) எனவே
A Thread on Free Life Insurance on your SIP Investment👇
SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு பற்றிய பதிவு:
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு? 2. எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்? 3. தேவையான தகுதிகள். 4. பின்வரும் சந்தர்ப்பங்களில் காப்பீட்டு நிறுத்தப்படும் 5. முக்கிய நன்மைகள். 6. முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள். 7. இந்த திட்டத்தின் குறைகள்.
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு?
உங்களின் SIP முதலீட்டின் மூலம் உங்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வேண்டுமா? இந்த பதிவை மேலும் படியுங்கள்.
நீங்கள் செய்யும் SIP முதலீட்டின் மூலம் ஆயுள் காப்பீடு இலவசமாகக் கிடைக்கும், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
1. இப்போது வீடு வாங்கலாமா?
- எப்படியாவது ஒரு கடனை வாங்கியாவது ஒரு வீட்டை வாங்கிடணும் என்று ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தில் தினசரி நடக்கும் உரையாடல்களில் ஒன்று.
- ஒரு பெண் பார்க்க போவதுற்கு முன் பெண் வீட்டில் கேட்கும் முதல் கேள்வி மாப்பிள்ளைக்கு வேலை மற்றும் சொந்த வீடு இருக்கிறதா?
இவை அனைத்திற்கும் பதில் சொல்வது போல், தற்போதைய சூழ்நிலையில் வீட்டுக் கடன் விகிதம் குறைவாகவும் மற்றும் வீடுகளின் விலைகளும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடக் குறைவாக உள்ளன, இது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாகும்.
A Thread on smallcase Investment:
smallcase முதலீடு பற்றிய பதிவு:
1. smallcase முதலீடு என்றால் என்ன?
smallcase முதலீடு என்பது முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான ஒரு புதிய வழி முறை. அதாவது Mutual Fund ஐப் போலவே, பல/சில பங்குகளில் முதலீடு செய்வதாகும், ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலல்லாமல்,