SIP, STP மற்றும் SWP முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிய பதிவு.
1. SIP முதலீட்டுத் திட்டம்:
a. SIP என்பது நடுத்தர மக்களுக்கான சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டம். ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்யும் முறையாகும். இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதற்குப்
பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில
- ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சமாக Rs 100 முதல் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- முதலீடு சராசரி, ஒவ்வொரு மாதமும் முதலீடுகள் வெவ்வேறு NAV களில் செய்யப்பட்டிருக்கும் (இது சந்தை மூலம் தீர்மானிக்கப்படுகிறது) எனவே
ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் வாங்கப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை மாறுபடும். ஆனால், சந்தை பொதுவாக 5+ வருட காலத்திலும் மேம்பட்டிருக்கும் என்பதால் - மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும்.
உ- ஒரு மாதத்திற்கு Rs 1,000 முதலீடு செய்கிறீர்கள், அந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்ட
-முதல் மாதத்தில் NAV 10 என்றால், உங்களுக்கு 100 யூனிட்கள் கிடைக்கும்.
-அடுத்த மாதத்தில் NAV 9 ஆக குறைந்தால், உங்களுக்கு 111 யூனிட்கள் கிடைக்கும்.
-மூன்றாவது மாதத்தில், NAV மேலும் 8 ஆக குறைந்தால்,
உங்களுக்கு 125 யூனிட்கள் கிடைக்கும்.
இவ்வாறு, மூன்று மாதங்களில் Rs 3,000 முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் 336 யூனிட்களைப் பெறுவீர்கள்.
இதே முதல் மாதத்திலேயே lump sump முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு 300 யூனிட்களை மட்டுமே பெற்றிருப்பீர்கள்.
இது சந்தை ஏற்ற இறக்கங்களுக்கான பாதிப்பைக் குறைக்க உதவும்.
3 ஆண்டுகளுக்கு பிறகு NAV 13 மற்றும் உங்களிடம் 4,032 யூனிட்கள் இருந்தால் உங்கள் மொத்த
முதலீடு Rs 36,000
வருமானம் Rs 52,416
ஆகா இருக்கும்.
b.வரி:
Debt மியூச்சுவல் ஃபண்ட், 36 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால் (STCG), Captital Gain ஒட்டுமொத்த வருமானத்தில் சேர்க்கப்படும் மற்றும் வருமான வரி விகிதத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். 36 மாதங்களுக்கு மேல் இருந்தால், Captital Gain நீண்ட கால வரி (LTCG) என 20% வரி விதிக்கப்படும்.
Equity மியூச்சுவல் ஃபண்ட், வைத்திருக்கும் காலம் ஒரு வருடத்திற்கும் குறைவாக இருந்தால், Capital Gain 15% வரி (STCG) விதிக்கப்படும். ஒரு வருடத்திற்கு மேல் இருந்தால், ஆண்டுக்கு ரூ .1 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு. 1 லட்சத்திற்கு மேல் நீண்ட கால வரி என 10% வரி (LTCG) விதிக்கப்படும்.
2. STP முதலீட்டுத் திட்டம்:
a. STP என்பது நீங்கள் செய்யும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் உள்ள மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்கு நீங்கள் முதலீடு மாற்றம் செய்யும் முறையாகும்.
இது SIP ஐப் போன்ற மற்றொரு முதலீட்டுத் திட்டம், ஆனால்
வித்தியாசம் என்னவென்றால், மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்குத் தவணை தொகையை முந்தைய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து எடுக்கப்படும். இது SIP போன்ற செலவுகளையும் சராசரியாகக் கருதுகிறது
மேலும் Debt மியூச்சுவல் ஃபண்ட் இருந்து Equity மியூச்சுவல் ஃபண்ட் அல்லது மற்றொன்று மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாற்றுவது மற்றும் மறு ஒதுக்கீடு செய்வதன் மூலம் உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுசீரமைக்கிறது. இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு தொகை/யூனிட்களின்
எண்ணிக்கை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து மற்றொரு விருப்பத்திற்கு ஏற்ப திட்டத்தில் மாற்றலாம்.. இந்த வசதியானது குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதி ஒதுக்கீடு செய்ய உதவுகிறது.
உ- நீங்கள் Equity மியூச்சுவல் ஃபண்ட் ல் முதலீடு செய்ய 50,000 வைத்திருந்தால்; முழுத் தொகையையும் ஒரு Debt மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து, ஒரு STP மூலம் ஒரு Equity மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 5,000 மாதாந்திர SIP க்கு செலுத்த முடியும்.
b. STP வகைகள்: 1. Fixed STP என்பது முதலீட்டாளர் ஒரு முதலீட்டிலிருந்து மற்றொரு முதலீட்டிற்கு ஒரு நிலையான தொகையை எடுத்து முதலீடு செய்கிறார். 2. Capital Appreciation STP என்பது முதலீட்டாளர் ஒரு முதலீட்டின் இலாபப் பகுதியை மட்டும் எடுத்து மற்றொன்றில் முதலீடு செய்கிறார்.
3. Flexi STP என்பது முதலீட்டாளர்கள் மற்றொரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான தொகையை மாற்ற முடியும்.
c. STP நன்மைகள்:
- நிலையான வருமானம்
- STP மூலம், நீங்கள் Debt அல்லது Liquid மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்கள் பணத்தை Equity மியூச்சுவல் ஃபண்டிற்கு மாற்றலாம். எனவே, நீங்கள் மாற்றும் ஈக்விட்டி ஃபண்டின் வருமானத்தை நீங்கள் பெறுவீர்கள்,
அதே நேரத்தில் உங்கள் முதலீட்டின் ஒரு பகுதி Debt மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருப்பதால் முதலீடு பாதுகாக்கப்பட்டிருக்கும்.
- சராசரி செலவு
- போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
- Debt மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு அதிகரித்தால், STP மூலம் பணத்தை Equity மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்யலாம் மற்றும் உங்கள் Equity மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உயர்ந்தால் பணத்தை Debt மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாற்றலாம்.
d. வரி:
Securities Transaction Tax (STT) மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து வெளியேறும் நேரத்தில் விதிக்கப்படும். அதாவது Equity திட்டத்திலிருந்து Debt திட்டத்திற்கு அல்லது Equity திட்டத்திலிருந்து மற்றொரு Equity மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்கு STT விதிக்கப்படும்.
3. SWP முதலீட்டுத் திட்டம்:
SWP என்பது நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ல் முதலீடு செய்த பணத்தை ஒரு முறையாக திரும்பப் பெற முடியும். நீங்கள் ஒரு SIP இல் 20 வருடங்கள் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். இப்போது, நீங்கள் ஓய்வு பெறப் போகிறீர்கள், அந்த முதலீட்டை
நீங்கள் ஒரே நேரத்தில் அனைத்துப் பணத்தையும் திரும்பப் பெறத் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் SWP மூலம் உங்களுக்குக் கிடைக்கும் மீதமுள்ள பணம் தொடர்ந்து முதலீட்டிலிருந்து உங்கள் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும்.
b. SWP வகைகள்: 1. Fixed SWP என்பது ஒரு நிலையான தொகையைத் திரும்பப் பெறுதல். 2. Appreciation SWP என்பது முதலீட்டின் இலாப தொகையை மட்டும் திரும்பப் பெறுதல்.
c.வரி:
Debt மியூச்சுவல் ஃபண்ட், 36 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால் (STCG), Captital Gain ஒட்டுமொத்த வருமானத்தில் சேர்க்கப்படும் மற்றும் வருமான வரி விகிதத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். 36 மாதங்களுக்கு மேல் இருந்தால், Captital Gain நீண்ட கால வரி (LTCG) என 20% வரி விதிக்கப்படும்.
Equity மியூச்சுவல் ஃபண்ட், வைத்திருக்கும் காலம் ஒரு வருடத்திற்கும் குறைவாக இருந்தால், Capital Gain 15% வரி (STCG) விதிக்கப்படும். ஒரு வருடத்திற்கு மேல் இருந்தால், ஆண்டுக்கு ரூ .1 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு. 1 லட்சத்திற்கு மேல் நீண்ட கால வரி என 10% வரி (LTCG) விதிக்கப்படும்.
d. SWP யார் முதலீடு செய்யலாம்?
- ஓய்வு பெற்றவர்கள் பின் ஒரு நிலையான வருமானம் பெற விரும்புவார்கள்.
- வைப்பு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அல்லது பங்குகள் ஆகியவற்றின் கலவையாக SWP யை எந்த வகையான போர்ட்ஃபோலியோவிலும் பெறலாம்.
- அதிக வருமான வரி செலுத்துபவர்கள்.
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, நான் கற்றதை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளைத் தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.
எந்த ஒரு முதலீட்டாலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள், குறைகள் மற்றும் வரம்புகள் இருக்கும்.
இந்த வாரம் நேரமின்மை காரணமாக விரிவாக எழுத முடியவில்லை, வரும் வாரங்களில் இதைப் பற்றி மேலும் விரிவாக எழுதுகிறேன். 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும், இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணம் சேகரித்து பங்கு, பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் பண சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம், நிதி மேலாளர்களால் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில் திட்டத்தின் முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்படுகிறது.
A Thread on Financial Planning for Middle Class Family👇
நடுத்தர குடும்பத்திற்கான நிதி திட்டமிடல் பற்றிய பதிவு:
1. நிதி திட்டமிடல் 2. சேமிப்பு VS முதலீடு 3. பணவீக்கம் 4. முதலீடு 5. நிதி திட்டமிடல் செய்வது எப்படி?
1. நிதி திட்டமிடல்:
நிதி திட்டமிடல் என்பது சம்பாதித்த பணத்தைச் சேமிக்க, செலவழிக்க, முதலீடு செய்யத் தேவையான தொகையைத் தீர்மானிக்கும் ஒரு செயல்முறையாகும்.
அதில் வரவு, செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய கணக்குகளை உள்ளடக்கியது.
இன்று நாம் செய்யும் நிதி திட்டமிடல்களைப் பொறுத்தே,
நமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். நிதி திட்டமிடல் என்பது செலவுகளைக் குறைக்க, முதலீடுகளை ஒழுங்குபடுத்த, நாம் வாழ்நாள் முழுவதும் நமது இலக்குகளை - திருமண செலவு, ஒரு வீடு / நிலம் வாங்க, குழந்தைகள் பள்ளியில்,
A Thread on Free Life Insurance on your SIP Investment👇
SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு பற்றிய பதிவு:
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு? 2. எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்? 3. தேவையான தகுதிகள். 4. பின்வரும் சந்தர்ப்பங்களில் காப்பீட்டு நிறுத்தப்படும் 5. முக்கிய நன்மைகள். 6. முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள். 7. இந்த திட்டத்தின் குறைகள்.
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு?
உங்களின் SIP முதலீட்டின் மூலம் உங்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வேண்டுமா? இந்த பதிவை மேலும் படியுங்கள்.
நீங்கள் செய்யும் SIP முதலீட்டின் மூலம் ஆயுள் காப்பீடு இலவசமாகக் கிடைக்கும், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
1. இப்போது வீடு வாங்கலாமா?
- எப்படியாவது ஒரு கடனை வாங்கியாவது ஒரு வீட்டை வாங்கிடணும் என்று ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தில் தினசரி நடக்கும் உரையாடல்களில் ஒன்று.
- ஒரு பெண் பார்க்க போவதுற்கு முன் பெண் வீட்டில் கேட்கும் முதல் கேள்வி மாப்பிள்ளைக்கு வேலை மற்றும் சொந்த வீடு இருக்கிறதா?
இவை அனைத்திற்கும் பதில் சொல்வது போல், தற்போதைய சூழ்நிலையில் வீட்டுக் கடன் விகிதம் குறைவாகவும் மற்றும் வீடுகளின் விலைகளும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடக் குறைவாக உள்ளன, இது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாகும்.
A Thread on smallcase Investment:
smallcase முதலீடு பற்றிய பதிவு:
1. smallcase முதலீடு என்றால் என்ன?
smallcase முதலீடு என்பது முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான ஒரு புதிய வழி முறை. அதாவது Mutual Fund ஐப் போலவே, பல/சில பங்குகளில் முதலீடு செய்வதாகும், ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலல்லாமல்,
A Thread on some small Self Employment ideas for women 👇
பெண்களுக்கான சில சிறு சுயதொழில் யோசனைகளை பற்றிய பதிவு:
பெண்கள் வீட்டிலிருந்தே தொழில்முனைவோர் ஆவதற்கும் பகுதி நேர வேலை செய்வதற்கும் இவை சிறந்த வணிக வாய்ப்புகள்.
*Conditions Apply:
தொழிலைத் தொடங்குவதற்கு முன் அவற்றை ஆராய்ந்து சரியாகச் செயல்படுங்கள்.
1. Blogging:
சிறந்த ஆன்லைன் வணிக யோசனைகளில் ஒன்று Blogging. நீங்கள் விரும்பியதை உங்கள் வலைப்பதிவில் பதிவிடலாம், ஃபேஷன் மற்றும் அழகுக் குறிப்புகள், மகப்பேறு பராமரிப்பு, குழந்தைகள் ஆரோக்கியம், வீட்டு வைத்தியம், பொருட்களை மதிப்பாய்வு, பெற்றோர் ஆலோசனை,