1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா உயிரோடு இருந்தபோதே, தன்னுடைய ஈரோட்டு மாணவர் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார் தந்தை பெரியார்.
1971ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலைஞர் முன்னிலையிலேயே மீண்டும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார் பெரியார்.
“யார் யாருக்கோ சிலை இருக்கிறது.
செயற்கரிய செயல்களை செய்த முதல்வர் கலைஞருக்கு சென்னையில் சிலை வைக்கப்பட வேண்டும்” என்று தந்தை பெரியார் பேச, கலைஞரோ கூச்சத்தில் நெளிந்தார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் கலைஞருக்கு சிலை என்கிற கருத்தை வழிமொழிந்தார்.
இதையடுத்து அந்த மேடையிலேயே கலைஞர் சிலை அமைக்கும் குழு நிறுவப்பட்டது.
சிலைக்குழுவுக்கு புரவலர் – தந்தை பெரியார், தலைவர் – தவத்திரு. குன்றக்குடி அடிகளார், துணைத்தலைவர்கள் – சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை மாநகர மேயர் சா.கணேசன்..
மற்றும் ஏ.என்.சட்டநாதன் ஆகியோர். சிலை அமைப்புக் குழுவுக்கு செயலாளராக அறிவிக்கப்பட்டவர் ஆசிரியர் கி.வீரமணி.
மேடையிலேயே நன்கொடை கொடுத்து பணியை ஆரம்பித்து வைத்தார் தந்தை பெரியார்.
எனினும் –
கலைஞரோ கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக சிலை சமாச்சாரத்தை முடிந்தவரை ஒத்திப்போட்டார்.
“அய்யா அவர்களுக்கே சிலை இல்லாதபோது, அவரது சீடன் எனக்கு எதற்கு சிலை? அய்யாவே சொல்லியிருக்கிறார் என்பதால், அவருக்கு சிலை வடித்தபிறகு வேண்டுமானாலும் எனக்கு சிலை வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
தந்தை பெரியார் இயற்கையோடு இணைந்தப்பிறகு சென்னை அண்ணாசாலையில் (இப்போது புதிய தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் பகுதிக்கு எதிரே) தந்தை பெரியார் அவர்களின் சிலையை திறந்தார் கலைஞர். கூவம் நதி மீதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பாலத்துக்கும் பெரியார் பெயரை சூட்டினார்.
அந்த நிகழ்விலே ‘கலைஞருக்கு சிலை’ என்கிற தந்தை பெரியாரின் நிறைவேறாத ஆசையை நினைவுறுத்திப் பேசிய அன்னை மணியம்மையார், இனியும் நாங்கள் காத்திருக்க மாட்டோம் என்று உரிமையோடு அறிவித்தார்.
கலைஞருக்கு சிலை வைக்க அப்போது புதியதாக உருவாகியிருந்த எம்.ஜி.ஆரின் அதிமுக, காழ்ப்புணர்ச்சியோடு நீதிமன்றத்துக்கு சென்று தடை வாங்க முயற்சித்தது. அந்த சட்டப் போராட்டத்தை திராவிடர் கழகம் நீதிமன்றத்தில் முறியடித்தது.
அதைத் தொடர்ந்து –
செப்டம்பர் 21, 1975 அன்று அண்ணா சாலை – ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு சந்திப்பில், அன்னை மணியம்மையார் தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தார்கள்.
பன்னிரெண்டு ஆண்டு காலம் அங்கே கம்பீரமாக வீற்றிருந்தது கலைஞர் சிலை.
1987, டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர் மறைந்தார். இதை சாக்காக வைத்துக்கொண்டு, ஏற்கனவே கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டிருந்ததைப் பொறுக்காத அதிமுகவினர், திட்டமிட்டு கூலிப்படையினரை ஏவி கலைஞரின் சிலையைத் தகர்த்தார்கள்.
இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, கலைஞர் சிலை தகர்ப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.
அந்தப் படத்துக்கு கவிதை எழுதி, தன்னுடைய பெருந்தன்மையைக் காட்டினார் கலைஞர்.
“உடன்பிறப்பே
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை
நெஞ்சிலேதான் குத்துகிறான்;
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!”
என்று கவிதை எழுதினார்.
தகர்க்கப்பட்ட இடத்திலேயே புது சிலையை நிறுவுவோம் என்று திராவிடர் கழகம் சூளுரைத்தது.
சிலைஅமைக்கும் பணிகளையும் தொடங்கினார்கள்.
எனினும் –
கலைஞர் இம்முறை தனக்கு சிலை மீண்டும் வேண்டாம் என்று உறுதியாக மறுத்தார்.
கலைஞரின் மறைவுக்குப் பிறகு அதே இடத்தில் மீண்டும் சிலை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை திராவிடர் கழகம் திரும்பத் திரும்ப தி.மு.கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு வைத்துக்கொண்டே இருந்தது.
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “நம் இனமானத் தலைவர் கலைஞரின் சிலை ஒரு வரலாற்றுச் சின்னமாக, கம்பீரமாக அதே இடத்தில் எழுந்து நிற்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அந்த நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அதே இடத்தில் முதல்வர் கலைஞர் சிலையை நிறுவ இப்போது தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தமிழ்நாடு நிதியமைச்சர் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை #பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவார். தவிர அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிது.
ஆனால் நிதியமைச்சக பணி என்பது சாதாரணமானது அல்ல. தமிழ்நாட்டின் தலையெழுத்தை எடுத்துகொண்டால் ஓபிஎஸ் , ஜெயக்குமார் போன்றர்வர்கள் எல்லாம் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். என்ன ? இத்தனை நாட்களாக. நாலு நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் தமிழ்நாடு தப்பி வந்திருக்கிறது.
ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் என்றே சொல்லலாம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துல்லியமாக ஒரு நபரை பிடித்து போட்டிருக்கிறார். தமிழ்நாடு நிதியமைச்சரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் மத்திய நிதியமைச்சராக இருப்பதற்கே தகுதியானவராக இருக்கிறார்.
#கர்ணன் படம் பார்க்கவில்லை, ஆனால் அது பேசும் கதை தெரியும்.
1995 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் ஒரு பஸ் டிரைவருக்கும் அதில் பயணம் செய்த சில கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறுதான் மிகப் பெரிய கலவரமான கொடியன்குளம் கலவரத்திற்கு வித்திட்டது.
இத்தனைக்கும் வீரசிகாமணி இருப்பது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே. கொடியன்குளம் இருப்பதோ தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே. ஒரு மாத காலமாக ஒவ்வொரு ஊராக புகைந்து பரவிக் கொண்டு வந்த சாதித் தீயை அணைக்கத் தவறியது அன்றைய ஜெயலலிதாவின் அதிமுக அரசு.
நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை தேவர் சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம், தூத்துக்குடி மாவட்டத்திலோ பட்டியலினத்தவர்கள் அதிகம்.
இந்தக் கலவரத்தில் இருபக்கமும் சேதாரம் அதிகமென்றாலும், தேவர் சமுதாயத்தில் உயிர்ச் சேதம் அதிகமாகவும், பள்ளர் சமுதாயத்தில் பொருட்சேதம் அதிகமாகவும் இருந்தது.
1991ல் சென்னையில் வெட்னெரி சயின்ஸ் படிச்சுட்டுட்டு இருந்த மாஸ்டர் பட்டதாரி இளைஞரை தரகுறைவா பேசிய பஸ் கண்டெக்டர், டிரைவர் இருவரும் அந்த பட்டதாரியை அடிக்கவும் செய்தார்கள்! அது பெரியகலவரமாகி சென்னையே ஸ்தம்பித்தது! அப்போது அதிமுக ஆட்சி.
ஆனா சங்கி சங்கர் படம் எடுத்து சிம்பாலிக்கா கலைஞரை தாக்கினார்..!
1992ல் மே மாதம் ஜெவும் சசியும் ஜலகீரீடை பண்ணியதில் பலர் இறந்தனர்!
அதே 1992ல் ஜூன் மாதத்தில் வாச்சாத்தி போலீஸ் ரேப்!
அதே 1992 நவம்பரில் வந்தவாசி கலவரத்தில் 30 பேத்துக்கு அரிவாள் வெட்டு...!
தம்பி ஒருவன் அண்ணனை திட்டி வீடியோ போட்டிருக்கானாம். உடனே அதை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பரப்பும் வேலையில் இறங்குவோர் கவனத்திற்கு:
இப்போ என்ன அவசரம்?
உங்களுக்கு என்ன தேவையிருக்கு?
இப்படித் தான் தேமுதிக என்ற கட்சியை நம்பி தமிழ்நாடு முழுவதும் ..
39 எம்பி தொகுதிகள்,
234 சட்டமன்ற தொகுதிகள்,
12 மாநகராட்சிகள்,
148 நகராட்சிகள்,
385 ஊராட்சி ஒன்றியங்கள்,
520 பேரூராட்சிகள்,
12618 ஊராட்சிகள்
என்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் கை காசை செலவு செய்து வீதிக்கு வந்தனர்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட உங்க ஊர் தேமுதிக வேட்பாளரை இந்த தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலாவது பார்த்தீர்களா?
இல்லை என்பதே உங்களில் பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.
S.T பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் குடும்பம் கள்ளக்கடத்தல் வாயிலாக தங்கம் இந்தியாவுக்கு கடத்திவந்து எவ்வாறு தினத்தந்தி ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் வாயாலேயே தனது ஃபேஸ்புக் பேஜ் ல் சுயசரிதை அத்தியாயம் 15 இல் (24.5.20 ) கூறுவதைக் கேளுங்கள். :
"சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் சொந்தமாக கப்பல் வணிகம் செய்து வந்த பெரும் தொழில் அதிபர் ஓ. இராமசாமி நாடாரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்து இருந்தார். ஓ.ராமசாமி நாடாருக்கு மதுரையை அடுத்த மணச்சை சொந்த ஊர்.சிங்கப்பூரில் கிரிமினல் வழக்கு நடத்தி வந்தார் சி.பா.ஆதித்தன்.
எப்பேர்பட்ட கிரிமினல் குற்றவாளியையும் காப்பாற்றி விடுவதில் சர்வ வல்லமைவர் சி.பா.ஆதித்தன். ஒரு வழக்கில் வென்றால் அவருக்கு ஒரு வீடு சிங்கப்பூரில் வாங்கிக் கொடுத்து விட வேண்டும். இப்படியாக 91 வீடுகளை சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் வாங்கி வைத்து இருந்தார்.