வேட்பாளர் : பஸ் ஸ்டாண்டில் குதிரை வண்டி ஓட்டறேன். (அண்ணா ஆடிப்போய்விட்டார் )
அண்ணா கலைஞரிடம்: ராஜாவ
எதிர்க்கிற ஆளு? கருணாநிதி .
ராஜவ எதிர்த்து நிற்க ஒரு ராசா வேஷம் போட்டவன் கூடவாப்பா
உனக்கு கிடைக்கல ?
கலைஞர் : நீங்க நிறுத்தணும்ங்க.
அண்ணா : இத பார் கருணாநிதி ஒன்னு நம்ம கேவலப்படக்கூடாது, ராசாவையும் கேவலப்படுத்த கூடாது. அதனால விட்டு கொடுத்திடலாம்.
கலைஞர் : பாருங்க ஜெயித்தாலும்
தோத்தலும் நமக்கு வெற்றிணா.
அண்ணா : எனக்கே பேச
சொல்லித்தறியா நீ?
கலைஞர் :இல்லண்ணா,
ஜெயித்தாலும் தோத்தலும்
நமக்கு வெற்றிணா.
அண்ணா : எப்படி ?
கலைஞர் : ராஜா ஜெயிச்சா? என்னய்யா பெரிய வெற்றி?
ஒரு குதிரை வண்டிக்காரரை எதிர்க்க பெரிய ராஜா!!
ஜெய்ச்சுப்ட்டிங்களோ ?
பெரிய தேசத்தலைவரை எதிர்த்து
நின்னீங்களாக்கும்?
அப்படி அடிச்சுடலாம் ணா.
நாம ஜெய்ச்சாச்சுனா?
மன்னனே காலி.
அப்படி அடிச்சிடலாம்ணா.
கலைஞர் : நிறுத்துங்க. நானாச்சி.
அண்ணாவும் ஒத்துக்கொண்டார்.
என்னையா கருணாநிதி சொல்றது சரியா இருக்குமயா என்று ஸ்ரீவில்லிபுத்தூர் அமுதனிடம் #பேரறிஞர் அண்ணா கேட்க ..,
அண்ணன் சொன்னா சரியாதான் இருக்கும் தலைவரே..
அதையே செய்யலாம் என அவரும் கூற.
ராஜா சேதுபதி, "யார்ரா என்னை
எதிர்த்து நிக்கிறது" என்று கேட்க,
நம்ம பஸ் ஸ்டாண்ட் தங்கப்பன்"
அவரின் பணியாள் சொல்ல,
திமுகவினர் என்று பதில் வரவே,
ராஜாவிற்கு ஜெய்த்துவிட்ட தோரணை. "இதுக்கு மேலயும் நான் தேர்தல்ல வந்து
பிரச்சாரம் செய்யணுமா?"
அன்று அரண்மனைக்குள்ளே போனவர் தான்
வெளியில் வரவே இல்லை.
காரணம், தான் ஒரு ராஜா தன்னை எதிர்த்து நின்னு யாராலும் வெல்ல முடியாது என்ற எண்ணமே மேலோங்கி
நின்றது ராஜா சேதுபதியிடம்.
தேர்தல் பணிகளுக்கு நடுவே
கலைஞர் தொலைபேசியில்,
"ராமநாதபுரம் எப்படி இருக்கு" என்று கேட்க,
ராஜா அரண்மனையில் இருந்து
வெளியே வந்து ஒட்டு கேட்காததை
சொன்னார்கள் திமுகவினர்.
"சரி கவலையில்லை. தேர்தல்
பிரச்சாரத்திற்கு கருணாநிதி வருவதாக அறிவித்து விடுங்கள்"கலைஞர் வந்தார்.
இறுதி நாள் பிரச்சாரத்தின் போது.
"மக்களை மதிக்காத மன்னனை
.பார்த்தீர்களா?
ஒரு ஏழை உங்கள் வீட்டிற்கு வந்து காலில் விழுந்து ஓட்டு கேட்கிறான்,
நீங்கள் முடிவெடுங்கள், மதிக்காத
மன்னனுக்கு உங்கள் ஒட்டா?
உங்களுக்காக பாடுபடுவேன்னு
சொன்னவனுக்கு உங்க ஓட்டா?" என்று சொல்லி பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் கலைஞர் கருணாநிதி..
கடைசி நேர பரப்புரை தேர்தலையே மாற்றிவிட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியானது. ராஜா சேதுபதியை விட 8000 ஓட்டுக்கள் அதிகம் பெற்று பஸ்
ஸ்டாண்ட் தங்கப்பன் வென்றார். இது வரலாறு.
இப்ப சொல்லுங்கய்யா.
கலைஞர்
எப்பேர்பட்ட அசகாய சூரன்?
அதைவிட்டுவிட்டு,
நெடுஞ்செழியன்வந்திருந்தா நல்ல இருக்கும்,
மதியழகன் வந்திருந்தா நல்ல
இருக்கும்னு காமெடி பண்ணிக்கிட்டு.
ஒரு வேளை யாராவது அண்ணாவை, உங்களுக்கு பின்னால் யார் தலைமை பதவிக்கு வரலாம்னு கேட்டிருந்தால்...
#நெடுஞ்செழியன் வந்தால் கட்சிக்கு
பேர் ஆனால் #கருணாநிதி வந்தான்னா
கட்சி ஆட்சி ரெண்டையுமே நல்லா
நிர்வாகம் செய்வான் என்று
கூறியிருப்பார்.
#தமிழ்நாடு நிதியமைச்சர் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை #பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவார். தவிர அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிது.
ஆனால் நிதியமைச்சக பணி என்பது சாதாரணமானது அல்ல. தமிழ்நாட்டின் தலையெழுத்தை எடுத்துகொண்டால் ஓபிஎஸ் , ஜெயக்குமார் போன்றர்வர்கள் எல்லாம் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். என்ன ? இத்தனை நாட்களாக. நாலு நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் தமிழ்நாடு தப்பி வந்திருக்கிறது.
ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் என்றே சொல்லலாம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துல்லியமாக ஒரு நபரை பிடித்து போட்டிருக்கிறார். தமிழ்நாடு நிதியமைச்சரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் மத்திய நிதியமைச்சராக இருப்பதற்கே தகுதியானவராக இருக்கிறார்.
#கர்ணன் படம் பார்க்கவில்லை, ஆனால் அது பேசும் கதை தெரியும்.
1995 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் ஒரு பஸ் டிரைவருக்கும் அதில் பயணம் செய்த சில கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறுதான் மிகப் பெரிய கலவரமான கொடியன்குளம் கலவரத்திற்கு வித்திட்டது.
இத்தனைக்கும் வீரசிகாமணி இருப்பது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே. கொடியன்குளம் இருப்பதோ தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே. ஒரு மாத காலமாக ஒவ்வொரு ஊராக புகைந்து பரவிக் கொண்டு வந்த சாதித் தீயை அணைக்கத் தவறியது அன்றைய ஜெயலலிதாவின் அதிமுக அரசு.
நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை தேவர் சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம், தூத்துக்குடி மாவட்டத்திலோ பட்டியலினத்தவர்கள் அதிகம்.
இந்தக் கலவரத்தில் இருபக்கமும் சேதாரம் அதிகமென்றாலும், தேவர் சமுதாயத்தில் உயிர்ச் சேதம் அதிகமாகவும், பள்ளர் சமுதாயத்தில் பொருட்சேதம் அதிகமாகவும் இருந்தது.
1991ல் சென்னையில் வெட்னெரி சயின்ஸ் படிச்சுட்டுட்டு இருந்த மாஸ்டர் பட்டதாரி இளைஞரை தரகுறைவா பேசிய பஸ் கண்டெக்டர், டிரைவர் இருவரும் அந்த பட்டதாரியை அடிக்கவும் செய்தார்கள்! அது பெரியகலவரமாகி சென்னையே ஸ்தம்பித்தது! அப்போது அதிமுக ஆட்சி.
ஆனா சங்கி சங்கர் படம் எடுத்து சிம்பாலிக்கா கலைஞரை தாக்கினார்..!
1992ல் மே மாதம் ஜெவும் சசியும் ஜலகீரீடை பண்ணியதில் பலர் இறந்தனர்!
அதே 1992ல் ஜூன் மாதத்தில் வாச்சாத்தி போலீஸ் ரேப்!
அதே 1992 நவம்பரில் வந்தவாசி கலவரத்தில் 30 பேத்துக்கு அரிவாள் வெட்டு...!
தம்பி ஒருவன் அண்ணனை திட்டி வீடியோ போட்டிருக்கானாம். உடனே அதை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பரப்பும் வேலையில் இறங்குவோர் கவனத்திற்கு:
இப்போ என்ன அவசரம்?
உங்களுக்கு என்ன தேவையிருக்கு?
இப்படித் தான் தேமுதிக என்ற கட்சியை நம்பி தமிழ்நாடு முழுவதும் ..
39 எம்பி தொகுதிகள்,
234 சட்டமன்ற தொகுதிகள்,
12 மாநகராட்சிகள்,
148 நகராட்சிகள்,
385 ஊராட்சி ஒன்றியங்கள்,
520 பேரூராட்சிகள்,
12618 ஊராட்சிகள்
என்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் கை காசை செலவு செய்து வீதிக்கு வந்தனர்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட உங்க ஊர் தேமுதிக வேட்பாளரை இந்த தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலாவது பார்த்தீர்களா?
இல்லை என்பதே உங்களில் பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.
S.T பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் குடும்பம் கள்ளக்கடத்தல் வாயிலாக தங்கம் இந்தியாவுக்கு கடத்திவந்து எவ்வாறு தினத்தந்தி ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் வாயாலேயே தனது ஃபேஸ்புக் பேஜ் ல் சுயசரிதை அத்தியாயம் 15 இல் (24.5.20 ) கூறுவதைக் கேளுங்கள். :
"சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் சொந்தமாக கப்பல் வணிகம் செய்து வந்த பெரும் தொழில் அதிபர் ஓ. இராமசாமி நாடாரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்து இருந்தார். ஓ.ராமசாமி நாடாருக்கு மதுரையை அடுத்த மணச்சை சொந்த ஊர்.சிங்கப்பூரில் கிரிமினல் வழக்கு நடத்தி வந்தார் சி.பா.ஆதித்தன்.
எப்பேர்பட்ட கிரிமினல் குற்றவாளியையும் காப்பாற்றி விடுவதில் சர்வ வல்லமைவர் சி.பா.ஆதித்தன். ஒரு வழக்கில் வென்றால் அவருக்கு ஒரு வீடு சிங்கப்பூரில் வாங்கிக் கொடுத்து விட வேண்டும். இப்படியாக 91 வீடுகளை சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் வாங்கி வைத்து இருந்தார்.