#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தீராத வினைகள் தீர்க்கும் #அஜாஏகாதசி நாளை 3/9/3021
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
”சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணு பதத்தியானம்
சுத்தம் ஏகாதசி விரதம்”
அதாவது, பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம், கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம்
என்கிறார் பகவான் கிருஷ்ணர். ஏகாதசியில் 25 வகைகள் உள்ளன. உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, ஸபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி,
அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்போரின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும்
கடைப்பிடிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் கடைப்பிடித்தப் பலன்களைப் பெறுவார்கள். ஒரு மாதத்தின் வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் திதி ஏகாதசி. ஆனால் ஒவ்வொரு ஏகாதசி திதியும் தனித்துவம் வாய்ந்தது. ஏகாதசி விரதம்
என்பது பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது, பகவான் விஷ்ணுவின் பரிபூரண அருளைப் பெற்றுத்தரும். ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான பலன்களையும் நமக்கு அருள்கிறது. நம் முன்வினைகளைப் போக்கி நல்வினைகளைத் தரக் கூடியது. இப்பிறப்பில் நாம் படும் துன்பங்களின் காரணம் முன்வினைகளே. அவற்றை நீக்கி,
இப்பிறப்பில் நாம் நலமுடன் வாழ அருள்வது ஏகாதசி விரதம். அத்தகையதொரு ஏகாதசி விரதம் அஜா அல்லது அன்னதா ஏகாதசி. அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.
ரகு வம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இவ்விரதத்தை அனுஷ்டித்து துன்பம் நீங்கப் பெற்றான் என்று ஹரிச்சந்திரனின் கதையை எடுத்துக்கூறினார். உலகம் போற்றும் சத்தியசந்தனாக விளங்கிய ஹரிச்சந்திர மகாராஜா தன் முன்வினைப்பயன்களால் தன் நாட்டை இழந்தான். மேலும் தன் மனைவி, மகனையும் பிரியும் நிலை
வந்தது. ஆனாலும் தன் இயல்பில் மாறாது சுடுகாட்டைக் காக்கும் வேலையைச் செய்து சத்தியத்தையே கடைப் பிடித்து வந்தான். ஒருநாள் ரிஷி கௌதமரை சந்தித்தான். ரிஷியின் பாதங்களைப் பணிந்த ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையில் நடந்த துயரங்களை கூறினான். அவற்றைக் கேட்ட முனிவர் மிகவும் மனம் வருந்தி,
நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள் என்றால் அதன்காரணம் அவர்களின் முன்வினைப்பயன்தான். அதை அழிக்கும் சக்தியுடைய விரதம் அஜா ஏகாதசி விரதம். அடுத்து வரும் ஏகாதசி அஜா ஏகாதசிதான். நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது
ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு. இதன் காரணமாக உன் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் என்றார். நீ அடையும் நன்னிலையே இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் என்று உபதேசித்தார்.
ஹரிச்சந்திரனும் அதன்படி விரதமிருந்து உபவாசம் அனுஷ்டிக்க விரைவில் அவன் வினைப்பயன்கள் நீங்கின. மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும்
ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று பகவான் #ஶ்ரீகிருஷ்ணர் எடுத்துரைத்தார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப்
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
#NEET#நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)
மீனாக்ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )
SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும்
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்