A Thread on mistakes to be avoided during Mutual Fund investments: 👇
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் போது தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள் பற்றிய பதிவு:
எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன், எதில், எதற்கு,எத்தனை காலம் மற்றும் நம்முடைய நிதி நிலவரம் பற்றி தெளிவாக புரிந்து கொண்டே முதலீடு செய்யவேண்டும்.
அவ்வாறு நம் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் போதும் அதற்கு பின்பும் நம் தவிர்க்க வேண்டிய சில தவறுகளை பற்றி இந்த வாரம் பார்ப்போம்
1. இலக்குகள் இல்லாத முதலீடு:
பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் என எந்தவொரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்தாலும் நம் அடைய வேண்டிய நிதி இலக்குகளுக்கு ஏற்ப செய்ய வேண்டும். எனவே, ஒரு இலக்கை நிர்ணயித்து, அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நீண்ட கால நிதி இலக்குகளை அடைய நீண்ட காலத்திற்கு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிதி இலக்குகளை அடைய Debt Fundsயில் முதலீடு செய்யலாம்.
உ: குழந்தையின் உயர்கல்விக்காக முதலீடு செய்ய வேண்டுமானால் அதற்கு ஏற்றார்போல் நீண்ட கால முதலீட்டு திட்டத்தில் (ஈக்விட்டி ஃபண்டுகளில்) முதலீடு செய்ய வேண்டும்.
2. பட்ஜெட் இல்லாத முதலீடு:
ஒருவரின் தேவைகளுக்கு ஏற்ற முதலீட்டு திட்டம் மற்றவர்களுக்கு ஏற்றதாக இருக்காது. அவர்களின் வருமானம், நிதி இலக்குகள், ரிஸ்க் ப்ரோஃபைல் மற்றும் சொத்து மதிப்பு வேறுபடும்.
எனவே மற்றவர்கள் முதலீடு செய்யும் அதே திட்டத்தில் நாமும் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது நிதி இலக்குக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும்.
மாதாந்திர வருமானம் மற்றும் செலவினங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும்.
சேமிப்புற்கேற்ப முதலீடுகளை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் மோசமான நிதி பற்றாக்குறையில் சிக்க வேண்டிவரும்.
3. அதிகப்படியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதே நம் முதலீட்டை பன்முகப்படுத்துதல் ஆகும். அதாவது நமது முதலீடு தொகையில் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வது ஆகும்.
ஒரே பிரிவில் அதிக எண்ணிக்கையிலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதால் ஒரே பங்குகளை பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு திட்டத்தில் வாங்குவோம் அதன் மூலம் வருமானம் குறையும். அது தான் over diversification.
இது அதிகப்படியான பல்வகைப்படுத்தல் நல்ல லாபம் ஈட்டுவதைத் தடுக்கும்.
உ: ஈக்விட்டி ஃபண்ட் குறைந்தது 50 முதல் 60 பங்குகளில் முதலீடு செய்கிறது. 8 முதல் 10 ஈக்விட்டி ஃபண்டுகளை வைத்திருந்தால், 400 முதல் 600 பங்குகள் அல்லது இன்னும் அதிகமாக முதலீடு செய்வதாகும்.
அத்தகைய சூழ்நிலையில், போர்ட்ஃபோலியோ மதிப்பாய்வு செய்வது கடினம்.
அதற்கு ஒரு Equity மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது. செலவுகளைச் சேமிப்பது மட்டுமல்லாமல், Equity மியூச்சுவல் ஃபண்ட் நிதியின் செயல்திறன் நீண்ட கால முதலீட்டிற்கு அதிகமான வருமானம் கிடைக்கும்.
எனவே ஒருவரின் போர்ட்ஃபோலியோவில்
அதிகபட்சமாக 3-5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்வது நல்லது.
4.வீழ்ச்சி சந்தையில் முதலீடுகளை விற்பனை செய்தல்:
சந்தை வீழ்ச்சி அடைகிறது என்ற உடனே அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை விற்பனை செய்வதால் வருமானம் குறையும். எனவே நமது நிதி குறிக்கோளின் அடிப்படையிலும், நமது நிதித் திட்டமிடலின் அடிப்படையிலும் முதலீடுகளைத் தொடர்ந்து செய்வது நல்லது
அதுவும் சந்தை வீழ்ச்சி காலத்தில் யூனிட்கள் அதிகமாக வாங்கமுடியும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட கால முதலீடுகளுக்கு நல்லது, எனவே முதலீடுகளிலிருந்து அதிகபட்ச நன்மைகளை பெற குறைந்தது ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்ய வேண்டும்.
5. வரி சேமிப்பில் கவனம்:
வருமான வரி சேமிப்பிற்கு ELSS திட்டத்தில் முதலீடு செய்யலாம் ஆனால் வரி சேமிப்பு மட்டுமே கருத்தில் கொண்டு ELSS திட்டத்தில் அதிகமாக முதலீடு செய்வதை விட வருமானத்தை அதிகரிப்பதற்கு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.
6. முதலீடுகளை மதிப்பாய்வு செய்யாமல் இருப்பது:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வது மட்டும் போதாது, முதலீடுகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதன் மூலம், முதலீட்டை அதிகரிப்பது அல்லது வெளியேறுவது குறித்து சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க உதவும்.
7. சரியாக ஆராய்ச்சி செய்யாமல் முதலீடு:
தரவரிசை அடிப்படையில் மட்டுமே அல்லது குறைந்த கால வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது தவறான முடிவாகும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் செலவு விகிதம், சொத்து அளவு, வணிகம்
மற்றும் நிதி மேலாண்மை நன்றாக ஆராய்ச்சி செய்தபின் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்யவேண்டும்.
8. குறுகிய கால ஆதாயம்:
சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக குறுகிய காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் வருமானம் குறைவாகவே இருக்கும். எனவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு என்பதை நீண்ட முதலீட்டு திட்டமாக கருதவேண்டும்
நீண்ட கால இலக்குகளுடன் SIP ஐத் தொடங்கும் மக்கள் பெரும்பாலும் குறுகிய கால வருமானத்தால் ஏமாற்றமடைகிறார்கள், ஏற்ற இறக்கத்தின் போது பொறுமையாக இருப்பவர்கள் நீண்ட காலத்திற்கு வெற்றி பெறுவார்கள். எனவே குறுகிய கால ஆதாயங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு நபருக்கும் தங்களது நிதி தேவைகள், குறிக்கோள்கள் risk எடுக்கும் திறன் மற்றவர்களிடமிருந்து மாறுபடும். எனவே முதலீடுகளை அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மற்ற நிதி முதலீடுகளையும் போலவே ரிஸ்க்களை கொண்டதாகும்.
நீண்ட கால முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் அதன் மூலம் 10 முதல் 15% வருமானத்தை எதிர்பார்க்கலாம். இது பங்கு சந்தை நிலையைப் பொறுத்து வருமானம் மாறுபடும்.
ஒருவரின் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில்
ஒரு Flexicap fund,
ஒரு Index Fund,
ஒரு Midcap & Smallcap fund
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, நான் கற்றதை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளைத் தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A Thread on how to select a Mutual Fund for investment:👇
முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃபண்டை எப்படித் தேர்வு செய்வது பற்றிய பதிவு:
மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்: 1. Financial Risks / Goal based 2. மியூச்சுவல் ஃபண்ட் நிதியின் அளவு மற்றும் மேலாளர் 3. நிலையான CAGR 4. கட்டணங்கள் 5. வரிவிதிப்பு 6. Direct vs Regular
1. Financial Risks / Goal based:
ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் நிதி நிலைமைகள், தேவைகள் மற்றும் நிதி இலக்குகள் வேறுபடும், அதன் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் நிதியை ஒருவர் தேர்வு செய்வது நல்லது.
முதலீடு செய்வதற்கு முன்,
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும், இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணம் சேகரித்து பங்கு, பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் பண சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம், நிதி மேலாளர்களால் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில் திட்டத்தின் முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்படுகிறது.
SIP, STP மற்றும் SWP முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிய பதிவு.
1. SIP முதலீட்டுத் திட்டம்:
a. SIP என்பது நடுத்தர மக்களுக்கான சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டம். ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்யும் முறையாகும். இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதற்குப்
பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில
- ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சமாக Rs 100 முதல் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- முதலீடு சராசரி, ஒவ்வொரு மாதமும் முதலீடுகள் வெவ்வேறு NAV களில் செய்யப்பட்டிருக்கும் (இது சந்தை மூலம் தீர்மானிக்கப்படுகிறது) எனவே
A Thread on Financial Planning for Middle Class Family👇
நடுத்தர குடும்பத்திற்கான நிதி திட்டமிடல் பற்றிய பதிவு:
1. நிதி திட்டமிடல் 2. சேமிப்பு VS முதலீடு 3. பணவீக்கம் 4. முதலீடு 5. நிதி திட்டமிடல் செய்வது எப்படி?
1. நிதி திட்டமிடல்:
நிதி திட்டமிடல் என்பது சம்பாதித்த பணத்தைச் சேமிக்க, செலவழிக்க, முதலீடு செய்யத் தேவையான தொகையைத் தீர்மானிக்கும் ஒரு செயல்முறையாகும்.
அதில் வரவு, செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய கணக்குகளை உள்ளடக்கியது.
இன்று நாம் செய்யும் நிதி திட்டமிடல்களைப் பொறுத்தே,
நமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். நிதி திட்டமிடல் என்பது செலவுகளைக் குறைக்க, முதலீடுகளை ஒழுங்குபடுத்த, நாம் வாழ்நாள் முழுவதும் நமது இலக்குகளை - திருமண செலவு, ஒரு வீடு / நிலம் வாங்க, குழந்தைகள் பள்ளியில்,
A Thread on Free Life Insurance on your SIP Investment👇
SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு பற்றிய பதிவு:
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு? 2. எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்? 3. தேவையான தகுதிகள். 4. பின்வரும் சந்தர்ப்பங்களில் காப்பீட்டு நிறுத்தப்படும் 5. முக்கிய நன்மைகள். 6. முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள். 7. இந்த திட்டத்தின் குறைகள்.
1. SIP முதலீட்டின் மூலம் இலவச ஆயுள் காப்பீடு?
உங்களின் SIP முதலீட்டின் மூலம் உங்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வேண்டுமா? இந்த பதிவை மேலும் படியுங்கள்.
நீங்கள் செய்யும் SIP முதலீட்டின் மூலம் ஆயுள் காப்பீடு இலவசமாகக் கிடைக்கும், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
1. இப்போது வீடு வாங்கலாமா?
- எப்படியாவது ஒரு கடனை வாங்கியாவது ஒரு வீட்டை வாங்கிடணும் என்று ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தில் தினசரி நடக்கும் உரையாடல்களில் ஒன்று.
- ஒரு பெண் பார்க்க போவதுற்கு முன் பெண் வீட்டில் கேட்கும் முதல் கேள்வி மாப்பிள்ளைக்கு வேலை மற்றும் சொந்த வீடு இருக்கிறதா?
இவை அனைத்திற்கும் பதில் சொல்வது போல், தற்போதைய சூழ்நிலையில் வீட்டுக் கடன் விகிதம் குறைவாகவும் மற்றும் வீடுகளின் விலைகளும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடக் குறைவாக உள்ளன, இது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாகும்.